மகப்பேறு தரும் எந்திரம்!

/idhalgal/balajothidam/maternity-machine

சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

ங்களது முற்பிறவிகளில் அல்லது வம்ச முன்னோர்களின் வாழ்வில் ஆட்சி, அதிகாரம், பதவி, பணம், உடல் பலத்தால், தன்னைவிட கீழான நிலையில் வாழ்ந்த பாமரமக்களை மிரட்டித் துன்புறுத்தி, அவர்களைத் துன்பப் பட வைத்து, ஆதிக்கவர்க்கத்தை எதிர்த்து செயல்படமுடியாத பலம்குறைந்த பாதிக்கப் பட்ட மக்கள் மனம் வெறுத்து தந்த சாபம் மலைபோல் குவிந்து, செய்வினையாக மாறி இப்பிறவியில் தாக்கி சிரமப்படச் செய்துவிடும்.

தன்னிடம் வேலைசெய்த தொழிலாளர் களுக்குரிய கூலியை முறையாகக் கொடுக் காமல் குறைத்துக் கொடுத்து, அவர்கள் உழைப்பால் தன் வாழ்வை உயர்த்திக் கொண்டதால், அந்த பாமர மக்கள் மனம் வெறுத்து விட்ட சாபம்- உடல் ஊனமுற்றவர்களுக்குத் துன்பம் விளைவித்து, அவர் கள் மனம் வருந்தப் பேசியதால் ஏற்பட்ட பாவம்- மந்திரம், தந்திரம், மாந்திரீகம் என்ற பெயரால் பிறருக்கு ஏவல், பில்லி, சூனிய பாதிப்புகளைச் செய்து, அவர்களை மனம் கலங்கவைத்து மிரட்டிய பாவம்- மாந்திரீகத் தொழிலைச் செய்து பிறருக்குக் கெடுதல் விளைவித்ததால் உண்டான பாவம்- ஊரில் பெரிய மனிதர், தலைவர், தனவந்தர், தர்ம கர்த்தா என அரசுப் பதவி நிர்வாகத்தில் இருந்

சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

ங்களது முற்பிறவிகளில் அல்லது வம்ச முன்னோர்களின் வாழ்வில் ஆட்சி, அதிகாரம், பதவி, பணம், உடல் பலத்தால், தன்னைவிட கீழான நிலையில் வாழ்ந்த பாமரமக்களை மிரட்டித் துன்புறுத்தி, அவர்களைத் துன்பப் பட வைத்து, ஆதிக்கவர்க்கத்தை எதிர்த்து செயல்படமுடியாத பலம்குறைந்த பாதிக்கப் பட்ட மக்கள் மனம் வெறுத்து தந்த சாபம் மலைபோல் குவிந்து, செய்வினையாக மாறி இப்பிறவியில் தாக்கி சிரமப்படச் செய்துவிடும்.

தன்னிடம் வேலைசெய்த தொழிலாளர் களுக்குரிய கூலியை முறையாகக் கொடுக் காமல் குறைத்துக் கொடுத்து, அவர்கள் உழைப்பால் தன் வாழ்வை உயர்த்திக் கொண்டதால், அந்த பாமர மக்கள் மனம் வெறுத்து விட்ட சாபம்- உடல் ஊனமுற்றவர்களுக்குத் துன்பம் விளைவித்து, அவர் கள் மனம் வருந்தப் பேசியதால் ஏற்பட்ட பாவம்- மந்திரம், தந்திரம், மாந்திரீகம் என்ற பெயரால் பிறருக்கு ஏவல், பில்லி, சூனிய பாதிப்புகளைச் செய்து, அவர்களை மனம் கலங்கவைத்து மிரட்டிய பாவம்- மாந்திரீகத் தொழிலைச் செய்து பிறருக்குக் கெடுதல் விளைவித்ததால் உண்டான பாவம்- ஊரில் பெரிய மனிதர், தலைவர், தனவந்தர், தர்ம கர்த்தா என அரசுப் பதவி நிர்வாகத்தில் இருந்துகொண்டு ஏழை எளிய மக்களுக்கும், தனக்கு சம்பந்தமே இல்லாதவர்களுக்கும் செய்த கொடுமையால் அவர்கள் மனம் வருந்தி தந்த சாபம்- தர்மகர்த்தா, தலைவர் என்னும் பெயரில், கோவில்களில் நேர்த்திக் கடனாக விடப்பட்ட பறவை, மிருகங்களை தெய்வத்தின் பெயரால் பலிகொடுத்து அந்த உயிர்களைக் கொன்ற பாவம் போன்றவை அவர்கள் குடும்பத்தினரையே சார்ந்து செய் வினையாகத் தொடர்ந்து வந்து தொல்லை தரும்.

யாகம், ஹோமம் என்னும் பெயரிலும், பரிகாரம் என்னும் பெயரிலும், நோய்தீர்த்து உயிர்காக்கும் மூலிகைகள், பசிதீர்த்து உடல் வளர்க்கும் தானியம், பருப்பு, கொட்டைகள், விதைகளைத் தீயிலிட்டு எரித்து, தாவர உயிரினங்களைக் கொன்றழித்த பாவம்- பால், தயிர், நெய், தேன் போன்ற- உயிரையும் உடலையும் காக்க மற்றொரு உயிர் உருவாக் கிய உணவுப்பொருட்களை கல்லிலும் மண்ணிலும் கொட்டி வீணாக்கிய பாவம்- இதுபோன்ற இன்னும் பல பாவங்களைச் செய்ததால் அவற்றின் தாக்கம் இப்பிறவியில் செய்வினைப் பதிவாகி அவர்கள் குடும்பத்தி னரைத் துன்பமடையச் செய்யும்.

dd

இவர்கள் பூர்வீக சொத்துகளை அழித்து விட்டு சிரமத்துடன் அடிமைவாழ்வு வாழ்வார் கள். இவர்களது சொத்து, பணம், உழைப்பு என அனைத்தையும் பிறர் அனுபவிப்பார்கள். இவர்களை அனைவரும் கீழ்த்தரமாக நினைப் பார்கள். தங்களைவிட கீழான மக்களால் துன்புறுத்தப்படுவார்கள். உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்காது. நேரத்திற்கு உணவுண்ண முடியாது. அன்னம், துணிக்கு அலைந்துகொண்டிருப்பார்கள்.

பாமர சாபம் பெற்று செய்வினையால் பாதிக்கப்பட்டவர்கள், விரக்தியுடன் சந்நியாசிபோல வாழ்வார்கள். "திக்கற்றவருக்கு தெய்வமே துணை' என்னும் நம்பிக்கை யில் ஆன்மிக ஈடுபாடுகொண்டு, கோவில் கோவிலாக அலைந்தும் இறைப்பணி செய்தும் வாழ்வார்கள். ஆனால் இவர்களின் பிரார்த்தனைகள், வேண்டுதல்கள் பலிக்காது; நிறைவேறாது.

ஆட்சி, அதிகாரம், அரசுப்பதவி, தலைவர் தர்மகர்த்தா, ஊரில் பெரிய தனவந்தர் என்று பாட்டனார் காலத் தில் உயர்வாக வாழ்ந்த குடும்பங்களில், மூன்றாவது தலைமுறையினர் அவை யனைத்தையும் இழந்து, செய்வினை பாதிப்பால் ஏழ்மைநிலையை அடைந்து வாழ்வார்கள். அதிகார வெறியால் முன்னோர்கள் ஆடிய ஆட்டத் தையும், இன்று வம்சத்தினர் படும் சிரமத்தை யும் நாமே விசாரித்து அறிந்துகொள்ளலாம். செய்வினையின் பலன் என்னவென்று தெரியும்.

இதுபோன்றவர்களுக்கு குழந்தைப்பேறு அடைவதிலும் தடையேற்படும். அதற்கான எந்திர வழிபாட்டைக் காணலாம்.

மூல மந்திரம்

"கொழுந்தென்ற பச்சை குலமறியாதவர்

கோலமதை அழித்து சுவாச மறுபத்து

நாலையும் மஞ்சறைக்குள் விழுந்து

விரைபத்தி எழுபத்து மூன்று நாடியும்

விண்புகுந்து அழிந்துயிர் மாண்டிட

அருள் கொடுத்தார் முகையதீனஞ் சுழியே.'

பூஜைப் பொருட்கள்: தூய சந்தனம், ஜவ்வாது, அத்தர், மல்லிகைப்பூ, பச்சைத்துணி, பன்னீர், சாம்பிராணி, மண்கலயம், நீர்.

மகப்பேறு வேண்டும் பெண் காலையில் நீராடி, தூய ஆடையணிந்து, 6ஷ்6 அங்குல அளவுள்ள செப்புத் தகட்டில் இங்கு தரப் பட்டுள்ள எந்திரத்தை வரைந்து, பச்சைத்துணி விரித்து அதன்மீது எந்திரத்தை வைத்து, மல்லிகை மலர்களைத் தூவி, வாசனைப் பொருட்களை பன்னீரில் கரைத்து எந்திரத் தின்மீது தெளித்து, மண்குடுவையில் நீர்நிரப்பி வைத்து, சாம்பிராணி தூபம் காட்டி, ஊதுவர்த்தி ஏற்றிவைத்து, அகத்தியர் முதலான சித்தர்களையும், முகையதீன் ஆண்டகையையும், கணவன்- மனைவி ஆகியோரின் வம்ச முன்னோர்களையும் குழந்தைப்பேறு வேண்டிப் பிரார்த்தனைசெய்து பூஜையைத் தொடங்கவேண்டும்.

மகப்பேறு வேண்டும் பெண், மாதவிடாய் முடிந்து தூய்மையான நாளிலிருந்து தினமும் பூஜைவைத்து, மேலே தரப்பட்டுள்ள மூலமந்திரத்தை ஆயிரம் முறை கூறி, தொடர்ந்து 12 நாட்கள் 12 ஆயிரம் முறை மந்திரம் கூறி பூஜையை முடிக்கவேண்டும். 12 நாட்கள் முடிந்தபின் மண் கலயத்திலுள்ள நீரை பெண் குடித்துவிடவேண்டும். பூஜை முடிந்தபின் எந்திரத்தை கண்ணாடி சட்டமிட்டு படுக்கை யறையில் மாட்டிவைக்கவும்.

அந்த 12 நாட்களிலும் கணவன்- மனைவி இருவரும் வெளியூர் செல்லக்கூடாது. கோவில், விரதம், பூஜைகள் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. நல்ல நாள், கெட்ட நாள், நல்ல நேரம், பகல், இரவென்று பார்க்காமல், மனம் விரும்பும் சமயத்தில் கணவன்- மனைவி தாம்பத்திய உறவு கொள்ளவேண்டும். உறவில் எந்தத் தடையையும் உருவாக்கிக் கொள்ளக்கூடாது. இந்த பூஜையை வீட்டுப் பூஜையறையில் செய்யக்கூடாது. மற்ற அறைகளில் செய்யலாம். கணவர் விரும்பினால் அவரும் மனைவியுடன் சேர்ந்து மந்திரம் கூறி பூஜைசெய்யலாம்.

இந்தப் பிறவியில் குழந்தை பாக்கிய மில்லை என்ற விதியமைப்பில் மோட்சப் பிறவிகளாகப் பிறந்தவர்களுக்கு இந்த மகப்பேறு பூஜை பலன்தராது. இது மட்டு மல்ல; வேறு எந்தப் பிரார்த்தனைகளும் மோட்சப் பிறவி மாந்தர்களுக்குப் பயன் தராது. இப்பிறவியில் விதிப்படி குழந்தை பாக்கியமிருந்தும், அதை அடையமுடியாமல் கருக்கூடிக் கலைவது போன்ற குறைபாடு களால் மகப்பேறில்லாத நிலைகளில் உள்ளவர் கள் மேற்சொன்ன பூஜையைச் செய்யலாம்.

செல்: 99441 13267

bala260221
இதையும் படியுங்கள்
Subscribe