சுமார் 60 வயதுடைய ஒருவர், நாடியில் பலன்கேட்க வந்திருந்தார்.
""ஐயா, எனதுமகளுக்கு 32 வயதாகின்றது. திருமணம் தடையாகிக் கொண்டே வருகிறது. அவள்திருமணம் நடைபெற வழிகேட்டு வந்துள்ளேன்'' என்றார்.
ஜீவநாடி ஓலையைப் படிக்கத் தொடங்கினேன்.ஓலையில்அகத்தியர் எழுத்து வடிவாகத் தோன்றி பலன்கூறத் தொடங்கினார். ""இவன் தன் மகளுக்குத் திருமணம் தடையாகிக்கொண்டே வருகிறது என்று அகத்தியனிடமே பொய் சொல்கிறான்.இவன் மகளுக்கு 24 வயதுமுதல் இன்று வரை மூன்று திருமணம் செய்து வைத்து
விட்டான். ஆனால் எந்த கணவனுடனும் சேர்ந்து வாழாமல், ஏதாவது ஒரு காரணத்தால் பிரிந்து வந்துவிடுகிறாள். இது உண்மையா என்று கேள்.''
""அகத்தியர் கூறியது உண்மைதான். என் மகளுக்கு மூன்று திருமணம் செய்தும் குடும்ப வாழ்க்கை அமைய
வில்லை'' என்றார்.
""அகத்தியனிடம் பொய் கூறி பலன்கேட்க வேண்டியதில்லை. தனக்குள்ள உண்மையான பிரச்சினைகளை கௌரவம் பார்க்காமல் கூறி பலன் கேட்டால், நானும் சரியான பலனைக் கூற
சுமார் 60 வயதுடைய ஒருவர், நாடியில் பலன்கேட்க வந்திருந்தார்.
""ஐயா, எனதுமகளுக்கு 32 வயதாகின்றது. திருமணம் தடையாகிக் கொண்டே வருகிறது. அவள்திருமணம் நடைபெற வழிகேட்டு வந்துள்ளேன்'' என்றார்.
ஜீவநாடி ஓலையைப் படிக்கத் தொடங்கினேன்.ஓலையில்அகத்தியர் எழுத்து வடிவாகத் தோன்றி பலன்கூறத் தொடங்கினார். ""இவன் தன் மகளுக்குத் திருமணம் தடையாகிக்கொண்டே வருகிறது என்று அகத்தியனிடமே பொய் சொல்கிறான்.இவன் மகளுக்கு 24 வயதுமுதல் இன்று வரை மூன்று திருமணம் செய்து வைத்து
விட்டான். ஆனால் எந்த கணவனுடனும் சேர்ந்து வாழாமல், ஏதாவது ஒரு காரணத்தால் பிரிந்து வந்துவிடுகிறாள். இது உண்மையா என்று கேள்.''
""அகத்தியர் கூறியது உண்மைதான். என் மகளுக்கு மூன்று திருமணம் செய்தும் குடும்ப வாழ்க்கை அமைய
வில்லை'' என்றார்.
""அகத்தியனிடம் பொய் கூறி பலன்கேட்க வேண்டியதில்லை. தனக்குள்ள உண்மையான பிரச்சினைகளை கௌரவம் பார்க்காமல் கூறி பலன் கேட்டால், நானும் சரியான பலனைக் கூறுவேன். இவன் மகள் திருமணத் தடைக்குக் காரணத்தையும், திருமணம் நடக்க சரியான வழிகளையும் கூறுகிறேன். இவன் வம்சத்தில் மூன்று தலைமுறைக்கு முன்பு, இவன் முன்னோர்கள், செல்வம், செல்வாக்குடன் மிக வசதியாக வாழ்ந்தார்கள். இவன் தந்தைவழி பாட்டன்களில் ஒருவனுக்கு ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த உறவுப் பெண் ஒருத்தியைத் திருமணம்செய்து வைத்தார்கள்.
இவன் குடும்பத்தில் பிறந்த பெண்கள்(அத்தை, அக்காள், தங்கை) தங்கள் குடும்ப செல்வச் செருக்கினால், வாழவந்த ஏழைப்பெண்ணை, தங்கள் குடும்பத்தில் ஒருத்தியென்று மதித்துப் பாசம் காட்டாமல் ஒரு வேலைக்காரியைப் போன்று கீழ்த்தரமாக நடத்தினார்கள். இது மட்டும் அல்லாமல், மிகப்பெரிய ஒரு பாவத்தையும் செய்தார்கள். இவள் தன் கணவனுடன் சேர்ந்து வாழமுடியாமல் தடுத்து, அவள் வாழ்க்கையையும் தடுத்துக் கெடுத்துவிட்டார்கள்.
இந்தப் பெண் வாழவந்த வீட்டில், கணவன் வீட்டுப் பெண்கள் செய்த கொடுமைகளைப் பொறுக்கமுடியாமல், அந்த வீட்டை விட்டு வெளியேறி விட்டாள். தன் வாழ்க்கைத் தேவைகளுக்கு தானே உழைத்தும், சில ஆண்களிடம் நட்புகொண்டும், பொருள் தேடி வாழ்ந்து இறந்தாள். அவள் இறக்கும்போது, தன் வாழ்க்கையை சீர்குலைத்து, நிம்மதி, மரியாதை இல்லாமல் போனதற்கு இவள் குடும்பத்துப் பெண்கள்தான் காரணம் என்பதால், குடும்பத்துப் பெண்களுக்கு ஒரு சாபமிட்டுதான் இறந்தாள்.
இந்த குடும்பத்தில் வாழவந்த என்வாழ்க்கையை சீரழித்த, இந்தக் குடும்பத்தில் பிறக்கும் பெண்களின் வாழ்வில், நான் எப்படி என் கணவன், பாசம்,உறவை இழந்து வாழ்ந்ததுபோல், ஏதாவது ஒருவகையில், நிம்மதியில்லாமல், எதுவும் நிரந்தரமில்லாமல், அனுபவித்து வாழ்வார்கள் என்று சாபமிட்டு இறந்தாள். அந்தப் பெண் விட்ட சாபம், இவன் வம்சத்தைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தில் பிறக்கும் பெண்களின் வாழ்க்கையில், திருமணத் தடை, கணவனை அடையக் கால தாமதம், கட்டிய கணவனாலும், கணவன் வீட்டாராலும் நன்மை, ஆதரவு அடையமுடியாத நிலை, கணவன் இழப்பு, கணவனைவிட்டு மனைவி பிரிவதுஅல்லது மனைவியை விட்டுக் கணவன் பிரிந்துசெல்வது, மருமகள்களால் வெறுத்து ஒதுக்கப்படுதல், பணம், பொருளை உறவினர்களிடம் இழந்து வறுமையில் வாடுதல், பிற ஆண்கள் நட்பு, உறவு என ஏதாவது ஒருவகையில் பாதிப்பினை அனுபவித்து வாழ்வார்கள். இவன் மகளின் வாழ்க்கை நிகழ்விற்கும், வாழவந்த பெண்விட்ட சாபம்தான் காரணம்.''
""அகத்தியர் கூறிய நிகழ்வு, என் முன்னோர்கள் காலத்தில் நடந்ததா இல்லையா என்று எனக்குத் தெரியாது. ஆனால் எங்கள் குடும்பத்தில் பிறந்தபெண்களின் வாழ்க்கையில், இந்த பலன்களில் ஏதாவது ஒருவகையில் தொடர்ந்து நடந்து, அனுபவிக்கச் செய்கிறது. இந்த சாபத்தை எவ்வாறு நிவர்த்திசெய்வது என்பதை அகத்தியர்தான் கூறி வழிகாட்டவேண்டும்'' என்றார். வாழவந்த பெண் விட்ட சாபம், நிவர்த்தியாக வழிமுறைகளையும், இவரின்மகளுக்கு கணவனாக அமையப் போகின்றவனின் அடையாளத்தையும், விவரங்களையும், திருமணத்திற்குப்பிறகு அவள் பெண் சாபத்தைத் தடுத்து வாழ வேண்டிய வழிமுறைகளையும் கூறிவிட்டு, ஓலையிலிருந்து அகத்தியர் மறைந்தார்.
""என் மகளின் வாழ்க்கை நிலைக்கு, வம்சத்தில் உண்டான பெண் சாபம்தான் காரணம் என்று அறிந்தேன்'' என்றவர், இன்னும் ஒரு கேள்வியையும் கேட்டார். ""ஒரு ஆண் பல பெண்களுடன் உறவு கொள்வதையும், பல பெண்களைத் திருமணம் செய்துகொள்வதையும், ஒரு பெண் பல ஆண்களுடன் தொடர்பு வைத்துக்கொள்வதையும், ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களை மணந்து கொள்வதையும் ஜாதகம் மூலமாக அறிந்து கொள்ளமுடியுமா?'' என்று கேட்டார்.
சித்தர்கள் கூறியுள்ள தமிழ் ஜோதிடமுறையில், ஜாதகத்திலுள்ள கிரக அமைப்பினைக்கொண்டு, ஒரு ஆண் பல பெண்களிடம் உறவு வைத்துக்கொள்வதையும், ஒரு பெண் பல ஆண்களிடம் நட்பு வைத்துக்கொள்வதையும் அறிந்துகொள்ள முடியும். கலையுலக நடிகர், நடிகைகளின் ஜாதகத்தினை உதாரணமாகக் காட்டி விளக்கினேன். அவரின் மகள் ஜாதகத்திலும் இந்த பலன்தரக்கூடிய கிரகஅமைப்பினை சுட்டிக்காட்டி, விளக்கம் கூறி அனுப்பிவைத்தேன்.
- சித்தர்தாசன் சுந்தர்ஜி
செல்: 99441 13267