சென்ற இதழ் தொடர்ச்சி...

பூமியில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் பிறப்பு, திருமணம், இறப்பு என இம்மூன்றையும் அவன் மட்டுமே தனியே அடைந்து, அனுபவித்து வாழ்கிறான். மனிதனின் பிறப்பு, இறப்புக்காலம், நாள், நேரத்தை யாராலும் துல்லியமாக அறிந்து கூறமுடியாது. ஏன், அவராலேயே கூறமுடியாது. இவையிரண்டும், உயிர் சம்பந்தப்பட்ட ரகசியங்கள்.

ஒருவரின் வாழ்க்கைத் தொடக்கத்தையும், மாற்றத்தையும் உண்டாக்குவது அவரின் திருமணபந்தம்தான். ஒருவரின் திருமணம் மற்றும் வாழ்க்கை நிகழ்வுகள் அவரின் முற்பிறவி பாவ-சாப-புண்ணிய ஊழ்வினை ரகசியமாகும்..

ஒருவர் தன் திருமணநாள், நேரத்தை தானேதான் தீர்மானித்து, திருமணம் செய்துகொள்கிறார்.

Advertisment

பிறப்பு, மரணம் இவை ஓர் உயிர் சம்பந்தப்பட்டது. ஆனால், திருமணபந்தம் என்பது இரண்டு உயிர்கள் ஒன்றிணைந்து தங்களுக்கென்று தனித்த வாழ்வை உருவாக்கிக்கொள்வதாகும்.

திருமணகால சமயத்தில், இருவரின் பிறப்பு ஜாதகத்தில் அவரவரின் முற்பிறவி, வம்சமுன் னோர்கள் செய்த, பாவ-சாபப் பதிவுகளை நன்கு ஆராய்ந்தறிந்து கொள்ளவேண்டும். அந்த பாவ-சாபப் பதிவுகள் இவர்களின் திருமணத் திற்குப்பின் அமையும் குடும்ப வாழ்வில் பாதிப்பு, சிரமம், தடைகளை உண்டாக்காமல் தடுத்துக் கொள்ள வேண்டும். இதற்காக, அந்த பாவ-சாபங் களை நிவர்த்திசெய்யும் சக்தி பெற்று, கோட்சார நிலையில் ஒன்பது கிரகங்களும் அமைந்துள்ள முகூர்த்த நாளில் திருமணம் செய்தால், அந்த நாள் அவர்களின் வம்சாவழி பாவ- சாபங்களைத் தடுக்கும் பரிகாரமாகி, அந்த தம்பதியர் வாழ்வில் ஒற்றுமையுடன், குன்றாத செல்வமும், குறைவில்லா நீண்ட ஆயுளுடன் மகிழ்ச்சியாக வாழ்வர் என்பது சித்தர்கள் வாக்கு.

ஆண், பெண்ணின் பிறப்பு ஜாதகத்திலுள்ள யோக-பாவப் பலன்கள் அவரின் திருமணக் காலம்வரைதான் பலன்தரும். திருமணத்திற் குப்பின்பு, அவரவரின் திருமண முகூர்த்த நாளன்று கோட்சாரக் கிரகங்கள் உள்ள நிலைப் படிதான் நன்மை, தீமைகளை அனுபவிக்கச் செய்யும். பிறப்பு ஜாதகப் பலன் செயல்படாது.

Advertisment

பெற்றோர், தங்கள் குழந்தைகளின் பிறப்பு ஜாதகத்தில் களத்திர தோஷம், புத்திர தோஷம், செவ்வாய் தோஷம், ராகு- கேது, சர்ப்ப தோஷம், நட்சத்திர தோஷம், ராசி, லக்ன தோஷம் என வேதஜோதிடமும், ஜோதிடர்கள் கூறும் இது போன்ற இன்னும் பலவிதமான கடுமையான தோஷங்களும் இருந்தால், அவையனைத்தும் தோஷமில்லாத நாளாகப் பார்த்துத் திருமணம் செய்தால் பிறப்பு ஜாதக தோஷங்கள் குடும்ப வாழ்வில் பாதிப்பைத் தராது. திருமணத்திற்குப் பிறகு குடும்பத்தில் ஒற்றுமை, உறவுகள் பகை, கணவன், மனைவி பிரிவு என நல்லது, கெட்டது அனைத்தையும் திருமண முகூர்த்த நாள்தான் தீர்மானித்து செயல்படுத்துகிறது.

திருமணம் செய்யும்போது பத்துப் பொருத் தங்கள், நட்சத்திரப் பொருத்தம், ராசி, லக்னப் பொருத்தம், வளர்பிறை, தேய்பிறை எனப் பார்த்து செய்யக்கூடாது. இருவரின் முன்வினை தோஷங்களைத் தடுக்கும் நல்ல நாளாகப் பார்த்துத் திருமணம் செய்துவைப்பது பெற்றோரின் பொறுப்பாகும். தீமையான முகூர்த்த நாட்களில் திருமணம் செய்துவைத்து, உங்கள் குழந்தைகள் வாழ்வில் சிரமம் அடை யும்படி நீங்களே செய்துவிடாதீர்கள்.

"கன்னிகை புருஷனுக்குnn

கலியாணம் செய்யும்போது

ஏற்றதோர் முகூர்த்த நாள்

காலம்கண்டு ன்னயமாக

செய்யும்நாள் நன்மையானால்

அன்புடன் வாழ்ந்திருப்பார்.'

என்று ஒரு பழைய ஜோதிடப் பாடல் கூறுகிறது.

தமிழ்முறை ஜோதிடத்தில் சித்தர் பெருமக்கள், ஒருவரின் முற்பிறவி பாவ-சாபங் களைத் தடுத்து, குடும்ப வாழ்வில் நன்மை தரும் நிலையில் கிரகங்கள் அமைந்துள்ள திருமண முகூர்த்த நாட்களைப் பற்றிக் கூறியுள்ளனர்.

அந்த விவரத்தை அறிவோம்.

திருமண முகூர்த்த நாளன்று குரு, சுக்கிரன் ஒன்றுக்கொன்று 1, 5, 9, 2-ஆவது ராசிகளில் சந்திரன், ராகு- கேது கிரகங்களின் சம்பந்தமில்லாமல் இருந்தால், கணவன், மனைவி இருவரும் இறு திக்காலம்வரை ஒற்றுமையாக வாழ்வார்கள்.

திருமண நாளன்று சுக்கிரனுடன் சந்திரன், ராகு- கேது தொடர்பு பெற்றிருந்தால் மாமியார்- மருமகள் இருவரும் பகையாவர்.

முகூர்த்த நாளன்று செவ்வாய்க்கு 1, 5, 9, 2-ல் சுக்கிரன் இருந்தால், கணவன், மனைவி இருவரும் சுகம் அனுபவித்து மகிழ்வுடன் வாழ்வார்கள்.

செவ்வாய், சுக்கிரனுடன் சனி, புதன், ராகு- கேது சம்பந்தம் பெற்றிருந்தால், திருமணத்திற்குப்பின் சகோதரர் பகை, சொத்துத் தகராறு, குடும்ப ஒற்றுமை குலையும்.

மனைவியைக் குறிப்பிடும் உதாரண கிரகமான சுக்கிரனுடன் ஜீவனம், தொழிலைக்குறிக்கும் சனி இணைந்து 1, 5, 9, 2-ஆவது ராசிகளில் இருந்தால், மனைவியால் யோகம் உண்டாகும். மனைவிவழி உறவினர்களால் நன்மை, மனைவி சம்பாதிப்பவராக இருப்பார். செல்வம் சேமித்து வீடு, வாகனம், ஆபரணம் என சொத்துகளை அடைவார்.

திருமண நாளன்று சுக்கிரனுடன் கேது சம்பந்தம் பெற்றால், மனைவி நோய் வாய்ப்படுவார். கணவன், மனைவியிடையே கருத்து வேறுபாடு உண்டாகும், தாம்பத்தியம் குறையும். பண விரயம், கடன் தொல்லை உண்டாகும்.

குரு, சுக்கிரன், சனி ஆகிய மூன்று கிரகங்களும் 1, 5, 9, 2-ல் தொடர்பு பெற்றி ருந்தால், கணவன், மனைவி இருவரும் உத்தியோகம், தொழில் செய்து செல்வம் சேமித்து சிறப்பாக வாழ்வார்கள்.

இந்த இரண்டு கிரகங்களுடன் செவ்வாய், கேது சம்பந்தம்பெற்றால், கணவன் அல்லது மனைவிக்கு நோய், பிரிவு, கடன், தொழில் தடை, பணவிரயம் உண்டாகும்.

முகூர்த்த நாளன்று குரு, புதன், சனி ஆகிய மூன்று கிரகங்களும் 1, 5, 9, 2-ல் இருந்தால், திருமணத்திற்குப் பிறகு, தொழில், வியாபாரம் பெருகி உயர்வடைவர். தொழிலில் கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும்.

இந்த கிரகங்களுடன் கேது சம்பந்தம் பெற்றிருந்தால், கூட்டுத்தொழிலில் கூட்டாளிகளால் ஏமாற்றப்படுவார். தன்னுடைய முதலீட்டை இழப்பார். கூட்டுத்தொழில் நன்மை தராது.

குருவுக்கு 1, 5, 9-ல் சூரியன் இருந்தால் புத்திரப் பாக்கியம் உண்டாகும். இந்த கிரகங்களுடன் பாவ-சாப கிரகங்களான ராகு- கேது சம்பந்தம் பெற்றால் புத்திரத் தடைகாட்டும், தந்தைவழி உறவினர் களுடன் பகையாகும், தந்தையைப் பிரிந்து வாழ்வார். பூர்வீக சொத்துகளால் நன்மை இராது.

இதுபோன்று, திருமணத்திற்குப் பின்பு குடும்ப வாழ்வில் உண்டாகும் அனைத்து நன்மை, தீமைகளுக்கும் திருமண முகூர்த்த நாளில் அமைந்துள்ள கிரகங்களின் நிலைதான் காரணம்.

ஒருவரின் முற்பிறவி, வம்ச பாவ-சாபம் அனைத்தும் அவரின் திருமணத்திற்குப் பிறகுதான் செயல்பட்டு, அவர் வாழ்வில் நன்மை, தீமைகளை செயல்படுத்தும். இதனைப் பூசை, யாகம், பிரார்த்தனை, நாம ஜபம்போன்ற நம்பிக்கை சார்ந்த செயல்களால் தீர்க்கமுடியாது. பரிகாரங்கள் பலன் தராது, பணவிரயத்தைத்தான் செய்யும்.

செல்: 99441 13267