திருமணத்தைப் பொருத்தம் பார்த்து செய்ய வேண்டியது அவசியம். அதேசமயம் சில உறவினர் களில் சிறுவயதுமுதலே "இந்தப் பெண் இந்த பையனுக்குத்தான்' என்று முடிவுசெய்து வைத்திருப்பார்கள். திருமணக் காலத்தில் பொருத்தம் பார்க்கச் செல்வார்கள். அப்போது ஜோதிடர் சில கிரக அமைப்புகளைச் சொல்லி, பொருத்தம் இல்லை யென்பார். இருவீட்டாரும் மனமொடிந்து போவார்கள். எனவே, இந்தப் பெண்ணை இந்தப் பையனுக்குத்தான் கொடுக்கவேண்டுமென்று முடிவு செய்துவைத்திருப்பவர்கள், அவர்கள் ஜாதகத்தில் கீழ்க்கண்ட நிலை உள்ளதா என்று அறிந்துகொள்ளுங்கள்.

Advertisment

pillaiyar

ஜாதகத்தில் லக்னத்துக்கு 7, 8-ஆம் வீடுகள் சுத்தமாக இருக்கவேண்டும். அந்த வீடுகளை எந்த பாவகிரகங்களும் பார்க்காமலிருக்க வேண்டும். இதுபோன்ற அமைப்பிருந்தால் ஜாதகர்களுக்குப் பொருத்தம் பார்க்கத் தேவையில்லை. அவர்கள் மழலைச் செல்வங்களோடு, பொருளாதாரத்தில் உயர்ந்து எந்த ஆபத்துமின்றி வாழ்வார்கள். பெற் றோர்கள் தைரியமாக திருமணம் செய்துவைக்கலாம். மேலும் கீழ்க்கண்ட எளிய பரிகாரத்தையும் செய்துகொள்ளலாம். காதல் மணம்புரிந்தவர்களுக்கும் இந்தப் பரிகாரம் பொருந்தும்.

Advertisment

பரிகாரம்-1

ஜனன ஜாதகத்தில் 7, 8-ஆம் வீடுகள் சுத்தமாக இருந்து, வேறு பொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்துகொண்டவர்களும், காதல் திருமணம் செய்து கொண்டவர்களும் தம்பதி சகிதம் திருப்பரங்குன்றம் முருகன் சந்நிதிக்குச் சென்று தரிசித்து வரவேண்டும். அவர்களுக்கு எவ்வித இடர்ப்பாடுகளும் வாழ்க்கையில் வராது.

பரிகாரம்-2

சிரமம் காரணமாக திருப்பரங் குன்றம் செல்ல முடியாதவர்களும், வேறு நகரம், வெளிநாடுகளில் வாழ்பவர்களும் இதுபோல 7, 8-ஆமிடங்களை மட்டும் பார்த்துத் திருமணம் செய்திருந்தால், மயிலிறகு நுனியைக் கத்தரித்து எடுத்து பூஜையறைக்குள் வைத்து வணங்கி வரவேண்டும். தினசரி காலையில் பூஜை செய்யும்போது மயிலிற கினைக் கையில் வைத்து கொண்டு, "முருகப்பெருமானே, எங்களுக்கு நடந்துமுடிந்த திருமணம் எவ்வித இடையூறு மில்லாமல் வாழ்க்கையை வெற்றி கரமாக நடத்த உனது அருள் வேண்டும்' என்று சொல்லி வணங்கவேண்டும். குடும்பத்தில் குழப்பம் நேராது.

Advertisment

செல்: 94871 68174