ஒரு ஜாதகரின் பலனை நிர்ணயம் செய் வதில் கிரக இணைவுகள் பெரும்பங்கு வகிக் கின்றன. ஜாதகத்தைப் பார்த்துப் பலன் சொல் வதற்கு பல வழிமுறைகள் இருந்தாலும், கிரக இணைவுகளைப் பயன்படுத்திச் சொல்லும் பலன் நூறு சதவிகிதம் கைகொடுக்கும்.
கிரக இணைவுகள் என்று இங்கே குறிப்பிடுவது பார்வை பலம், திரிகோணம், கேந்திரம், அஷ்டம ஸ்தானம், பாதக ஸ்தானம், கோட்சாரத் தொடர்பு, கிரகங்களின் பலம், பலவீனம் ஆகியவற்றின்மூலம் பலன் கூறுவது.
திருமணம், குழந்தை பாக்கியம், பொருளாதாரம், வேலைவாய்ப்பு போன்ற மனித வாழ்வில் ஏற்படும் முக்கியமான நிகழ்வுகளை கோட்சார ஜனனகால கிரக இணைவுகளே தீர்மானம் செய்கின்றன. செவ்வாய் காலபுருஷ அஷ்டமாதிபதி என்பதால், அதன் சேர்க்கை அசுப கிரகங்களுடன் ஏற்படும்போது பல அசுப விளைவுகளை ஏற்படுத்துகிறது என்றாலும், விமர்சித்துக் கூறக்கூடிய பிரச்சினைகள் ஐந்து.
செவ்வாய்- 1. பூமிகாரகன் என்பதால் இடதோஷத்தைத் தருகிறது. இந்த இணைவுள்ள ஜாதகர்களுக்கு எளிதில் சொத்து கிடைப்பதில்லை. சிலருக்கு கிடைத்தாலும் வில்லங்கம், தோஷமுள்ள சொத்தே கிடைக்கிறது. ஒருசிலருக்கு வாங்கும் போது எந்த பிரச்சினையும் இல்லாமலிருந்து, குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பயனற்ற சொத்தாகிவிடுகிறது. அவை- வாஸ்து பிரச்சினையுள்ள சொத்தாகதான் இருக்கும்.
நிலம் சம்பந்தப்பட்ட வழக்குகள் இருக்கும்.
சட்ட ரீதியான இட வில்லங்கங்கள், வீடு வில்லங்கம், கடனுக்காக கொடுக்கப்பட்ட இடம், வீடு, வாகனம் போன்றவை சட்டச் சிக்கலில் சிக்கிக் கொள்ளுதல்.
பூர்வீகச்சொத்து பயனற்றதாகவே இருக்கிறது.
அத்துடன் இயந்திரம், வாகனங்களுக்கு செவ்வாயே காரகம் வகிப்பதால், அவர்களின் தொழில் நிறுவனங்களில் இயந்திரங்கள் எளிதில் பழுதாகும்.
வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்படும்.
2. சகோதர காரகன் என்பதால் உறவுகளி டையே மனக்கசப்பு.
சொத்துப் பிரச்சினை காரணமாக சகோதரர் களிடையே மனக்கசப்பு வருதல். உடன்பிறந்த சகோதரர்களின் ஆயுள் குறையும் அல்லது எப்பொ ழுதும் வறுமையுடன், நோய்த் தாக்கத்துடன் இருப்பார்கள்.
3. ரத்த காரகன் என்பதால் ரத்தம் தொடர்பான நோய்.
இந்த கிரகச் சேர்க்கை உடலில் ரத்த அணுக்கள் குறைபாட்டை ஏற்படுத்தும்.
ராகு பாட்டனைக் குறிக்கும் கர்மவினை கிரகம் என்ப தால் தீராத பரம்பரை வியாதியை ஏற்படுத்துகிறது.
சனி தொடர்பு பெற்றால் விபத்து, அறுவை சிகிச்சை, உடலுறுப்பை இழக்கும் நிலை ஏற்படும். ஒருசிலருக்கு வெட்டுக்காயம், தற்கொலை எண்ணமும், வெகு சிலருக்கு விஷத்தீண்டலும் ஏற்படும்.
கால்சிய சத்துக்குறைவால் பற்கள், எலும்புகள் பாதிக்கப்படுகின்றன.
பெண்களுக்கு கருப்பையின் உள்தோல்கள் பாதிக் கப்பட்டு மாதவிடாய்க் கோளாறுகளை ஏற்படுத்தும்.
5-ஆம் பாவகத்தோடு சம்பந்தம்பெறும் செவ்வாய், ராகு கருக்கலைப்பை ஏற்படுத்தும்.
4. திருமண வாழ்வில் திருப்தியற்ற நிலை.
ஆண் ஜாதகத்தில் செவ்வாய் சகோதரரையும், பெண் ஜாதகத்தில் செவ்வாய் கணவரையும் குறிக்கும் என்பதால், இக்கிரகச் சேர்க்கை ஆண்களைவிட பெண்களைக் கடுமை யாக பாதிக்கச் செய்கிறது. திருமணமே நடக்காத நிலை, திருமணத்திற்குப் பிறகு விவாகரத்து அல்லது கட்டாயத் திற்காக வாழும் பெண்களே அதிகம் இருக்கிறார்கள். அல்லது தகுதிக் குறைவான வரனுடன் வாழும் நிலை ஏற்படுகிறது. எப்படிப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்தாலும், குறைசொல்லி வாழக்கூடிய கிரகச் சேர்க்கையாக இருக்கும். கணவரைவிட்டுப் பிரிந்துவாழ நேரும்.
5. செவ்வாய் கோபக்காரகன் என்பதால் பிடிவாத, கொடூர குணத்தை ஏற்படுத்தும்.
பக்தி, சாஸ்திர விருப்பம், ஆன்மிகம், பெரியோர்களை மதித்தல் போன்றவை செவ்வாய்- ராகு கிரகச் சேர்க்கைக்கு இல்லை.
பிடிவாத குணமும், பிறர் மனதை நோகடிக்கும் தன்மையும் உண்டு.
உச்சகட்ட கோப வெளிப்பாடு காரணமாக குற்றம் செய்து தண்டனை அனுபவிக்கிறார்கள் அல்லது மனநோயாளியாகிறார்கள்.
அடுத்தவர்களைக் குறைகூறிப் பிழைப்பதில் இந்த கிரகச்சேர்க்கைக்கு இணை கிடையாது.
செவ்வாய் + ராகு மற்றும் செவ்வாய் + கேது கிரகச் சேர்க்கையில், ராகு செய்யும் தவறுகள் வெளியில் தெரியும்.
கேது செய்யும் தவறுகள் வெளியில் தெரியாது. ஆனால் இரண்டும் தொந்தரவு செய்யும்.
ஆண் ஜாதகத்தில் செவ்வாய் இருக்கும் ராசியில் பெண் ஜாதகத்தில் கேது இருந்தாலோ அல்லது பெண் ஜாதகத்தில் செவ்வாய் இருக்கும் ராசியில் ஆண் ஜாத கத்தில் கேது இருந்தாலோ பிரச் சினை தரும்.
தற்போது கோட்சாரத்தில் 8-5-2019 முதல் 22-6-2019 வரை செவ்வாய், ராகு இணைகின்றன.
அத்துடன் செவ்வாய், சனி நேரடிப் பார்வை இருப்பதால் ஏற்படும் பொது வான பிரச்சினைகளைப் பார்க் கலாம்.
வங்கிகள் மக்களுக்கு அதிக கடன் தொகை தர முன்வரும். வங்கிகளில் வாராக்கடன் தொகை அதிகமாகும். வங்கிக்கடனால் விரயம் அதிக மாகும்.
ஜாமின் போட்டு ஏமாறுபவர் களின் எண்ணிக்கை அதிகமாகும்.
ஏலச்சீட்டுக் கம்பெனிகள் அல்லது தனியாக ஏலச்சீட்டு நடத்துபவர்கள் அதிகரிப்பார்கள். பொதுமக்கள் மிக கவனமாக இருக்கவேண்டும். சீட்டு போடக்கூடாது; சீட்டு போட்டால் முதலிலேயே பணம் எடுத்துவிட வேண்டும்.
பத்திரப் பதிவில் தடை இருக்கும். ஒரிஜினல், மூலப்பத்திரம் தொலைந்து போகும். ரசீதுகளைப் பத்திரமாக வைத்துக்கொள்ளவேண்டும்.
காற்று ராசியில் ராகு, சனி பார்வை பெற்று, இதனுடன் செவ்வாய் இருப்பதால், மின் இணைப்பு, செல் பேசி சாதனங்கள், டவர்கள் பாதிக்க வாய்ப்பு அதிகம். இருள் கிரகங்கள் தொடர்புள்ளதால், இரவில் மின் துண்டிப்பு அதிகமிருக்கும். குரு வக்ரமாக இருப்பதால் பாதிப்பு கடுமையாக இருக்கும்.
காலபுருஷனுக்கு 1, 8-ஆம் பாவத்திற்கு ஆதிபத்தியம் பெற்றவர் செவ்வாய். 1-ஆம் பாவம் உயிரைக் குறிப்பது, 8-ஆம் பாவம் ஆயுளைக் குறிப்பது. சனி பார்வை படுவதால் விபத்துகள் அதிகரிக்கும்.
செவ்வாய், ராகு- சனி சம்பந் தத்தால் ரத்தத்தில் பிரச்சினைகள் தரும் நோய்கள் உருவாகும். கருக்குழாய் அடைப்பு, மாதவிடாய்க் கோளாறு போன்ற பிரச்சினைகள் அதிகரிக்கும்.
செயற்கை உடலுறுப்புகள் தயாரிப் பவர்கள் அதிகரிப்பர். செயற்கைப் பல் பொருத்து பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.
திருட்டு பயம் அதிகரிக்கும்.
மக்களைப் பாதுகாப்பதில் போலீஸ், ராணுவம் அதிக கவனம் செலுத்துவார்கள்.
அரசியல் கட்சிகளிடையே ஒற்றுமை குறையும். பல கட்சிகள் உடையும். புதிய கட்சிகள் உருவாகும்.
இயற்கைச் சீற்றம் மிகுதியாகும்.
நிலத்துக்காரகன் செவ்வாய், காற்று ராசியில் சம்பந்தம்பெறுவதால் நிலத்தில் நீர் வளம் குறையும்; சனி சம்பந்தம் பெற்றதால் நிலத்தடி நீர் மிகவும் ஆழத்தில் இருக்கும்.
செவ்வாய், கேது சம்பந்தம் பெறுவதால் மதவாதம் அதிகரிக்கும்.
பத்திரப்பதிவு முறைகேடு இருக்கும். பட்டா இல்லாத நிலங்கள், முறைப்படுத்தப்படாத நிலங்கள் தவறாகப் பயன்படுத்தப்படும். சொத்து தொடர்பான வழக்குகள் குவியும்.
பாகம் பிரிக்கமுடியாத இடத்தில், சுடுகாடு இருந்த இடத்தில் புதிய வீட்டு மனைகள் உருவாகும் என்பதால், பொதுமக்கள் கவனத் துடன் வீட்டுமனையைத் தேர்வுசெய்ய வேண்டும்.
செவ்வாய், சனி சேர்க்கை வேலையில் புரமோஷனுக்கு தடை ஏற்படுத்தும். செவ்வாய், கேது இணைவு உத்தியோகத்தில் புரமோஷனுக்காக புதிய வழக்குகள் ஏற்படுத்தும்.
செவ்வாய் மங்கள காரகன். ஆக, ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவினை தரக்கூடிய கிரகங்களின் சம்பந்தம் பெறுவதால் திருமணங்களைக் கெடுத்துவிடுவார்.
பெண்கள் சட்டத்தை அதிகம் பயன்படுத்துவார்கள். பெண்கள் வரதட்சணை, விவாகரத்து வழக்குகளை ஆண்கள்மீது பதிவுசெய்வார்கள். பெண்கள் பூர்வீக சொத்து, பணத்திற்காக உடன்பிறந்த ஆண்கள்மீதும் வழக்குப் பதிவு செய்வார்கள்.
எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பெருட்கள் உற்பத்தியில் அதிகம் பழுதிருக்கும்.
ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி அதிகரிக்கும். மிகக்குறிப்பாக துப்பாக்கி உற்பத்தி அதிகரிக்கும். கள்ளத்துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அதிகரிப்பார்கள்.
விளையாட்டு வீரர்கள் அரசால் கௌரவிக்கப்படுவார்கள். புதிய விளை யாட்டு வீரர்கள் உருவாக்கப்படுவார்கள்.
காது- மூக்கு- தொண்டை பிரச்சினை அதிகரிக்கும்.
தகவல் தொடர்புத்துறையில் அதிநவீன வளர்ச்சி ஏற்படும்.
செல்போன் தொலைவது அதிகமாகும். சிலருக்கு செல்போனிலுள்ள பதிவுகள் அழிந்துவிடும். காற்று ராசியில் ராகு, புதன் வீட்டில் என்பதால் விஞ்ஞான வளர்ச்சி அதிகரிக்கும்.
விண்வெளி ஆராய்ச்சிகள் வெற்றி பெறும்.
தொழிற்சாலைகளிலிருந்து வரும் புகை, காற்றை மாசுபடுத்தும்.
காற்றில் விஷவாயு பரவும் அபாயம் ஏற்படும்.
புதன் சார்ந்த தொழில்களான வங்கிகள், கூட்டுறவு வங்கி, பத்திரிகைத்துறை, கல்வி நிறுவனங்கள், ஜோதிடம், பத்திரப் பதிவுத் துறை போன்றவை வளர்ச்சி பெறும். பத்திரிகைத்துறையில் எழுத்துப் பிழை அதிகரிக்கும்.
பரிகாரங்கள்
செவ்வாய்க்கிழமைகளில் முருகன், விநாயகர் வழிபாடுசெய்ய வேண்டும்.
ராகு காற்று ராசியான மிதுனத்தில் சஞ்சாரம் செய்வதால், பரிகாரங்கள், பாராயணம் செய்யும் மந்திர ஜபமாக இருப்பது மிகவும் நன்மை தரும். நாட்டு நலனுக்கு எல்லாரும் கூட்டுப் பிரார்த் தனையாக- அவரவர் பகுதியிலுள்ள கோவில் களில் சனிக்கிழமை கூட்டாக இணைந்து, சாந்தி மந்திரத்தை ஆத்மார்த்தமாக ஜெபித்துவர அளவிட முடியாத நன்மை உண்டாகும்.
ராகு- கேதுக்களின் தாக்கத்தைக் குறைக்க தினமும் திருக்கோளறு பதிகம் படிக்கவேண்டும்.
செல்: 98652 20406