Advertisment

செவ்வாய் ராகு தரப்போகும் எதிர்விளைவு! -ஆர். மகாலட்சுமி

/idhalgal/balajothidam/mars-rahu-reaction-r-mahalakshmi

கோட்சாரம் என்பது கிரக நகர்வுகளைக் குறிக்கும் என்பது உங்களுக்குத் தெரிந்ததுதான். சில கோட்சாரங்கள் நலம் பயக்கும்; சில கோட்சாரங்கள் பயம் நல்கும்.

Advertisment

வாக்கியம், திருக்கணிதம் என இரு பஞ்சாங்கப்படியும் 2022, ஜூன் 26 முதல் ஆகஸ்ட் 10 வரை செவ்வாய் தனது சொந்த வீடான மேஷத்திற்கு நகர்கிறார். ஒரு கிரகம் தனது சொந்த வீட்டுக்குச் செல்வது சிறப்புதானே என நீங்கள் வினவலாம்.

Advertisment

ஆனால் அங்கே ஏற்கெனவே அமர்ந்திருக்கும் ராகு, "நண்பா வா வா...' என்றும், "ப்ரோ, உன்னை ரொம்ப எதிர்பார்த்துக்கொண்டிருக் கிறேன்' என்றும் கட்டியணைத்து வரவேற்பார்.

செவ்வாய் ஏற்கெனவே பயமான கிரகம். ராகு மிகத் தீவிரத்தன்மை கொண்ட பயங்கர கிரகமாகும். ஆக, ஒரு பயம் தரும் கிரகமும், பயங்கரமான கிரகமும் சேரும்போது, மக்களுக்கு ஏற்படுவது திகில்தான்.

செவ்வாய் மேஷத்தில் அஸ்வினி, பரணி, கார்த்திகை எனும் நட்சத்திரங்களில் பயணிப்பார். ராகு எதிர்சுற்றில் வருவார்.

ஒரே கட்டத்தில் சேர்ந்திருக்கும் ராகு, செவ்வாயின் பலன்கள் மிகவும் எதிர்மறைத் தன்மையோடு அமையும்.

தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகரிக்கும். அயல்நாட்டு சதிகள் அலைக்கழிக்கும். போர்ச்சுழல் உருவாகும். எல்லைப் படையினர், இராணுவத்தினர் எந்த சமயமு

கோட்சாரம் என்பது கிரக நகர்வுகளைக் குறிக்கும் என்பது உங்களுக்குத் தெரிந்ததுதான். சில கோட்சாரங்கள் நலம் பயக்கும்; சில கோட்சாரங்கள் பயம் நல்கும்.

Advertisment

வாக்கியம், திருக்கணிதம் என இரு பஞ்சாங்கப்படியும் 2022, ஜூன் 26 முதல் ஆகஸ்ட் 10 வரை செவ்வாய் தனது சொந்த வீடான மேஷத்திற்கு நகர்கிறார். ஒரு கிரகம் தனது சொந்த வீட்டுக்குச் செல்வது சிறப்புதானே என நீங்கள் வினவலாம்.

Advertisment

ஆனால் அங்கே ஏற்கெனவே அமர்ந்திருக்கும் ராகு, "நண்பா வா வா...' என்றும், "ப்ரோ, உன்னை ரொம்ப எதிர்பார்த்துக்கொண்டிருக் கிறேன்' என்றும் கட்டியணைத்து வரவேற்பார்.

செவ்வாய் ஏற்கெனவே பயமான கிரகம். ராகு மிகத் தீவிரத்தன்மை கொண்ட பயங்கர கிரகமாகும். ஆக, ஒரு பயம் தரும் கிரகமும், பயங்கரமான கிரகமும் சேரும்போது, மக்களுக்கு ஏற்படுவது திகில்தான்.

செவ்வாய் மேஷத்தில் அஸ்வினி, பரணி, கார்த்திகை எனும் நட்சத்திரங்களில் பயணிப்பார். ராகு எதிர்சுற்றில் வருவார்.

ஒரே கட்டத்தில் சேர்ந்திருக்கும் ராகு, செவ்வாயின் பலன்கள் மிகவும் எதிர்மறைத் தன்மையோடு அமையும்.

தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகரிக்கும். அயல்நாட்டு சதிகள் அலைக்கழிக்கும். போர்ச்சுழல் உருவாகும். எல்லைப் படையினர், இராணுவத்தினர் எந்த சமயமும் முனைப் பாக இருக்கும் சூழல் உருவாகும். கொலைச் சம்பவங்கள் அதிகமாகும். அதிலும் பிறமொழி பேசுவோரின் பங்கு அதிகமாகி, அவர்கள் கொலை, கொள்ளையில் ஈடுபடுவர். ஒரு ரவுடி அல்லது தீவிரவாதி கொல்லப்படுவார். காவல்துறை அதிகாரிகள் கவனமாக இருக்க வேண்டும். வண்டி ஓட்டும்போது பாதுகாப்பு அவசியம். பெண்கள் மாங்கல்ய விஷயத்தில் சற்று ஜாக்கிரதையாக இருத்தல் நன்று. தீ விபத்துகள் ஏற்படாவண்ணம், முன்னெச் சரிக்கை நடவடிக்கை அவசியம். மக்களுக்கு- அதிலும் இளைஞர்களுக்கு அதிகமாகக் கோபம் வரும். போதைப்பொருள் நட மாட்டம் அதிகரிக்கும். புதுமையான ஆயுதங் கள் புழக்கத்தில் வரும். திருட்டு அதிகமாகும். ரத்தம் சிதறும். தவறான சிற்றின்பம் அதிகரிக் கும். கடத்தல் மிகும். சில விஷ நோய்களும் ஏற்படும்.

ராகு, செவ்வாய் கிரக யுத்தம் நிகழும் போது கூட்டு மரணம் ஏற்படும் எனக் கூறப்பட் டுள்ளது. ஜூலை 25 முதல் 30 வரை ராகுவும் செவ்வாயும் பரணி நட்சத்திர 3-ஆம் பாதத்தில் சேர்ந்து நிற்கிறார்கள். இவர்கள் இருவரும் துலா அம்சத்தில் ஒன்றாக நிற்பர். எனவே இந்த ஐந்து நாட்கள் தீவிரவாதம் மிகக் கடுமையாக இருக்கும். அந்த நாட்களில் இராணுவமும் காவல்துறையும் அமைதி காப்பது நல்லது. பதுங்கிப் பாய்வது குற்றமல்ல.

மேஷ ராசி குறிக்கும் நாடுகள்

இங்கிலாந்து, டென்மார்க், ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து, ஸிரியா, பிரான்ஸ், ஜப்பான், போலந்து, பாலஸ்தீனம், லெபனான்.

மேஷம் குறிக்கும் இந்தியப் பகுதிகள்

காஷ்மீரம், ஹரித்துவார், பத்ரிநாத், கேதார்நாத், சென்னை, தக்காண பீடபூமி.

மேஷம் குறிக்கும் தமிழ்நாட்டுப் பகுதிகள்

வேலூர், தர்மபுரி, திருவண்ணாமலை.

இனி 12 ராசிகளுக்கும் செவ்வாய், ராகு இணைவு தரும் பொதுப்பலனைக் காண்போம்.

tt

மேஷம்

இந்த ராசியைச் சேர்ந்த காவல், இராணுவத் துறையினர் கவனமாக இருக்க வேண்டும். வீடுகட்டும் இடத்தில் அல்லது பூமி தோண்டும்போது தலையை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளவும். சிலருக்கு திடீர் பூமி அதிர்ஷ்டம், புதையல் யோகமுண்டு.

ரிஷபம்

வெளிநாட்டு, வேறு மத, இன திருமணம் உண்டு. வெளிநாட்டு யோகமுண்டு. பயணங்களில் பாதுகாப்பு அவசியம். பாதங்களில் கவனம் தேவை.

மிதுனம்

பிற இனம் சம்பந்த வேலை கிடைக்கும். அடாவடி அரசியல் பிரவேசம் உண்டு. புரிபடாத வியாதி ஏற்படும். சமையல் கலைஞர்களுக்கு கவனம் அவசியம். கால்களில் கவனம் தேவை.

கடகம்

தொழிற்சாலை சொந்தக்காரர்கள் தீயணைப்புக் கருவிகளைப் பழுது நீக்கியோ, புதிதாக வாங்கியோ வைக்கவும். வேலை செய்யுமிடத்தில் பிற இன குழந்தைத் தொழிலாளர் பங்கெடுக்காமல் பார்த்துக்கொள்ளவும். பூர்வீக நிலப் பெருக்கம் உண்டு. கால்மூட்டில் கவனம் தேவை.

சிம்மம்

ஆன்மிக யாத்திரையில் அதிரடி ஏற்படும். வெளிநாட்டுப் பயணங்களில் இன்னல் ஏற்படும். தொடை குடைச்சல் தரும். வீடுகட்ட மனை கிடைக்கும்.

கன்னி

கன்னி ராசியாரின் அஷ்டம ஸ்தானத் தில் இச்சேர்க்கை உள்ளதால் மிகக் கவனம் தேவை. எல்லா விஷயங்களையும் கவனமாகக் கையாளவும். வெளிமாநில வேலையாட்கள் கிடைப்பர்.

துலாம்

சிலருக்கு வெளிநாட்டுக்காரரோடு திருமணமாகும். அல்லது வெளிநாட்டில் கல்யாணம் நடக்கும். வெளிநாட்டுப் பணப்புழக்கம் கிடைக்கும். சிலருக்கு மர்ம உறுப்பில் அடிபட வாய்ப்புண்டு. கல்யாண சமயத்தில் எச்சரிக்கையாகப் பார்த்துக்கொள்ளவும்.

விருச்சிகம்

எதிரிகள் தொல்லை அதிகரிக்கும். அதிலும் பிற இன இளைஞர்கள், உங்களோடு யுத்தம்புரிய வருவர்; கவனம் தேவை. அடிவயிறு வலியுண்டு. வேலை கிடைக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரப் பெண்கள் பிரசவ நேரத்தை நெருங்கியிருந்தால், தயவுசெய்து கவனமாக இருக்கவும். ரத்தப்போக்கு அதிகரித்துவிடும். எனவே மருத்துவரிடம் இது சார்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கச் சொல்வது அவசியம். மற்ற தனுசு ராசிப் பெண்களுக்கும், மாதவிடாய்க் காலத்தில் ரத்தப்போக்கு அதிகரிக்கும் நிலை ஏற்படும். ஆண்களுக்கு வயிறு, தொப்புளில் இம்சை ஏற்படும். சிலர் வாரிசைப் பார்க்க வெளிநாடு செல்லலாம்.

மகரம்

சிலரது தாயாருக்கு எங்காவது அடிபட்டு, ரத்தகாயம் ஏற்படும் அல்லது மார்பு வலி வரலாம். விவசாய வேலையின்போது அடிபட நேரும். உங்களில் சிலர் மார்பில் இறுக்கமாக உணர்வீர்கள். பூமி லாபமுண்டு.

கும்பம்

சிலரது இளைய சகோதரர் எங்காவது அடிப்பட்டுக்கொள்வார். உங்களுக்கு காது அல்லது தோள்பட்டையில் வலி வரும். வெளிநாட்டுத் தகவல், ஊடகத்துறையில் தொழில் விஷயமாக ஒப்பந்தம் பெறுவீர்கள்.

மீனம்

உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களில் சிலருக்கிடையே ரத்தம் வருமளவுக்கு சண்டை நடக்கும். அதற்கு அனேகமாக உங்கள் தந்தையின் சொத்து காரணமாகும். கண்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள். ஏதோ ஒருவகையில் சொத்து கிடைக்கும்.

பரிகாரங்கள்

உக்கிர துர்க்கைகளான பிரத்யங்கரா, வராஹி அம்மன்களை வணங்கவும். நாக சுப்பிரமணியரை வணங்குவது நன்று. சேலம் சுகவனேஸ்வரர் ஆலயம் சென்று வணங்கலாம். சிதம்பரம் நடராஜர் தரிசனம் நன்று. கோளறு பதிகம், சஷ்டி கவசம் பாராயணம் நன்மை தரும். செவ்வாய்க் கிழமைகளில் புற்றுக்குப் பாலூற்றி, மஞ்சள், குங்குமம் வைக்கவும். விநாயகருக்கு அறுகம் புல் மாலை சாற்றி வணங்கவும். மசூதிகளுக்குத் தேவையறிந்து உதவலாம்.

செல்: 94449 61845

bala240622
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe