Advertisment

விருச்சிக லக்னத்திற்கு 12 பாவங்களில் செவ்வாய்!

/idhalgal/balajothidam/mars-12-sins-scorpio

க்ன கேந்திர ஸ்தானத்தில், சுயவீட்டில், விருச்சிகத்தில் செவ்வாய் இருந்தால் ஜாதகருக்கு ருசக யோகம் உண்டாகும். அதனால் உடல்நலம் நன்றாக இருக்கும். மன தைரியம் இருக்கும். ஜாதகர் தன் பகைவர்களை வெல்வார். சிலருக்கு உஷ்ண நோய் ஏற்படும்.

Advertisment

2-ஆம் பாவத்தில் குருவின் தனுசு ராசியில் செவ்வாய் இருந்தால் ஜாதகர் கடுமையாக உழைத்துப் பணத்தை சம்பாதிப்பார். குடும்பத்தில் உள்ளவர்களால் மனக்கஷ்டம் உண்டாகும். உடல் நலத்தில் சிறிய பிரச்சினை இருக்கும். பகைவர்களால் சிக்கல்கள் ஏற்படும். அதன்காரணமாக குடும்பத்தில் குழப்பம் உண்டாகும்.

3-ஆம் பாவத்தில் சனியின் மகர ராசியில் செவ்வாய் உச்சமடைகிறார். ஜாதகருக்கு உடன்பிறந் தோருடன் சுமாரான உறவே இருக்கும். ஜாதகர் தைரியசாலியாகவும் பலசாலியாகவும் இருப்பார். வியாபாரத் தில் நிறைய பணம் சம்பாதிப்பார். சிலரது

க்ன கேந்திர ஸ்தானத்தில், சுயவீட்டில், விருச்சிகத்தில் செவ்வாய் இருந்தால் ஜாதகருக்கு ருசக யோகம் உண்டாகும். அதனால் உடல்நலம் நன்றாக இருக்கும். மன தைரியம் இருக்கும். ஜாதகர் தன் பகைவர்களை வெல்வார். சிலருக்கு உஷ்ண நோய் ஏற்படும்.

Advertisment

2-ஆம் பாவத்தில் குருவின் தனுசு ராசியில் செவ்வாய் இருந்தால் ஜாதகர் கடுமையாக உழைத்துப் பணத்தை சம்பாதிப்பார். குடும்பத்தில் உள்ளவர்களால் மனக்கஷ்டம் உண்டாகும். உடல் நலத்தில் சிறிய பிரச்சினை இருக்கும். பகைவர்களால் சிக்கல்கள் ஏற்படும். அதன்காரணமாக குடும்பத்தில் குழப்பம் உண்டாகும்.

3-ஆம் பாவத்தில் சனியின் மகர ராசியில் செவ்வாய் உச்சமடைகிறார். ஜாதகருக்கு உடன்பிறந் தோருடன் சுமாரான உறவே இருக்கும். ஜாதகர் தைரியசாலியாகவும் பலசாலியாகவும் இருப்பார். வியாபாரத் தில் நிறைய பணம் சம்பாதிப்பார். சிலரது தம்பிக்கு உடல்நலத்தில் பாதிப்பிருக்கும். சிலருக்கு தம்பிகளே இருக்கமாட்டார்கள்.

tt

Advertisment

4-ஆம் பாவத்தில் எதிரியான சனியின் கும்ப ராசியில் செவ்வாய் இருந்தால் வீடு, மனை ஆகிய

வற்றை வாங்குவதில் பிரச்சினை ஏற்படும். உடல் நலத்தில் பாதிப்பிருக்கும். திருமண விஷயத்தில் சிறிய பிரச்சினை உண்டாகும். சிலருக்குத் திருமணம் தாமதமாக நடக்கும். வியாபாரத்தில் பெயர், புகழ் கிடைக்கும். ஜாதகர் சுமாரான வாழ்க்கை வாழ்வார்.

5-ஆம் பாவமான திரிகோணத்தில், குருவின் தனுசு ராசியில் செவ்வாய் இருந்தால் ஜாதகர் பல பிரச்சினைகளைக் கடந்துதான் தன் படிப்பை முடிக்க

வேண்டியதிருக்கும். குழந்தை பாக்கியம் இருக்கும். ஜாதகர் தன் பகைவர்களை வெல்வார். பல மறைமுக வேலைகளைச் செய்து பணம் சம்பாதிப்பார். செலவுகள் அதிகமாக இருக்கும். வெளித் தொடர்பு களால் சிலருக்குப் பிரச்சினைகள் உண்டாகும். ஓரளவு குறைவில்லாமல் பணம் வரும்.

6-ஆம் பாவத்தில், சுயவீடான மேஷ ராசியில் செவ்வாய் இருந்தால் ஜாதகர் தன் எதிரிகளை வெல்வார். தர்ம காரியங்களில் சிறிது குறையிருக்கும். அதிகமாக கோபம் வரும். ஜாதகர் தைரியமாகவும், மனவலிமையுடனும் செயல்பட்டு வெற்றி பெறுவார்.

7-ஆம் பாவத்தில் சுக்கிரனின் ரிஷப ராசியில் செவ்வாய் இருந்தால் திருமண வாழ்க்கையில் பிரச்சினை இருக்கும். சிலருக்கு சிறுநீர் கழிக்கும் உறுப்பில் நோய் ஏற்படும். வியாபாரத்தில் பிரச்சினைகள் உண்டாகும். ஜாதகர் தைரியசாலியாகவும், கடுமையாகப் பேசக்கூடியவராகவும் இருப்பார். எப்படியாவது பணத்தை சம்பாதித்து வசதியாக வாழ நினைப்பார்.

8-ஆம் பாவத்தில் புதனின் மிதுன ராசியில் செவ்வாய் இருந்தால் ஜாதகர் சுமாரான தோற்றத் தைக் கொண்டிருப்பார். பூர்வீக சொத்தில் பிரச்சினை ஏற்படும். வயிறு சம்பந்தப்பட்ட நோய் வரும். பகைவர்களால் பிரச்சினை உண்டாகும். திருமண வாழ்க்கையில் சிக்கல்கள் இருக்கும். ஜாதகர் சுமாராக சம்பாதிப்பார்.

9-ஆம் பாவத்தில் சந்திரனின் கடக ராசியில் செவ்வாய் நீச மடைகிறார். தர்ம காரியங்களில் தடங்கல்கள் ஏற்படும். பகைவர்களால் தொந்தரவுகள் உண்டாகும். செலவுகள் அதிகமாக இருக்கும். வெளித் தொடர்பு களின்மூலம் பணம் வரும். உடன்பிறந்தோரால் சந்தோஷம் கிடைக்கும். அன்னையால் மனக் கவலை உண்டாகும். பூமி, வாகனம் வாங்குவதில் சிக்கல் இருக்கும்.

10-ஆம் பாவத்தில் சூரியனின் சிம்ம ராசியில் செவ்வாய் இருந்தால் ஜாதகர் கடுமையாக உழைத்துப் பெயர், புகழ் பெறுவார். பல போட்டிகளைக் கடந்து வெற்றிபெறுவார். தந்தையால் சந்தோஷம் கிடைக்கும். ஜாதகர் தன் பகைவர்களை வெல்வார். உடல்நலம் நன்றாக இருக்கும். மனதில் தைரியம் கொண்டவர். நல்ல படிப்பு இருக்கும். பிள்ளைகள் நன்றாக இருப்பார்கள்.

11-ஆம் பாவத்தில் புதனின் கன்னி ராசியில் செவ்வாய் இருந்தால் ஜாதகர் கடுமையாக உழைத்து அதிக பணம் சம்பாதிப் பார். பகைவர்களால் பிரச்சினைகள் உண்டாகும். உடல்நலம் சற்று பாதிக்கப்படும். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். படிப்பு விஷயத்தில் பிரச்சினைகளைக் கடந்து வெற்றி கிடைக்கும். ஜாதகர் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றிபெறுவார்.

12-ஆம் பாவத்தில் சுக்கிரனின் துலாம் ராசியில் செவ்வாய் இருந்தால் செலவுகள் அதிகமாக இருக்கும். வெளித் தொடர்புகளின்மூலம் மனதில் சந்தோஷம் உண்டாகும். பெயர், புகழ் கிடைக்கும். எனினும் உடல்நலத்தில் ஏதாவது குறையிருக்கும். இல்வாழ்க்கை யில் கணவன்- மனைவிக்கிடையே கருத்து வேறுபாடிருக்கும். பல போட்டிகளைக் கடந்து ஜாதகர் வெற்றி பெறுவார். பணம் சம்பாதிப் பார்.

செல்: 98401 11534

bala300922
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe