Advertisment

துலாம் லக்னத்திற்கு 12 பாவங்களில் செவ்வாய்!

/idhalgal/balajothidam/mars-12-bhavas-libra

துலா லக்னத்தில், சுக்கிரனின் ராசியில் செவ்வாய் இருந்தால் ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். அழகான தோற்றத்தைக் கொண்டிருப்பார். அதிக செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். ஜாதகர் பணக்காரராக இருப்பார்.

Advertisment

2-ஆம் பாவத்தில், சுயவீட்டில், விருச்சிக ராசியில் செவ்வாய் இருந்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். சிலர் தங்களின் மனைவியுடன் வாதத்தில் ஈடுபடுவார்கள்.

Advertisment

அப்படிப்பட்ட நேரங்களில் வீட்டில் அமைதியற்ற சூழல் உண்டாகும்.

ஜாதகருக்கு பூமி, வாகனம் இருக்கும்.

3-ஆம் பாவத்தில் குருவின் தனுசு ராசியில் செவ்வாய் இருந்தால் ஜாதகர் தைரியசாலிய

துலா லக்னத்தில், சுக்கிரனின் ராசியில் செவ்வாய் இருந்தால் ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். அழகான தோற்றத்தைக் கொண்டிருப்பார். அதிக செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். ஜாதகர் பணக்காரராக இருப்பார்.

Advertisment

2-ஆம் பாவத்தில், சுயவீட்டில், விருச்சிக ராசியில் செவ்வாய் இருந்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். சிலர் தங்களின் மனைவியுடன் வாதத்தில் ஈடுபடுவார்கள்.

Advertisment

அப்படிப்பட்ட நேரங்களில் வீட்டில் அமைதியற்ற சூழல் உண்டாகும்.

ஜாதகருக்கு பூமி, வாகனம் இருக்கும்.

3-ஆம் பாவத்தில் குருவின் தனுசு ராசியில் செவ்வாய் இருந்தால் ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். உடன் பிறந்தோரால் அவருக்கு சந்தோ ஷம் கிடைக்கும். மனைவியால் மகிழ்ச்சி உண்டாகும். ஜாதகர் நிறைய பணத்தை சம்பாதிப்பார்.

ss

4-ஆம் பாவத்தில் சனியின் மகர ராசியில் செவ்வாய் உச்ச மடைகிறார். தாயாரால் ஜாதகருக்கு சந்தோஷம் கிடைக்கும். சொந்தத்தில் நிலம் இருக்கும். நல்ல பணவசதி இருக்கும். ஜாதகர் கடுமையாகப் பேசுவார்.

5-ஆம் பாவத்தில் சனியின் கும்ப ராசியில் செவ்வாய் இருந்தால் குழந்தை பாக்கியத் தில் பிரச்சினை இருக்கும். ஜாதகருக்கு படிப்பு விஷயத்தில் தடைகள் ஏற்படும். அவருக்கு மனைவியுடனும், குடும்பத்தில் இருப்பவர்களுடனும் கருத்து வேறுபாடு உண்டாகும். தன் சுய அறிவைப் பயன்படுத்தி ஜாதகர் வர்த்தகத்தில் பெரிய அளவில் பணம் சம்பாதிப்பார்.

6-ஆம் பாவத்தில் குருவின் மீன ராசியில் செவ்வாய் இருந்தால் பகைவர்கள் குறைவார்கள். பணத்தை சேமிப்பதில் பிரச்சினை இருக்கும். இல்வாழ்க்கையில் சில தடங்கல்களுக்குப்பிறகு சந்தோஷ சூழல் உண்டாகும். உடல்நலத்தில் சிறிது பிரச்சினைகள் இருக்கும்.

7-ஆம் பாவத்தில் சுய வீட்டில், மேஷ ராசியில் செவ்வாய் இருந்தால் ஜாதகருக்கு மனைவி யுடன் கருத்து வேறு பாடு உண்டாகும்.

ஜாதகர் நன்கு பணம் சம்பாதிப்பார். வேலை செய்யுமிடத்தில் மற்றவர்களிடம் கடுமையாக நடந்து கொள்வார். அதனால் பகைவர்கள் உண்டா வார்கள்.

8-ஆம் பாவத்தில் சுக்கிரனின் ரிஷப ராசியில் செவ்வாய் இருந்தால் ஜாத கருக்கு மனைவியுடன் பிரச்சினை இருக்கும். வெளித் தொடர்புகளால் வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும். பூர்வீக சொத்தில் பிரச்சினை ஏற்படும். ஜாதகர் வெளியே சென்று வர்த்தகம் செய்து ஆதாயமடைவார்.

9-ஆம் பாவத்தில் புதனின் மிதுன ராசியில் செவ்வாய் இருந்தால் ஜாதகர் அதிர்ஷ்ட சாலியாக இருப்பார். மனைவி நல்லவளாக இருப்பாள். திருமணத்திற்குப்பிறகு ஜாதகருக்குப் பெயர், புகழ் கிடைக்கும். அவர் பலருக்கும் நன்மைகள் செய்யக்கூடியவராக இருப்பார். பளு தூக்கக்கூடிய பணிகளைச் செய்தால் முதுகில் பிரச்சினை உண்டாகும்.

10-ஆம் பாவத்தில் சந்திர னின் கடக ராசியில் செவ்வாய் நீசமடைகிறார். அதனால் வியாபாரத்தில் பிரச்சினைகள் உண்டாகும். தந்தையுடன் ஜாதகருக்கு பிரச்சினை ஏற்படும். வீட்டில் சந்தோஷத் தில் குறையிருக்கும். சிலருக்கு மனைவியால் மனக்கவலை உண்டாகும்.

11-ஆம் பாவத்தில் சூரிய னின் சிம்ம ராசியில் செவ்வாய் இருந்தால் ஜாதகர் நிறைய பணம் சம்பாதிப்பார். மனைவி யால் மகிழ்ச்சி உண்டாகும். ஜாதகர் பெயர், புகழுடன் வாழ்வார்.

12-ஆம் பாவத்தில் புதனின் கன்னி ராசியில் செவ்வாய் இருந்தால் செலவுகள் அதிக மாக ஏற்படும். ஜாதகருக்கு குடும்பத்தாருடன் கருத்து வேறுபாடு தோன்றும். அத னால் மனதில் அமைதி யில் லாமல் போய் விடும்.

செல்: 98401 11534

bala290722
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe