தனுசு லக்னத்திற்கு 12 பாவங்களில் செவ்வாய்!

/idhalgal/balajothidam/mars-12-sins-sagittarius

க்ன கேந்திரத்தில், தன் நண்பரான குருவின் தனுசு வீட்டில் செவ்வாய் இருந்தால் ஜாதகரின் உடல்நலம்

நன்றாக இருக்கும். பலசாலியாக இருப்பார். பெரிய செயல்களைச் செய்வார். படிப்பு சுமாராக இருக்கும். 7-ஆம் பார்வையாக 7-ஆம் பாவத்தை செவ்வாய் பார்ப்பதால், மனைவியுடனான உறவில் ஜாதகருக்கு சில பிரச்சினைகள் இருக்கும். வியாபாரத்தில் சிறிய சிக்கல்கள் ஏற்படும். 8-ஆம் பாவத்தை செவ்வாய் பார்ப்பதால், பூர்வீக சொத்து கிடைப்பதில் தடங்கல்கள் ஏற்படும்.

2-ஆம் பாவத்தில் சனியின் மகர ராசியில் செவ்வாய் உச்சமடை கிறார். அதனால் பண வரவிருக்கும். ஜாதகர் வெளித் தொடர்புகளின்மூலம் பணத்தை சம்பாதிப்பார். குடும்ப வாழ்க்கையில் சில சிக்கல்கள் ஏற்படும். தர்ம காரியங்கள் செய்வதில் பிரச்சினை தோன்றும். வாழ்க்கையே

க்ன கேந்திரத்தில், தன் நண்பரான குருவின் தனுசு வீட்டில் செவ்வாய் இருந்தால் ஜாதகரின் உடல்நலம்

நன்றாக இருக்கும். பலசாலியாக இருப்பார். பெரிய செயல்களைச் செய்வார். படிப்பு சுமாராக இருக்கும். 7-ஆம் பார்வையாக 7-ஆம் பாவத்தை செவ்வாய் பார்ப்பதால், மனைவியுடனான உறவில் ஜாதகருக்கு சில பிரச்சினைகள் இருக்கும். வியாபாரத்தில் சிறிய சிக்கல்கள் ஏற்படும். 8-ஆம் பாவத்தை செவ்வாய் பார்ப்பதால், பூர்வீக சொத்து கிடைப்பதில் தடங்கல்கள் ஏற்படும்.

2-ஆம் பாவத்தில் சனியின் மகர ராசியில் செவ்வாய் உச்சமடை கிறார். அதனால் பண வரவிருக்கும். ஜாதகர் வெளித் தொடர்புகளின்மூலம் பணத்தை சம்பாதிப்பார். குடும்ப வாழ்க்கையில் சில சிக்கல்கள் ஏற்படும். தர்ம காரியங்கள் செய்வதில் பிரச்சினை தோன்றும். வாழ்க்கையே போராட்டமாக இருக்கும்.

3-ஆம் பாவத்தில் சனியின் கும்ப ராசியில் செவ்வாய் இருந்தால் ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். உடன்பிறப்பு களுடனான உறவில் குறையிருக்கும். குழந்தை பாக்கியத்தில் பிரச்சினை ஏற்படும். செலவுகள் அதிகமாக இருக்கும். படிப்பில் தடைகள் உண்டாகும்.

4-ஆம் பாவத்தில் குருவின் மீன ராசியில் செவ்வாய் இருந்தால் அன்னையின் உடல்நலத்தில் குறையிருக்கும். சிலருக்கு சொந்தவீடு இருக்காது. படிப்பில் சிக்கல்கள் ஏற்படும். குழந்தை பாக்கியத்தில் பிரச்சினை இருக்கும். வெளித் தொடர்புகளைப் பயன்படுத்தி, கடுமையாக உழைத்து ஜாதகர் பணத்தை சம்பாதிப்பார்.

5-ஆம் பாவத்தில், சுய ராசியான மேஷ ராசியில் செவ்வாய் இருந்தால் படிப்பில் சிக்கல்களைக் கடந்து வெற்றி கிடைக்கும். குழந்தை பாக்கியத்தில் தடைகளைக் கடந்து வெற்றி கிடைக்கும். மனச் சிக்கல்கள் இருக்கும். வெளித்தொடர்பு நன்றாக இருக்கும்.

122

அதன்மூலம் பணவரவு இருக்கும்.

6-ஆம் பாவத்தில் சுக்கிரனின் ரிஷப ராசியில் செவ்வாய் இருந்தால் ஜாதகர் பகைவர்களை வெல்வார். அவருக்கு சண்டை, சச்சரவுகளில் வெற்றிகிடைக்கும். பிள்ளைகளால் பிரச்சினைகள் உண்டாகும். படிப்பில் குறையிருக்கும். உடல்நலம் பாதிக்கப்படும். மனதில் எப்போதும் சிந்தனை இருக்கும்.

7-ஆம் பாவத்தில் புதனின் மிதுன ராசியில் செவ்வாய் இருந்தால் இல்வாழ்க்கையில் பிரச்சினை ஏற்படும். வியாபாரத்தில் கடுமையான போட்டி இருக்கும். சில நேரங்களில் வர்த்தகத்தில் நஷ்டம் ஏற்படும். பணத்தை சேமிப்பதில் பிரச்சினை இருக்கும். வெளித்தொடர்புகளாலும், புத்திசாலித்தனம் காரணமாகவும் வாழ்க்கை சுமாராக நகரும்.

8-ஆம் பாவத்தில் சந்திரனின் கடக ராசியில் செவ்வாய் நீசமடைவார். அதனால் அடிவயிற்றில் நோய் ஏற்படும். மனதில் சிக்கல்கள் இருக்கும். பிள்ளைகளால் பிரச்சினைகள் உண்டாகும். படிப்பில் தடங்கல்கள் ஏற்படும். வெளித்தொடர்பால் வீண்செலவுகள் இருக்கும்.

9-ஆம் பாவத்தில் சூரியனின் சிம்ம ராசியில் செவ்வாய் இருந்தால், தர்ம காரியங்களைச் செய்வதில் பிரச்சினை ஏற்படும். படிப்பு விஷயத்தில் சிக்கல்கள் தோன்றலாம். குழந்தை பாக்கியத்தில் தடைகளைத் தாண்டி வெற்றி கிடைக்கும். பல பிரச்சினைகளுக்குப்பிறகு சொந்தத்தில் வீடு அமையும். அன்னையுடனான உறவில் சிக்கல் இருக்கும்.

10-ஆம் பாவத்தில் புதனின் கன்னி ராசியில் செவ்வாய் இருந்தால் தந்தையுடனான உறவில் குறையிருக்கும். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படும். கடுமையான உழைப்பாலும், புத்திசாலித்தனம் காரணமாகவும் அரசாங்க விஷயத்தில் வெற்றிகிடைக்கும். வெளித் தொடர்புகளின்மூலம் பணம் வரும். பிள்ளைகளால் சில பிரச்சினைகள் உண்டாகும்.

11-ஆம் பாவத்தில் சுக்கிரனின் துலாம் ராசியில் செவ்வாய் இருந்தால் ஜாதகர் நன்கு பணத்தை சம்பாதிப் பார். எனினும், செலவுகள் அதிகமாக இருக்கும். வெளித் தொடர்புகளின்மூலம் பணம் வரும். சண்டை, சச்சரவுகளில் பிரச்சினைகளைக் கடந்து வெற்றி கிடைக்கும்.

12-ஆம் பாவத்தில் சுய ராசியான விருச்சிக ராசியில் செவ்வாய் இருந்தால் செலவு கள் அதிகமாக இருக்கும். வெளித் தொடர்புகளில் வெற்றி கிடைக்கும். குழந்தை பாக்கியத்தில் பிரச்சினை ஏற்படும். சிலரின் வாரிசுகள் வெளியூர்க ளிலும் வெளிநாடுகளிலும் வாழ்வார்கள்.

செல்: 98401 11534

bala021222
இதையும் படியுங்கள்
Subscribe