இன்று நடைமுறையிலுள்ள வேத ஜோதிடத்தில், ஆண்- பெண் இருவரின் பிறப்பு ஜாதகத்தில் லக்னத்திற்கு 2, 4 ,7, 8, 12 ஆகிய ராசிகளில் செவ்வாய் இருந்தால் அதனை செவ்வாய் தோஷமென்று பொதுவாகக் கூறு வார்கள். இத்தகைய தோஷம் உள்ளவர் களுக்கு இதேபோன்ற தோஷமுள்ள ஆண் அல்லது பெண்ணைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்றும் கூறுவார்கள். இந்த தோஷத்தை நீக்க பல பரிகாரங்களையும் கூறுகின்றனர்.
சித்தர்கள் கூறிய தமிழ்முறை ஜோதிடத் தில், செவ்வாயின் காரகநிலை பற்றி கூறப் பட்டுள்ள உண்மைகளை இங்கு காண்போம். ஒரு ஆண் ஜாதகத்தில் செவ்வாயானது அவரது சகோதரனைக் குறிப்பிடும் உதாரண கிரகமாகும். ஒரு பெண் ஜாதகத்தில், அவளது திருமணத்திற்கு முன்பு மூத்த சகோதரனையும், திருமணத்திற்குப் பின்பு அவளது கணவனையும் குறிப்பிடும் கிரகம் செவ்வாயாகும். பெண்களுக்குரிய கணவனை செவ்வாய் குறிப்பதால் பெண்களுக்கு மட்டுமே செவ்வாய் தோஷமுண்டு
இன்று நடைமுறையிலுள்ள வேத ஜோதிடத்தில், ஆண்- பெண் இருவரின் பிறப்பு ஜாதகத்தில் லக்னத்திற்கு 2, 4 ,7, 8, 12 ஆகிய ராசிகளில் செவ்வாய் இருந்தால் அதனை செவ்வாய் தோஷமென்று பொதுவாகக் கூறு வார்கள். இத்தகைய தோஷம் உள்ளவர் களுக்கு இதேபோன்ற தோஷமுள்ள ஆண் அல்லது பெண்ணைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்றும் கூறுவார்கள். இந்த தோஷத்தை நீக்க பல பரிகாரங்களையும் கூறுகின்றனர்.
சித்தர்கள் கூறிய தமிழ்முறை ஜோதிடத் தில், செவ்வாயின் காரகநிலை பற்றி கூறப் பட்டுள்ள உண்மைகளை இங்கு காண்போம். ஒரு ஆண் ஜாதகத்தில் செவ்வாயானது அவரது சகோதரனைக் குறிப்பிடும் உதாரண கிரகமாகும். ஒரு பெண் ஜாதகத்தில், அவளது திருமணத்திற்கு முன்பு மூத்த சகோதரனையும், திருமணத்திற்குப் பின்பு அவளது கணவனையும் குறிப்பிடும் கிரகம் செவ்வாயாகும். பெண்களுக்குரிய கணவனை செவ்வாய் குறிப்பதால் பெண்களுக்கு மட்டுமே செவ்வாய் தோஷமுண்டு.
ஆண்களுக்கு செவ்வாயால் ஏற்படும் தோஷமென்று எதுவுமில்லை. ஆண்களுக்கு மனைவியைக் குறிப்பிடும் உதாரண கிரகம் சுக்கிரன். திருமண காலத்தில் பெண் வீட்டார், ஆணின் பிறப்பு ஜாதகத்தில் மனைவியைக் குறிப்பிடும் சுக்கிரன் யோகநிலையில், கட்டிய மனைவிக்கு நன்மை தரும் நிலையில் உள்ளதா அல்லது மனைவிக்கு சிரமம் தரும் நிலையில் சுக்கிரதோஷம் என்று அமைந் துள்ளதா என ஆய்வுசெய்து திருமணம் செய்து தரவேண்டும்.
இதற்கு எடுத்துக்காட்டாக உதாரண ஜாதகத்தைக் காண்போம். பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் இருக்கும் ராசிக்கு 1, 2, 5, 9 ஆகிய ராசிகளில் சாப கிரகமான கேது இருந்தால் அது செவ்வாய் தோஷம் எனப் படும். இதனால் திருமணம் தாமதமாகும். திருமணம் நடந்தாலும் கணவனுக்கு ஆண்மைக் குறைவும், தாம்பத்திய சுகக் குறைவும் உண்டாகும். கணவர் சந்நியாசி போன்று குடும்பப் பொறுப்பற்றவராக இருப்பார். கடமைக்காக வீட்டிற்கு வருவார். மனைவியானவள் கணவனையும் சேர்த்துக் காப்பாற்றும் நிலை உருவாகிவிடும். குடும்பத் தலைவியும் இந்த பெண்ணே; குடும்பத் தலைவனும் இந்த பெண்ணே.
அடுத்து ஒரு உதாரணம் காண்போம். கணவனைக் குறிப்பிடும் செவ்வாய் இருக்கும் ராசிக்கு 1, 2, 5, 9 ஆகிய இடங்களில் பாவ கிரக மான ராகு இருந்தால் திருமணத் தடை, தாமதம் உண்டாகும். திருமணம் நடந்தால் பெண் கணவனை மதிக்கமாட்டாள். ஆணவம், அகங்காரம், அலட்சிய குணம் உடையவள். எல்லாரையும் அடக்கியாளத் துடிப்பாள். பிறர் கூறுவதை எதிர்த்துப் பேசுவாள். குடும்ப வாழ்வில் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடு, பிரிவு உண்டாகலாம்.
இன்னொரு உதாரணம். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் கணவனைக் குறிப்பிடும் செவ்வாய் இருக்கும் ராசிக்கு 1, 5, 9 ஆகிய ராசிகளில் சனி இருந்தால் திருமணம் நடக்கும்; ஆனால் காலதாமதமாக நடக்கும். இதுபோன்று அமைந்துள்ள பெண்களின் ஜாதகத்தில் செவ்வாயுடன் கேது, ராகு, சனி இணைந்திருந்தால் அந்தப் பெண் செவ்வாய் தோஷமுள்ள பெண் என்று சித்தர்கள் தெளிவாகக் கூறியுள்ளனர்.
ஆண்- பெண்களின் பிறப்பு லக்னத்திற்கு 2, 4, 7, 8, 12 ஆகிய ராசிகளில் செவ்வாய் இருப்பது செவ்வாய் தோஷமல்ல என்று ஜீவநாடியில் சித்தர்கள் கூறியுள்ள வாக்காகும். பெண்களின் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் அமைவதற்கு அவர்களது முற்பிறவியில், வம்ச முன்னோர்கள் காலத்தில், அந்தக் குடும்பத்துப் பெண்கள் தாங்கள் மணந்த கணவனுக்கு செய்த துரோகத்தால் இப்பிறவியில் அது தோஷமாக செயல்பட்டு, ஒரு கணவனை அடைய காலதாமதத்தை உருவாக்கி அனுபவிக் கச் செய்கிறது. கணவனால் பெரிய சுகமடைய முடியாமல் செய்துவிடுகிறது.
இதுபோன்ற செவ்வாய் தோஷமுள்ள பெண்களுக்கு, இவர்களை அனுசரித்துச் செல்லும் ஜாதக அமைப்புள்ள ஆண்களைக் கண்டறிந்து திருமணம் செய்துவைக்க வேண்டும். இல்லையென்றால் குறையான வாழ்வுதான். இந்த செவ்வாய் தோஷ பாதிப்பினை நடைமுறையில்தான் நிவர்த்தி செய்யவேண்டும். பரிகாரங்கள் பயன் தராது.
ஒரு பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய், ராகு, சந்திரன் இணைந்திருந்தால் அது ஆபிசார தோஷமாகும். இந்த தோஷமுள்ள வர்களுக்கு இரவில் சரியான தூக்கம் வராது. முன்கோபம் குணம் இருக்கும். மனதில் பயங்கரமான கற்பனைகள் தோன்றும். தற்கொலை எண்ணம்கூட உண்டாகும். காளி, துர்க்கை, மாரியம்மன் போன்ற ஆவேச தேவதைகளின் ஆலயங்களுக்கும்; ஆடு, கோழி பலியிடும் கருப்பு தேவதை ஆலயங்களுக்கும் விரும்பிச் சென்று வழிபடுவாள். இவள் வழிபாடு செய்யும்போது உடலில் ஒருவித அசைவு, சிலிர்ப்பு உண்டாகும். கண்களில் கண்ணீர் வரும். கனவுத் தொல்லை இருக்கும். கருக்கலைதல், மாதவிடாய்க் கோளாறுகள் உண்டாகும். இவள் வம்சத்தில் பாதிக்கப்பட்டு இறந்துபோன பெண்ணின் ஆத்மா இவளைப் பிறப்பிலேயே தொடர்ந்து வருகிறது என்பது ஜீவநாடியில் சித்தர்கள் கூறும் வாக்காகும்.
செல்: 99441 13267