திருமணத் தடைகளை உண்டாக்கும் தோஷங்களும் பரிகாரங்களும்! #2

/idhalgal/balajothidam/marriage-horoscope-dhosam-pariharas

ram

சென்ற இதழ் தொடர்ச்சி...

பிரம்மஹத்தி தோஷம்...

ஜாதகத்தை வைத்து பிரம்மஹத்தி தோஷத்தை எப்படி கண்டுபிடிப்பது? பிரம்மஹத்தி தோஷத்திற்கு காரணம் என்ன? அதனால் எத்தகைய தடைகள் உண்டாகிறது? அதற்கு பரிகாரம் என்ன? உங்கள் ஜாதகத்திலுள்ள ராசிக் கட்டங்களைப் பாருங்கள். அதில் குருபகவான் எந்த வீட்டில் இருக்கிறாரோ அதே வீட்டில் அவருடன் சனிபகவான் இணைந்திருந்தால் அந்த ஜாதகம் பிரம்மஹத்தி தோஷமுடைய ஜாதகம் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. குருபகவானுடன் சனி பகவான் இணைந்து ஒரே வீட்டில் இல்லையென்றாலும் குரு- சனி ஆகிய இரண்டு கிரகங்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டாலும், ஒருவரின் நட்சத்திர சாரத்தில் மற்றவர் இருந்தாலும் அந்த ஜாதகமும் பிரம்மஹத்தி தோஷமுடைய ஜாதகமாகும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

ஜாதகத்தில் பிரம்மஹத்தி தோஷம் இருப்பதைக் கண்டுபிடித்துவிட்டோம். இந்த தோஷம் உண்டானதற்கு காரணங்கள் என்ன?

கடந்த பிறவியில், குருவை ஏமாற்றியதால் குருவினால் உண்டான சாபம், தெய்வ நிந்தனை, ஆலயத்தை இடித்தது, ஆலய சொத்தை அபகரித்தது, திருமணம் செய்வதாக ஆசைகாட்டி கெடுத்துவிட்டு ஏமாற்றியது, உழைத்தவரை ஏமாற்றியதால் அவர்கள் கொடுத்த சாபம், வெள்ளிக்கிழமைகளில் நல்லப்பாம்பை கொன்றது, ஒருவரை ஏதோ ஒரு காரணத்தால் கொன்றது போன்ற காரணங்களால் பிரம்மஹத்தி தோஷம் உண்டாகும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

இராமாயணப் போரில், சிறந்த தெய்வ பக்தனான இராவணனைக் கொன்ற காரணத்தினால் தனக்கு பிரம்மஹத்தி தோஷம் உண்டானதை உணர்ந்த இராமன் அப்போதே அதற்குரிய பரிகாரம் செய்துகொண்டதை இன்றும் புராணம் கூறிக் கொண்டுள்ளது.

இத்தகைய காரணங்களால் உண்டான பிரம்மஹத்தி தோஷமுடைய ஜாதகர்களுக்கு, திருமண முயற்சிகளில் தொடர்ந்து தடை, கிடைக்கவேண்டிய ஒவ்வொன்றும் கூடிவரும் நேரத்தில் கடைசியில் தட்டிக்கொண்டு போகும். எந்தவகையான சிகிச்சை அளித்தாலும் குணமாக்கிட முடியாத நோயினால் அவதி, மனக்குழப்பம், தொழிலில் வீழ்ச்சி, செய்யாத தவறுக்கு தண்டனை, குழந்தை பாக்கியத்தில் தடை என்று தொடர்ந்துகொண்டிருக்கும்.

இதற்கு பரிகாரம் இருக்கிறதா? இந்த தோஷத்தில் இருந்து விடுபட என்ன வழி?

இராமநாதபுரத்திற்கு அருகிலுள்ள தேவிப்பட்டிணத்திற்கு சென்று, அங்கு கடலுக்கடியில் இருக்கும் நவகிரகங்களை வழிபாடு செய்து, கடலில் நீராடி பெருமாளை மனமுருகி வழிபட்டுவர பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தியாகும்.

தேவிபட்டணம் செல்ல இயலாதவர்கள், கும்பகோணத்திற்கு அருகில் திருவிடைமருதூரிலுள்ள மகாலிங்கேஸ்வரர் ஆலயம் செல்லலாம். இந்த ஆலயம் பிரம்மஹத்தி தோஷத்திற்குரிய பரிகாரத்தலமாகவே கூறப்படுகிறது. இங்குசென்று பிரம்மஹத்தி தோஷத்திற்கு பரிகாரம் செய்து ஒரு வாசல் வழியே சென்று மறு வாசல் வழியே வருவது பிரம்மஹத்தி தோஷத்திற்குரிய பரிகாரமாகும்.

தேவிப்பட்டிணம், திருவிடைமருதூர் என்று இரண்டு பரிகார ஸ்தலங்களுக்குமே செல்ல இயலவில்லையா... அம்மாவாசை நாளில் உங்களுக்கு அருகிலுள்ள சிவ ஆலயத்திற்கு மாலை ஐந்து மணிக்கு சென்று சிவனை ஐந்துமுறை வலம்வந்து வணங்குங்கள். இதேபோல் தொடர்ந்

ram

சென்ற இதழ் தொடர்ச்சி...

பிரம்மஹத்தி தோஷம்...

ஜாதகத்தை வைத்து பிரம்மஹத்தி தோஷத்தை எப்படி கண்டுபிடிப்பது? பிரம்மஹத்தி தோஷத்திற்கு காரணம் என்ன? அதனால் எத்தகைய தடைகள் உண்டாகிறது? அதற்கு பரிகாரம் என்ன? உங்கள் ஜாதகத்திலுள்ள ராசிக் கட்டங்களைப் பாருங்கள். அதில் குருபகவான் எந்த வீட்டில் இருக்கிறாரோ அதே வீட்டில் அவருடன் சனிபகவான் இணைந்திருந்தால் அந்த ஜாதகம் பிரம்மஹத்தி தோஷமுடைய ஜாதகம் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. குருபகவானுடன் சனி பகவான் இணைந்து ஒரே வீட்டில் இல்லையென்றாலும் குரு- சனி ஆகிய இரண்டு கிரகங்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டாலும், ஒருவரின் நட்சத்திர சாரத்தில் மற்றவர் இருந்தாலும் அந்த ஜாதகமும் பிரம்மஹத்தி தோஷமுடைய ஜாதகமாகும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

ஜாதகத்தில் பிரம்மஹத்தி தோஷம் இருப்பதைக் கண்டுபிடித்துவிட்டோம். இந்த தோஷம் உண்டானதற்கு காரணங்கள் என்ன?

கடந்த பிறவியில், குருவை ஏமாற்றியதால் குருவினால் உண்டான சாபம், தெய்வ நிந்தனை, ஆலயத்தை இடித்தது, ஆலய சொத்தை அபகரித்தது, திருமணம் செய்வதாக ஆசைகாட்டி கெடுத்துவிட்டு ஏமாற்றியது, உழைத்தவரை ஏமாற்றியதால் அவர்கள் கொடுத்த சாபம், வெள்ளிக்கிழமைகளில் நல்லப்பாம்பை கொன்றது, ஒருவரை ஏதோ ஒரு காரணத்தால் கொன்றது போன்ற காரணங்களால் பிரம்மஹத்தி தோஷம் உண்டாகும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

இராமாயணப் போரில், சிறந்த தெய்வ பக்தனான இராவணனைக் கொன்ற காரணத்தினால் தனக்கு பிரம்மஹத்தி தோஷம் உண்டானதை உணர்ந்த இராமன் அப்போதே அதற்குரிய பரிகாரம் செய்துகொண்டதை இன்றும் புராணம் கூறிக் கொண்டுள்ளது.

இத்தகைய காரணங்களால் உண்டான பிரம்மஹத்தி தோஷமுடைய ஜாதகர்களுக்கு, திருமண முயற்சிகளில் தொடர்ந்து தடை, கிடைக்கவேண்டிய ஒவ்வொன்றும் கூடிவரும் நேரத்தில் கடைசியில் தட்டிக்கொண்டு போகும். எந்தவகையான சிகிச்சை அளித்தாலும் குணமாக்கிட முடியாத நோயினால் அவதி, மனக்குழப்பம், தொழிலில் வீழ்ச்சி, செய்யாத தவறுக்கு தண்டனை, குழந்தை பாக்கியத்தில் தடை என்று தொடர்ந்துகொண்டிருக்கும்.

இதற்கு பரிகாரம் இருக்கிறதா? இந்த தோஷத்தில் இருந்து விடுபட என்ன வழி?

இராமநாதபுரத்திற்கு அருகிலுள்ள தேவிப்பட்டிணத்திற்கு சென்று, அங்கு கடலுக்கடியில் இருக்கும் நவகிரகங்களை வழிபாடு செய்து, கடலில் நீராடி பெருமாளை மனமுருகி வழிபட்டுவர பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தியாகும்.

தேவிபட்டணம் செல்ல இயலாதவர்கள், கும்பகோணத்திற்கு அருகில் திருவிடைமருதூரிலுள்ள மகாலிங்கேஸ்வரர் ஆலயம் செல்லலாம். இந்த ஆலயம் பிரம்மஹத்தி தோஷத்திற்குரிய பரிகாரத்தலமாகவே கூறப்படுகிறது. இங்குசென்று பிரம்மஹத்தி தோஷத்திற்கு பரிகாரம் செய்து ஒரு வாசல் வழியே சென்று மறு வாசல் வழியே வருவது பிரம்மஹத்தி தோஷத்திற்குரிய பரிகாரமாகும்.

தேவிப்பட்டிணம், திருவிடைமருதூர் என்று இரண்டு பரிகார ஸ்தலங்களுக்குமே செல்ல இயலவில்லையா... அம்மாவாசை நாளில் உங்களுக்கு அருகிலுள்ள சிவ ஆலயத்திற்கு மாலை ஐந்து மணிக்கு சென்று சிவனை ஐந்துமுறை வலம்வந்து வணங்குங்கள். இதேபோல் தொடர்ந்து ஒன்பது அமாவாசை நாட்களில் செய்துவர பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தியாகி, திருமணத்தில் இருந்த தடை நீங்கும். உடலில் இருந்த தீராத நோய் அகலும். வேலைகளில் இருந்த தடைகள் அகலும்.

குழந்தை பாக்கியம் உண்டாகும். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் விலகும். தொடர்ந்து கொண்டிருக்கும் பிரச்சினைகளும் மனக்குழப்பங்களும் விலகும்.

கால சர்ப்ப தோஷம்...

நம்முடைய ஜாதகத்தை வைத்து கால சர்ப்பதோஷத்தை எப்படி கண்டு பிடிப்பது? கால சர்ப்பதோஷத்திற்கு காரணம் என்ன? அதனால் எத்தகைய தடைகள் உண்டாகிறது? அதற்கு பரிகாரம் என்ன?

ராசிக்கட்டத்தில் ராகு- கேது ஆகிய கிரகங்களுக்குள்ளாகவோ அல்லது கேது- ராகுவிற்கு உள்ளாகவோ மற்ற ஏழு கிரகங்களும் அடைபட்டிருக்கும் ஜாதகம் கால சர்ப்ப தோஷம் கொண்ட ஜாதகமாகும்.

பாம்பை அடித்து சாகடிக்கும்போது தன்னைக்கொல்பவரைப் பார்த்து அது பழிப்பதால் இந்த தோஷம் உண்டாவதாக ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

கால சர்ப்ப தோஷமுடைய ஜாதகர்களுக்கு முப்பத்தி மூன்று வயதுவரை வாழ்க்கையில் போராட்டம் போராட்டம் என்ற நிலை இருக்கும். திருமணத்தில் தொடர்ந்து தடைகள் இருந்துகொண்டே இருக்கும். ஒருசிலர் காதல் வயப்பட்டு திருமணம் செய்துகொண்டு, திருமணத்திற்குப்பின் பிரச்சினை பிரச்சினை என்று பிரச்சினையிலேயே காலத்தைத் தள்ளி ஒருகட்டத்தில் ஒருவரைவிட்டு ஒருவர் விலகவேண்டிய நிலைக்கு வந்துவிடுவார்கள், வாழ்க்கை, தொழில் என்று எல்லாவற்றிலும் தொடர்ந்து சங்கடமான நிலையையே சந்திக்க வேண்டிவரும். குழந்தை பிறப்பதிலும் தாமதம், தடை உண்டாகும். அதற்குப்பின் பிறக்கும் குழந்தையும் உடல்நலக்குறைவுடனே பிறக்கும். தொடர்ந்து அதன் உடல்நிலையில் சங்கடம் இருந்துகொண்டே இருக்கும்.

கால சர்ப்ப தோஷத்திற்கு சிறந்த பரிகார ஸ்தலமாக காளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரர் ஆலயம் விளங்குகிறது. இங்கு நடைபெறும் பரிகார பூஜையில் பங்கேற்று பூஜைசெய்து முடித்தபின், பூஜையில் வைத்த வெள்ளியால் செய்யப்பட்ட ராகு- கேது உருவங்களை எடுத்துக் கொண்டு ஆலயத்திற்குள் சென்று சிவபெருமானையும், அவருடைய மூச்சுக்காற்றினால் அசைந்து கொண்டிருப்பதாக கூறப்படும் தீபச்சுடரையும் தரிசித்து வணங்கி கையிலுள்ள ராகு- கேது உருவங்களை, வலது இடதாக, இடது வலதாக தலையை மூன்று சுற்று சுற்றி அங்குள்ள உண்டியலுக்குள் அதை போட்டுவிட்டுவர தோஷம் நீங்கும். தடைப்பட்ட திருமணம் கூடிவரும். காரியங்கள் கைகூடும். குழந்தை பாக்கியத்தில் இருந்த தடைகளும் அகலும்.

கால சர்ப்ப தோஷத்திற்கு காளஹஸ்திக்கு அடுத்த பரிகார ஸ்தலங்களாக திருப்பாம்புரமும், திருநாகேஸ்வரமும் விளங்கி வருகிறது.

அரசுடன் இணைந்து வளரும் வேம்பு மரங்களையும், அதன் அருகில் கல்லினால் ஸ்தாபனம் செய்து வைக்கப் பட்டுள்ள நாகர் சிலைகளையும் தொடர்ந்து வழிபட்டுவர தோஷம் நீங்கி நன்மைகள் நடப்பதாக சிலருடைய அனு பவத்தில் இருந்து தெரிந்து கொள்ளமுடிகிறது என்றாலும் காளஹஸ்தி சென்று பரிகார பூஜை செய்துவருவதே சிறப்பு

என்பது நம்பிக்கையாகி உள்ளது.

திருமணத்தில் தடைகளை உண்டாக்கிடும் தோஷங் களாக, பித்ரு தோஷம், பிரம்மஹத்தி தோஷம், கால சர்ப்ப தோஷம் இருப்பதுபோல் மற்றொரு கடுமையான தோஷமாக கூறப்படுவது புனர்பூ தோஷமாகும்.

புனர்பூ தோஷம்...

நம்முடைய ஜாதகத்திலுள்ள தோஷங்களை நாம் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், நம்முடைய பிறந்த நேரத்தை வைத்து கணிக்கப்பட்ட நம்முடைய ஜாதகத்தின் ராசிக்கட்டம் மட்டுமே போதும்.

ராசிக்கட்டத்தில் சந்திரனுடன் ஒரே வீட்டில் சனி பகவான் இணைந்திருக்கும் அமைப்புடைய ஜாதகம் புனர்பூ தோஷம் கொண்ட ஜாதகமாகும், சந்திரனை ஏழாம் பார்வையாக சனி பார்ப்பதும், சனியை ஏழாம் பார்வையாக சந்திரன் பார்ப்பதுமான அமைப்பைக்கொண்ட ஜாதகமும் புனர்பூ தோஷம் கொண்ட ஜாதகமாகும், சனிபகவான் தனது மூன்றாம் பார்வையால் சந்திரனைப் பார்ப்பதும், பத்தாம்

பார்வையால் சந்திரனைப் பார்ப்பதுமான அமைப்பைக்கொண்ட ஒவ்வொரு ஜாதகமும் புனர்பூ தோஷம் கொண்ட ஜாதகமாகும்.

சந்திரனுடன் சனிபகவான் இணைந்திருந்தாலும், சந்திரனை சனிபகவான் தனது மூன்று, ஏழு, பத்தாம் பார்வையால் பார்த்தாலும் அந்த ஜாதகருக்கு புனர்பூ தோஷம் உண்டென்கிறது ஜோதிட சாஸ்திரம்.

இந்த தோஷத்திற்கும் கிரக வாயிலாகவே ஒரு பரிகாரம் உண்டு, அது... சந்திரன் சனியுடன் சூரியன் இணைந்துவிட்டாலும் அல்லது சந்திரன் சனி ஆகிய கிரகங்களை சூரியன் பார்த்தாலும், குருபகவானின் பார்வையோ சேர்க்கையோ பெற்றாலும், குரு பகவானின் வீட்டில் சந்திரன் சனி இணைந்திருந்தாலும் புனர்பூ தோஷம் ஜாதகத்திலேயே பரிகாரமாகிவிட்டது என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

புனர்பூ தோஷமுடைய ஜாதகர்களுக்கு திருமணத்தில் தடையுண்டாகும். திருமணம் முடிவு செய்யப்பட்ட நிலையில் ஆணோ- பெண்ணோ வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ளக்கூடியவர்களாக மாறுவார்கள். ஒரு சிலருக்கு திருமணம் நிச்சயமான நிலையில் நின்றுபோகும். சிலருடைய திருமணங்கள் காவல் நிலையம்வரை சென்று பிரச்சினைக்கு வழிவகுக்கும், ஒருசிலருக்கு திருமணம் நிச்சயம் செய்த நிலையில் பெற்றோர்களில் யாராவது ஒருவர் மரணிப்பதால் திருமணத்தில் தடை உண்டாகும். இத்தகைய நிலைகளுடன் தலைவலி, அச்ச உணர்வு, படபடப்பு போன்றவையும் புனர்பூ தோஷத்தால் உண்டாகுமென ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

நாம் தெரிந்தோ- தெரியாமலோ யாருடைய திருமணத் திலாவது சங்கடங்களை ஏற்படுத்தி, அவர்களுடைய திருமணம் நடைபெறாமல் செய்தாலும், விவாகரத்து செய்வதற்கு துணையாக இருந்தாலும் அவர்களுடைய சந்ததிக்கு புனர்பூ தோஷம் உண்டாகும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

இதற்குரிய பரிகாரங்களில் பிரதானமானது, குலதெய்வத்திற்கு முடி காணிக்கை செய்து, படையலிட்டு பூஜை செய்வதால் புனர்பூ தோஷம் பரிகாரமாகும்.

தொடர்ச்சியாக மூன்று பௌர்ணமி தினங்களில் விரதமிருந்து, திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றுவருவது டன், ஒவ்வொரு முறையும் மூன்று துறவிகள்வீதம் மூன்று முறையும் ஒன்பது துறவிகளுக்கு வஸ்திர தானம் செய்தால் தோஷம் பரிகாரமாகி திருமணம் கூடிவரும்.

சந்திரஸ்தலமான திருப்பதிக்கு, திங்கள்கிழமையிலோ அல்லது சனிக்கிழமையிலோ அல்லது சந்திரனின் நட்சத்திரமான ரோகிணி, அஸ்தம், திருவோணம் நட்சத்திர நாட்களிலோ, சனிபகவானின் பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திர நாட்களிலோ சென்று தரிசனம் செய்துவருவதும் புனர்பூ தோஷத்திற்கு சிறந்த பரிகாரமாக கூறப்படுகிறது.

திருமணஞ்சேரிக்கு சென்று அங்கு நடைபெறும் பரிகார பூஜையில் பங்கேற்பதும் புனர்பூ தோஷத்திற்கு பரிகாரமாகும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

இந்தப் பரிகாரங்களில் ஏதேனும் ஒன்றை செய்தாலும் திருமணத் தடைகள் அகலும்.

நாக தோஷம் என்கிற ராகு- கேது தோஷம்...

நாக தோஷம் என்பது நம்முடைய ஜாதகத்தில் ஒன்று மற்றும் ஏழாம் இடத்திலும், இரண்டு மற்றும் எட்டாம் இடத்திலும், மூன்று மற்றும் ஒன்பதாம் இடத்திலும், நான்கு மற்றும் பத்தாம் இடத்திலும், ஐந்து மற்றும் பனிரெண்டாம் இடத்திலும் ராகு - கேதுவோ, கேது - ராகுவோ இருந்தால் அந்த ஜாதகருக்கு சர்ப்ப கிரகங்களான ராகு - கேதுவால் தோஷம் உண்டாகிறது.

சர்ப்ப தோஷம்பற்றி தெரிந்து கொள்ளும்போது, முன்ஜென்மத்தில் ஆண் நாகமும் பெண் நாகமும் இணைந்திருந்தபோது அதை துன்புறுத்தியவர்களுக்கு இந்த ஜென்மத்தில் லக்னத்திற்கு ஏழாம் இடத்தில் ராகு அமர்ந்து மாங்கல்யத்திற்கு தோஷத்தை உண்டாக்கும் என்றும், பாம்பு இரையைத் தேடிச்செல்லும்போது அதை துன்புறுத்தியவர்களுக்கு இந்த ஜென்மத்தில் அவருடைய தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் ராகுவோ- கேதுவோ அமர்ந்து தொழில் ஸ்தானத்தில் பிரச்னைகளை உண்டாக்கும் என்றும், பாம்பு முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் காலத்திலும் அதன் குட்டிகளுடன் ஒன்றாக இருக்கும்போதும் அதை துன்புறுத்தி இருந்தால் இந்த ஜென்மத்தில் அவருடைய ஜாதகத்தில் புத்திர ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் ராகுவோ- கேதுவோ அமர்ந்து புத்திர தோஷத்தை உண்டாக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஜாதகத்தில் நம்முடைய வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்த ஸ்தானங்கள், ஜென்ம ஸ்தானமெனும் லக்ன வீடான முதல் வீடும், குடும்ப ஸ்தானமெனும் இரண்டாவது வீடும், தைரிய, வேக ஸ்தானமெனும் மூன்றாவது வீடும், சுகஸ்தானம் மற்றும் பெண்களின் கற்பு ஸ்தானமெனும் நான்காவது வீடும், புத்திர ஸ்தானமெனும் ஐந்தாவது வீடும், களத்திர ஸ்தானமெனும் ஏழாவது வீடும், மறைவு ஸ்தானம் மற்றும் பெண்களின் மாங்கல்ய ஸ்தானமெனும் எட்டாவது வீடும், பாக்கிய ஸ்தானமெனும் ஒன்பதாவது வீடும், தொழில் ஸ்தானமெனும் பத்தாவது வீடும், கட்டில் சுகத்திற்குரிய அயன சயன ஸ்தானமான பனிரெண்டாவது வீடுகளுமாகும்.

கிரகங்களில் மிகமிக வலிமையுடைய கிரகங்கள் சர்ப்ப கிரகங்களான ராகுவும் கேதுவும்தான், மேற்கண்ட வீடுகளில் நமது பிறப்பு ஜாதகத்தில் ராகு- கேது அமர்ந்திருக்கும் ஜாதகர்களுக்கு அந்த ஸ்தானங்கள் பாதிக்கப்படும் என்பது ஜோதிட விதியாகும், கடந்த பிறவிகளில் பாம்புகளுக்கு நாம் செய்த இன்னல்களினால் இந்த ஜென்மத்தில் இத்தகைய நாக தோஷத்திற்கு நாம் ஆளாகிறோம் என்று கூறப்படுகிறது.

நாகதோஷமுடைய ஜாதகர்கள், காளஹஸ்தி சென்று நாகதோஷ பரிகாரம் செய்துவந்தாலோ, இராமேஸ்வரம் சென்று மூன்று நாட்கள் அங்கு தங்கி கடலில் நீராடி இராமநாதரை வணங்கி வந்தாலோ, திருப்பாம்புரம், திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம் ஆகிய ஊர்களிலுள்ள ராகு- கேது ஸ்தலங்களுக்கு சென்று பரிகார பூஜை செய்துவந்தாலோ சர்ப்ப கிரகங்களால் உண்டான நாக தோஷம் பரிகாரமாகி திருமணத்தில் உண்டான தடைகள் அகலும்.

கணவன்- மனைவிக்கிடையே உண்டான சங்கடங்கள் விலகும். குழந்தைப் பிறப்பில் இருந்த தடைகள் அகலும் என்பது பலரின் அனுபவத்தின் வழியாக தெரியவந்துள்ளது.

செவ்வாய் தோஷம்...

நம்முடைய ஜாதகத்தில் லக்னம் அல்லது சந்திரன் அல்லது சுக்கிரனுக்கு இரண்டு, நான்கு, ஏழு, எட்டு, பனிரெண்டாம் வீடுகளில் செவ்வாய் இருப்பது செவ்வாய் தோஷம் என்று கூறப்படுகிறது. செவ்வாய்க்கு சூரியனுடனோ அல்லது குருவுடனோ அல்லது சனியினுடனோ சம்பந்தம் இருந்தால் தோஷம் பரிகாரமானதாகவும் சொல்லப்படுகிறது.

செவ்வாய் தோஷம் என்பது தோஷமே அல்ல. ஆனால், செவ்வாய் தோஷம் என்று கூறப்படுவதற்கு ஒரு முக்கிய மான காரணம் இருக்கிறது.

செவ்வாய் என்பது ஒரு நெருப்புக்கிரகம், யுத்த கிரகம், ரத்த கிரகம். இரண்டு என்ற குடும்ப ஸ்தானத்திலும், நான்கு என்ற சுகஸ்தானத்திலும், ஏழு என்ற களத்திர ஸ்தானத்திலும், எட்டு என்ற மறைவு ஸ்தானத்திலும், பனிரெண்டு என்ற படுக்கை ஸ்தானத்திலும் செவ்வாய் அமர்ந்திருக்கும் ஜாதகருக்கு உடல் உறவில் ஆசையும் அதன்மீதான தேவையும் மிக அதிகமாக இருக்கும் என்பதால் இதை மறைமுகமாக தோஷம் என்று சொல்லி வைத்திருப்பதுடன், இதுபோன்ற அமைப்புகொண்ட ஜாதகருக்கு இதுபோன்ற தோஷமுடைய ஜாதகரை இணைத்து வைத்தால் மட்டுமே ஒருவருக்கேற்ற வகையில் மற்றவரால் ஈடுகொடுத்து வாழமுடியும் என்பதற்காகவே செவ்வாய் தோஷமுடைய ஜாதகருக்கு செவ்வாய் தோஷமுள்ள ஜாதகரையே இணைக்க வேண்டுமென்று நம் முன்னோர்கள் கூறிவிட்டுச் சென்றுள்ளனர்.

செவ்வாய் இரண்டு, நான்கு, ஏழு, எட்டு, பனி ரெண்டாம் வீடுகளில் ஏதேனும் ஒன்றில் அமர்ந்துள்ள ஜாதகனுக்கோ, ஜாதகிக்கோ வேக, காம உணர்ச்சி அதிகமாக இருக்கும். தாம்பத்தியத்தில் அதிக நாட்டம் கொண்டவர் களாகவும் இவர்கள் இருப்பார்கள். இவர்களுடன் செவ்வாய் ஆதிக்கம் இல்லாத ஜாதகரை சேர்த்து வைத்தால் ஒருவரின் ஆசையை புரிந்து கொண்டு மற்றவரால் வாழமுடியாமல் போய் வாழ்க்கையில் சண்டை, சச்சரவு, பிரிவு என்ற நிலை உருவாகிவிடும்.

செவ்வாய் தோஷமுடைய ஜாதகருக்கு செவ்வாய் நீச நிலையிலுள்ள ஜாதகரை இணைத்து வைத்தாலும் தாம்பத்திய உறவில் திருப்தி அடைய முடியாத நிலையை உண்டாக்கிவிடும். இதனால் ஒருவர் அவருக்கு வேண்டிய சுகம் கிடைக்காத நிலையையும் அடுத்தவர் தனது துணையை திருப்திபடுத்த முடியாத நிலையையும் அடைந்துவிடுவார்கள்.

இதன்காரணமாகவே, சம ஆசை, வேகம், ஆர்வம், செயல்பாடு, கொண்டு தம்பதிகள் ஒற்றுமையுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்வதற்கு செவ்வாய் தோஷமுடைய ஜாதகருக்கு செவ்வாய் தோஷமுடைய ஜாதகரை மட்டுமே இணைக்கவேண்டும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

திருச்செந்தூர் சென்று கடலில் நீராடி, நாழிக்கிணற்றில் குளித்து செந்தூரானை அர்ச்சித்து வருவதாலும், செவ்வாய்க்குரிய ஸ்தலமான வைத்தீஸ்வரன் கோவில் ஆலயத்திற்கு சென்று வணங்கி அர்ச்சனை செய்து வருவதாலும் செவ்வாய் தோஷமுடைய ஜாதகருக்கு அதே தோஷமுடைய துணை விரைவில் கிடைத்திடும் என்பது அனுபவப்பூர்வமான உண்மையாகும்.

bala jothidam 15-06-2024
இதையும் படியுங்கள்
Subscribe