Advertisment

தித்திக்கும் வாழ்க்கை தரும் திருமணப் பொருத்தம்! -பாஸ்கரா ஜோதிடர் எம். மாசிமலை

/idhalgal/balajothidam/marriage-match

திருமணம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரு பந்தத்தை உண்டாக்கி வாரிசுகளை உருவாக்கும் முயற்சியே யாகும். ஆண்களுக்கும் பெண் களுக்கும் இயற்கையில் உண்டாகும் காம இச்சையை சீராக அனுபவிக்கும் ஒரு நெறி முறையாகவும் திருமணம் உள்ளது. இந்த பந்தம் இல்லாவிடில் காமவிருப்பமானது மிருகங்களைப்போன்று கட்டுப் பாடின்றிப் போவதுடன், அந்த சமூக அமைப்பே சீரழிந்துவிடும். எனவேதான் நமது முன்னோர்கள் திருமணம் என்ற ஒரு பிணைப்பை ஏற்படுத்தி, அதன் மூலம் மனித குலம் வளர்ச்சியடைய வழிவகுத்தனர்.

Advertisment

திருமணம் நடத்த பத்துப் பொருத் தங்கள் பார்க்கப்படுகின்றன. அப்படிப் பார்த்து திருமணம் செய்துகொண்ட வர்கள் எல்லாரும் மகிழ்ச்சியுடன் வாழ் கிறார்களா என்றால் இல்லை என்பதே உண்மையாகும். அதிலும் முக்கியமாக ஒருவர் பிறந்த நட்சத்திரத்திற்குப் பொருத்தம் பார்ப்பதில் மிகுந்த குறைபாடுகள் உள்ளன. அவை என்ன என்பதைப் பார்ப்போம்.

சந்திரன் ஒரு நட்சத்திரத்தில் சுமார் 23 மணிமுதல் 27 மணிவரை பயணம் செய்கிறது. அந்த 23 மணியிலிருந்து 27 மணி இடைவெளியில் பிறந்தவர்கள் அனைவருக்கும் பிறந்த நட்சத்திரம் ஒன்றேதான். ஆனால் அந்த நட்சத் திரத்தின் அடிப்படையில் பலன்கள் அனைவருக்கும் ஒன்றுபோல் இருப்ப தில்லை. ஒரே நாளில், ஒரே நட்சத் திரத்தில் லட்சக்கணக்கானோர் பூமியில் பிறக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் அந்த நட்சத்திரம் ஒரே பலன்களைக் கொடுக்கிறதா? இல்லைதானே? அப்பொழுது ஏன் ஒருவரது பிறந்த நட்சத்திரத்தை வாழ்க்கை யின் முக்கிய நிகழ்ச்சி யான திருமணத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும்? சில நொடி இடைவெளையில் பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கே வெவ் வேறான பலன்கள் உண்டா கின்றன. பிறந்த நட்சத் திரத்தில் இருக்கின்ற சந்திரன், ஜாதகருக்கு வயதாகும்பொழுது நகர்ந்துசென்று அடுத்த நட்சத்திரத்தில் சஞ்சரிக் கும். அப்பொழுது ஜாத கருடைய தசாபுக்திகளும் மாற்றம் அடைகின்றன. அதற்குத் தகுந்தாற்போல் பலன்களும் மாறிவிடு கின்றன. சந்திரன் நின்ற பிறந்த நட்சத்திரமுள்ள ராசியானது ந

திருமணம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரு பந்தத்தை உண்டாக்கி வாரிசுகளை உருவாக்கும் முயற்சியே யாகும். ஆண்களுக்கும் பெண் களுக்கும் இயற்கையில் உண்டாகும் காம இச்சையை சீராக அனுபவிக்கும் ஒரு நெறி முறையாகவும் திருமணம் உள்ளது. இந்த பந்தம் இல்லாவிடில் காமவிருப்பமானது மிருகங்களைப்போன்று கட்டுப் பாடின்றிப் போவதுடன், அந்த சமூக அமைப்பே சீரழிந்துவிடும். எனவேதான் நமது முன்னோர்கள் திருமணம் என்ற ஒரு பிணைப்பை ஏற்படுத்தி, அதன் மூலம் மனித குலம் வளர்ச்சியடைய வழிவகுத்தனர்.

Advertisment

திருமணம் நடத்த பத்துப் பொருத் தங்கள் பார்க்கப்படுகின்றன. அப்படிப் பார்த்து திருமணம் செய்துகொண்ட வர்கள் எல்லாரும் மகிழ்ச்சியுடன் வாழ் கிறார்களா என்றால் இல்லை என்பதே உண்மையாகும். அதிலும் முக்கியமாக ஒருவர் பிறந்த நட்சத்திரத்திற்குப் பொருத்தம் பார்ப்பதில் மிகுந்த குறைபாடுகள் உள்ளன. அவை என்ன என்பதைப் பார்ப்போம்.

சந்திரன் ஒரு நட்சத்திரத்தில் சுமார் 23 மணிமுதல் 27 மணிவரை பயணம் செய்கிறது. அந்த 23 மணியிலிருந்து 27 மணி இடைவெளியில் பிறந்தவர்கள் அனைவருக்கும் பிறந்த நட்சத்திரம் ஒன்றேதான். ஆனால் அந்த நட்சத் திரத்தின் அடிப்படையில் பலன்கள் அனைவருக்கும் ஒன்றுபோல் இருப்ப தில்லை. ஒரே நாளில், ஒரே நட்சத் திரத்தில் லட்சக்கணக்கானோர் பூமியில் பிறக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் அந்த நட்சத்திரம் ஒரே பலன்களைக் கொடுக்கிறதா? இல்லைதானே? அப்பொழுது ஏன் ஒருவரது பிறந்த நட்சத்திரத்தை வாழ்க்கை யின் முக்கிய நிகழ்ச்சி யான திருமணத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும்? சில நொடி இடைவெளையில் பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கே வெவ் வேறான பலன்கள் உண்டா கின்றன. பிறந்த நட்சத் திரத்தில் இருக்கின்ற சந்திரன், ஜாதகருக்கு வயதாகும்பொழுது நகர்ந்துசென்று அடுத்த நட்சத்திரத்தில் சஞ்சரிக் கும். அப்பொழுது ஜாத கருடைய தசாபுக்திகளும் மாற்றம் அடைகின்றன. அதற்குத் தகுந்தாற்போல் பலன்களும் மாறிவிடு கின்றன. சந்திரன் நின்ற பிறந்த நட்சத்திரமுள்ள ராசியானது நிலையானதல்ல.

ஆதலால் திருமணம் என்ற நிலையான பந்தத்தை ஏற்படுத்துவதற்கு, நிலையற்றிருக்கும் சந்திரன் நட்சத் திரத்தை எடுப்பது சரியா என்று நாம் யோசிக்க வேண்டும்.

Advertisment

ஒருவர் பிறக்கும்பொழுது சந்திரன் ஒரு நட்சத் திரத்தில் இருக்கிறதென்றால், அவருக்குத் திருமண மாகும் வயதில் (சுமார் 25 வயதில் என்று கொள்வோம்) பிறந்தபொழுதுள்ள நட்சத்திரத்திலோ அல்லது ராசியிலோ சந்திரன் இருப்பதில்லை. அவருக்கு திருமணத்தின்போது நடக்கும் தசாபுக்திக்கு ஏற்றவாறு அடுத்தடுத்து வரும் நட்சத்திரங்களிலும், ராசிகளிலும் சென்றுகொண்டிருக்கும்.

உதாரணத்திற்கு, ஒருவர் அஸ்வினி நட்சத்திரம் 4-ஆம் பாதத்தில், மேஷ ராசியில், மேஷ லக்னத்தில் பிறந்தார் எனக் கொள்வோம். அவரது திருமண வயதில் (சுமார் 25 வயது) சந்திரனானது கிருத்திகை நட்சத்திரத் தில் செல்லும். அவருக்கு சூரிய தசை நடந்துகொண்டிருக் கும். அஸ்வினி நட்சத்திரத்தில் கேது தசை 2 வருடம், பரணி நட்சத்திரத்திற்குண்டான சுக்கிர தசை 20 வருடம், கிருத்திகை நட்சத்திரமான சூரிய தசை 3 வருடம்- ஆக 25-ஆவது வயதில் அவருக்கு ரிஷப ராசியிலுள்ள கிருத்திகை நட்சத்திரத்தில் சந்திரன் சென்றுகெண்டிருக்கும். அவருக்கு திருமணமாகின்றபொழுது ரிஷப ராசியில் கிருத்திகை நட்சத்திரத்தில் சந்திரன் தன்னுடைய தசாபலன்களைக் கொடுக்கும் சூழ்நிலையில் உள்ளது. அப்படியிருக்கும்பொழுது அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி என்று எடுத்துக் கொண்டு நட்சத்திரப் பொருத்தம் பார்ப்பது சரியான வழிமுறையா?

ramarமுன்னோர்கள் "ஜாதகரின் திருமணத்தின் போது நட்சத்திரத்தைப் பார்த்து திருமணம் செய்க' என்று சொன்னார்கள். அதாவது ஜாதகரின் திருமணத்தின்போது அவருடைய திருமண வயதில் சந்திரன் எந்த நட்சத்திரத்தில் சென்று கொண்டிருக்கின்றது- அவருக்கு நடக்கும் தசா பலன்கள் என்ன என்பதை ஆராய்ந் தறிந்து, அதற்குத் தகுந்தாற்போல் வரன்களின் தசாபலன்களை அறிந்து திருமணத்திற்கு முடிவுசெய்க என்று சொல்லியிருக்கின்றார் களேயொழிய, ஜாதகரின் பிறந்த நட்சத்திரத் தைப் பார் என்று சொல்லவில்லை. ஆதலால் ஜாதகர்களின் பிறந்த நட்சத்திரங்களைக் கொண்டு பொருத்தம் பார்த்து மணம் முடிப்பது சரியான பலன் தராது.

ஒருவரின் ஜாதகத்தில் லக்னம் என்பது உயிராகும். திருமணப் பொருத்தத்தில் லக்னப் பொருத்தம் மிகவும் முக்கியமாகக் கருதப்படு கின்றது. லக்னப் பொருத்தம் எவ்வாறு செயல்படுகிறதென்று பார்ப்போம்.

லக்னம் நிலையானது. ஒருவர் பூமியில் பிறக்கும்பொழுது, பிறக்கும் இடத்திற்கு நேர்கிழக்கே சூரியன் இருக்கும். பிறந்த இடமும், சூரியனும் சந்திக்கும் புள்ளியே லக்னப்பாகை என்பது. லக்னப்பாகை விழும் ராசியானது 2 மணி நேரத்திற்கு ஒரு ராசி வீதம் நகர்ந்து செல்லும். ஒரு நாளில் உள்ள 24 மணி நேரத்தை சூரியன் 12 ராசிகளில் கடந்துசெல்கின்றது. ஒருவருடைய ஜாதகத்தில் விழும் இந்த லக்னப்புள்ளியே நிலையானது. கடைசிவரை மாறாதது. இந்த லக்னமானது ஒருவருடைய எண்ணங்களையும், சுய முயற்சியையும், வெற்றி- தோல்விகளையும் நிர்ணயிக்கக் கூடியது. லக்னத்தின் அடிப்படையில் ஜாதகரின் பலன்கள் சரியாக அமைகின்றன.

ஆகையால் ஜாதகப் பொருத்தத்தை நிர்ணயிக்க, பிறந்த நட்சத்திரத்தையும், ராசியையும் நிலையானதாக எடுத்துக் கொள்ளாமல், லக்னத்தை வைத்துப் பொருத்தம் பார்க்க வேண்டும்.

ஒரு ஜாதகத்தில் 1, 3, 5, 7, 9, 11-ஆம் பாவங்கள் உயிர்ப்பற்றான பாவங்கள். இத்தகைய பாவங்கள் ஒருவருக்கு தொடர்பு பெறும்பொழுது அந்த ஜாதகர் தான் பழகும் நபர்களிடம்- அவர்களின் குடும்பத்தினரோ அல்லது வெளியில் உள்ளவர்களோ யாராக இருந்தாலும் அவர்களிடம் மிகுந்த பாசத்துடனும் அன்புடனும் நடந்துகொள் வார்கள். அவர்களது பணம், பொன், பொருட் கள்மீது அதிக பற்றுக்கொள்ளாதவர்களாகவும் பழகுவார்கள். பழகுவதற்கு இனிமையாகவும் இருப்பவர்கள். ஜாதகத்தில் 2, 4, 6, 8, 10, 12-ஆம் பாவத் தொடர்பு கொண்டவர்கள் எப்பொழுதும் பொன், பொருள், சொத்து கள்மீது அதிகமாக ஆசை கொண்டிருப்பார்கள். பழகும் மக்களிடமும் அதைப் பற்றிய எண்ணத்துடன் இருப்பார்கள். ஒருவரிடம் சும்மா பேசுவதற்கே தயங்குவார்கள். இவர்களிடம் பந்தபாசம், அன்பு, பிறருக்கு இணங்கிப்போதல் போன்ற குணங்கள் குறைவாகவே இருக்கும். ஒருவித அகங்காரத்துடன் இருப்பார்கள். இங்கு பந்தபாசம் குறையும்பொழுது, காமவிருப்பு, ஆசைக்கு இணங் குதல் குறைவாகவே இருக்கும்.

உதாரணமாக, ஆண் ஜாதகர் ஒருவருக்கு, அவருடைய லக்னத்திலிருந்து 3, 5, 9, 11-ஆம் பாவத்தில் லக்னம் அமைந்த பெண்ணைத் திருமணம் செய்தால் அந்தப் பெண்ணானவள் ஆணின் குணத்திற்கேற்ப பாசத்துடனும் அன்பாகவும், ஆணின் காமவிருப்பத்திற்கேற்றவாறு இணங்கி, அவருக்கு ஈடுகொடுத்து நடந்துகொள்வாள். அவ்வாறு பார்க்கும் பொழுது, மேஷ லக்னத்தில் பிறந்த ஆணுக்கு மிதுனம், சிம்மம், தனுசு, கும்ப லக்னத்தில் பிறந்த பெண்ணைத் திருமணம் செய்தால் அவர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து சந்தோஷமாக வாழ்வார்கள். அதற்கு மாறாக மேஷ லக்னத்தில் பிறந்த ஆணுக்கு விருச்சிக லக்னத்தில் பிறந்த பெண்ணைத் திருமணம் செய்வதாக எடுத்துக்கொள்வோம். மேஷத்திற்கு 8-ஆவது லக்னம் விருச்சிகமாகும். மேஷ லக்னத் தார் என்ன நினைக்கின்றாரோ அதற்கு எதிரி டையாக நினைக்கும் மனம் படைத்தவர்கள் விருச்சிக லக்னத்தார். மேஷ லக்னத்தார் தனது மனைவியை தனது ஆசைக்கு இணங்க அழைக்கும்பொழுது, அவர்கள் இணங்க மறுத்துவிடுவார்கள். அப்பொழுது குடும் பத்தில் பிரச்சினை உண்டாகும். கணவர் வேறொரு பெண்ணை நாடும் சூழ்நிலை உருவாகிவிடும். ஆதலால் இத்தகைய லக்னத்தைத் தவிர்க்க வேண்டும்.

அட்டவணையில் ஒவ்வொரு லக்னத் திற்கும் பொருத்தமான ராசிகளை, பஞ்ச பூதங்கள் வாரியாகவும் பாவரீதியாகவும் பொருத்தப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது காண்க.

அட்டவணையில் கொடுக்கப்பட்ட லக்னப் பொருத்தங்கள் எவ்வாறு திருமண வாழ்க்கையில் இன்பகரமாக இருக்கும் என்பதைப் பார்ப்போம். ராசிகள் அனைத் தும் பஞ்சபூதங்களின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன. ராசிகள் நெருப்பு, நிலம், காற்று, நீர் என்ற நான்கு பூதங்களையும், நட்சத்திரங்கள் ஆகாயத்தையும் குறிக்கும். நெருப்பு ராசிக்கு காற்று ராசி நண்பனாகும்.

எப்படி காற்றானது நெருப்பு எரிவதற்கு ஒத்தாசையாக இருக்கிறதோ அதேபோல! ஆகவே நெருப்பு ராசிக்கு காற்று ராசியை இணைத்தால், நெருப்பு ராசியின் குணம் அதிக பலம் வாய்ந்ததாக வளரும் தன்மையுடையது. நெருப்பின்மீது நீர் ஊற்றினால் நெருப்பு அணைந்துவிடும். அதேபோல் நெருப்பின்மீது மண்ணை அள்ளிப் போட்டாலும் நெருப்பு அணைந்துவிடும். ஆகவே நெருப்புக்கு நீரும் நிலமும் எமனாகும். ஆதலால் நெருப்பு ராசியுடன் நீர் ராசியையும், நில ராசியையும் இணைத்தல் கூடாது. ஒருவேளை அவர்கள் இணைக்கப்பட்டால் அவர்களது எண்ணங்கள், செயல்கள், முயற்சிகள் பாதிப்படைந்து முற்றுப்பெறாமல் போய்விடும். அவர்கள் வாழ்க்கையில் தோல்வியைத் தழுவும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுவார்கள். திருமண வாழ்க்கை சோபிக்காது.

லக்னத்திற்கு 3, 5, 9, 11-ஆம் பாவங்கள்- பாசத்துடன் மற்றவர்களுக்கு இணங்கிச் செல்வது, விட்டுக்கொடுக்கும் பண்பு போன்ற குணங்களை அதிகரிக்கும் ஆற்றல் படைத்தவையாகும். லக்னத்திற்கு 3-ஆம் பாவம் மன தைரியம், தொலைதொடர்பு, செய்திப் பரிமாற்றம் முதலியவற்றை வளர்ச்சியடையச் செய்யும். 5-ஆம் பாவமானது அன்பு, பாசம், இன்பம், குழந்தைப் பிறப்பு முதலியவற்றை வளர்ச்சியடையச் செய்து குடும்பத்தில் மகிழ்ச்சியை உண்டுபண்ணும். 9-ஆம் பாவமானது தெய்வீக எண்ணம், குலதெய்வ அனுக்கிரகம், தொலைதூரத் தொடர்புகளால் உண்டாகும் பலன்கள், உயர்கல்வி, அதிர்ஷ்டம் ஆகியவற்றை உண்டுபண்ணும். 11-ஆம் பாவமானது தங்களது அபிலாஷை களை நிறைவேற்றும் ஸ்தானம். எந்த செயலிலும் இன்பத்தை வெற்றியுடன் இணைத்து முன்னேறுவதாகும். 3, 5, 9, 11-ஆம் பாவங்கள் திருமண வாழ்க்கையிலும், குடும்ப சூழ்நிலைகளிலும் சாதகமாக செயலாற் றக்கூடிய பாவங்கள். ஆகையால்தான் இந்த லக்னங்களை இணைப்பதுதிருமணப் பொருத்தங்களில் முக்கிய பங்கை வகிக் கின்றன.

ஜாதகக் கொடுப்பினைகளில் மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டியது பஞ்சபூ தங்களாகிய நெருப்பு, நீர், நிலம், காற்று மற்றும் ஆகாயம் போன்றவற்றை நட்பு பூதங்களையுடைய ராசிகள் மற்றும் மேற்கண்ட பாவங்களுடன் இணைப்பதாகும்.

செல்: 91767 71533

bala220219
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe