Advertisment

மங்களம் அருளும் செவ்வாய் பகவான்! அஸ்ட்ரோ லட்சுமிதேவி

/idhalgal/balajothidam/mars-auspicious-lord-astro-lakshmi-devi

திருமணத்தடையை ஏற்படுத்துவதாக சொல்லப்படும் செவ்வாய் தோஷம் என்பது ஏகப்பட்ட விதிவிலக்குகளுக்கு உட்பட்டது. ஒரு திருமணத்தடையை செவ்வாய் பகவான் மட்டும் தந்துவிடமுடியாது என்பதே நிதர்சனமான உண்மை.

செவ்வாய் பகவானை பற்றிய சில அரிய தகவல்களை இக்கட்டுரையில் காண்போம்.

Advertisment

நாம் வசிக்கும் இந்த பூமி இரண்டாக பிளந்து ஒன்று பூமியாகவும் இன்னொரு பிளவு செவ்வாயாகவும் ஆனது. அதனால் தான் ஒரு தாயின் வயிற்றில் வந்த பிள்ளைகளை சகோதரர்கள் என்பதுபோல செவ்வாய் பக வானை நாம் சகோதர காரகன் என்கிறோம்.

உடைப்பட்ட தன்மையைக் கொண்டி ருப்பதால் இது பாறை போன்ற கடினமான ஒரு அமைப்பை கொண்டதாக இருக்கலாம். அதனால்தான் செவ்வாயை கூர்மையான- கடினமான ஆயுதங்களுக்கு ஒப்புமை படுத்துகிறோம்.

அதிகாலத்தில் வாழ்ந்த மனிதன் கற்களையே ஆயுதமாகக்கொண்டு வாழ்ந்தான். அதனால் தான் அந்த கற்பாறைகளை அதிகமாகக் கொண்டது என்பதால் செவ்வாய் ஆயுத காரகன் ஆனார்.

Advertisment

இந்த கற்களே ந

திருமணத்தடையை ஏற்படுத்துவதாக சொல்லப்படும் செவ்வாய் தோஷம் என்பது ஏகப்பட்ட விதிவிலக்குகளுக்கு உட்பட்டது. ஒரு திருமணத்தடையை செவ்வாய் பகவான் மட்டும் தந்துவிடமுடியாது என்பதே நிதர்சனமான உண்மை.

செவ்வாய் பகவானை பற்றிய சில அரிய தகவல்களை இக்கட்டுரையில் காண்போம்.

Advertisment

நாம் வசிக்கும் இந்த பூமி இரண்டாக பிளந்து ஒன்று பூமியாகவும் இன்னொரு பிளவு செவ்வாயாகவும் ஆனது. அதனால் தான் ஒரு தாயின் வயிற்றில் வந்த பிள்ளைகளை சகோதரர்கள் என்பதுபோல செவ்வாய் பக வானை நாம் சகோதர காரகன் என்கிறோம்.

உடைப்பட்ட தன்மையைக் கொண்டி ருப்பதால் இது பாறை போன்ற கடினமான ஒரு அமைப்பை கொண்டதாக இருக்கலாம். அதனால்தான் செவ்வாயை கூர்மையான- கடினமான ஆயுதங்களுக்கு ஒப்புமை படுத்துகிறோம்.

அதிகாலத்தில் வாழ்ந்த மனிதன் கற்களையே ஆயுதமாகக்கொண்டு வாழ்ந்தான். அதனால் தான் அந்த கற்பாறைகளை அதிகமாகக் கொண்டது என்பதால் செவ்வாய் ஆயுத காரகன் ஆனார்.

Advertisment

இந்த கற்களே நெருப்புக்கும் ஒருகாலத்தில் உதவின. அதனால்தான் செவ்வாய் ஒரு நெருப்பு கிரகமாக அறியப்படுகின்றது.

மனித உடலில்கூட கூர்மையானதும்- கடினமானதாகவும் இருக்கக்கூடியது பற்களாகும். எனவே பற்கள் செவ்வாய் உடலுக்கு வலு சேர்ப்பது எலும்பு மஜ்ஜை மற்றும் சிவப்புநிற தசைகளே. அதனால் இதனைக் குறிப்பது செவ்வாயே ஆவார்.

மண்ணில் இருந்து பிரிந்து மண்ணை அள்ளிச்சென்ற கிரகம் என்பதால் தான் மண்ணாசை தரும் கிரகம் செவ்வாயாகும். உலகத் தில் நடக்கும் அத்தனை போர்களும், சண்டை, சச்சரங்களும், பங்காளி சண்டைகளுக்கும் மண்ணாசையே காரணமாகும். ஆகவே சண்டை, சச்சரவுகளைக் குறிக்கும் கிரகம் செவ்வாய் ஆகும். மேலும் யுத்தக் களத்தில்தான் ஆயுதங்கள் பயன்படுத்தப்படுகின்றன. யுத்தக்களத்தில் ரத்தம் சிந்தப்படுகின்றது.

cc

அதனால்தான் ஆயுதங்கள் பயன்படுத்தும் அனைவருமே செவ்வாயின் ஆதிக்கத்தில் வந்துவிடுவார்கள். கசாப்பு கடைக்காரர்முதல் அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்வரை அனைவரும் செவ்வாய் ஆதிக்கத்தில் உள்ளவர்களே! செவ்வாய் சந்திரனை பார்க்கும் நிலையில் ஜாதகர் அதிக முன்கோபம் உடையவராகவும் அவசர புத்தி உள்ள நபராகவும் இருக்கிறார்.

செவ்வாய் எட்டாம் இடத்தோடு தொடர்பு கொள்ளும் நிலையில் ராகு அல்லது சனி பகவான் சேர்க்கை பெருமை நிலையிலும் விபத்துகளையும் கண்டங்களையும் தர தவறுவதில்லை.

செவ்வாய் யோகாதிபதியாகக்கொண்ட லக்னங்களில் முதன்மையானது கடகம், சிம்மம் மற்றும் மீன லக்னமாகும்.

தன் சொந்த லக்னமான மேஷம், விருச்சிகத்திற்குகூட பெரும் நற்பலன்களை இவர் வாரி வழங்குவது இல்லை.

செவ்வாய் ஒரு ஜாதகத்தில் பௌர்ணமி, சந்திரன், குரு, சுக்கிரன் இவர்களின் தொடர்பு ஏற்படும்போது அமோகமான நற்பலன்களை வழங்கும் நிலையில் இருப்பார். அதாவது ஜாதகருக்கு சகோதரருடைய நன்மைகள் நில பலன்கள் வீடு, ரியல் எஸ்டேட், யூனிபார்ம் சார்ந்த தொழில்கள் போன்றவற்றின் மூலமாக பெரும் தனத்தையும் முன்னேற்றத் தையும் வழங்கும் நிலையில் இருக்கும். இந்த அமைப்பில் செவ்வாய் தசை நடப்பில் வரும்பொழுது அந்த ஏழு வருடகாலமும் ஜாதகர் அளப்பரிய சொத்துகளை சேர்த்து வாழ்வின் உயரத்திற்கு சென்றுவிடுவார்.

பொதுவாக திருமணத் தடைக்கு முக்கிய காரணியாக சொல்லப் படும் செவ்வாய், சந்திரனுக்கு அல்லது லக்னத்திற்கு அல்லது சுக்கிரனுக்கு இரண்டு, நாலு, ஏழு, எட்டு, இரண்டில் இருக்கும்பொழுது அது தோஷம் என சொல்லப்படுகின்றது. ஆனால் இதற்கு ஏராளமான விதிவிலக்குகள் இருக்கிறது. விதிவிலக்குகளை அலசி ஆராயும்பொழுது அங்கு செவ்வாய் தோஷம் என்ற ஒரு நிலை பெரும்பாலும் இருப்பதில்லை.

செவ்வாய் ஒரு ஜாதகத்தில் எந்த பாவகத்தில் இருக்கிறதோ அந்த பாவம் அதிக துடிப்புமிக்கதாகவும் வேகமாகவும் இயங்கும் என்பது பொதுவான ஒரு விதி.

லக்னத்தில் செவ்வாய் இருக்கும் ஜாதகர் பரப்பரவென்று துடிப்புடன் செயல் படக்கூடிய நபராக இருப்பார்.

இரண்டாம் இடத்தில் இருக்கும்போது பேச்சில் கடுமை இருக்கும்.

மூன்றாம் இடத்தில் சகோதரர்களுக்கு சிறப்பு குறைவு.

நான்காம் இடத்தில் இருக்கும் செவ்வாய் வாழ்வில் என்றேனும் ஒருநாள் வீடு, நில புலன்களை வாங்கவைத்து விடுவார்.

ஆறாம் இடத்தில் செவ்வாய் எதிரிகள் அஞ்சி ஓடுவர். பத்தாம் பாவகத்தில் செவ்வாய் திக்பலம் அடைந்து ஜாதகரை அரசு பணிகள், இராணுவம், பொறியியல் தொழில் சார்ந்த விஷயங்களில் ஒரு உயர்வான நிலையை தருகிறார்.

12-ல் இருக்கும் செவ்வாய் கால் பந்தாட்டம், அத்தெலெட்டிக்ஸ், ஓட்டப் பந்தயம் போன்ற விளையாட்டுத் துறைகளில் ஜாதகரை சாதனைபுரிய செய்கிறார்.

ஒரு செயல் சுறுசுறுப்பாக இயங்குவதற் கும் எந்த ஒரு காரியத்தையும் தலைமை ஏற்று சிறப்பாக நிகழ்த்துவதற்கும் வீரமும் தைரியமும் நிறைந்த செவ்வாய் ஆற்றல் அவசியம் தேவை.

இப்படிப்பட்ட செவ்வாய் பகவானை உத்தியோகத்திற்காகவும் பூமி யோகம் அமை வதற்கும் நல்ல திருமண வாழ்க்கை அமை வதற்கும் செவ்வாய் பகவானை செவ்வரளி பூக்கள் கொண்டு ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் வழிபட்டுவர வாழ்வில் எல்லா வளமும் உண்டாகும்.

செல்: 93857 19579

bala260124
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe