2019 டிசம்பர் 17 முதல் 2020 ஜனவரி 14 வரை - ஆர். மகாலட்சுமி

கிரக மாறுதல்

மார்கழி- 9, டிசம்பர்- 25- புதன் தனுசு ராசிக்கும்;

மார்கழி- 9, டிசம்பர்- 25- செவ்வாய் விருச்சிக ராசிக்கும்;

Advertisment

மார்கழி- 23, ஜனவரி- 8- சுக்கிரன் கும்ப ராசிக்கும்;

மார்கழி- 28, ஜனவரி- 13- புதன் மகர ராசிக்கும் மாறுவர்.

சூரியன்: நெருப்பு கிரகமான சூரியன் நெருப்பு ராசியான தனுசில் உள்ளார்.

Advertisment

செவ்வாய்: நெருப்பு, நில கிரகமான செவ்வாய் டிசம்பர் 25 வரை காற்று ராசியிலும், பின் நீர் ராசியிலும் உள்ளார்.

புதன்: காற்று கிரகமான புதன், டிசம்பர் 25 வரை, நீர் ராசியான விருச்சிகத்திலும், பின் நெருப்பு ராசியான தனுசிலும் சஞ்சரிப்பார்.

குரு: ஆகாய கிரகமான குரு நெருப்பு ராசியான தனுசில் உள்ளார்.

சுக்கிரன்: நீர் கிரகமான சுக்கிரன் ஜனவரி 8 வரை நில ராசியான மகரத்திலும், பின் காற்று ராசியான கும்பத்துக்கும் பெயர்வார்.

சனி: காற்று கிரகமான சனி நெருப்பு ராசியான தனுசில் உள்ளார்.

ss

கேது: நெருப்பு மற்றும் காற்று கிரகமான கேது நெருப்பு ராசியான தனுசில் அமர்ந்துள்ளார்.

ராகு: நெருப்பு மற்றும் காற்று கிரகமான ராகு மிதுனத்தில் மிதந்துகொண்டுள்ளார்.

இந்த மார்கழி மாதக் கோட்சாரத்தில், சூரியன், குரு, சனி, புதன், கேது ஆகிய ஐந்து கிரகங்களும் நெருப்பு ராசியான தனுசில் நெருக்கியடித்து உட்கார்ந்துகொண்டிருக் கிறார்கள். இவர்களை மிதுன ராசியிலிருந்து ராகு நேர்பார்வையாகப் பார்க்கிறார். இந்த நிலையில் டிசம்பர் 26, 27, 28 தேதிகளில் சந்திரனும் தனுசு ராசியில் சஞ்சரிப்பார்.

அப்படியாயின் ராகுவின் பார்வையில் ஆறு கிரகங்கள் அகப்பட்டுக்கொண்டதாகிறது.

இந்தக் கூட்டணியில் சூரியன் தவிர மற்ற கிரகங்கள் காற்றுத்தன்மை உடையவர்கள்.

எனவே இந்த மார்கழி மாதத்தில் காற்று வீச்சுக்கு பஞ்சமேயிராது. ராகுவின் பார்வை காற்றின் தாக்கத்தை அதிகப்படுத்தும்.

நெருப்பு கிரகமான சூரியன் நெருப்பு ராசியில் உள்ளாரே எனில், அவர் சனி, கேது சேர்க்கையாலும், ராகுவின் கொடும்பார்வை யாலும் அடக்கிவாசிப்பார். இதனால் ஒரு நெருப்பு கிரகம், நெருப்பு ராசியில் இருந்தும் வெப்பம் அமிழ்ந்துவிடும்.

26-12-2019 அன்று காலை 8.00 முதல் பகல் 1.35 மணிவரை மூலநட்சத்திரத்தில் சூரிய கிரகணம் நிகழும். இந்த நாளில் சூரியன் முழுமையான மறைவுத் தன்மையை ராகு- கேதுக்களால் அடைவார்.

இந்த மார்கழி மாதத்தில் நிறைய கிரகங் கள் உச்சாம்சம் பெறுகிறார்கள்.

சுக்கிரன் மார்கழி 4 முதல் 7 வரை மீனாம் சத்திலும், 15 முதல் 18 வரை கடகாம்சத்திலும், 26 முதல் 29 வரை விருச்சிகாம்சத்திலும் செல் கிறார். நீர் கிரகமான சுக்கிரன் நீர் அம்சத்தில் செல்லும்போது கண்டிப்பாக மழை தருவார்.

ஆகாய கிரகமான குரு டிசம்பர் 21 முதல் ஜனவரி 4 வரை தனது உச்ச அம்சமான கடகாம் சத்தில் செல்கிறார். அதுவொரு நீர் ராசி. எனவே ஆகாயத்தில் மழை மேகத்தை திரண்டு நிற்கச் செய்வார்.

நெருப்பு கிரகமான சூரியன் ஜனவரி 4 முதல் 8 வரை நீசாம்சத்தில் செல்வார். அது போல் மற்றொரு நெருப்பு கிரகம் செவ்வாய் டிசம்பர் 25 முதல் 30 வரை அம்சத்தில் நீசம்பெற்று சற்று பலவீனமடைவார்.

இதனால் மார்கழி மாதம் முழுக்கவே சிற்சில நாட்கள் தவிர மழை பெய்யக்கூடும். இதில் கவனிக்கவேண்டியது- காற்றின் தாக்கம் அதிகமிருக்கும். எனவே, வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது தரும் முன்னறிவிப்பு களை கவனத்தில்கொண்டு செயல்படுவது நன்று.

இந்த மார்கழி மாதம் அதிக கிரகங்களின் சேர்க்கை ஒரே ராசியில் உள்ளது. இது உலக நன்மைக்கு ஏற்புடையதல்ல. மேலும் அவர்கள் அனைவரையும் மிக பாவக்கோளான ராகு பார்க்கிறார். எனவே இன்னதுதான் நடக்கும் என உறுதிப்பட, அறுதிக் கருத்தாகக் கூறமுடியாது. இது இறைவனின் சித்தம்.

1960-களில், எல்லா கிரகங்களும்கூடி நின்றபோது, உலகத்திற்கு பாதிப்பு ஏற்படும் என செய்தி பரவ, அனைவரும் அச்சமுற்றனர்.

எனவே காஞ்சி மகா பெரியவரிடம், இந்த அச்சத்தை அகற்ற வழிகேட்டு வேண்டி நின் றனர். காஞ்சி தெய்வம், மக்கள் அனைவரையும் திருஞானசம்பந்தர் அருளிய கோளறு பதிகத்தை தினமும் பாராயணம் செய்யும்படி உபதேசித்தருளினார்.

"வேயுறு தோளிபங்கன்' எனத் தொடங்கும் கோளறு பதிகத்தை, அனைவரும் தினமும் பாராயணம் செய்யுங்கள். அனைத்து கிரகங்களும், எல்லா மனிதருக்கும் நன்மையே செய்வர். காஞ்சி முனிவரின் வாக்கு, தெய்வ சங்கல்பம். அது காப்பாற்றும்.

செல்: 94449 61845