ஜாதகத்தில் நந்தி தோஷம் என ஒன்றுள்ளது. அதாவது, இரண்டு நட்பு, பகை கிரகங்களுக்கிடையே எதிரி கிரகங்கள் இருந்தால், அந்த கிரகத்துக்குரிய உறவுகளால் திருமணத்தடை ஏற்படும். இந்த உறவுகளை ஒதுக்கிவைத்தால்தான் ஜாத கருக்குத் திருமணம் நடைபெறும். இல்லையெனில், இந்தப் பிறவி முழுவதும் திருமணம் நடைபெறாமல்போகும் சூழ்நிலை உருவாகும்.

கிரகங்களும் உறவுமுறைகளும் சந்திரன்: மாமியார், அண்ணி, மனைவியின் அக்காள், தாய், வயதான பெண்கள்.

புதன்: மாமன் மகள், அத்தை மகள், அக்காள் மகள், அண்ணியின் தங்கை, மனைவியின் தங்கை, மாமன், மாமியாரின் அக்காள் மகள், மாமியாரின் தங்கை மகள், மாமனாரின் அண்ணன் மகள், மாமனாரின் தம்பி மகள், தம்பி மனைவியின் தங்கை, நண்பனின் தங்கை, ஆசிரியரின் மனைவி, காதலன், அத்தை மகள், கணவரின் தம்பி, அக்காள் கணவரின் தம்பி, கணவரின் பெரியப்பா மகள்.

nn

Advertisment

சுக்கிரன்: மனைவியின் தம்பி மனைவி, அத்தை, தாய்மாமன் மகள், மூத்த சகோதரி, பெரியம்மா, சின்னம்மா, மனைவி.

சூரியன்: தந்தை, மாமனார்.

செவ்வாய்: பெண்ணின் கணவர், இளைய சகோதரர்கள், சகோதரி, மைத்துனன், மருமகள்.

குரு: ஆசிரியர், நலம்விரும்பி.

சனி: மூத்த சகோதரர், சித்தப்பா, வேலையாட்கள், அக்காள் கணவர், கணவரின் பெரியப்பா, தாய்மாமன் மகன், ஊனமுற்ற பெண்- ஆண்.

ராகு: தகப்பன்வழிப் பாட்டி, தகப்பன்வழி முன்னோர்கள், விதவைப்பெண், அந்நிய இனப்பெண், நோயாளிப் பெண், இஸ்லாமிய நபர்கள், துணையில்லாத பெண், வேலைக்காரி, மனைவியை இழந்த ஆண், அந்நிய இன ஆண்.

கேது: தாய்வழிப் பாட்டி, விவாகரத்தான பெண், கிறிஸ்துவ நபர்கள், சந்நியாசிகள், மீனவர்கள், அந்நிய இனப்பெண், விவாகரத்தான ஆண், அந்நிய இன ஆண்.

பன்னிரு பாவங்களும் உறவு முறைகளும்- ஆண் ஜாதகத்தில் லக்னம்- ஜாதகர்; 2-ஆம் வீடு- மனைவியின் சகோதரி, பெரியம்மா; 3-ஆம் வீடு- அக்காள் மகள், அத்தை மகள், இளைய சகோதரி, அண்ணியின் அக்காள்; 4-ஆம் வீடு- மாமியாரின் தங்கை மகள்; 5-ஆம் வீடு- அண்ணன் மகள், அண்ணி, மாமனாரின் தங்கை; 6-ஆம் வீடு- தாய்மாமன் மகள், சித்தி, பெரியம்மா மகள்; 7-ஆம் வீடு- மனைவி, தங்கை மகள், அண்ணியின் தங்கை, தம்பி மனைவியின் அக்காள், அத்தை, தாய்வழிப் பாட்டி; 8-ஆம் வீடு- மாமியாரின் அக்காள், மாமியாரின் தங்கை மகள், சித்தி; 9-ஆம் வீடு- மனைவியின் தங்கை, மனைவியின் அண்ணன் மகள், தம்பியின் மனைவி, மாமனாரின் தம்பி மகள், பேத்தி; 10-ஆம் வீடு- மாமியார், தாய்மாமன் மகள், சித்தி மகள்; 11-ஆம் வீடு- அத்தை, மருமகள், தம்பி மனைவியின் தங்கை, பெரியப்பா மகள்; 12-ஆம் வீடு- மாமியாரின் தங்கை, மாமியாரின் அக்கா மகள், தாய்மாமனின் மனைவி, தாயின் மூத்த சகோதரி, தந்தைவழிப் பாட்டி.

பெண் ஜாதகத்தில்

லக்னம்- ஜாதகி; 2-ஆம் வீடு- தாய்மாமன், தாய்மாமன் மகள்; 3-ஆம் வீடு- அத்தை மகன், அண்ணன் மகன், அக்காள் கணவரின் அண்ணன், மாமனார்; 4-ஆம் வீடு- மாமியாரின் தங்கை மகள்; 5-ஆம் வீடு- அத்தையின் கணவன், கணவரின் அண்ணன், மாமனாரின் அண்ணன் மகள், அக்காள் கணவர், மாமனாரின் தம்பி, தந்தைவழித் தாத்தா; 6-ஆம் வீடு- தாய்மாமன், தாய்மாமன் மகன், பெரியப்பா மகன்; 7-ஆம் வீடு- கணவன், அக்காள் கணவரின் தம்பி, தங்கை கணவரின் அண்ணன், பெரியப்பா; 8-ஆம் வீடு- மாமியாரின் அண்ணன், மாமியாரின் தங்கை மகன்; 9-ஆம் வீடு- கணவரின் தம்பி, கணவரின் அக்காள் மகள், மாமனாரின் தம்பி மகன், தங்கையின் கணவர், பேரன்; 10-ஆம் வீடு- தாய்மாமன் மகன், சித்தி மகன்; 11-ஆம் வீடு- மருமகன், தங்கை கணவரின் தம்பி, சித்தப்பா; 12-ஆம் வீடு- மாமியாரின் அக்காள் மகள், மாமியாரின் தம்பி, தாய்வழித் தாத்தா.

உதாரணம் ஜாதகம்- 1

மேற்கண்ட உதாரண ஜாதகப்படி, நாடிஜோதிட விதிப் படி, குரு ஜாதகரையும், சுக்கிரன் மனைவியையும் குறிக்கும். குரு வுக்கும் சுக்கிரனுக்கும் இடையில் சூரியன் பகை கிரகமாக உள்ள தால், தந்தையால் திருமணம் தடைப்படும். திருமணத்திற்குப் பிறகு, ஜாதகருக்கு மாமனாரால் வளர்ச்சி தடைப்படும்.

பாரம்பரிய ஜோதிட விதிப்படி, துலா லக்னத்திற்கு சூரியன் பாதகாதி பதி என்பதால், ஜாதகரைத் திருமணம் செய்யவிடாமல் தந்தை தடையாக இருப்பார். டி.என்.ஏ. (மரபணு) ஜோதிடப்படி, சூரியனின் சாபம்பெற்ற அஸ்வினி, ஆயில்யம், அனுஷம், பூரட்டாதி ஆகிய நட்சத்திர உறவுள்ளவர்களால் ஜாதகருக்குத் திருமணம் தடைப்படும்.

உதாரண ஜாதகம்- 2

மேற்கண்ட உதாரண ஜாதகப்படி, நாடிஜோதிட விதிப்படி, குருவுக்கும் சுக்கிரனுக்கு மிடையில் தாய்மாமனைக் குறிக்கும் புதன் இருப்பதால், தாய்மாமனால் திருமணம் தடைப்படும்.

பாரம்பரிய ஜோதிட விதிப்படி, தனுசு லக்னத்திற்கு பாதகாதிபதியான புதன் குருவுக்கும் சுக்கிரனுக்குமிடையில் இருப்பதால், தாய்மாமனால் திருமணம் தடைப்படும். டி.என்.ஏ. (மரபணு) ஜோதிட விதிப்படி, புதனின் சாபம் பெற்ற உத்திரம், பூராட நட்சத்திரக்காரர் கள் உள்ள உறவினர் களால் ஜாத கருக்குத் திருமணம் தடைப்படும்.

உதாரண ஜாதகம்- 3

மேற்கண்ட உதாரண ஜாதகப் படி, பெண்ணுக்கு செவ்வாய் கணவனைக் குறிக்கும் கிரகம் என்பதால், நாடிஜோதிடப்படி சுக்கிரனுக்கும் செவ்வாய்க்குமிடையில் பகைகிரகம் சூரியன் இருப்பதால், தந்தையால் திருமணம் தடைப்படும். திருமணத்திற்குப் பிறகு, மாமனாரால் பிரச்சினை ஏற்படும். பாரம்பரிய ஜோதிட விதிப்படி, துலா லக்னத்திற்கு சூரியன் பாதகாதிபதி என்பதால், தந்தையால் திருமணம் தடைப்படும்.

டி.என்.ஏ. (மரபணு) ஜோதிடப்படி, சூரியனின் சாபம்பெற்ற அஸ்வினி, ஆயில்யம், அனுஷம், பூரட்டாதி ஆகிய நட்சத்திர உறவினர்களால் திருமணம் தடைப்படும்.

பொதுவாக, திருமணம் தடைப்படுவதற்கு பல காரணங்கள் ஜாதகத்தில் உள்ளன. ஜாதகத்தில் தோஷங்கள், சாபங்கள் மட்டும் திருமணத் தடைக்குக் காரணமல்ல. உறவினர்களாலும் திருமணம் தடைப்படும். எந்த உறவி னர்களால் திருமணத் தடை ஏற்படுகிறது என்பதைக் கண்டுபிடித்து, அவர்களை சற்று ஒதுக்கிவைத்துத் திருமணம் செய்வதே சிறப்பு.

ஆலயங்களில் சிவனை தரிசிக்க இடையூறாக நந்தி குறுக்கே இருப்பதுபோல, ஜாதகத்தில் இரண்டு நட்பு, பகை கிரகங்களுக்கிடையே எதிரி கிரகம் இருந்தால், இந்த கிரக உறவினர்களால் திருமணத் தடை ஏற்படும். இது நந்தி தோஷம் என்று ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது

செல்: 98403 69513