மகர லக்னத்திற்கு 12 பாவங்களில் செவ்வாய்!

/idhalgal/balajothidam/mars-12-bhavas-capricorn

க்னத்தில், சனியின் மகர ராசியில் செவ்வாய் உச்சமடைகிறது. அதனால் உடல்நலம் நன்றாக இருக்கும். ஜாதகர் பலசாலியாகவும் நல்ல தோற்றத்துடனும் இருப்பார். தாயாரால் சந்தோஷம் கிடைக்கும். வீடு, வாகன யோகமுண்டு. ஜாதகர் ஆடம்பரமாக இருப்பார். மனைவியால் கிடைக்கும் சந்தோஷத்தில் குறையிருக்கும். வியாபாரத்தில் சில சிக்கல்கள் ஏற்படலாம். முன்னோரின் சொத்து கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஜாதகர் சாதுரியமாக செயல்பட்டு தன் காரியங்களை முடிப்பார். நல்ல பணவசதி இருக்கும்.

2-ஆம் பாவத்தில் சனியின் கும்ப ராசியில் செவ்வாய் இருந்தால் குடும்பத்தில் சந்தோஷம் இருக்காது. எனினும் ஜாதகர் பணத்தை சம்பாதிப்பார். அன்னையுடனான உறவில் குறையிருக்கும். வீடு, வாகனம் வாங்கலாம். குழந்தைகளால் சந்தோஷம் கிடைக்கும். நீண்ட ஆயுள் உண்டு. ஜாதகர் அதிர்ஷ்ட சாலியாக இருப்பார். பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற எண்ணம

க்னத்தில், சனியின் மகர ராசியில் செவ்வாய் உச்சமடைகிறது. அதனால் உடல்நலம் நன்றாக இருக்கும். ஜாதகர் பலசாலியாகவும் நல்ல தோற்றத்துடனும் இருப்பார். தாயாரால் சந்தோஷம் கிடைக்கும். வீடு, வாகன யோகமுண்டு. ஜாதகர் ஆடம்பரமாக இருப்பார். மனைவியால் கிடைக்கும் சந்தோஷத்தில் குறையிருக்கும். வியாபாரத்தில் சில சிக்கல்கள் ஏற்படலாம். முன்னோரின் சொத்து கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஜாதகர் சாதுரியமாக செயல்பட்டு தன் காரியங்களை முடிப்பார். நல்ல பணவசதி இருக்கும்.

2-ஆம் பாவத்தில் சனியின் கும்ப ராசியில் செவ்வாய் இருந்தால் குடும்பத்தில் சந்தோஷம் இருக்காது. எனினும் ஜாதகர் பணத்தை சம்பாதிப்பார். அன்னையுடனான உறவில் குறையிருக்கும். வீடு, வாகனம் வாங்கலாம். குழந்தைகளால் சந்தோஷம் கிடைக்கும். நீண்ட ஆயுள் உண்டு. ஜாதகர் அதிர்ஷ்ட சாலியாக இருப்பார். பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற எண்ணம் மனதில் எப்போதும் இருக்கும். சில நேரங்களில் ஜாதகர் கடுமையாகப் பேசுவார்.

3-ஆம் பாவத்தில் குருவின் மீன ராசியில் செவ்வாய் இருந்தால் ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். உடன் பிறப்புகளுடன் உறவு நன்றாக இருக்கும். ஜாதகர் கடுமையாக உழைத்துப் பணம் சம்பாதிப்பார். பூமி, வீடு, வாகனம் வாங்கும் பாக்கியமிருக்கும். பெயர், புகழ் இருக்கும்.

22

4-ஆம் பாவத்தில் தன் சுய ராசியான மேஷ ராசியில் செவ்வாய் இருந்தால் ஜாதகர் பூமி, வாகனம் வாங்குவார். ஆனால் திருமண வாழ்க்கையில் சில பிரச்சினைகள் இருக்கும். வியாபாரத்தில் கடுமையான போட்டியிருக்கும். தந்தையால் சந்தோ ஷம் கிடைக்கும். வர்த்தகத்தில் பல தடங்கல்களைக் கடந்து ஜாதகர் பணத்தைச் சம்பாதிப்பார்.

5-ஆம் பாவத்தில் சுக்கிரனின் ரிஷப ராசியில் செவ்வாய் இருந்தால் ஜாதகர் அறிவாளி யாக இருப்பார். பிள்ளைகளால் சந்தோஷம் கிடைக்கும். அன்னையால் மகிழ்ச்சி கிடைக்கும். பூமி, வாகனம் வாங்கலாம். நீண்ட ஆயுள் உண்டு. பூர்வீக சொத்து கிடைக்கலாம். செலவுகள் அதிகமாக இருக்கும். வெளித் தொடர்புகளின்மூலம் பணம் வரும்.

6-ஆம் பாவத்தில் புதனின் மிதுன ராசியில் செவ்வாய் இருந்தால் பகைவர்கள் அதிகமாக இருப்பார்கள். வீண் சண்டை இருக்கும். எனினும், அதிலும் பணம் சம்பாதிக்கலாம். பணவரவில் கடுமையான போட்டி நிலவும். ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். நல்ல உடல்நலத்துடன் சந்தோஷமாக வாழ்வார்.

7-ஆம் பாவத்தில் சந்திரனின் கடக ராசியில் செவ்வாய் நீசமடைகிறது. அதனால் இல்வாழ்க்கையில் பல பிரச்சினைகள் இருக்கும். சிலருக்குத் திருமணம் நடப்பதில் தடங்கல்கள் ஏற்படும். சிலர் தந்தையின் ஆதரவுடன் வியாபாரம் செய்வார்கள். சிலர் அதிகமாகப் பேசுவார்கள். பணத்தைச் சேமிப்பதில் பிரச்சினை இருக்கும். குடும்பத்தில் சுமாரான சந்தோஷமே நிலவும்.

8-ஆம் பாவத்தில் சூரியனின் சிம்ம ராசியில் செவ்வாய் இருந்தால் பூர்வீக சொத்து கிடைக்கும். ஜாதகர் சுயமாக சம்பாதித்து நிலம் வாங்குவதில் தடங்கல்கள் இருக்கும். பணத்தைச் சேமிப்பதில் பிரச்சினை ஏற்படும். குடும்பத்தில் சுமாரான சந்தோஷமே இருக்கும்.

9-ஆம் பாவத்தில் புதனின் கன்னி ராசியில் செவ்வாய் இருந்தால் ஜாதகருக்கு தர்ம சிந்தனை இருக்கும். சிலர் நியாயவாதிகளாக இருப்பார்கள். பெயர், புகழ் இருக்கும். ஜாதகர் நிலம் வாங்குவார். அன்னையால் சந்தோஷம் கிடைக்கும். ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். தந்தையுடனுள்ள உறவில் பிரச்சினை இருக்கும். ஆனாலும் சந்தோஷமாக வாழ்க்கை இருக்கும்.

10-ஆம் பாவத்தில் சுக்கிரனின் துலா ராசியில் செவ்வாய் இருந்தால் தந்தையால் சந்தோஷம் கிட்டும். அரசாங்க விஷயங்களில் பெயர், புகழ் கிடைக்கும். ஜாதகர் அழகான தோற்றத்தைக் கொண்டிருப்பார். பெரிய மனிதரைப்போல நடந்துகொள்வார். குழந்தைகளால் மகிழ்ச்சியுண்டு. படிப்பு நன்றாக வரும். தன் குலத்தில் உயர்ந்த மனிதராக இருப்பார்.

11-ஆம் பாவத்தில் தன் சுய ராசியான விருச்சிக ராசியில் செவ்வாய் இருந்தால் பூமிசுகம் இருக்கும். வீட்டில் சந்தோஷ சூழல் நிலவும். நல்ல வருமானம் இருக்கும். எனினும், இன்னும் அதிகமாகப் பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற ஆசை மனதில் எப்போதும் இருந்துகொண்டேயிருக்கும். ஜாதகர் தன் எதிரிகளை வெல்வார்.

12-ஆம் பாவத்தில் குருவின் தனுசு ராசியில் செவ்வாய் இருந்தால் செலவுகள் அதிகமாக இருக்கும். வெளித் தொடர்புகளில் சந்தோஷம் கிடைக்கும். அன்னையுடன் சுமாரான உறவே இருக்கும். வீடு வாங்குவதில் பிரச்சினை ஏற்படும். ஜாதகர் தன் ஊரை விட்டு வெளியே சென்று பிழைப்பை நடத்துவார். மனைவியால் குறைவான சந்தோஷமே கிடைக்கும். வியாபாரத்தில் நஷ்டம் உண்டாக வாய்ப்பிருக்கிறது.

செல்: 98401 11534

bala030223
இதையும் படியுங்கள்
Subscribe