பெண் சாபத்தால் தடையான திருமணம்!

/idhalgal/balajothidam/marriage-interrupted-by-female-curse

ருவர் ஜீவநாடி பலன் கேட்க வந்தார். பிரசன்ன நாடி பார்த்தபோது, தனது மகனின் திருமணம் பற்றியும் மணப்பெண்ணைப் பற்றியும் பலனறிய வந்துள்ளார் என்று அறிந்துகொண்டேன்.

அகத்தியரை வணங்கி, ஜீவநாடியைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன்.

அகத்தியர் பெருமான் நாடியில் தோன்றிப் பலன்கூறத் தொடங் கினார்.

""இவனுக்கு ஒரேமகன். பருவ வயது கடந்தும் இன்னும் திருமணம் நடக்காமல் தடையாகிக்கொண்டே வருகிறது. எதனால் திருமணம் தடைப்படுகிறது என காரணம் தெரியாமல் தவித்து, சித்தர்கள் மூலமாவது தடை நீங்கி, மகனுக்குத் திருமணம் நடக் குமா என வழி கேட்டு அகத் தியனை நாடி வந்துள்ளான். இதற்காகத்தான் வந்துள் ளானா என்று அவனைக் கேள்'' என்றார்.

நான் அவரைப் பார்த்து, ""ஐயா, தங்கள் மகன் திருமணம் சம்பந்தமாகத்தான் "நாடி' படிக்க வந்துள்ளீர்களா?'' என்று கேட்டேன்.

""ஆமாம் ஐயா, எனது மகனுக்கு 30 வயதிற்கு மேலாகிறது. ஜோதிடர்கள் கூறிய அனைத்துப் பரிகாரங் களையும் செய்தும் எந்தப் பலனுமில்லை. என் மகனுக்குத் திருமணம் நடக்குமா? பெண் சொந்தத்தில் அமையுமா? அந்நியமா? உத்தியோகம் பார்ப்பவளா? வசதியுள்ள குடும்பமா?'' என்று மூச்சு விடாமல் கேள்விகள் கேட்டார்.

ஜீவநாடியைப் படிக்கத் தொடங்கினேன்.

""இவன் மகனுக்குத் திருமணம் நடக்கும். இவன் சம்மதம் கூறினால் நாளையே திருமணம் நடக்கும். இவன் வசிக்கும் ஊருக்கு அருகிலுள்ள ஊரில், சொந்தத்தில் பெண் அமையும். ஆனால் உத்தி யோகம் பார்க்கமாட்டாள். இவன் எதிர்பார்க்கும் சொத்து, பணம், வசதிக்கு அ

ருவர் ஜீவநாடி பலன் கேட்க வந்தார். பிரசன்ன நாடி பார்த்தபோது, தனது மகனின் திருமணம் பற்றியும் மணப்பெண்ணைப் பற்றியும் பலனறிய வந்துள்ளார் என்று அறிந்துகொண்டேன்.

அகத்தியரை வணங்கி, ஜீவநாடியைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன்.

அகத்தியர் பெருமான் நாடியில் தோன்றிப் பலன்கூறத் தொடங் கினார்.

""இவனுக்கு ஒரேமகன். பருவ வயது கடந்தும் இன்னும் திருமணம் நடக்காமல் தடையாகிக்கொண்டே வருகிறது. எதனால் திருமணம் தடைப்படுகிறது என காரணம் தெரியாமல் தவித்து, சித்தர்கள் மூலமாவது தடை நீங்கி, மகனுக்குத் திருமணம் நடக் குமா என வழி கேட்டு அகத் தியனை நாடி வந்துள்ளான். இதற்காகத்தான் வந்துள் ளானா என்று அவனைக் கேள்'' என்றார்.

நான் அவரைப் பார்த்து, ""ஐயா, தங்கள் மகன் திருமணம் சம்பந்தமாகத்தான் "நாடி' படிக்க வந்துள்ளீர்களா?'' என்று கேட்டேன்.

""ஆமாம் ஐயா, எனது மகனுக்கு 30 வயதிற்கு மேலாகிறது. ஜோதிடர்கள் கூறிய அனைத்துப் பரிகாரங் களையும் செய்தும் எந்தப் பலனுமில்லை. என் மகனுக்குத் திருமணம் நடக்குமா? பெண் சொந்தத்தில் அமையுமா? அந்நியமா? உத்தியோகம் பார்ப்பவளா? வசதியுள்ள குடும்பமா?'' என்று மூச்சு விடாமல் கேள்விகள் கேட்டார்.

ஜீவநாடியைப் படிக்கத் தொடங்கினேன்.

""இவன் மகனுக்குத் திருமணம் நடக்கும். இவன் சம்மதம் கூறினால் நாளையே திருமணம் நடக்கும். இவன் வசிக்கும் ஊருக்கு அருகிலுள்ள ஊரில், சொந்தத்தில் பெண் அமையும். ஆனால் உத்தி யோகம் பார்க்கமாட்டாள். இவன் எதிர்பார்க்கும் சொத்து, பணம், வசதிக்கு அளவு எவ்வளவு'' என்று அகத்தியரும் வரிசை மாறாமல் பதில் கூறினார்.

""ஐயா, "நாடி'யில் படித்ததைக் கேட்டு, மகிழ்ச்சியாக உள்ளது. என் மகனைப் பற்றிய பெருங்கவலை இப்போது இறங்கிவிட்டது.

ஆனால் "நாடி'யில் கூறியதுபோல, என் உறவில் எந்தப் பெண்ணும் இல்லையே'' என்றார்.

"ஜீவ நாடி'யைத் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன். நாடியில் அகத்தியர் எழுத்து வடிவாகத் தோன்றிப் பலன்கூறத் தொடங் கினார்.

ssa

""என் முன்பு அமர்ந்துள்ளானே, இவன் தந்தையுடன் சேர்த்து மூன்று சகோதரர்கள். இதில் மூத்தவன் இவனது பெரிய தந்தை; இரண்டாவது இவனது தந்தை; மூன்றாவது இவன் சிற்றப்பன்.

குடும்பத்தில் மூத்தவனாகிய இவன் பெரிய தந்தைதான். புரோகிதத் தொழில் செய்து சம்பாதித்து, இவர்கள் குடும்பத்தையே காப்பாற்றியவன். தன் சகோதரர்களுக்கும் புரோகிதத் தொழில் செய்யக் கற்றுக்கொடுத் தவன். இவன் பெரிய தந்தைக்கு ஆண் வாரிசு இல்லை. ஒரே மகள்தான். இந்த மகளுக்கு சுமார் இருபது வயது இருக்கும்போது, இவன் பெரியப்பன் இறந்துபோனான். அப்போது மகளுக்குத் திருமணமாகவில்லை.

இவன் பெரிய தந்தை இறந்த சில மாதங்களுக்குப் பின்பு, இவன் தந்தையின் மனதில் ஒரு கெட்ட எண்ணம் தோன்றியது. தன் அண்ணனுக்கு இருப்பது ஒரு மகள்தான். அவர்களுக்குரிய பாகச் சொத்தைப் பிரித்துக் கொடுத்தால் அவளைத் திருமணம் புரிந்துகொள் பவன்தானே அனுபவிப்பான் என்றெண்ணி, இவன் தந்தையும், சிற்றப்பனும் அந்தப் பெண்ணிற்குச் சொத்து இல்லை என்று கூறி, அவர்கள் குடியிருந்த வீட்டையும் அபகரித்துக் கொண்டு, தன் அண்ணன் மனைவியையும், மகளையும் வீட்டைவிட்டு வெளியேற்றிவிட்டனர்.

கணவனையும், தன் சொத்துகளையும் இழந்த இவன் பெரியம்மா, தன் ஒரே மகளைக் கையில் பிடித்துக்கொண்டு நடுத் தெருவில் நின்று, "சகோதர பங்காளிச் சொத்தை அபகரித்துக்கொண்டு, இந்த வீட்டில் வாழவந்த பெண்ணாகிய என்னையும், இந்த வம்சத்தில் பிறந்த பெண்ணாகிய என் மகளையும் அநாதையாக வீட்டைவிட்டு விரட்டி விட்டீர்கள். உங்களுக்கு மனைவி எதற்கு? வம்சம் தழைக்க பிள்ளை எதற்கு? வாழ்வதற்கு ஒரு பெண்ணுக்கும், வம்சம் தழைக்க ஒரு பிள்ளைக்கும் நீங்கள் ஏங்கித் தேடித்திரிவீர்கள். இந்த வீட்டில் யாரும் நிம்மதியாக வாழ மாட்டீர்கள். மனம் வெறுத்து நாங்கள் விட்ட சாபம் தலைமுறைக்கும் தொடரும்.

இன்னும் எத்தனை தலைமுறையானாலும், என் மகளோ அல்லது அவள் வம்ச வாரிசு களோதான் என் கணவரின் பங்குச்சொத்தை அனுபவிக்கவேண்டும். நீங்களே தேடிவந்து கொடுப்பீர்கள்' என்று கூறி மண்ணை அள்ளி வீசிவிட்டு, தன் மகளை அழைத்துக்கொண்டு தன் பிறந்த வீட்டிற்குச் சென்றுவிட்டாள்.

சாபம் செயல்படத் தொடங்கியது. அந்த வீட்டில் வசித்த இவளின் சிற்றப்பனுக்கு பிள்ளை பாக்கியம் இல்லாமல் போய்விட்டது. தன் பங்குச் சொத்தினை இவனிடம் விற்று விட்டு, தன் மனைவி ஊரில் வசிக்கச் சென்றுவிட்டான். இவன் குடும்பத்தினர் மட்டுமே அந்த சாப வீட்டில் வசிக்கின்றனர்.

வாழவந்த பெண்ணின் சாபம், இவன் மகன் ஒரு பெண்ணை மணந்து வாழத் தடைப்படுத்துகிறது.

இவன் பெரியம்மா தன் ஒரே மகளை வளர்த்து, உறவிலேயே ஒருவனுக்குத் திருமணம் செய்து வைத்தாள். இப்போது அந்தப் பெண்ணுக்கு பருவ வயதில் ஒரு பெண் இருக்கிறாள். அதாவது இவனது பெரியப்பனின் பேத்தி, இவனுக்கு அக்கா மகள். இவன் மகனுக்கு அத்தை மகள் முறையாகும். அந்தப் பெண்தான் இவன் மகனுக்கு மனைவியாக அமையவேண்டியவள்.

அந்தப் பெண்ணையே இவன் மகனுக்குத் திருமணம் செய்து வைக்கச் சொல். சாபம் தீர்ந்திடும்; சந்ததி வளர்ந்திடும்'' என்றார் அகத்தியர்.

""ஐயா, என் தகப்பன் காலத்திலிலிலிருந்தே, எங்கள் இரண்டு குடும்பங்களுக்கும் உறவுத் தொடர்பில்லை. இப்போது நான் சென்று பெண் கேட்டால் கொடுப்பார்களா? எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை. ஏதாவது பரிகாரம், பூஜை செய்து, வேறிடத்தில் மகனுக்குத் திருமணம் செய்ய வழி சொல்லுங்கள்'' என்றார்.

""அகத்தியர் முதலான சித்தர்கள், ஒருவரின் இப்பிறவி விதிவினையை அறிந்து பாவம்- சாபம் நிவர்த்தியடைய வழிகாட்டுபவர்கள். பரிகாரம் சொல்லும் ஜோதிடர்கள் அல்ல. மீண்டும் நாடியைப் படிக்கிறேன்'' என்று தொடர்ந்து படித்தேன்.

""அகத்தியன் கூறியதைச் செய்வதும், செய்யாததும் இவன் விருப்பம். இதுவரை நிறைய பணம் செலவுசெய்து, இவன் செய்த பரிகாரங்களால் மகனுக்கு ஏன் திருமணம் நடைபெறவில்லை? இவனுக்கு அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துவைக்க விருப்பமில்லையென்றால் இவன் விருப்பப்படி செய்து கொள்ளலாம்.

இவன் மகனுக்கு அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துவைக்க சம்மதம் என்றால் இவன் பெண் கேட்டுப் போகவேண்டாம்.

இவன் மகன், மனைவி, மைத்துனன் மூவரையும் பெண் கேட்டுப்போகச் சொல். பெண்ணைப் பெற்றவர்கள் எந்த மறுப்பும் கூறாமல், சந்தோஷ மாக ஒப்புக்கொள்வார்கள். ஜாதகம், பொருத்தம், வயது என எதுவும் பார்க்க வேண்டாம். திருமணம் சிறப்பாக முடியும்.

இவன் தகப்பன் ஒரு பங்கு சொத்தைக் கொடுக்க மறுத்து சாபத்தைத் தேடிக் கொண்டான். இப்போது முழுச்சொத்தினையும் அவள் அனுபவிக்கப் போகிறாள். பாட்டன் காலத்தில் உண்டான சாபம் மூன்றாம் தலைமுறை பேரன் காலத்தில் நிவர்த்தியாகிவிடும்.

யான் கூறியதை சரியாகச் செய்துமுடித் தால், இவன் வம்ச முன்னோர்களில் ஒரு ஆணும், பெண்ணும் இவன் வீட்டில் பிறந்து வம்சத்தைத் தழைக்கச் செய்வார்கள்'' எனக்கூறி வாழ்த்திவிட்டு ஓலையிலிருந்து மறைந்தார்.

இந்த மகனின் பிறப்பு ஜாதகத்தினை சித்தர்கள் கூறியுள்ள தமிழ் ஜோதிட முறைப் படி ஆய்வு செய்ததில், பூர்வீக சொத்தில் சாபம் இருந்ததும், வம்சத்தில் பெண் வீட்டைவிட்டு வெளியேறிய நிலையும், மகன் மணந்துகொள்ளவேண்டிய உறவுப்பெண் அருகிலேயே இருந்ததும், இவரின் பிறப்பு ஜாதகத்தில் கிரகங்கள் அகத்தியர் பெருமான் நாடியில் கூறிய அனைத்தும் செயல்பட்ட, செயல்படக்கூடிய நிலையில் அமைந் திருந்ததைத் தெளிவாக அறியமுடிந்தது.

இந்த மகனின் பிறப்பு ஜாதம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது- ஆய்விற்காக.

மகன் ஜாதகம்

5-9-1970, ஆவணி மாதம். 20-ஆம் தேதி, சுவாதி நட்சத்திரம், 1-ஆம் பாதத்தில் துலா ராசியில் பிறந்துள்ளார்.

சித்தர்கள் கூறியுள்ள தமிழ்முறை ஜோதிடத்தில் பலனறிய லக்னம் தேவை யில்லை. அதனால் ஜென்ம லக்னம் குறிப்பிடவில்லை.

செல்: 99441 13267

bala280220
இதையும் படியுங்கள்
Subscribe