Advertisment

மணவாழ்வின் சூட்சுமங்கள்!பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி

/idhalgal/balajothidam/marriages-marriage

முதாயத்தில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, அன்பு போன்றவற்றை ஏற்படுத்த முன்னோர்கள் உருவாக்கிய அற்புத நெறிமுறையே ஆணுக்கும் பெண்ணுக்குமான திருமணம். இரு மனங்கள் இணைந்து, இசைந்து வாழ்வதற்கு செய்துகொள்ளும் இனிய ஒப்பந்தம்.

Advertisment

வாழ்க்கைத்துணையால் பெறும் இன்பம் எத்தகையது? அவர் நல்லவரா? பண்புள்ளவரா? படித்தவரா? நடைபெறும் திருமணம் மகிழ்வான சூழ்நிலையில் நடைபெறுமா? பல்வேறு குழப்பங்களுடன் நிறைவேறுமா? துணையைத் தானே தேர்ந்தெடுப்பாரா? குடும்பத்தினர் தேர்ந்தெடுப்பார்களா போன்ற அனைத்தும் ஒரு ஜாதகத்தின் 7-ஆம் பாவகத்தாலே தீர்மானிக்கப்படுகிறது.

சப்தம ஸ்தானம், களத்திர ஸ்தானம், இன்ப ஸ்தானம் என்று அழைக்கப்படுவது 7-ஆம் பாவகம். இதன்மூலம் ஆண் ஜாதகமாயின் மனைவியைப் பற்றியும், பெண் ஜாதகமாயின் கணவனைப் பற்றியும், திருமண காலம், இல்லற வாழ்வின் ஏற்றத்தாழ்வு, சிற்றின்பம், வழக்கு விவகாரங்கள், சுற்றம், நட்பு, வெகுமதிகள், போக சக்தி, யாத்திரை, கூட்டுத்தொழில், நண்பர்கள், பொதுஜன ஆதரவு, அடி வயிறு, சிறுநீரகம், ஜாதகரின் மாரகம் முதலியவற்றையும் அறியலாம்.

marriages

12 பாவகங்களில் மிக முக்கியமானவையாக 2, 7-ஆம் பாவகங்களைச் சொல்லாம்.

Advertisment

2-ஆமிடம் குடும்பஸ்தானம், 7-ஆமிடம் களத்திரஸ்தானம். இந்த இரண்டுமே 90 சதவிகிதம் பேருக்கு பிறவி என்பது எவ்வளவு கொடிய தண்டனை என்பதை உணர்த்துகின்றன.

ஒருவரின் ஜாதகத்தில் 8-ஆமிடமும், 8-க்கு 8-ஆன 3-ஆமிடமும் ஆயுளைக் குறிக்கும் இடங்கள். 8-ஆம் இடத்திற்கு 12-ஆம் இடமாகிய 7-ஆம் இடமும், 3-ஆம் இடத்திற்கு 12-ஆம் இடமாகிய 2-ஆம் இடமும் ஆயுளுக்கு எதிர்மறையான மாரகத்தைக் குறிக்கின்றன.

ஒரு குழந்தை ஜனனமாகி குறைந்தது 14 வயதிற்குமேல், அதிகபட்சம் 18 வயதிற்குமேல் அவர்களின் சுய ஜாதகம், சுயகர்மா பரிபூரணமாக இயங்குகிறது. அதாவது கோட்சார ராகு- கேதுக்கள் ஜனன ஜாதகத்தை ஒரு சுற்று சுற்றி முடித்தபிறகு ஜாதகரின் சுய ஜாதகம் வேலை செய்கிறது.

அதனால்தான் அரசு, சட்டம், ஓட்டுரிமை, ஜனநாயகம் சார்ந்த எல்லா உரிமைகளும் 18 வயதிற்குப் பிறகே வழங்கப்படுகிறதோ?

ஒருசிலர் பேச்சு வழக்கில், "வாழ்க்கை என்றால் என்னவென்று

ஒருசிலர் பேச்சு வழக்கில், "வாழ்க்கை என்றால் என்னவென்று எனக்கு திருமணத்திற்குப் பிறகே புரிகிறது' என்று கூறுவார்கள். 2, 7-ஆம் பாவகங்களான மாரகஸ்தானங்களே உலகியலை ஒவ்வொருவருக்கும் புரிய வைக்கின்றன. இதில்தான் பிரபஞ்ச சூட்சுமம், ஜோதிடம் கூறும் உண்மை இருக்கிறது.

லக்னத்திற்கு ஏழாமிடத்தின் அதிபதி, லக்னாதிபதிக்கு நெருங்கிய நட்பு கிரகமாக எந்த லக்னத்திற்கும் அமைவதில்லை. அதனால்தான் 90 சதவிகித தம்பதியினர் கருத்தொற்றுமை இல்லாமலும், கசப்புணர்ச்சியோடும் காலத்தை நகர்த்துகிறார்கள்.

ஒரு மனிதன் இல்வாழ்வில் அடி வைத்து இல்லற இன்பத்தை அனுபவிக்கத் தொடங்கியவுடன் ஆண்- பெண் கர்மாவும் கலந்துவிடும்.

மனித வாழ்வில் மணவாழ்வின் பங்கு அதிகம். சரியானதொரு உறவின்கீழ்தான் மனிதன் தன் வாழ்வை சிறப்பாக அமைத்துக்கொள்ள முடியும். திருமணத்திற்குமுன் கட்டுக்கடங்காத காளையர், திருமணத்திற்குப் பிறகு பவ்யமாக குடும்பம் நடத்துவதைப் பார்க்கிறோம்.

தன் வாழ்வையே தொலைக்கும் உறவின்கீழ் வாழ்வு அமையவும் வாய்ப்புண்டு. இதுவே கர்மா. ஆணின் ஜாதகத்தில் லக்னாதிபதியைவிட ஏழுக்குடையவன் பலம்பெற்றால் மனைவிக்குக் கட்டுப்பட்டவராக இருப்பார். பெண் நிர்வாகம் செய்யும் குடும்பம் அமையும். 7-க்குடையவனைவிட லக்னம் பலம்பெற்றிருந்தால் ஆண் நிர்வாகம் செய்யும் குடும்பமாக இருக்கும்.

ஒவ்வொரு ஜாதகரின் எதிர்பார்ப்பும் நல்ல வாழ்க்கைத்துணையே ஒருவரின் நிம்மதியான வாழ்வென்பது வாழ்க்கைத்துணையைச் சார்ந்துதானே உள்ளது.

திருமண வாழ்க்கை சொர்க்கமா? நரகமா என்பதை ஜனன ஜாதகத்தில் பாவகங்களில் நிற்கும் கிரகங்களின் பலம், பலவீனம் மிகத் துல்லியமாகக் காட்டிவிடும்.

தம்பதியினர் கருத்தொருமித்து வாழவேண்டுமானால் 2, 7-ஆமிடமும், 2, 7-க்குடையவனும், களத்திரகாரகன் சுக்கிரனும் நல்ல நிலையில் இருக்கவேண்டும். களத்திரகாரகன் சுக்கிரன் ஆண்- பெண் இருவருக்கும் பொதுவானதே. பெண் ஜாதகத்தில் செவ்வாய் களத்திரகாரகனாக வருவார். ஒருசில மூல நூல்கள் பெண் ஜாதகத்தில் குருவையும் 7-ஆம் பாவகக் காரகராகக் கருதவேண்டுமென்று கூறுகின்றன.

திருமணம் நடந்து இனிமையான இல்லறம் நடத்துபவர்கள் திருமணத்தை வாழ்வின் முக்கிய நிகழ்வாகவும், திருமணத்தின்மூலம் மன வேதனையை அனுபவிப்பவர்கள் அதை ஒரு கெட்ட சம்பவமாகவும், திருமணத்தை எதிர்நோக்கி இருப்பவர்கள் அதை ஒரு எட்டாக் கனியாகவும், எப்பொழுது நடக்குமென்று எதிர்பார்த்தும் காத்திருக்கிறார்கள்.

முதலில் திருமணத்தை எதிர்நோக்கி இருக்கும் கன்னியருக்கும் காளையருக்கும் திருமணம் நடைபெறும் காலம் எப்பொழுது என்பதைப் பார்க்கலாம். இதை சிலர் "குரு பலம்' என்றும், "வியாழ நோக்கு' என்றும், "கங்கணப் பொருத்தம்' என்றும் கூறுகிறார்கள்.

 கோட்சார குரு 2, 7, 11-ஆம் பாவகம் அல்லது அதன் அதிபதிகளுடன் தொடர்பு பெறும் காலத்திலும்;

 ஆணின் ஜனன ஜாதக சுக்கிரனுக்கு கோட்சார குரு சம்பந்தம் பெறும் காலத்திலும்;

 பெண்ணின் ஜனன செவ்வாய்க்கு கோட்சார குரு சம்பந்தம் பெறும் காலத்திலும்;

 2, 7, 11-ஆம் பாவக அதிபதிகளின் மற்றும் அவர்களின் நட்சத்திர தசா, புக்தி, அந்தர காலங்களிலும்;

 சுக்கிர தசை, புத்திக்காலங்களிலும், 7-ல் நின்ற அல்லது 7-ஆம் அதிபதி நட்சத்திரத்தில் நின்ற கிரகத்தின் தசா, புக்தி, அந்தர காலங்களிலும்;

 பொதுவாக 2, 7, 8, 12-ஆம் பாவகங்கள் சுப வலிமையுடன் இயங்கும் காலங்களிலும் திருமணம் நடைபெறும்.

அடுத்த எதிர்பார்ப்பு களத்திரம்

அமையும் திசை...

ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் அல்லது 7-க்குடையவன் நின்ற ராசி வரன் அமையும் திசையாகும்.

பெண் ஜாதகத்தில் செவ்வாய், 7-க்குடையவன் நின்ற ராசி வரன் அமையும் திசையாகும்.

நம் முன்னோர்கள் ஒரே ஊரில் ஒரே குலத்தை, ஒரே இனத்தைச் சார்ந்தவர்களுடன் மட்டுமே திருமணம் நடத்தி வந்தார்கள்.

அக்காலத்தில் வரனின் திசை துல்லியமாக அறியப்பட்டது.

இந்த நவீன யுகத்தில் உலகம் முழுவதிலும் ஆன்-லைனில் வரன் தேடுகிறார்கள். வரனின் பெற்றோர் ஒரு ஊரிலும் வரன், வது வேறு ஊரிலும் நாட்டிலும் இருக்கிறார்கள். எனவே கால, தேச, வர்த்தமானத்திற்கு ஏற்ப நாமும் மாறிக்கொள்வது சிறப்பு.

உரிய வயதில் திருமணம்

களத்திரகாரகன் சுக்கிரன் பலமுள்ளதாக அமைவது; சுக்கிரன் 2-ல், 7-ஆம் பாவக அதிபதி 11-ல் அமர்வது; 7-ஆம் பாவக அதிபதி சுக்கிரனுடன் இணைந்து திரிகோணத்துடன் தொடர்பு, 2-ல் சுக்கிரன் அமர்ந்து செவ்வாயுடன் தொடர்பு பெறுவது; 2, 7-ஆம் பாவக அதிபதிகள் பலம்பெற்று திரிகோணாதிகளுடன் தொடர்பு பெறுவது; 7-ஆம் பாவகாதிபதி இயற்கை சுபராகி ஜாதகத்தில் வலிமை பெறுவது; 7-ஆம் பாவகாதிபதி மற்றும் சுக்கிரன் லக்னத்திலோ, லக்னாதிபதியுடனோ அல்லது லக்னாதிபதியின் பார்வை பெறுவது; 7-ஆம் பாவகாதிபதி நட்சத்திரத்தில் இருக்கும் கிரகம் வலிமையோடு இருப்பது; 7-ஆம் வீடு, 7-ஆம் அதிபதி, சுக்கிரன் அமர்ந்த வீடு ஆகிய மூன்றும் 30 பரல்களுக்குக் குறையாமல் இருப்பது போன்ற அமைப்புகளால் உரிய வயதில் திருமணம் நடைபெறும்.

காலதாமதத் திருமணம் நடைபெறக் காரணங்கள்

7-ஆம் பாவக அதிபதி 3, 6, 8, 12-ல் அமர்வது; திதி சூன்ய பாதிப்பு; 1, 2, 7, 8 பாவகங்களும் அதன் அதிபதிகளும் வலிமை குறைவு பெறுவது; 7-ஆம் பாவக அதிபதி 3, 6, 8, 12-ல் அமர்வது; 7-ஆம் பாவகாதிபதி பகை, நீச, அஸ்தமனம் மற்றும் கிரக யுத்தத்தில் தோற்பது; 7-ஆம் பாவக அதிபதிகள் வலிமை குறைந்து திரிகோணாதிபதிகள் தொடர்பில்லாமல் இருப்பது; 7-ஆம் பாவக அதிபதி நட்சத்திரத்தில் இருக்கும் கிரகம் வலிமையற்றிருப்பது; மாந்தி 7-ஆம் பாவக அதிபதியுடன் தொடர்பு பெறுவது; சனி, ராகு- கேது போன்ற கிரகங்கள் 1, 2, 7, 8 ஆகிய பாவகங்களை பாதிக்கச் செய்வது; பெண் ஜாதகத்தில் 8-ஆம் பாவகம் அல்லது 8-ஆம் பாவகாதிபதி பாதிக்கப்பட்டு அமர்வது போன்ற அமைப்புகள் காலதாமதத் திருமணத்தைத் தரும்.

திருமணமின்மை

நாம் திருமணமே நடைபெறாத சிலரையும் சந்திக்கிறோம். அதற்கான காரணங்கள் என்ன?

கிரகணத்திற்கு ஒரு வாரம் முன்பும், ஒரு வாரம் பின்பும் பூமிக்கு தோஷ காலம். இந்த 15 நாட்களில் பிறக்கும் குழந்தைகளில் செவ்வாய், சனி தொடர்பு பெறுபவர்களுக்குத் திருமணம் நடப்பது மிகவும் கடினம்.

9-ஆம் பாவகத்தில் வலிமையிழந்த ராகு பாவிகள் தொடர்பு பெறுவது; 2, 7-ஆம் அதிபதிகள் பாவ கிரகத்துடன் தொடர்பு, அஸ்தமனம், நீசம் பெறுவது; 2, 7-ஆம் அதிபதிகள் நவாம்சத்தில் நீசம், வக்ரம் பெறுவது; 2-ஆம் அதிபதி 12-ல் மறைதல்; 1, 7-ஆம் அதிபதிகள் இணைந்து 6, 8, 12-ல் பலவீனமடைதல்; 5, 6-ஆம் அதிபதிகள் இணைந்து 7-ஆம் அதிபதியுடன் சேர்க்கை பெறுதல்; 7, 12-ஆம் அதிபதி சூரியனுடன் 7-ஆம் பாவகத்தில் இணைவது; சுக்கிரனுக்கு 1, 5, 9-ல் வலுவற்ற கிரகங்கள் அமர்வு; சுக்கிரன், 7-ஆம் அதிபதி, 7-ஆம் பாவகம், லக்னாதிபதி நவாம்சத்தில் வலுவற்ற நிலை; சந்திரன் நீசமடைந்து சனியால் பார்க்கப்படுவது; சூரியன் சனி வீட்டில் அல்லது 7-ஆம் பாவகத்தில் இருந்து சனி தொடர்பு பெறுவது; சனி லக்னத்தை, லக்னாதிபதியை, சந்திரனைப் பார்த்து, சுப கிரகங்கள் பார்வை, குரு தொடர்பில்லாத நிலை போன்ற காரணங்களால் திருமணம் நடைபெறுவதில்லை.

7-ஆம் அதிபதியும் சுக்கிரனும் வறட்டு ராசிகளான மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, மகரமாக இருந்து திருமணம் நடைபெற்றால் மண வாழ்வு பாலைவனமாகவே இருக்கிறது.

ஒருசில காரணங்களால் திருமணம் காலதாமதமாகும்போதோ, நடக்காமல் இருக்கும்போதோ நமது பிராப்தம் அதுதான் (ப்ராரப்த கர்மா) என்பதை ஏற்று, பிரபஞ்சத்திடம் கோரிக்கை வைத்துவிட்டு காலம் கனியும் வரை பொறுமை காக்கவேண்டும்.

அதைவிடுத்து ஜாதகத்தை தனக்கு சாதகமாக மாற்றி எழுதித் தரச்சொல்லி ஜோதிடரை வற்புறுத்தக்கூடாது.

ஜோதிடர்கள் தெய்வக்ஞர்கள். கோடி பணம் கொடுத்தால்கூட சாஸ்த்திரத்திற்குப் புறம்பான எந்த செயலையும் செய்யமாட்டார்கள்.

பூரண வாழ்வு

மகிழ்சியான திருமணம் வாழ்க்கை அமைவது மிகப்பெரிய வரப்பிரசாதம்; பூர்வ புண்ணிய பலம். ஒருவனுக்கு ஒருத்தியாய்- ஒருத்திக்கு ஒருவனாய், நல் இன்பத்துடன் சுற்றமும் நட்பும் நிரம்பப்பெற்று, மகிழ்வான திருமண வாழ்வு அமையப்பெற்றவர்களின் ஜாதகங்களில் பின்வரும் ஏதாது ஒரு அம்சம் நிறைந்திருக்கும்.

ஜாதகரின் 1, 5, 9-ஆம் பாவகம் வலிமைபெற்று 2, 7-ஆம் பாவகத்துடன் தொடர்பு பெறுதல்.

 4, 7-ஆம் பாவகம் ஒன்றுக்கொன்று கேந்திர திரிகோணம் பெறுவது.

 லக்னம், சந்திரன், களத்திர காரகன் சுக்கிரனுக்கு குருவின் 5, 9-ஆம் பார்வை பலம் கிடைக்கப் பெறுதல்.

 7-ஆம் பாவகம், 7-ஆம் அதிபதிக்கு குரு பார்வை.

 சந்திரன், சுக்கிரனுக்கு லக்னாதிபதி தொடர்பு.

 7-ஆம் வீட்டு அதிபதிக்கும் களத்திர காரகன் சுக்கிரனுக்கும் திரிகோணாதிபதிகள் சம்பந்தம்.

நவாம்சத்தில் 7-ஆம் பாவகம், 7-ஆம் அதிபதி ஆட்சி, உச்சம் பெற்றால் தம்பதியினர் ஆயுள்முழுவதும் காதலர்களாகவே வாழ்வார்கள்.

(தொடர்ச்சி அடுத்த இதழில்)

செல்: 98652 20406

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe