ஜோதிட சாஸ்திரம் என்பது வேதத்தின் கண். மானுட வாழ்வுக்கு கண்கள் எவ்வளவு முக்கிய மென்பதை, கண்கள் சரிவர தெரியாதவர்களிடமோ அல்லது விபத்தில் எதிர்பாராத சூழ் நிலையில் பார்வை இழந்தவர் களிடமோ கேட்டால்தான் புரியும்.
அதுபோலவே, ஜோதிட சாஸ்திரம் நடக்கப் போகும் யோக, அவயோகங்களை முன்கூட்டியே நவகிரக கோட்சாரத்தின்படி அறிவுறுத்துகிறது.
தற்போது கடந்த 7-5-2019 முதல் வரும் 24-6-2019 வரை மிதுன ராசியில் சஞ்சாரம் செய்யும் ராகுவுடன் விபத்து, அறுவை சிகிச்சை, ரத்தம் சம்பந்தப்பட்ட செவ்வாய் இணைந்து சஞ்சரிக்கவிருக் கிறார்.
இந்த காலகட்டத்தில், ஜனன ஜாதகத்தில் மிதுன ராசியில் செவ்வாய் அல்லது ராகு அமர்ந்திருக்க, தற்போது ராகு தசையோ புக்தியோ அல்லது செவ்வாய் தசையோ புக்தியோ அல்லது ராகு தசை- செவ்வாய் புக்தி அல்லது செவ்வாய் தசை- ராகு புக்தி நடப்பவர்களும்; லக்னத்திலிருந்து 4-ஆம் இடம், 6-ஆம் இடம், 8-ஆம் இடம், 12-ஆம் இடத்தில் ராகு- செவ்வாய் சேர்க்கை உள்ளவர்களும் மிகவும் நிதானித்து, பெற்றோர், பெரியோர் அறிவுரைப்படி நடப்பது உத்தமம்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
உதாரணமாக ஒரு ஜாத கத்தை ஆய்வுசெய்வோம்.
இனம்: பெண்.
பிறந்த தேதி: 6-8-1978.
நேரம்: காலை, 4.40 உதயாதி நாழிகை: 56.43.
பிறந்த இடம்: நாகப் பட்டினம்.
ராசி: சிம்மம்.
நட்சத்திரம்: மகம்.
லக்னம்: கடகம்.
கேது தசை இருப்பு: 01-06-15.
கோட்சாரத்தில் கடக ராசியில் 13-7-2017 முதல் 28-8-2017 வரை ராகுவுடன் செவ்வாய் இணைந்திருந்த காலகட்டத்தில், ஜாத கிக்கு 18-7-2016 முதல் 6-8-2017 வரை செவ்வாய் தசையில் ராகு புக்தியும் சேர்ந்து நடந்தது. ஜனன ஜாதகத்தில் நீசச் சுக்கி ரனுடன் செவ்வாய்- ராகு இணைவு.
ஜாதகி அரசு ஊழியை. மேற்கண்ட காலத்தில் சுமார் ஒரு வருடத்தில் இரண்டுமுறை இரு சக்கர வாகனத்திலிருந்து விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டு வேதனையை அனுபவித்தார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
எனவே, தற்போது மிதுன ராசியில் செவ்வாய் பகவானும், ராகு பகவானும் சஞ்சாரம் செய்யும் இக்காலகட்டத்தில் கவனமாக இருப்பது மிக அவசியம்.
செல்: 87602 57179