மேஷ ராசி: உங்களுக்கு எதிர்பாராத மனை சார்ந்த யோகம் கிடைக்கும்.வெளிநாட்டு பயணத்தில் இன்னல் உண்டு. தண்ணீரில் கவனம் தேவை.
ரிஷப ராசி : வெளிநாட்டில் பணிபுரிவோர் சற்று இடைஞ்சலுக்கு ஆளாவர். மறுமணம் நடக்கும். அரசியல்வாதிகள் கவனமாக இருக்கவேண்டும்.
மிதுன ராசி: வீடு, கடன், வேலை விஷயத் தில் கவனமாக இருக்கவும். தொழிலில் எதிர்மறை லாபம் கிடைக்கும்.
கடக ராசி: உயர் வகுப்பினர். ஆன்மிக ஈடுபாட்டாளர்கள், இன்னும் ஒருபடி மேலே கடவுளும் நாங்களும் கை கோர்த்துக்கொண்டே திரிவோம் என்று சொல்பவர்கள் மூக்கு பிடிக்க குடித்துவிட்டு மட்டையாகிவிடுவர். தர்மத்துக்கு புறம்பான வேலை செய்வர். அறிவு, தண்ணீர் சார்ந்த தொழில் உடையோர் ஒரு நல்யோகம் பெறுவர்.
சிம்ம ராசி: இதுவரையில் மறைத்து வைத்த இழிவான விஷயங்களை தைரியமாக வெளியே சொல்வீர்கள். வீட்டை, யாருக்கும் தெரியாமல் அடமானம் வைத்து பணத்தை ஜாலியாக செலவழிப்பீர்கள்.
அரசியல்வாதிகள் சிறைக்கும், இவர்களின் பெற்றோர்கள் முதியோர் இல்லத்துக்கும் செல்வர். நல்லதாக சொல்ல ஒரு விஷயமும் இல்லை.
கன்னி ராசி: கண்டிப்பாக திருட்டு கல்யாணம் நடக்கும். உங்கள் தொழில், வியாபாரம் பற்றி எதிர்மறை தகவல்கள் பரவும். வாழ்க்கைத் துணையின் உடல் நலன் சார்ந்து வெளியிடத்தில் தங்க வேண்டி வரும். வெகுநாள் திருமணம் கூடி வராதவர்கள் சுமார் ஒரு லட்சம் பொய் சொல்லி கல்யாணம் கட்டிகொள்வர்.
துலா ராசி: வியாபார விஷயமாக நிறைய கடன் வாங்கிவிடுவீர்கள். பணம் விஷயமாக வேறு மதத்து நபருடன் செம சண்டை வரும். நைஸாக ஒரு திருட்டு கல்யாணம் பண்ணிக்கொள்வீர்கள். வெளிநாட்டு பணத்தை வரவழைத்து கடனை அடைக்க வெகு முயற்சி செய்வீர்கள்.
விருச்சிக ராசி: ரகசியமாக மது அருந்த ஆரம்பித்துவிடுவீர்கள். ஒழுக்கக் கேடு அதிகரிக்கும். ஆரோக்கியம் கெடும். அறிவு மிகமட்டமாக வேலை செய்யும். கலைத்துறையில் ஏதோ ஒரு வழியில் நுழைந்துவிடுவீர்கள்.
தனுசு ராசி: மாணவர்கள், கெட்ட பழக்கத்தால், வீட்டைவிட்டு, குடும்பத்தை தவிர்த்து ஓடிபோவர். சிலர் காதல் பண்ணி, ஓடிவிடுவர். சிலர் தொழில், வியாபார பிரச்சினையால், வீட்டை விற்க நேரிடும். கல்வி சிலரை வெளிநாட்டிற்கு அழைத்துச்செல்லும்.
மகர ராசி: அரசியல்வாதிகள் வீட்டைவிட்டு விலக நேரிடும். வீடு விஷயமும், தாயார் நலனும் கவனிக்கப்படவேண்டும். பத்திரிகை, டி.வியாளர்கள் எதிர்பாராத லாபம் பெறுவர். சிலர் வீட்டை பரிசாக பெறுவர்.
கும்ப ராசி: வெளிநாட்டு கம்ப்யூட்டர் சம்பந்த வேலையும், அதன்மூலம் வெளிநாட்டு பணமும் கிடைக்கும். கோடி கணக்கு அளவில் பொய் சொல்ல வேண்டியிருக்கும். தவறான பொய்யான, எதிர்மறை தரவுகளை பரப்ப நல்ல பணம் கிடைக்கப் பெறுவீர்கள்.
மீன ராசி: ஆன்மிக தொழிலில் அதிரடி செய்வீர்கள். சாமி மேலே இறங்கிவிட்டது என குறி சொல்லி, நன்கு கல்லா கட்டு வீர்கள். வீட்டு வாசலில் ஒரு கோவில் கட்டிவிடுவீர்கள். எங்க வூட்டு சாமியை கும்பிடலை ரத்தம் தக்கி செத்திருவிங்கடா என சாபம் கொடுக்க, அட இது போதுமே அஞ்சு பரம்பரை அசையாமல் தின்பதற்கு ஓஹோதான்.
செல்: 94449 61845