Advertisment

எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் செவ்வாய் தோஷம்! -மேல்மருவத்தூர் எஸ். கலைவாணி

/idhalgal/balajothidam/mars-dosha-which-causes-negative-effects-melmaruvathur-s-kalaivani

செவ்வாய் என்கின்ற மங்களகாரகன், நவ கிரகங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த கிரகமாகும்.

Advertisment

உலகியல் வாழ்வில் ஒருவர் அனுபவிக்கும் மண், மனை, விவசாய நிலம் போன்றவற்றைக் குறிக்கும் கிரகம் செவ்வாயாகும்.

Advertisment

மனித உடலில் அமைந் துள்ள ஒட்டுமொத்த ரத்தத்தின் தன்மையினை எடுத்துரைப்பதும், இந்த கிரகம்தான். காலபுருஷனுக்கு முதல் மற்றும் எட்டாம் பாவ கத்திற்கு உரிமைபெற்ற செவ்வாய், ஒரு மனிதன் தன்னைப் பற்றியும், தனது ரகசியங்களைப் பற்றியும் கூறும் தன்மையினை விருச்சிகம் என்னும் எட்டாம் பாவகம் ஏற்றுக் கொள்வதை சூசகமாக எடுத்துரைக்கிறது.

இத்தனை வல்லமைகளையும், பெருமை களையும் தனக்குரியகாக்கிக் கொண்ட செவ்வாயை மக்கள் சற்று அச்சத்துடனும், பதட்டத்துடனமே அணுகுகின்றார்கள். காரணம் செவ்வாய் தோஷம் திருமணத்தில் பெரும் இடர்ப்பாடை அளித்துவிடும் என்கின்ற எண்ணம்தான்.

ss

பொதுவாக லக்னத்திலிருந்து 2, 4, 7, 8, 12-ல் செவ்வாய் இருந்தால் தோஷமாக எடுத்துக் கொள்ளப்படுகின்றது.

இதற்கு

செவ்வாய் என்கின்ற மங்களகாரகன், நவ கிரகங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த கிரகமாகும்.

Advertisment

உலகியல் வாழ்வில் ஒருவர் அனுபவிக்கும் மண், மனை, விவசாய நிலம் போன்றவற்றைக் குறிக்கும் கிரகம் செவ்வாயாகும்.

Advertisment

மனித உடலில் அமைந் துள்ள ஒட்டுமொத்த ரத்தத்தின் தன்மையினை எடுத்துரைப்பதும், இந்த கிரகம்தான். காலபுருஷனுக்கு முதல் மற்றும் எட்டாம் பாவ கத்திற்கு உரிமைபெற்ற செவ்வாய், ஒரு மனிதன் தன்னைப் பற்றியும், தனது ரகசியங்களைப் பற்றியும் கூறும் தன்மையினை விருச்சிகம் என்னும் எட்டாம் பாவகம் ஏற்றுக் கொள்வதை சூசகமாக எடுத்துரைக்கிறது.

இத்தனை வல்லமைகளையும், பெருமை களையும் தனக்குரியகாக்கிக் கொண்ட செவ்வாயை மக்கள் சற்று அச்சத்துடனும், பதட்டத்துடனமே அணுகுகின்றார்கள். காரணம் செவ்வாய் தோஷம் திருமணத்தில் பெரும் இடர்ப்பாடை அளித்துவிடும் என்கின்ற எண்ணம்தான்.

ss

பொதுவாக லக்னத்திலிருந்து 2, 4, 7, 8, 12-ல் செவ்வாய் இருந்தால் தோஷமாக எடுத்துக் கொள்ளப்படுகின்றது.

இதற்கு விதிவிலக்காக சந்திரனுக்கு அல்லது சுக்கிரனுக்கு 2, 4, 7, 8, 12-ல் செவ்வாய் இருந்தால் தோஷத்தை சற்று குறைத்துக் கொடுக்கிறது என்கின்றன பல ஜோதிட நிகண்டுகள்.

மேலும் செவ்வாய் ஆட்சி, உச்சம், நீசம்பெறும் இடங்களில் அமரும்பொழுது இத்தகைய தோஷத் தைத் தருவதில்லை என்பதும் உண்மை.

செவ்வாய் தோஷம் எதற்காகப் பார்க்க வேண்டும்.

உடலின் இயக்கத்திற்கு ஆணிவேராக அமைந் துள்ள ரத்தத்தின் தன்மைதான் செவ்வாய் என்று முன்பே கூறியிருந்தேன். ஒருவரின் வீரம், வீரியம் போன்றவற்றையும் செவ்வாயே தீர்மானிக்கிறது.

ஆண்களின் உடலில் உயிரணுவின் வலிமையையும், பெண்களின் உடலில் கருமுட்டையின் வலிமையையும், தீர்மானிப்பது செவ்வாயே ஆகும்.

எனவேதான் ஒரு ஆணின் ஜாத கத்தில் செவ்வாய் மற்றும் மூன்றாம் அதிபதியின் தன்மைகள் குழந்தைப் பேறுக்காக ஆராயப்படுகின்றன.

அதேபோன்று பெண்களின் ஜாதகத்தில் செவ்வாய் மற்றும் ஒன்பதாம் அதிபதியின் நிலை ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.

மேலும் ரத்தம் சம்பந்தமான உடன் பாடில்லா நிலை என்கின்ற தஐ எஸ்ரீற்ர்ழ் எதிர் மறையாக இருக்கலாம்.

இது அடுத்த சந்ததியை உருவாக்கும் சூழ்நிலையில் சில தடுமாற்றங்களையும், குழந்தையின் வளர்ச்சியில் பிரச்சினைகளை யும், தாயாருக்கு சில பாதிப்புகளையும் தந்து விடுகிறது. எனவேதான் இந்த செவ்வாய் தோஷத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படு கிறது.

மேலும் லக்னத்திலிருந்து 1, 5, 9; 1, 4, 7, 10 ஆகிய இடங்களில் சுபர்களின் தொடர்பில் அமரும்பொழுது அவர்களின் ரத்த வகை பாசிட்டிவாகவும், 6, 8, 12 ஆகிய இடங்களில் அசுபர்களின் தொடர்பில் அமரும்பொழுது அவர்களின் ரத்த வகை நெகட்டிவாகவும் பெரும்பான்மையாக இருப்பதைக் காண முடிகிறது.

அதேபோன்று செவ்வாய்- கேது, செவ்வாய்- ராகு, செவ்வாய் மாந்தி ஆகிய தொடர்புகள் ரத்தவகை சம்பந்தப்பட்டால் நகய எனப்படும், வெய்யிலில் சென்றால் உடல் உதா நிறம் படர்ந்து காணப்படும் நோயின் தன்மை இருப்பதாகவும் சில ஜாத கங்களில் கண்டறிய முடிகிறது.

ஆக, ஒரு மனிதனின் உடல்நிலை, ஆரோக் கியம், வீரியம், களத்திரம், குழந்தைப் பேறு ஆகிய அனைத்து சூழலிலும் செவ்வாயின் ஒத்துழைப்பு நிச்சயமாகத் தேவைப்படுகிறது.

எந்த ஜாதகத்தில் செவ்வாய் மாந்தி தொடர்பு பெறுகிறதோ, அந்த வம்சாவளியில் நிச்சயமாக நெருப்பின் கண்டத்தினால் ஒரு உயிர் இழக்கப்பட்டிருக்கும்.

அதேபோன்று தோஷம் என்று அறியக்கூடிய இடங்களில் 2-ஆம் இடத்தில்- அதுவும் குடும்ப ஸ்தானமென்னும் இடத்தில் செவ்வாய் அமரும்பொழுது, மற்றவர்களைப் புண்படுத்தும் வகையான சொற்களையும், மனதைப் புரிந்துகொள்ள முடியாமல் காயப்படுத்தி விடும் தன்மையும் இவர்களுக்கு இயல்பாகவே இருக்கும்.

நான்காம் இடத்தில் அமரும்பொழுது அதீத பிடிவாத குணமும், எதிரில் இருப்பவர்களின் கருத்தை ஏற்காத மனமும் இருக்கும்.

ஏழாம் பாவகமான களத்திர ஸ்தானத்தில் அமரும்பொழுது ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போகாத சூழ்நிலையையும், உடல்ரீதியாக சற்று கடினத் தன்மையும் இவர்களுக்கு இருக்கும்.

எட்டாம் பாவகத்தில் செவ்வாய் அமரும் பொழுது, ஏட்டிக்குப் போட்டியாகப் பேசுவது, பாலியல் சார்ந்த ஈர்ப்புகளில் கவனம் அதிகமாக இருப்பது, திடீர்விரயம், பயணங்களால் அலைக்கழிப்பு போன்ற தன்மைகள் இவர்களிடம் இருக்கும்.

பன்னிரண்டாம் இடத்தில் செவ்வாய் அமரும்போது தூக்கம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், வெளிப்படையாகப் பேசும் தன்மை இல்லாமை, சமூகத்தால் ஒதுக்கி வைத்தவர்களுடன் அதீத நட்புறவு போன்ற தன்மைகள் அதிகமாகக் காணப்படும்.

இந்த குணத்துடன் இருப்பவர்களுக்கு இதே குணத்தை சரிக்கட்டும் தன்மையிலுள்ள எதிர் பாலினத்தை சேர்க்கும்பொழுதுதான் வாழ்வியலில் சில பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும் எனவே தான் செவ்வாய் தோஷம் முக்கியமாகப் பார்க்கப்படுகின்றது.

செவ்வாய் தோஷத்திற்குப் பரிகாரமே செவ்வாய் தோஷம் உள்ளவர்களை இணைப்பதுதான்.

பரிகாரம்

வருடத்திற்கு ஒருமுறையாவது பழனிக்குச் சென்று வருவது. செம்பருத்திப் பூ ஏதாவது ஒருவகையில் உணவில் எடுத்துக் கொள்வது, உணவில் பீட்ரூட் சேர்த்துக்கொள்வது போன்றவை செவ்வாய் சார்ந்த பிரச்சினைகளால் ஏற்படும் தாக்கத்தைக் குறைத்து வளமான வாழ்வினை அளிக்கும்.

செல்: 80563 79988

bala270924
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe