ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் பாதிக்கப் பட்டிருந்தால், எத்தகைய ஜாதகத்தைச் சேர்ப்பது, இணைக்கக்கூடாத ஜாதக அமைப்பு எதுவென்று ஜோதிடத்தில் விதியுள்ளது.

சஷ்டாஷ்டக ராசி எனப்படும் 6, 8-க்குடைய ராசியை இணைத்துவிட்டால், கணவன்- மனைவிக்கிடையே ஒற்றுமை குறைவாக இருக்கும். எனவே 6, 8-க்குடைய ராசிகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.

முரடனாக இருக்கும் ஆணுக்கு முரட்டு சுபாவமுள்ள பெண்ணைச் சேர்த்தால் பிரிவு ஏற்படலாம்.

எந்த ஒரு கிரகமும் கேந்திரம் எனப்படும் 1, 4, 7, 10-ல் இருந்தால் சிறப்பு. இதில் ஆட்சி, உச்சம் பெற்றால் கிரகங்கள் பலமாக மாறிவிடும். அந்த கிரகத்தின் தன்மைக்கேற்ப ஜாதகம் செயல்படும்.

Advertisment

ஆண் ஜாதகத்தில் லக்னாதிபதி வலுவாக இருந்தால், அதேபோல் லக்னாதிபதி வலுவாக உள்ள பெண் ஜாதகத்தை சேர்க் கக்கூடாது. இருவர் ஜாதகமும் சமபலமாக இருக்கக்கூடாது. அப்படியிருந்தால் "நீயா நானா' போட்டி ஏற்படும். விட்டுக்கொடுக்கும் தன்மை இருக்காது. ஆண் ஜாதகத்தில் லக்னாதிபதி வலுவாக இருந்தால், பெண் ஜாதகத்தில் லக்னாதிபதி வலுக்குன்றிய இடமான 2, 3, 5, 6, 9, 11, 12-ல் இருப்பதுபோல் சேர்த்தால்தான் பிரச்சினை குறையும். உதாரணமாக, இரண்டாமிடத்தில் லக்னாதிபதி இருந்தால் மனக்குறை, பணக்குறை இருந்தாலும், தன் குடும்பத்திற்காக பெரிய தியாகம் செய்து வாழும் அமைப்பை பெண் ஏற்படுத்திக்கொள்வாள். தன் குடும்ப கௌரவம், பிள்ளைகளின் வாழ்க்கை மிக முக்கியமெனக் கருதி விட்டுக்கொடுக்கும் தன்மை ஏற்படும். பெண் ஜாதகத்தில் லக்னாபதி வலுவாக இருந்துவிட்டால், ஆண் ஜாதகத்தில் லக்னாதிபதி வலுக்குன்றிய இடத்தில் இருப்பதுபோல சேர்த்துவிட்டால், "மனைவி சொல்லே மந்திரம், மனைவி ஒரு மந்திரி' என்றபடி கணவன் செயல்படுவார்.

"ரோஷக்காரனுக்கு கடனைக் கொடு; ரோஷம் கெட்டவனுக்கு பெண்ணைக் கொடு' என்ற பழமொழிக்கேற்ப, கணவர் என்ன தான் முரட்டு சுபாவமுள்ளவாராக இருந் தாலும், லக்னாதிபதி வலுக்குன்றிய ஜாத கத்தை இணைத்துவிட்டால் மனைவி அதைப் பெரிதும் பொருட்படுத்த மாட்டாள். லக்னா திபதி வலுக்குன்றிய ஜாதகருக்கு வாழ்க்கை போராட்டமாக அமையும். வெற்றிக்காக கடும் போராட்டத்தை சந்திப்பார்.

அதேநேரத்தில் திருமணத்தில் லக்னாதிபதி வலுக்குன்றிய ஜாதகத்தை இணைத்துவிட்டால், ஜாதகர் வேறுவழியில்லாமல் குடும்பத்திற்குக் கட்டுப்பட்டு வாழும் சூழ்நிலை ஏற்படும்.

Advertisment

லக்னத்திற்கு 7-ஆம் ராசியாக வரும் ராசியைச் சேர்த்தால் கணவன்- மனைவிக் கிடையே பிரச்சினை ஏற்படாது. உதாரண மாக, மேஷ லக்னத்திற்கு 7-ஆமிடம் துலாம். மனைவியின் ராசி துலா ராசியாக அமைந்துவிட்டால் கணவன்- மனை விக்கிடையே பிரிவு ஏற்படாது. ஆனால் இந்த விதி எல்லா லக்னத்திற்கும் பொருந்தாது.

கடக லக்னத்திற்கு ஏழாமிடமான மகரம் மற்றும் கும்ப ராசிகளை இணைக் கக்கூடாது. அதேபோல் சிம்ம லக்னத்திற்கு ஏழாமிடமான கும்ப ராசியை இணைக் கக்கூடாது. இதற்கு மறுபுறம் மகர லக்னத் திற்கு 7-ஆம் ராசியான கடக ராசியையும், கும்ப லக்னத்திற்கு 7-ஆம் ராசியான சிம்ம ராசியையும் சேர்க்கக்கூடாது.

marriage

இதை மீறிச் சேர்த்தால் கணவன்- மனை விக்கிடையே பிரிவு ஏற்படலாம். ஒற்றுமை குறையலாம். சூரியன், சந்திரன் சனிக்குப் பகையென்பதால் இந்த ராசிகளைச் சேர்க்கக்கூடாது. மற்ற லக்னக்காரர்கள் 7-ஆம் ராசியை தாராளமாக சேர்க்கலாம். கன்னி லக்னத்திற்கு 7-ஆமிடம் மீனம், தனுசு லக்னத்திற்கு 7-ஆமிடம் மிதுனம், மீன லக்னத்திற்கு 7-ஆமிடம் கன்னி, மிதுன லக்னத்திற்கு 7-ஆமிடம் தனுசு. குரு, புதன் பகை என்று ஜோதிடத்தில் சொல்லப்பட்டாலும், இந்த ஏழாம் ராசியை இணைத்தால் பெரிய பாதிப் பில்லை. குரு, புதன் பகை என்றாலும், இவை சுபகிரக வரிசையில் வரும். இதற்கு ஜோதிடத்தில் விதிவிலக்கு சொல்லப் பட்டுள்ளது.

நாம் ஏதாவது ஒரு ராசி, லக்னத்தில் பிறந்திருப்போம். ஆண் ஜாதகத்தில் செவ்வாய் எங்குள்ளாரோ, பெண் ஜாதகத்தில் அந்த ராசியில் சனி இருக்கக் கூடாது. இருந்தால் கணவன்- மனைவி ஒற்றுமை இருக்காது அதேபோல் பெண் ஜாதகத்தில் செவ்வாய் எங்குள்ளாரோ ஆண் ஜாதகத்தில் அந்த ராசியில் சனி இருக்கக்கூடாது. பெண் ஜாதகத்தில் செவ்வாய், கேது இருந்தால் ஆண் ஜாதகத்தில் சுக்கிரன், கேது சேர்ந்திருக்கக்கூடாது. பெண் ஜாதகத்தில் செவ்வாய், ராகு சேர்ந்திருந்தால் ஆண் ஜாதகத்தில் சுக்கிரன், ராகு சேர்ந்திருக்கக்கூடாது. பெண் ஜாத கத்தில் செவ்வாய் களத்திரகாரன்; ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் களத்திரகாரன் என்பதால் இவர்களோடு ராகு, கேது சேரக்கூடாது.

பெண்ணின் ஜாதகத்தில் எட்டாம் அதிபதியாக வரும் கிரகம் எதுவோ, ஆணின் ஜாதகத்தில் அந்த கிரகத்தின் தசை திருமணத் தின்போது நடைமுறையில் இருக்கக்கூடாது. அப்படி மீறித் திருமணம் செய்தால் பிரிவுகள் ஏற்படலாம். இதே கருத்து ஆணின் ஜாதகத் திற்குப் பொருந்தும்.

செல்: 98403 69513