மனிதர்களின் வளர்ச்சிக்காகவும், வம்ச விருத் திக்காகவும் திருமணமென்ற பந்தத்தை ஏற்படுத் தியுள்ளார்கள். ஆனால் திருமணம் செய்த ஆண்-பெண் அனைவருக்கும் உரிய காலத்தில் குழந்தைபாக்கியம் உண்டாகின்றதா என்றால் இல்லை யென்றே பதில் உள்ளது. புத்திரபாக்கியம் தாமதமா வதற்கு பலவித காரணங்கள் உள்ளன. அவற்றைக்கண்டறிந்து அந்த குறைகளைக் களையவேண்டியபொறுப்பு மணமக்களைச் சார்ந்ததாகிவிடு கின்றது. மணமக்களைப் பெற்றவர்களும் குழந்தைபாக்கியம் உண்டாகவில்லையே என்ற கவலையில் பல கோவில்களுக்குச் சென்று பரிகாரங்களைச் செய்து வருகின்றார்கள். முறைப்படி குழந்தைப்பேறு பெற என்னென்னவிதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும்- எந்த நேரத்தில் கணவரும் மனைவியும் கூடுதல் வேண்டுமென்று "சாராவளி' என்ற ஜோதிட மூல நூலில் ஆசிரியர் கல்யாணவர்மர் விளக்க மாகக் கூறுகிறார். அவற்றைக் காண்போம். திருமணத்திற்குப்பிறகு கணவரும் மனைவியும் கூடும் நேரத்தை நிஷேக லக்னம்என்று குறிப்பிடுவர். அதாவது சாந்தி முகூர்த் தம் என்று கூறுவர். திருமணம் நடைபெறு வதற்கு நல்ல முகூர்த்தத்தைக் குறித்து நல்ல படியாக குழந்தை பெறுவதற்கு சாந்திமுகூர்த்த நேரத்தை எவ்வித தோஷமுமில் லாமல் குறிப்பது அவசியமாகிறது.

Advertisment

பொது வாக பெண்களுக்கு அவர்களுடைய ஜாதகப் படி சந்திரன் லக்னத்திற்கு 3, 6, 10, 11-ஆம் இடத்தில்- அதாவது உபசய ராசியில் இருக் கும்பொழுது அத்தகைய ஸ்தானங்களைகுரு அல்லது சந்திரனுடைய நட்பு கிரகங் கள்- முக்கியமாக சுக்கிரன் பார்க்கும் பொழுது, பெண்ணானவள் மிகுந்த வாஞ்சை யுடன் கணவருடன் கூடுவாளேயாயின் குழந்தைப்பேறு உண்டாவது திண்ணம். மேற்கண்ட சாந்தி முகூர்த்த நேரத்தைக் குறிப்பது எவ்வாறு என்பதை விளக்கமாகக் காண்போம். பெண்கள் ஜாதகத்திலுள்ள சந்திரன் அனுபசய ராசிகளான- லக்னத்திற்கு 1, 2, 4, 5, 7, 8, 9 மற்றும் 12-ஆம் இடத்தில் இருக்கும்பொழுது, செவ்வாயின் பார்வை யால் மாதவிலக்கு உண்டாகின்றது. அந்த நாட்களில் கருப்பையில் உள்ள ரத்தமானது (சந்திரன் காரகம்) உஷ்ணத்தால் (செவ்வாய் காரகம்) சிதிலமடைந்து வெளியே வருத லையே மாதவிலக்கு என்கிறோம்.

k

ஆகவே இந்த காலகட்டத்திற்குப்பிறகு# அதாவது மாதவிலக்கு தோன்றிய 4-ஆம் நாள், பெண்ணானவள் பலவித நறுமண வாசனை திரவியங்களுடைய நீரில் குளித்து, அன்றிரவு சில குறிப்பிட்ட தேவதைகளின் ஆசியுடன் அவர்களுடைய மந்திரங்களை ஜெபித்து, அன்புடன் இஷ்டமாக கணவருடன் கூடும்பொழுது அவர்களுக்கு அவர்கள் விரும்பியபடி குழந்தைப்பேறு உண்டாகும் வாய்ப்புள்ளது. மேலே குறிப்பிட்ட நாளின் இரவை முதலிரவென்று கணக்கு வைத்துக்கொண்டு, இரட்டைப்படை இரவுகளில் கூட ஆண் குழந்தையும், ஒற்றைப்படை இரவுகளில் கூட பெண் குழந்தையும் உண்டாகும். அதாவதுஆணும் பெண்ணும் கூடும் நேரத்தை ஆதன லக்னம் என்று கூறுவர். ஆதன லக்னம் 6-ஆவது,8-ஆவது, 10-ஆவது இரவுகளில் அமையப்பெற் றால் அழகான ஆண் குழந்தை உண்டாகும். 5, 7, 9-ஆவது இரவுகளில் அமைந்தால் அழகான பெண் குழந்தை உண்டாகும்.

Advertisment

ஆண்களுடைய ஜாதகத்தில் குழந்தைப்பேறுஉண்டாகும் வாய்ப்பு அதிகம் இருக்கும்பட்சத் திலும், அவர்களுடைய ஜாதகத்தில் லக்னத்திற்கு கேந்திரத்திலும் திரிகோணத்திலும் சுபகிரகங்கள் அமையப்பெற்றும், லக்னத்திலோ அல்லது சந்திரனுடனோ சுபகிரகங்களும், 3, 6, 11-ஆம் இடத்தில் அசுப கிரகங்கள் அமைந்தாலும் குழந்தைப்பேறுக்கு அதிக வாய்ப்புள்ளது. மேற்கண்ட ஆதன லக்னத்தைத் தேர்வு செய்வதன்மூலம் ஆசிரியர் நமக்கு ஒரு சிறந்தகுறிப்பைக் கொடுக்கிறார். அதாவது, ஆதனலக்னத்தை நற்கிரகங்கள் பார்வை செய்வதன் மூலம் மணமக்கள் நல்லாசியையும், நன்மக்கட் பேறுகளையும் பெறுகின்றனர். ஜாதகத்தில் லக்னத்திற்கு ஏழாமிடம் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஏழாமிடத்தில் சுபகிரகங்கள்அமைந்திருப்பின் ஆண்- பெண் கூடும்பொழுது சந்தோஷத்தையும் நிம்மதியையும் அடைகின் றனர். அசுபகிரகங்கள் அமைந்திருப்பின் சண்டை சச்சரவுகளுடன், ஆத்திரமுடன் முடிகிறது.அசுபகிரகங்களும், சுபகிரகங்களும் சேர்ந்திருப் பின் கூடும்பொழுது சந்தோஷமும், ஆத்திரமும்,மனக்கசப்பும் கலந்து முடிகிறது. ஆதலால் ஆண்- பெண் கூடும்பொழுது 7-ஆம் இடத்தில் நற்கிர கங்கள் இருக்கப்பெற்றால் மிகுந்த சந்தோஷ மாகவும், தீயகிரகங்கள் அமையப்பெற்றிருந்து கூடினால் தீமையான பலன்களையும் அடைவர்.அத்தகைய பலன்களை அனுபவிக்கும்பொழுது ஆணின் விந்தானது ஏற்கெனவே ஆன்மா வைப் பெற்றிருப்பதால், கருப்பையில் சேரும் பொழுதுதான் முற்பிறவியினால் கிடைக்கப்பெற்றபுண்ணிய- பாவச் செயல்களுக் கேற்ப தன் பிறப்பினை எடுக் கிறது. இதுவே ஆன்மா எடுக்கும் ஜென்மமாகும்.

ஆதன லக்னம் என்பது குழந்தையின் பிறப்பு லக்னத்தைவிட மேன்மையானது என்பதை உணர்வதுஅவசியமாகும். ஏனெனில் குழந்தையின் உடல்வளர்ச்சி, உறுப்புகள் வளர்ச்சி, மூளையின் வளர்ச்சி இன்னும் பிற உட்புற வளர்ச்சிகள் அனைத்தும் ஆதன லக்னத்தின் பலன்களை யொட்டியே அமைகின்றன. ஆதன லக்னமானது நிழற்படத்தின் (Photography) நெகடிவ் ஆகும்.குழந்தையின் பிறந்த லக்னமானது நிழற்படத் தின் அச்சடித்த காகிதமாகும். அச்சடித்த நிழற்படத்தை மாற்றும் வசதியுண்டு. ஆனால்நிழற்படத்தின் நெகடிவ் என்பது மாறாதது.எனவே ஆதன லக்னத்தினால் அமைந்த கிரக அமைப்புகளின் பலன்கள் மாறாதது. அதுவே ஒருவருடைய தலைவிதியை நிர்மாணிக்கின்றது எனறால் அது மிகையல்ல. மனித உருவத்தில் குழந்தை பிறப்பது தான் ஒன்பது அல்லது பத்து மாதம் தள்ளிப் போகின்றதே தவிர, உயிரானது உடலைப் பெறுவதற்கு இந்த விநாடியே பிரதானமாகக் கருதப்படுகிறது. விந்துவிலுள்ள உயிரணு வானது தனது முற்பிறவியின் வினைகளால்தனக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்ட விதியின் படி ஓர் உயிரினமாக உலகத்தில் பிறப்பதற்குஉண்டான தருணமே ஆதன லக்னமாகும். அந்தநேரத்தில் கணவனும் மனைவியும் மிகுந்த மன மகிழ்ச்சியோடு, பரஸ்பரம் அதிக அன்போடு இருந்து கூடுவதால் உண்டாகும் குழந்தையும்அதே அன்போடும் மகிழ்ச்சியோடும் வாழ்க்கையை அனுபவிக்கும்.

மணமக்கள் கூடும் பொழுது சந்தோஷமாகவும் எவ்வித அசூயையும் மனதில் வைக்காமல் முழுத்திருப்தியுடன் கூடுவது அவசியமாகும். ஆதலால் அந்த உன்னத மான நேரத்தைத் தேர்ந்தெடுப்பது அவசியம். ஏனென்றால் குழந்தைச் செல்வமே பெற்றோர் களுக்கு உயர்ந்த செல்வமாகப் போற்றப்படு கின்றது. மேற்கூறிய காரணங்களால் சாந்தி முகூர்த்த லக்னத்தை எவ்வித தோஷமில்லாமலும், 5, 7-ஆம் இடத்தில் சுபகிரகங்கள் அமையப் பெற்றாவது அல்லது சுபகிரகங்களான குருஅல்லது சுக்கிரன் பார்வை பெற்றாவது இருப்பது சிறப்பாகும். அத்தகைய சாந்தி முகூர்த்த லக்னத் தில் ஆதன லக்னம் அமைந்தால் பிறக்கும் குழந்தை யானது உன்னதமாக வளர்ச்சி பெற்று, சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடையும்.

பாஸ்கரா ஜோதிடர் எம். மாசிமலை

செல்: 91767 71533