கும்ப லக்னத்தில், சத்ரு ஸ்தானத்தில் செவ்வாய் இருந்தால் ஜாதகர் முன்கோபியாக இருப்பார். பிறரை அடக்கியாள நினைப்பார். தந்தையுடன் கருத்து வேறுபாடு இருக்கும். பெயர், புகழ் கிட்டும். வியாபாரத்தில் முன்னேற்ற மிருக்கும். ஜாதகர் தைரியசாலியாக இருப்பார்.

2-ஆம் பாவத்தில் குருவின் மீன ராசியில் செவ்வாய் இருந்தால் சில கஷ்டங்கள் இருக்கும். குடும்பத்தில் வாத, விவாதங்கள் நடக்கும். உடன்பிறந்தோருடனான உறவில் பிரச்சினை ஏற்படும். தந்தையுடன் சுமாரான உறவே இருக்கும். ஜாதகர் கடுமையாகப் பேசுவார்.

3-ஆம் பாவத்தில் சுய ராசியான மேஷத்தில் செவ்வாய் இருந்தால் ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். உடன்பிறப்பு களால் சந்தோஷம் கிட்டும். ஜாதகர் கடுமையாக உழைத்து தன் முயற்சிகளில் வெற்றிபெறுவார். அதிர்ஷ்டசாலியாக இருப்பார்.

Advertisment

dd

4-ஆம் பாவத்தில் சுக்கிரனின் ரிஷப ராசியில் செவ்வாய் இருந்தால் தாயாருடன் ஜாதகருக்கு சுமாரான உறவே இருக்கும். வீடு, பூமி வாங்கலாம். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். பெயர், புகழ் கிடைக்கும். ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். பிறரை ஈர்க்கும் வண்ணம் இருப்பார்.

5-ஆம் பாவத்தில் புதனின் மிதுன ராசியில் செவ்வாய் இருந்தால் படிப்பு நன்றாக இருக்கும். ஜாதகர் அறிவாளி யாக இருப்பார். தந்தையுடன் நல்ல உறவிருக்கும். உடன் பிறந்தோருடனான உறவும் நன்றாக இருக்கும். வியாபாரத் தில் லாபம் கிட்டும். ஜாதகர் எப்போதும் சட்டம் பேசிக் கொண்டிருப்பார். வாரிசுகள் நன்றாக இருப்பார்கள்.

6-ஆம் பாவத்தில் சந்திரனின் கடக ராசியில் செவ்வாய் நீசமடைகிறது. அதனால் பகைவர்கள் அதிகமாக இருப்பார்கள். ஜாதகர் பகைவர்களை வெல்வார். உடன்பிறப்பு களுடன் கருத்து வேறுபாடிருக்கும். தந்தையுடனான உறவில் பிரச்சினை ஏற்படும். அரசாங்க விஷயத்தில் சிறிய பிரச்சினைகள் உண்டாகும். ரத்தம் சம்பந்தப்பட்ட நோய் வரக்கூடும். சிலர் சூனியத்தால் பாதிக்கப்படுவார்கள்.

7-ஆம் பாவத்தில் சூரியனின் சிம்ம ராசியில் செவ்வாய் இருந்தால் மனைவியால் பெயர், புகழ் கிடைக்கும். திருமணத்திற்குப்பிறகு வாழ்க்கை நன்றாக இருக்கும். உடன்பிறந்தோருடன் நல்ல உறவிருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்.

ஜாதகர் அதிர்ஷ்டசாலியாக இருப்பார். பணவரவிருக் கும். ஜாதகர் கோபகுணம் கொண்டவராக இருப்பார்.

8-ஆம் பாவத்தில் புதனின் கன்னி ராசியில் செவ்வாய் இருந்தால் பூர்வீக சொத்து கிடைக்கும். இல்வாழ்க்கையில் பிரச்சினை ஏற்படும். தந்தையுடன் சுமாரான உறவே இருக்கும். வியாபாரத்தில் கடுமையான போட்டி நிலவும். உடன்பிறந்தோரால் மனக்கவலை உண்டாகும். ஜாதகர் கடுமையாக உழைத்து, அனைத்து உறவுகளையும் சீர்செய்வார்.

9-ஆம் பாவத்தில் சுக்கிரனின் துலா ராசியில் செவ்வாய் இருந்தால் ஜாதகர் கடுமையான உழைப்பாளியாக இருப்பார். தர்மத்தைக் கடைப் பிடிப்பார். தலையெழுத்து நன்றாக இருக்கும். தந்தையால் சந்தோஷம் கிடைக் கும். வியாபாரத்தில் வெற்றி கிடைக் கும். பூமி, வாகனம் வந்துசேரும். அரசாங்க விஷயத்தில் வெற்றி யுண்டு.

10-ஆம் பாவத்தில் தன் சுய ராசியான விருச்சிகத்தில் செவ்வாய் இருந்தால் தந்தையால் சந்தோஷம் கிட்டும். அரசாங்க விஷயத்தில் ஆதாயமிருக்கும். ஜாதகர் கடுமையாக உழைத்து, தன் குடும்பத்தைக் காப்பாற்று வார். உடன்பிறப்புகளால் சந்தோஷம் கிடைக்கும். சிலர் மருத்துவர்களாக இருப்பார்கள். ஜாதகர் சுமாரான தோற்றத்தைக் கொண்டிருப்பார். சுய மரியாதை பார்ப்பவராக இருப்பார். பெயர், புகழ் இருக்கும். வாரிசுகளால் சந்தோஷம் கிடைக்கும். ஜாதகர் நன்கு படித்தவராக இருப்பார்.

11-ஆம் பாவத்தில் குருவின் தனுசு ராசியில் செவ்வாய் இருந்தால் நல்ல வருமானம் கிடைக்கும். தந்தையுடன் நல்ல உறவிருக்கும். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். ஜாதகர் கடுமையாக உழைத்துப் பணம் சம்பாதிப்பார். உடன்பிறந் தோருடன் உறவு நன்றாக இருக்கும். ஜாதகர் பணத்தை சேமிப்பார். வாரிசுகளால் மகிழ்ச்சி உண்டாகும். படிப்பு காரணமாக பெயர், புகழ் கிடைக்கும்.

12-ஆம் பாவத்தில் சனியின் மகர ராசியில் செவ்வாய் உச்சமடைகிறது. அதனால் செலவுகள் அதிகமாக இருக்கும். தடைகளைக் கடந்து திருமணம் நடக்கும். வெளித் தொடர்புகளின்மூலம் நஷ்டம் உண்டாகும். ஜாதகர் தான் இருக்குமிடத்தைவிட்டு வெளியே சென்று பணிசெய்வார் அல்லது தொழில் செய்வார். அதில் வெற்றி கிடைக்கும். இல்வாழ்க்கையில் பிரச்சினை இருக்கும். பகைவர்கள் அதிகமாக இருப்பார்கள். ஜாதகர் தைரியசாலியாக இருப்பார்.

செல்: 98401 11534