மண்ணில் பிறந்த மானிடர்கள் அனைவரும் தமது வாழ்வில் ஏதாவது இடர்ப்பாடு, தாங்கமுடியாத துயர், பிரச்சினைகள் குறுக்கிடும்போதுதான் சிறந்த ஜோதிடரின் ஆலோசனையை நாடுகிறார்கள். இந்தியத் திருநாட்டில் படித்தவர், பாமரர், அரசியல்புள்ளிகள் அனைவருமே பாரம்பரிய ஜோதிடத்தின்மீது அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டுள்ளனர். அறிய வேண்டிய சூட்சுமம் யாதெனில், உங்களின் ஜாதகப்படி நடக்கும் தசாநாதனும், புக்திநாதனும் நல்லவர்களாக (சுபர்) இருந்தால் மிக மேன்மையான சுபப்பலன்களை அனுபவிப்பீர்கள். இருவரில் யாராவது ஒருவர் அசுபராகி (கெட்டவர்) இருந்தால் சுமாரான நன்மைகளும் அல்லது நன்மை- தீமை இரண்டுமே மாறி மாறி நடக்கும். தசையை நடத்தும் கிரகமும் புக்தியைக் குறிகா
மண்ணில் பிறந்த மானிடர்கள் அனைவரும் தமது வாழ்வில் ஏதாவது இடர்ப்பாடு, தாங்கமுடியாத துயர், பிரச்சினைகள் குறுக்கிடும்போதுதான் சிறந்த ஜோதிடரின் ஆலோசனையை நாடுகிறார்கள். இந்தியத் திருநாட்டில் படித்தவர், பாமரர், அரசியல்புள்ளிகள் அனைவருமே பாரம்பரிய ஜோதிடத்தின்மீது அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டுள்ளனர். அறிய வேண்டிய சூட்சுமம் யாதெனில், உங்களின் ஜாதகப்படி நடக்கும் தசாநாதனும், புக்திநாதனும் நல்லவர்களாக (சுபர்) இருந்தால் மிக மேன்மையான சுபப்பலன்களை அனுபவிப்பீர்கள். இருவரில் யாராவது ஒருவர் அசுபராகி (கெட்டவர்) இருந்தால் சுமாரான நன்மைகளும் அல்லது நன்மை- தீமை இரண்டுமே மாறி மாறி நடக்கும். தசையை நடத்தும் கிரகமும் புக்தியைக் குறிகாட்டும் கிரகமும் அசுபராக (கெட்டவர்களாக) அமைந்த கோட்சாரம், மிகவும் கொடிய (துன்பநிலை) பலன்களையே அனுபவிக்க நேரும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/krish_2.jpg)
மனித வாழ்க்கை கண்ணுக்குப் புலப்படாத சூட்சும கிரகக் கதிர்வீச்சுகளால் ஆட்டிவைக்கப் படுகிறது என்பதே ஜோதிட சித்தாந்தம்.
இங்கு சில வரிகளில், வாலிப நெஞ்சங் களின் இன்பச்சாரலான கல்யாணக் கனவு யாருக்கு, எப்போது, எங்ஙனம் பலிதமாகும் என்ற ஜோதிட நிலை களை விளக்க முனைகிறேன்- குரு சுப்பிரமணியர் அருளால். பருவ வயதினருக்கு உறுதியாக எப்படியும் திருமணம் நடக்கவேண்டு மானால் வேதஜோதிட அடிப்படையில் சில விதிகள் உண்டு. ஆண்பிள்ளைகள் ஜாதகக்கட்டப்படி லக்னாதிபதி கிரகமும், 7-ஆம் அதிபதி கிரகமும் பரிவர்த்தனை பெற்றிருந்தால். பருவ வயதில் ஊர் போற்றும் திருமணம் உண்டு. இவர்கள் இருவரும் சமசப்தமமாக (7/7) இருந்தாலும், படிப்பு முடிந்தவுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுவிடும். 7-ஆம் அதிபதி சனியாக அமைந்தவருக்குக்கூட, லக்ன கேந்திரத்தில் அல்லது 11-ஆம் வீட்டில் சனி நின்ற ஆணுக்கு வேலை கிடைத்தவுடன் சட்டென்று திருமணம் முடிந்துவிடும். கல்யாணக் கனவை நனவாக்குவதில் பெரும்பங்கு வகிக்கும் குரு பகவான், 7-ஆம் அதிபதியாகி, லக்ன கேந்திரங்களில் அல்லது திரிகோணங்களில் அமர்ந்தவர்களுக்கும் வாலிலிபத்தில் மணமேடைதான் இறைவன் தந்த கொடை. ஆண்களின் செவ்வாய், களஸ்திர ஸ்தானாதிபதி 7-ஆம் அதிபதியாகி, அவர் 10, 6-ஆம் வீட்டில் அமர்ந்தாலும்கூட இளமையில் இல்லறம் ஏற்பர். நாடி கிரந்தங்களின்படி லக்னாதிபதிக்கு அல்லது குருவுக்கு 1, 2, 5, 7, 9-ல் 7-ஆம் அதிபதி நின்றிருக்க, அந்த 7-ஆம் அதிபதிக்கு திரிகோணங்களில் கேது இல்லாமல் இருப்பவருக்கு தக்க பருவத்தில் வேதியர் வைத்து திருமணம் நடக்கும். பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட கல்யாணம்.
பெண்களின் ஜனன ஜாதகப்படி சுக்கிரனுக்கு அல்லது லக்னாதிபதிக்கு 9, 7, 5, 2, 1-ல் 7-ஆம் அதிபதி நின்று, அந்த 7-ஆம் அதிபதிக்கு திரிகோணங்களில் (5, 9) கேது நில்லாமல் இருந்தால் திருமணம் நிச்சயம் வாலிலிபத்தில் நடந்துவிடும்.
விதிவிலக்காக, இந்த கல்யாணக்கனவு மட்டும் யாருக்கெல்லாம் தக்கவயதினில் பலிலிப்பதில்லை எனக் கேட்டால், இளமை ஊஞ்சலாடும் பருவ வயதினரின் லக்னாதிபதி அல்லது குரு நின்ற ராசிக்கு 10, 8, 6-ல் 7-ஆம் அதிபதி அல்லது சுக்கிரன் நின்றால் எளிதில் திருமணம் கைகூடாமல் பல காரணங்களால் தட்டிப்போய்க் கொண்டே இருக்கும். 7-ஆம் அதிபதிக்கு 9, 5-ஆம் ராசியில் கேது நின்றவர்களுக்கு மணவாழ்வில் பிடித்தமின்றி நீண்டவருடம் தனிமரமாக வாழ நேரிடும்.
நல்ல படிப்பு, அழகு, அந்தஸ்துள்ள பெண்களுக்குக்கூட சுக்கிரன் அல்லது லக்னாதிபதிக்கு 10, 8, 6-ஆம் வீட்டில் செவ்வாயோ, 7-ஆம் அதிபதியோ நின்றுவிட்டால், சுக்கிர தசை, குருதசைகள் நடந்தால்கூட, திருமணம் மட்டும் எட்டாக்கனியாக அமைவது வெற்றி ஜோதிடர் ரகசியம்.
வரும் ஆவணி, ஐப்பசியில் வாசகர்களின் இல்லங்களில் சுபகாரியம் நடக்க பரம்பொருள் கருணை காட்டட்டும்.
செல்: 75399 10166
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us