இன்று தங்கள் பிள்ளைகளுக்குத் திருமணம் நடத்தி வைக்க பெற்றோர்கள் படாத பாடுபடுகின்றனர். அதற்கு முக்கிய காரணம் தொழில், குழந்தைகளின் கல்வி, பொருளாதார முன்னேற்றத் திற்காக சொந்த ஊரைவிட்டு இடம் பெயர்ந்து வேற்றூரில் வீடுகட்டி வாழவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
கல்வி, வேலைப் பளு, தொலை தூரம், அலைச்சல் போன்ற இன்னும் பல காரணங்களால் அடிக்கடி குடும்பத்துடன் ஊர்த் திருவிழா, உறவினர் விசேஷங்களுக்கு வரமுடியாமல் போய், கொஞ்சம் கொஞ்சமாக பல வருடங்கள் சொந்தபந்தங்களைவிட்டு விலக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுவிட்டது. பிள்ளைகளும் வாழுமிடத்தில் ஒத்துப்போகிறவர்களுடன் பழகி, படித்துப் பெரியவர்களாகி விடுகின்றனர்.
திருமணமென்று வரும்போதுதான் நமக்குத் தெரிந்த சொந்தபந்தங்களிடம் தொடர்பு கொள்கிறோம். பலரும் தாங்கள் வசிக்கும் பகுதியிலோ, பணிசெய்யும் இடத்திலோ தங்களுக்கு உறுதுணையாய் இருந்தவர்களின் பிள்ளைகளையோ, பிள்ளைகள் காதல் மணம் முடிக்கவோ விரும்புவதில்லை. புதிய இடத்தில் தன் வாழ்வாதாரத் திற்காகத் தன்னை முற்போக்கு சிந்தனைவாதி யாக ஜாதி, மதம் இல்லை என காட்டிக் கொண்டவர் கள், திருமணமென்றவுடன் தன் ஜாதியில் சரியான உட்பிரிவுகளில் வரன் தேட வேண்டியுள்ளது.
சொந்தபந்தங்களில் நம்மைப்போலவே பலர் ஆங்காங்கே சிதறிப்போய் விட்டதால் வரன் தேடுவது சிரமமாக உள்ளது. நம் ஜாதியில் எதிர்பார்ப்புக் கேற்றபடி அழகு, படிப்பு, வேலை, வருமானம், வீடு, வாகன வசதி நிறைந்த ஒரே பிள்ளையாக இருந்து, நம் பேச்சைக் கேட்கும் மருமகனோ, மருமகளோ அமைந்து திருமணம் செய்துவைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது.
இப்படியெல்லாம் அலைந்து திரிந்து மணம்முடித்து வைத்தால், இன்றைய தலைமுறை யினர் திருமண பந்தத்திற்குப் பெரிய முக்கியத்துவம் தராமல் பிடிக்கவில்லை என்றால் பிரிந்து விடுகிறார் கள். திருமண பந்தம் பற்றிய சரியான புரிதலின்றி, ஒருவருக்கொருவர் அன்பாக விட்டுக்கொடுத்து அனுசரித்து வாழத் தெரியாமல் பலரின் முதல் திருமணம் தோல்வியடைந்து விடுகிறது. பணத்தின் முக்கியதுவம், பணத்தைக் கையாளும் முறையைக் கற்றுக்கொண்ட பலருக்கு குடும்ப வாழ்க்கையை எப்படி நடத்துவதென்பதை பெற்றோர்களும் சமூகமும் கற்றுக் கொடுக்கவில்லை. அதனால் திருமணத்தைவிட மறுமணத்திற்குக் காத்திருப்போர் அதிகமாகிவிட்டனர்.
திருமணம்
குடும்ப ஸ்தானமான 2-ஆமிடம், சுக ஸ்தானமான 4-ஆமிடம், ஆண்களுக்கு7-ஆமிடமான களத்திர ஸ்தானம், பெண்களுக்கு 8-ஆமிட மான மாங்கல்ய ஸ்தானம் கெடாமல், 6, 8,12-ல் மறையாமல், பாவகிரகப் பார்வை, இணைவு , தொடர்பு ஏற்படாமலிருந்து, சுபகிரகப் பார்வை பெற்று, நல்ல தசையும் நடந்தால் எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமைந்து இல்லற வாழ்க்கையை இனிதே நடத்துவார்கள்.
ஜாதிக்குள் திருமணம்
நம்முடைய கலாச்சாரத்தில் ஜாதிக்குள் திருமணம் முடிக்க வேண்டுமென்ற வழக்கம் வந்ததற்கு ஜாதிவெறி என்பதெல்லாம் காரணமல்ல. மனித குழுக்களில் ஒரே குணம், ஒரே வகை உணவு, ஒத்த கருத்துகள் மற்றும் ஒரே பழக்க வழக்கங்கள் கொண்டவர்களைத் திருமணம் செய்தால் உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் ஒற்றுமை யாக வாழ்வது எளிது என்கிற உளவியல் மருத்துவ அடிப்படை யில் இதை முன்னோர்கள் உருவாக்கி வைத்தனர்.
தம்பதிகளுக்குள் ஏதாவது மனஸ்தாபங்கள் ஏற்பட்டால்கூட நெருங்கிய உறவினர் கள்மூலம் சரியான அறிவுரை வழங்கி, பிரிவின்றி வாழ வழி செய்தனர்.
ஒன்பதாம் இடம் முன்னோர்கள் கூறியுள்ள கலாச்சாரத்தைக் குறிக்கும் இடமாகும். ஒன்பதாம் அதிபதி ஆட்சி, உச்சம் பெறுவது, ஆட்சி, உச்சம் பெற்ற சுப கிரகங்களின் பார்வை மற்றும் குடும்ப ஸ்தானமான இரண்டாமிடம் வலுப்பெற்றிருந்தால் ஜாதி மதக் கட்டுப்பாடுகளை மீறாமல் திருமணம் செய்துகொள்வர்.
கலப்பு திருமணம்
ஐந்தாமிடம் வலுப்பெற்றால் தைரியமாக காதலை வெளிப்படுத்தி, ஒன்பதாமிடத் தொடர்பால் நினைத்தபடி திருமணம் செய்துகொள்வர். இன்று சர்வசாதரணமாக பெற்றோர்களை விலக்கி விருப்பப்படி திருமணம் செய்து கொள்கிறார்கள். செவ்வாய், சனி சேர்க்கை, செவ்வாய், ராகு சேர்க்கை, பார்வை முறையற்ற திருமணத்தைத் தூண்டுகிறது.2, 4, 7, 9-ஆமிடம் கெட்டிருந்தால் தொல்லை நிறைந்த இல்லற வாழ்க்கைதான்.
கல்வியறிவு அதிகம் பெற்றபின் ஆழ்ந்த ஆராய்ச்சியால், சொந்தங்களில் பெண் இல்லாதவர்களும், தான் நேசிப்பவர்களை மணப்பதற்காகவும், மருத்துவப் பொருளாதார வளர்ச்சிக்காக வும்,நாம் நம்பும் மருத்துவ மாமேதைகளைக் கொண்டு நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்தால் பிள்ளைகள் குணப்படுத்த முடியாத நோயுடனும், முட்டாளாகவும் பிறந்துவிடுவர் என்கிற வதந்தியை நம்பவைத்து உலக அரசியல் செய்து விட்டனர்.
5-ஆமிடமும், 9-ஆமிடமும் கெட்ட வர்கள் பாவகிரகப் பார்வையால், சமூகத்தில் வகுத்து வைத்ததை எதிர்த்து தானும் கெட்டு மக்களையும் கெடுப்பர்.
ஆரோக்கியமான திருமணம்
சென்ற தலைமுறை யினர் முன்னோர் கள் வகுத்து வைத்தி ருந்தவற்றை மதிக் காமல் உணவு, உடை, கலாசாரத்தை மாற்றியமைத்து பல இன்னல்களை அனுபவித்துவிட்டனர். விவசாயம் சோறு போடாது எனக் கூறி ஒரு தலைமுறையை மூளைசலவை செய்து இன்று சோற்றுக்குக் கையேந்த வைத்ததுபோல, பல நல்ல விஷயங்களைச் சிதைத்துவிட்டனர்.
கடந்த 30 வருட நபர்களின் ஜாதகத்தை ஆராய்ந்தால் 5, 7, 9-ஆம் இடங்கள் பெரும்பாலும் கெட்டிருக்கிறது. பெண்களுக்கு ரத்தத்தைக் குறிக்கும் செவ்வாய் கெட்டால் எண்ணம், செயல்பாடு முரணைத் தரும். விவசாயப் புரட்சியால் மக்களுக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்கவில்லை. விஞ்ஞான வளர்ச்சியால் நோயற்ற, இறப் பில்லா மனிதரையும் விஞ்ஞானிகள் இதுவரை உருவாக்கவில்லை. பகுத்தறிவு பேசி ஒரு ஜாதியையும் ஒழிக்கவில்லை. விவசாயம்தான் முக்கியம் என்பதை இப்போது உணரத் தொடங்கியது போல், உறவுக்குள் திருமணம் செய்வதே சிறந்தது என மருத்துவர்கள் கூறும் நாள் சீக்கிரம் வரலாம். இனி பத்தாண்டுகளுக்குப் பிறகு பிறக்கும் குழந்தைகளுக்கு ஐந்தாமிடம், ஒன்பதாமிடம் கெடாமல் சுபகிரகப் பார்வை பெற்று, முன்னோர்கள் சொல்லியபடி நடந்து மகிழ்ச்சியுடன் வாழ்வர்.
முதல் திருமணத் தோல்விக்குக் காரணங்கள்
தங்கள் வாழ்க்கையில் நடந்த, ஊரில் கேள்விப்பட்ட எதிர்மறையான அனுபவத்தை வைத்து திருமண பந்தத்திற்குப் போகும் இளையோருக்கு அறிவுரை என்னும் பெயரில் பல சந்தேகங்களையும் பயத்தையும் கிளப்பிவிடுகின்றனர். மாமியார் பேச்சு சரியில்லை, மாமனார் பார்வை சரியில்லை, நாத்தனார் திமிராக இருக்கிறாள் என்று, இப்படி ஒவ்வொரு உறவுகளையும் தவறாகச் சித்தரித்து, கவனமாக இரு என சொல்லி அனுப்பும்போது திருமணமானவுடன் அன்பாகப் பேசினாலும் சந்தேகத்துடனும், ஏதோ காரியத்திற்காகப் பேசுவதாகவும் எண்ணி, உறவுகளுடன் மனபேதம் ஆரம்பித்து குடும்ப வாழ்க்கை பாதிக்குமளவு போய்விடுகிறது.
சிலர் எவ்வளவு சரியானவர்களாக இருந்தாலும் ஏதோ காரணங்களால் திடீர் பிரிவும் ஏற்பட்டுவிடுகிறது. குறிப்பாக ஏழாமிடத்தில் கூட்டு கிரகங்கள், ராகு- கேது சம்பந்தம்,பாவகிரகப் பார்வை, சேர்க்கை போன்றவை முதல் திருமண வாழ்க்கையைக் கெடுத்து விடுகிறது. ஏழரைச்சனிக் காலத்தில் திருமணம் செய்துகொள்ளும் பலருக்கு பலவகை பிரச்சினை பிரிவைத் தருகிறது. ஏழாமிடத்திற்கு குரு பார்வை பெறாதவர்கள் வாழ்க்கையில் பல இன்னல்களைச் சந்திக்கின்றனர்.
தோஷங்கள்
செவ்வாய் தோஷம், நாக தோஷம், களத்திர தோஷம், பிதுர் தோஷம் போன்றவை எத்தனைப் பரிகாரம் செய்தாலும் திருமண வாழ்க்கையை கண்டிப்பாக பாதிக்கும். மனநிலை மாறாமல் பரிகாரம் பலன் தராது.
மறுமணம்
முதல் திருமண வாழ்க்கை தோற்று மறுமணம் நடக்க முக்கிய காரணம், ஏழாமிடத்தைவிட இளைய தார ஸ்தானமான பதினோறாமிடம் வலுப் பெறுவதேயாகும். பதினோறாமிடம் ஏதாவது ஒரு வகையில் பாதித்தால் இரண்டாவது திருமண வாழ்க்கையும் வேதனையைத் தந்துவிடும். எல்லாருக்கும் மறுமணம் சந்தோஷம் தருவதில்லை. கொஞ்சம் பொறுமை யாக முடிவெடுத்திருந்தால் கிடைத்த வாழ்க்கையையே நன்றாக வாழ்ந்திருக்கலாமே என காலம் கடந்து பலர் எண்ணுகிறார்கள். திருமண வாழ்க்கையை சந்தோஷமாக நடத்த பொருளாதார பலத்தைவிட பக்குவமான மனநிலையை- அதாவது மனம் புண்படாமல் பேசும் திறனை வளர்த்துக் கொள்வது அவசியம். தோஷங்கள் நிறைந்து ஏழாமிடம் கெட்டவர்கள் தாமதமாகத் திருமணம் செய்யவேண்டுமென சொல்வதற்குக் காரணம், குடும்ப நடத்த பக்குவத்தைக் காலம் தரும் என்பதால்தான். பதினோறாம் இடம் வலுத்த கைம்பெண்களும் கைவிடப்பட்ட பெண்களும் மறுமணம் செய்துகொள்வது தவறில்லை. இரண்டாமிடம், ஏழாமிடம் கெட்டவர்கள், கணவரிடமே இரண்டாவது முறை தாலி கட்டிக்கொண்டால் பதினோறாமிடப் பலன்கிடைத்து சிறப்பாக இருப்பார்கள்.
பரிகாரம்
எல்லாம் வியாபாரமாகிவிட்டதால் மனநல மருத்துவர்கள் பிரிந்தவர்களை சேர்த்து வைக்கவும், வழக்கறிஞர்கள் குடும்பம் பிரியக் கூடாது எனவும் பாடுபட முடியாது. அறிவுரை, ஆலோசனை தரவேண்டிய சொந்தபந்தம் என்னும் இனத்தை எதாவது குறைசொல்லி விரட்டிவிட்டோம். முன்னோர் கள் கல்வியறிவற்ற காட்டுமிராண்டியாக வாழ்ந்ததுபோல எண்ணி, அவர்கள் உருவாக்கி வைத்த கலாச்சாரம், மருத்துவம், ஆன்மிகம் போன்ற அற்புதமான அறிவியலை விலக்காமல், புரிந்து பயன்படுத்தினால் எல்லாரும் சுகமாக வாழலாம்.
செல்: 96003 53748