சென்ற இதழ் தொடர்ச்சி...

சிலருடைய திருமண வாழ்க்கை ஏன் தோல்வியில் முடிகிறது?

எத்தனைமுறை பொருத்தம் பார்த்தாலும், நட்சத்திரப் பொருத்தம் மட்டும் பார்த்துச் செய்யும் விவாகத்திற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. கட்டப் பொருத்தம் பார்த்துச் செய்யும் திருமணத்திற்கு 100 சதவிகித உத்தரவாதம் உண்டு.

6, 7, 8-ஆம் பாவகத் தொடர்பு விவாகரத்து வரை செல்லும்.

Advertisment

ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் பலம்பெற்றும், பெண் ஜாதகத்தில் செவ்வாய் பலம்பெற்றும் இருப்பது நன்மை தரும்.

ram

செவ்வாய், சுக்கிரனுக்குத் திரிகோணத்தில் கேதுவுடன் இருப்பதும்; செவ்வாய், குரு, சுக்கிரன் 7.30 டிகிரிக்குள் இணைதல் அல்லது ஒன்றுக்கொன்று கேந்திர திரிகோணத்தில் நிற்பதும் திருமணத்தடை அல்லது தோல்வியைத் தரும்.

Advertisment

ஒரு ஆண்டின் கிரகணம் நடக்கும் நாளின் நட்சத்திரத்தில் ஆறு மாதத்திற்குத் திருமணம் நடத்தக்கூடாது. கிரகண நட்சத்திரத்தில் நடைபெறும் திருமண வாழ்க்கை கேள்விக்குறியாகும்.

திருமணப் பொருத்தம் பார்க்கும்போது 2, 7-ஆம் அதிபதிக்கு கோட்சார கிரகங்களின் தொடர்பு, குறைந்தது மூன்று வருடத்திற்கு சாதகமாக இருத்தல் நலம்.

திருமணம் நடைபெறும் நாள் ஆண்- பெண் இருபாலருக்கும் சந்திராஷ்டம நாளாக இருக்கக்கூடாது.

Advertisment

7-ஆம் அதிபதிக்கு திரிகோணத்தில் கேது. 2, 8-ஆம் அதிபதிகள் தொடர்பு மண முறிவு.

2, 7-ஆம் அதிபதிகள் வக்ரம் பெற்று ஜனன கோட்சார கேதுவுடன் சம்பந்தம் பெறுதல் கூடாது.

7, 8-ஆம் கட்டங்கள் சுத்தமாக இருந்தால், சுத்த ஜாதகம் என்று பொருளாகாது.

2, 7, 8-ஆம் அதிபதிகள், சுக்கிரன், செவ்வாய், சூரியனுடன் எந்தவிதத்திலும் சம்பந்தம் பெறக்கூடாது.

(இதுதொடர்பாக பின்னர் தனி விளக்கம் தருகிறேன்.)

2, 7-ஆம் பாவங்களுக்கு வக்ர கிரகம் சம்பந்தம் பெறுவதும்; 2, 7-ஆம் அதிபதிகள் நீசம், அஸ்தமனம் பெற்று 6, 8, 12-ல் சம்பந்தம் பெறுவதும் கூடாது.

ஒரு பிரச்சினை என்று வரும்போது ஒருவர் பக்கம் மட்டுமே நியாயம் இருக்கும். அந்த பிரச்சினையில் கணவன்- மனைவி தவிர்த்து மூன்றாம் நபரின் தலையீடு பிரச்சினையைப் பெரிதுபடுத்தும். குறிப்பாக தம்பதியினரின் பெற்றோர்கள், நண்பர்கள்.

இதில் எத்தனையோ நண்பர், நண்பிகளே வில்லி, வில்லனாக மாறுகிறார்கள் என்பது நாம் அறிந்ததே.

"கால் நனையாமல் கடல் கடந்தவர்கள் உண்டு; கண் நனையாமல் வாழ்க்கையைக் கடந்தவர்கள் இல்லை' என்பார்கள்.

ஒரு மனிதனை சமுதாயம் அங்கீகாரம் செய்ய பொருளாதாரம் மிக முக்கியமான காரணியாக உள்ளது. இந்த இன்றியமையாத பொருளாதாரம் ஒரு ஜாதகருக்கு எப்படி இருக்கும் என்பதை 2, 6, 11-ஆம் பாவகங்களே தீர்மானிக்கின்றன. ஆண்- பெண் இருவரும் இணைந்து பொருள் ஈட்டினால்தான் சமுதாயத் தேவைகளை சரிசெய்யமுடியும் என்ற சூழ்நிலை உலகம் முழுவதும் நிலவி வருகிறது. கணவனின் வருமானத்தில் மனைவி இல்லறத்தை நல்லறமாக நடத்துவாரா? கணவனுக்கு மனைவியின் பொருளாதார உதவி கிடைக்குமா என்று பார்க்கலாம்.

2, 7-ஆம் அதிபதிகள் 10-ல் இருந்தால் நல்ல உத்தியோகத்தில் உள்ள களத்திரம் அமையும்.

ஆண் ஜாதகத்தில் 2, 7-ஆம் பாவகம், 2, 7-ஆம் அதிபதிகள் 2, 11-ஆம் பாவத்துடனும் அதிபதிகளுடனும் சம்பந்தம் பெற்றால் மனைவிமூலம் பொருளாதாரம் நிச்சயம் உண்டு.

7-ஆம் அதிபதி 2-ல் நின்றால் மனைவிமூலம் பொருளாதாரம் உண்டு.

பொருளாதாரம் திருமண வாழ்வில் பெரும்பங்கு வகிக்கிறது என்ற நிலையில் ஆண்- பெண் இருவரும் பொருள் ஈட்டினால் சுகமான வாழ்க்கை உண்டு. பெண் வருமானத்தில் ஆண் வாழும்போது கலகம் உருவாகுகிறது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும்.

ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் நிலையையும், பெண் ஜாதகத்தில் செவ்வாயின் நிலையையும் கொண்டு பொருளாதாரத்தால் பின் நாட்களில் பிரச்சினை வருமா என்பதைத் தீர்மானம் செய்யமுடியும்.

திருமணப் பொருத்தம் பார்க்கும்போது சுக்கிரன், செவ்வாய், குருவின் நிலையை சரிசமமாகப் பொருத்தினால் பொருளாதாரம் குடும்பத்தைப் பிரிக்காது.

திருமணப் பொருத்தம் பார்க்கும்போது ரஜ்ஜு, யோனிப் பொருத்தம் இல்லாத ஜாதகம் தம்பதியினரைப் பிரிக்கும்.

இருதார யோகம்

ஒரு தாரத்தையே சமாளிக்க முடியாத இந்த கலிகாலத்தில் 2-ஆம் தாரம் எப்படி?

இயற்கை நிகழ்வினால் உருவாகும் இரண்டாம் தாரம் ஏற்றுக்கொள்ளக்கூடியது. கருத்து வேறுபாடு காரணமாக இரண்டாம் தாரத்தை நாடுபவர்கள் இரண்டாம் தரமான வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள் என்பது நிதர்சனமாக உண்மை. ஒருசிலருக்கு இரண்டாம் திருமணம் மனநிறைவான வாழ்க்கையைத் தருகிறது.

ஜோதிடரீதியாக இரண்டாம் தாரம் ஏன் ஏற்படுகிறது என்று பார்ப்போம்.

இரண்டாம் திருமணத்தைக் குறிக்கும் பாவகம் 11. 11-ஆம் பாவகத்திற்கு திரிகோணாதிபதிகள் சம்பந்தம் பெறும்போது சட்டப்படியான மறுமணமாகவும், அசுப மற்றும் லக்ன பாவிகள் சம்பந்தம் பெறும்போது சட்டத்திற்குப் புறம்பான உறவும் ஏற்படும்.

7-ஆம் பாவகம், 7-ஆம் அதிபதி பலம் குறைந்து 11-ஆம் பாவகம் பலம் பெறும்போது இரண்டாவது திருமணம் உண்டு.

2, 7-ஆம் அதிபதிகள் 11-ஆம் பாவத்தோடு சம்பந்தம் பெறுதல்; 11-ஆம் அதிபதி 2, 7-ஆம் பாவகத்தோடு சம்பந்தம் பெறுவது; 11-ல் இரண்டுக்கு மேற்பட்ட கிரகங்கள் அமர்தல்; 1, 11-ஆம் அதிபதிகள் பரிவர்த்தனை பெறும்போது இருதாரம் ஏற்படும்.

7-ஆம் அதிபதிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பெண் கிரகம் சம்பந்தம் பெறுவது, இரண்டுக்கும் மேற்பட்ட திருமணத்தைக்கூட தரும்.

நவீன யுகத்தில் சுய விருப்ப விவாகம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பெற்றோர்கள் பிள்ளைகளுக்குத் தரும் சுதந்திரம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. தற்காலத்தில் எல்லா பெற்றோரும் ஓரிரு பிள்ளைகளையே வைத்திருப்பதால், சுய விருப்ப விவாகத்தை ஆதரிக்கவேண்டிய சூழ்நிலை. இத்தகைய திருமணம், பல சந்தர்ப்பங்களில் திருமணத்திற்குப் பிறகு 7-ஆம் பாவகம் 6, 8-ஆம் பாவகமாக மாறிவிடுகிறது. அதனால்தான் கடவுள் 6, 8-ஆம் பாவகத்திற்கு நடுவில் 7-ஆம் பாவகத்தை வைத்திருக்கிறார். சரியான களத்திரத்தைத் தேர்வு செய்யாவிட்டால் 7-ஆம் பாவகம் 6-ஆம் பாவகமாக- சத்ருவாக மாறும். கருத்து வேறுபாடு அதிகமாக ஏற்படும்போது வம்பு வழக்கு கோர்ட் வரை சென்று 7-ஆம் பாவகம் 8-ஆம் பாவகமாக உருவெடுக்கும்.

நமக்கு உடம்பும், உயிரும் கொடுத்த தாய்- தந்தையின் தேர்வைவிட நம் தேர்வு சிறப்பாக அமையாது என்பதை சுய விருப்ப சிந்தனையில் இருப்பவர்கள் உணரவேண்டும்.

சுய விருப்ப விவாகம் செய்பவரின் ஜாதகத்தில் 2, 5, 7, 11-ஆம் பாவக சம்பந்தம், புதன், கேது சம்பந்தம் இருக்கும்.

குருவுக்கு புதன், சுக்கிரன், சந்திரன் போன்ற பெண் கிரகங்கள் தொடர்பு பெறும்போது ஜாதகர் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களைக் காதலிப்பார்.

அடுத்த இதழிலும்...

செல்: 98652 20406

பெருங்கடன் தீர்க்கும் மைத்ர முகூர்த்தங்கள்

மைத்ர முகூர்த்தம் என்னும் நேரத்தில், நாம் பெற்ற கடனில் ஒரு சிறுபகுதியையாவது திரும்பச் செலுத்தினால் விரைவில் மொத்த கடனையும் அடைத்துவிடலாம். வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க, இவ்வாண்டு டிசம்பர் வரையிலான மைத்ர முகூர்த்த விவரங்கள் இங்கு தரப்பட்டுள்ளன. அதைப் பயன்படுத்தி நலமும் வளமும் பெற பிரார்த்திக்கிறோம்.

செவ்வாய்க்கிழமையும் அஸ்வினி நட்சத்திரமும் சேருகின்ற நாளில் மேஷ லக்னம் அமைந்துள்ள நேரம் மைத்ர முகூர்த்தம் எனப்படும்.

செவ்வாய்க்கிழமையும், அனுஷ நட்சத்திரமும் சேருகின்ற நாளில் விருச்சிக லக்னம் அமைந்துள்ள நேரமும் மைத்ர முகூர்த்தமாகின்றது.

மேற்படி காலங்களில் லக்னமும் நட்சத்திரமும் அமைந்து செவ்வாய்க்கிழமை அமையாது போனாலும் 75 சதவிகிதப் பலன்களைப் பெறலாம்.v செவ்வாய்க்கிழமை அமைந்தால் நிச்சயமாக 100 சதவிகிதப் பலன்களைப் பெறுவது திண்ணம்.

செவ்வாய்க்கிழமை அன்று செவ்வாய் ஹோரை (காலை 6-7 அல்லது மதியம் 1-2) காலத்தில் மைத்ர முகூர்த்தம் வருமேயானால் மிகவும் விசேஷமானது.

மாலையில் சூரிய அஸ்தமனத்திற்குப் பின்னர் பணம் கடன் கொடுத்தல்- வாங்கல் கூடாது என்பதால் மாலை சூரிய அஸ்தமனத்திற்குப் பின்னர் ஒரு நாழிகை வரை- சூரிய வெளிச்சம் மறையும் காலத்திற்கு முன்னர் மைத்ர முகூர்த்தம் வரின் நன்று.

மைத்ர முகூர்த்த வேளையில் சிறிய அளவிற்காவது வங்கிக் கடன் (Bank Loan), நகைக்கடன் (Jewellery Loan), வீட்டு அடமானம் (Housing Mortgage Loan), கடன் அட்டை (Credit Card Loan), கடனைத் திரும்பத்தந்தால் வெகு விரைவில் பெருங்கடன் தொகை அடைக்கப்பட்டு நிம்மதி கிட்டும்.

மாற்று தினங்கள்

மைத்ர முகூர்த்த நாளில் இயலாத சூழலில், செவ்வாய்க்கிழமையுடன் அஸ்வினி அல்லது அனுஷ நட்சத்திரம் சேரும் நாளில் லக்னம் நள்ளிரவு வந்தாலும் அன்று கடனை அடைத்தல் நன்று.

அஸ்வினி நட்சத்திரம் உள்ள நாளில் மேஷ லக்னத்திலும், அனுஷ நட்சத்திரம் உள்ள நாளில் விருச்சிக லக்னத்திலும் கடன் அடைக்கலாம். மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்றுமுறை இதுபோன்று வரும்.

(இது முழுமையான மைத்ர முகூர்த்தம் அல்ல;

சுமார் 66 சதவிகித மைத்ர முகூர்த்தமாகும்.)

பிறந்த திதி, கிழமை, நட்சத்திரம் ஆகியவற்றில் கடனைத் திரும்பித் தருவது நன்று.

மைத்ர முகூர்த்தம்

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தில், கொடுக்கவேண்டிய கடனில் சிறு தொகையை எடுத்து சிவப்புத்துணியில் கட்டி தனியாக வைத்துக்கொள்ளவும். பின்பு உங்களுக்கு வசதியான நேரத்தில் கடனைக் கொடுத்துவிடலாம்.

15-4-2018 ஞாயிறு காலை 6.06 முதல் 8.06 வரை.

1-5-2018 செவ்வாய் மாலை 6.58 முதல் இரவு 8.58 வரை.

14-5-2018 திங்கள் அதிகாலை 3.54 முதல் 5.54 வரை.

29-5-2018 செவ்வாய் மாலை 6.50 முதல் இரவு 8.50 வரை.

10-6-2018 ஞாயிறு அதிகாலை 4.10 முதல் 6.10 வரை.

25-6-2018 திங்கள் மாலை 3.51 முதல் 5.51 வரை.

7-7-2018 சனி நள்ளிரவு 1.57 முதல் 3.57 வரை.

22-7-2018 ஞாயிறு மாலை 3.13 முதல் 4.00 வரை.

23-7-2018 திங்கள் மதியம் 2.00 முதல் மாலை 4.00 வரை.

3-8-2018 வெள்ளி இரவு 10.56 முதல் 12.56 வரை.

19-8-2018 ஞாயிறு மதியம் 12.08 முதல் 2.08 வரை.

30-8-2018 வியாழன் இரவு 8.56 முதல் 10.56 வரை.

15-9-2018 சனி காலை 10.08 முதல் 12.08 வரை.

22-9-2018 சனி காலை 8.20 முதல் 10.20 வரை; மதியம் 2.20 முதல் மாலை 4.20 வரை; இரவு 8.20 முதல் 10.20 வரை; நள்ளிரவு 2.20 முதல் 4.20 வரை.

27-9-2018 வியாழன் இரவு 8.40 முதல் 10.40 வரை.

6-10-2018 சனி காலை 6.55 முதல் 8.55 வரை; மதியம் 12.55 முதல் 2.55 வரை; மாலை 6.55 முதல் 8.55 வரை; இரவு 12.55 முதல் நள்ளிரவு 2.55 வரை.

13-10-2018 சனி காலை 8.20 முதல் 10.20 வரை.

24-10-2018 புதன் மாலை 6.28 முதல் 8.28 வரை.

9-11-2018 வெள்ளி காலை 6.36 முதல் 8.36 வரை.

20-11-2018 செவ்வாய் மாலை 5.10 முதல் 6.19 வரை.

21-11-2018 சனி மாலை 4.23 முதல் 6.23 வரை.

6-12-2018 வியாழன் காலை 6.40 முதல் 8.40 வரை.

18-12-2018 செவ்வாய் மதியம் 2.30 முதல் 4.30 வரை.

- ஐ. ஆனந்தி