சித்தர்தாசன் சுந்தர்ஜி (ஜீவநாடி) ஊழ்வினை ஆய்வு ஜோதிடர்

ந்த பூமியில் பிறக்கும் ஒவ்வோர் ஆணும் பெண்ணும், தன் தாய்- தந்தையால் உருவாக்கி, பிறப்பிக்கப்பட்டு, தன் சகோதர, சகோதரிகளுடன் ஒரு குறிப்பிட்ட காலம்வரை வாழ்கிறார்கள். இது, இவர்கள் உருவான உலக வாழ்க்கை நிலையாகும்.

பருவ வயது வந்த ஆண், பெண் இருவரும் திருமணம் புரிந்து, கணவன்- மனைவி, தன் குழந்தைகள், குடும்பம் என வாழும் வாழ்க்கை அவர்களே உருவாக்கிக்கொண்ட உலக வாழ்க்கையாகும். தன் தாய், தந்தையுடன் வாழும்போது செல்வம், செல்வாக்கு என அனைத்து வசதிகளுடன் வாழ்ந்தவர்கள், தங்களது திருமணத்திற்குப் பின்பு, குடும்ப வாழ்வில் சிரமம், வறுமையுடன் வாழ்கிறார்கள்.

பெற்றோருடன் இளம்வயதில் பொருளாதாரம் குறைந்து, வறுமையுடன் வாழ்ந்தவர்கள், தங்களின் திருமணத்திற்குப் பின்பு, பதவி, பணம், புகழ், தனம், தான்யம், தொழில், வீடு என அடைந்து செல்வச்சிறப்புடன் வாழ்கிறார்கள். இதுபோன்ற நிகழ்வுகளுக்கு, அவர்கள் திருமணம் செய்த முகூர்த்த நாளன்று கோட்சார நிலையிலுள்ள கிரகங்கள் அமர்வு நிலையே காரணம் என்று தமிழ் முறை ஜோதிடத்தில் சித்தர் பெருமக்கள் கூறியுள்ளனர்.

Advertisment

இன்று, மக்கள் வாழ்வின் எல்லா செயல்களிலும் ஒருவிதமான பரபரப்புடன் செயல்பட்டு வாழ்கிறார்கள். வாழ்க்கையை நிர்ணயிக்கும் திருமண நாள் குறிப்பதில்கூட அவசரக் கோலம்தான்.

சிலர் வளர்பிறை முகூர்த்த நாளில்தான் திருமணம் செய்யவேண்டும் என்பார்கள். சிலர் ஞாயிற்றுக்கிழமைகளில் திருமணம் செய்தால் எல்லாருக்கும் வசதி என்பார்கள். இன்னும் சிலர் விடியற்காலை பிரம்ம முகூர்த்தத்தில் திருமணம் செய்தால் எல்லா பாவ- சாப- தோஷங்களும் இல்லற வாழ்வில் அணுகாது, குறைவில்லாத வாழ்க்கை அமையும் என்பார்கள். இதுபோன்று பலவிதமாகக்கூறி, அவரவர் வசதிக்கேற்பத் திருமணம் செய்கிறார்கள்.

mmபெற்றவர்கள் தங்கள் குழந்தைகளுக்குத் திருமண சமயத்தில் பத்துப்பொருத்தம் மட்டுமே பார்த்துத் திருமணம் செய்கிறார்கள். பத்துப் பொருத்தம், நட்சத்திரப் பொருத்தம், செவ்வாய் தோஷம், ராகு- கேது தோஷம் பார்த்துச் செய்யும் திருமணம், திருமணத்திற்குப் பின் அவர்கள் வாழ்வில் நன்மை தருகிறதா என்றால், பெரும் பாலானவர்களின் வாழ்வில் இல்லை என்றேதான் பதிலாகக் கிடைக்கிறது.

Advertisment

ஒரு கன்னிக்கும் காளைக்கும் ஜாதகப் பொருத்தம் பாராமல், ஜாதகம் சரியாக அமைந்திடாமல், பத்துப் பொருத்தும் மட்டும் பார்த்து, திருமண முகூர்த்தம் அன்று கோட்சார கிரகங்கள் நல்ல நிலையில் அமைந்திடாமல் இருக்கும் நாளில் வரதட்சணை என்னும் பெயரில் பொருளாசை கொண்டும், ஆண், பெண் மோகத்தாலும், உயர்ந்த உத்தியோகம் என்றும், உறவு விட்டுப் போகக்கூடாது என்றும், இன்னும் பலவிதமான ஆசைகளால், தங்கள் அந்தஸ்து, ஆஸ்தியைக்காட்டி, பெற்றவர்கள், மற்றவர்கள் பேச்சைக் கேட்டு, எல்லாம் விதிப்படிதான் நடக்கும், வருவது வந்தே தீரும், நம்மிடம் பணம் உள்ளது, பரிகாரம் செய்துவிடலாம் எனக் கூறி, பலன் தராத பரிகாரங்களைச் செய்து, ஒரு கன்னிக்கும் காளைக்கும் வேதம்கூறி, சாஸ்திர, சடங்கு சம்பிரதாயங்களைச் செய்து திருமணம் செய்துவைக்கிறார்கள். இந்தத் தம்பதியர் குடும்ப வாழ்வில் மாமனார்- மாமியார் உறவுகள் பகை, கணவன்- மனைவி, கருத்து வேறுபாடு- பிரிவு, சொத்து அழிதல், தொழில், பொருளாதாரம், வருமானத் தடை, புத்திரத் தடை, சோகம் என பலவித மான துன்பங்களை அனுபவிப்பார்கள். இதனை ஒரு சூத்திரப் பாடல்மூலம் அறிவோம்.

"சாதக பொருத்தங் களமைந் திடாமல் பெண்ணின்

பிறப்பினைப் பாராமல் புருஷன் பிறப்பும்

பொருத்தமா யமைந்திடாமல் வருவது

வந்தே தீருமென்று மணம்

செய்வோ மென்று ணரத்தால் பொருளில்லா

வறுமையிலே பூதலத்தி லைவாரே'

இன்னும் சில ஆண்கள், பெண்கள், ஒருவரையொருவர் உயிருக்குயிராகக் காதலித்து, பெற்றோரின் எதிர்ப்பையும் மீறித் திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால், திருமணம் செய்துகொண்ட சிறிதுகாலத்தில் கருத்து வேறுபாடுகொண்டு பிரிந்துவிடு கிறார்கள். இந்நிலைக்கு, இவர்கள் திருமணம் செய்துகொண்ட நாளில் தீமை தரும் நிலையில் அமைந்த கிரக அமைப்புதான் காரணம். ஒருவரின் பிறப்பு ஜாதகத்தில் நல்ல யோகத்துடன் கிரகங்கள் அமைந்திருந் தாலும், அவர்களின் திருமண நாளன்று, திருமணத்திற்குப் பின் அமையும் குடும்ப வாழ்வில் சிரமம் தரும் கிரக நிலை இருந்தால், பிறப்பு ஜாதகயோக அமைப்பு பலன்தராது. பிறப்பு ஜாதகத்தினைப்போன்றே திருமண முகூர்த்த நாளின் கிரக அமைப்பும் முக்கிய மாகக் கவனிக்கப்படவேண்டும்.

திருமணத்திற்குப் பின் குடும்ப வாழ்வில் சிரமப் பலன்களை உண்டாக்கும், திருமண முகூர்த்த நாளன்று அமையும் தீமைதரும் கிரக நிலைபற்றி அறிவோம்.

திருமண முகூர்த்த நாளன்று மணமகனைக் குறிப்பிடும் உதாரண கிரகமான குருவுக்கும், மணமகளைக் குறிக்கும் உதாரண கிரகமான சுக்கிரனுக்கும் இடையில் முற்பிறவி பாவத்தைக் குறிக்கும் ராகுவும், சாபத்தைக் குறிக்கும் கேதுவும் இருந்தால் கணவன், மனைவி வாழ்வில் பிரிவு ஏற்படும்.

திருமண நாளன்று கணவனைக் குறிக்கும் செவ்வாயுடன் புதன் கிரகம் இணைந் திருந்தால், கணவன் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொள்வான். அந்தப் பெண் வீட்டிலேயே வாசம்செய்வான். இதனால் மனைவி சிரமம் அடைவாள்.

முகூர்த்த நாளன்று செவ்வாயுடன் ராகு- கேது இணைந்திருந்தால் அல்லது 1, 5, 9, 2-ஆமிடங்களில் இருந்தால், கணவன் சந்நியாசிபோல் பொறுப்பற்றவனாக இருப்பான். தாம்பத்திய சுகம் குறையும்.

திருமண நாளன்று சூரியனுடன் ராகு- கேது 1, 5, 9, 2-ல் சம்பந்தப்பட்டால், புத்திர தோஷம், புத்திரர் அடையத் தடை அல்லது அற்பாயுள் உள்ள ஆண் குழந்தை பிறக்கும்.

தந்தைக்குப் பாதிப்பை உண்டாக்கும். பூர்வீக சொத்துகளில் வில்லங்கம், விரயம் உண்டாகும்.

திருமண நாளன்று மணைவியைக் குறிக்கும் சுக்கிரனுக்கு 1, 5, 9, 2-ல் ராகு இருந்தால், கணவன் மனைவியைப் பிரிந்து வாழ்வான்.

இதுபோன்று, திருமண முகூர்த்த நாளன்று தீமைதரும் நிலையில் கிரக அமைப் பிருந்தால் திருமணத்திற்குப்பின் வாழ்வில் இன்னும் சிரமங்களை அடையநேரும்.

இன்றைய நாளில் காலண்டரிலும் பஞ்சாங்கத்திலும் குறிக்கப்பட்டுள்ள முகூர்த்த நாட்களைப் பார்த்துத் திருமணம் செய்து கொண்டு, அதன்பின் குடும்ப வாழ்க்கையில் சொல்லமுடியாத, தீர்க்கமுடியாத துன்பங் களை அனுபவித்துக்கொண்டு, அதனைத் தீர்க்க ஆயிரக்கணக்கில் செலவுசெய்து, பரிகாரம், பூசை, யாகங்கள், பிரார்த்தனைகளை செய்துகொண்டு, நிறைய பேர் அலைந்துகொண்டிருக்கிறார்கள். இதனால் பலன் கிடைத்ததா என்பது அவர்களுக்கே தெரியும்.

தீமைதரும் கிரக அமைப்புள்ள நாளில் திருமணம் செய்துகொண்டு, பலவிதமான குறைகளைத் தங்களின் வாழ்வில் அனுபவித்து வாழும் தம்பதிகள், தங்களின் திருமணம் நடந்த நாளில் இதுபோன்று கிரகங்கள் அமைந்துள்ளதா என்பதை அன்றைய கிரகநிலைகளை எடுத்துப் பாருங்கள். நிச்சயம் அந்த ராசிக்கட்டத்தில் இதுபோன்ற கெடுதல்செய்யும் நிலையில் கிரகங்கள் அமைந்துள்ளதை அறிவீர்கள்.

இவரின் பிறப்பு ஜாதகத்தில் ஜாதகரைக் குறிப்பிடும் குருவுக்கு 9-ல் சுக்கிரன், புதன் என இரண்டு பெண் கிரகங்கள் உள்ளதால், இவருக்கு இருதார யோகம் அல்லது மனைவி அன்றி வேறு ஒரு பெண்ணுடன் தொடர்புண்டாகும். முதல் மனைவியால் சுகம் அடையமுடியாத நிலையில் மறுதாரத் தால் சுகம் அடையும் நிலையுண்டாகும்.

இவரின் பிறப்பு ஜாதகத்தில் ஜாதகரைக் குறிக்கும் குருவுக்கு 5-ல் மனைவியைக் குறிக்கும் சுக்கிரன் உள்ளது. திருமண நாளன்று மனைவியைக் குறிக்கும் சுக்கிரனுக்கு 9-ல் குரு உள்ளது. பிறப்பின் விதிப்படி, இவர் தன் பூர்வஜென்ம மனைவியைத் திருமணம் செய்தார்.

இவரின் பிறப்பு ஜாதகத்தில் உள்ளதுபோல், மாறாமல் திருமண நாளிலும் சுக்கிரன் அமைந்துள்ளது. திருமண முகூர்த்த நாளன்று கன்னி ராசியில் உள்ள குருவுக்கும், மகரத்தில் உள்ள சுக்கிரனுக்கும் இடையில் மேஷ ராகு, துலாக் கேது இருப்பதால், ராகு- கேது அச்சு இவர்களின் தாம்பத்திய சுகத்தைக் குறைத்தது.

தடை செய்தது.

குருவுக்கு 2-ல் கேது இருப்பதால், இவர் சந்நியாசிபோல் வாழ நேர்ந்தது. திருமணத் திற்குப்பின் உறவினர்களால் எந்த நன்மையும் இல்லாத நிலை உண்டானது.

சூரியனுக்கு 9-ல் கேது இருப்பதால் புத்திரத் தடையை உண்டாக்கியது.

கணவனைக் குறிக்கும் செவ்வாய்க்கு 5-ல் ராகு இருப்பதால், மனைவிக்கு கணவனால் சுகம் அடையமுடியாமல் செய்தது. மனை விக்கு கட்டி, புற்று மூலம்போன்ற வியாதி ஏற்படும், சிரமமடையச் செய்யும்.

கோட்சார நிலையில் கடகத்தில் ராகுவும், மகரத்தில் கேதுவும் சுக்கிரனுடன் இணையும் போது மனைவிக்கு கண்டம் காட்டும்.

கோட்சார நிலையில் குரு மகரம், கும்பம் வரும்போது, இவருக்கு அடுத்து ஒரு திருமணம் உண்டாகும். புதிய பெண் நண்பர்கள் அமைவார்கள்.

அடுத்த இதழில், வாழ்வில் நன்மையும் உயர்வும் தரும் அதிர்ஷ்டமான திருமண நாள், கிரக நிலை பற்றி அறிவோம்.

செல்: 99441 13267