மேஷம்

ராசிக்கு சிறந்த நாட்கள்: 6, 7, 14, 15, 24, 25. பாதக நாட்கள்: 4, 5, 10, 11, 17, 18.

அஸ்வினி: குடும்ப நலனுக்காக அதிக அக்கறை செலுத்தவேண்டிய மாதம். முதல் வாரம் 4, 5 தேதிகள்வரை இளைஞர்முதல் முதியோர்வரை நற்பலன் பெறலாம். 6, 7 தேதிகளில் வாகனம் ஓட்டும்போது கவனம் வேண்டும். பெண்கள், குடும்பத்தில் நல்ல பெயரை சம்பாதிக்கலாம். ராகு சிறு காயங்கள், ரணங்களை ஏற்படுத்துவார். 400 கிராம் கொத்தமல்லித்தழையை மாட்டுக்குத் தருதல் நல்லது. சுக்கிரனுக்காக புலால் மறுப்பது நன்று. சிங்கமுக வாஸ்து வீட்டில் குடியிருப்போர், தென்கிழக்கு சமையற்கூடத்தில் பிளாஸ்டிக் கிண்ணத்தில் நான்கு மரக்கரித்துண்டுகள் வைத்து, அதன்மேல் ஒரு எலுமிச்சம்பழம் வைத்துக்கொண்டால், தடைப்பட்ட சுபநிகழ்ச்சிகள் உயிர்பெற ஆரம்பிக்கும்.

பரணி: வாழ்க்கைக்கு சிறந்தவற்றை மட்டும் சிந்திக்கவேண்டிய மாதம். 10, 11 தேதிகளில் விரோத மனப்பான்மை கொண்ட நபர்களை சமாதானம் செய்யவேண்டிய நெருக்கடிகள் ஏற்படும். வீட்டுத் தேவைகளும் நெருக்கடியைத் தரும். வெளியூர் செல்லும் கட்டாயச் சூழ்நிலை வந்தால் ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும். சில ஆண்களுக்கு வீட்டுப் பணிப்பெண்மீது மையல்கொள்ள மனம் பேதலிக்கும். அவ்வாறு செய்தால் சுக்கிரன் தண்டனைக்கு உட்படுத்து வார். இம்மாதம் வயது 48 எனில் சொந்த சம்பாத் தியத்தில் வீடு, மனை வாங்க முயலக் கூடாது. நெடுநாட்களாக கடன் தொல்லையால் நிம்மதி கெட்டிருந்தால், ஒரு சிறு ஆட்டை, வளர்ப் போருக்கு தானம் தருதல் நல்ல பரிகாரம்.

Advertisment

கிருத்திகை 1-ஆம் பாதம்: விருப்பங்கள் அத்தனையையும் எதார்த்தமாக நிறைவேற்றும் வலிமை கூடும். 22, 23 தேதிகளில் குடும்பத்தாரோடு ஒட்டி உறவாடும் சந்தர்ப்பம் மகிழ்வைத் தரும்.

வாகனப் பராமரிப்புச் செலவு அதிகமாகும்.

24, 27 தேதிகளில், திருமணம் சார்ந்த தடைகள் இருந்தால் அகன்று நல்லவை நடக்கும். சூரிய தோஷம் அறவே நீங்க கூறவேண்டிய சுலோகம்:

Advertisment

"அத்யுதாரோ ஹ்யகஹரஸ் த்வக்ரகண்யோ சத்ரிஜாஸுதா

அநந்தமஹிமாசபாரோ சந்த்ஸௌக்ய ப்ரர

தோவ்யய:

காலையில் பத்துமுறை படித்துவந்தால் சுகங்கள் படிப்படியாய் வந்துவிடும். இயலா தோர் ஐந்து ஞாயிற்றுக்கிழமைகள் ஒரு பொழுது உப்பில்லா உணவுண்பது கெடுதல் மறைய உதவிபுரியும். கிழக்கு திசை நோக்கி தலைவைத்துத் தூங்குவது நன்று.

ரிஷபம்

ராசிக்கு சிறந்த நாட்கள்: 1, 8, 9, 17, 18, 27, 28. பாதக நாட்கள்: 6, 7, 12, 13, 19, 20.

கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள்: இம்மாதம் மிகச்சரியான பாதையில் முயற் சிகள் நடைபோடப் போகிறது. 4, 5 தேதிகளில் பெரியவர்களின் வார்த்தைகளை வேதவாக் காகக் கருதி செயல்படவேண்டும். 6, 7 தேதிகளில் பணவரவு திருப்தி தரும். இரண்டாவது வாரம் கிரகநாதர்கள் சோதிப்பார்கள்.

dd

கணவன்- மனைவி இருவரும் இணைந்தே முயலவேண்டிய சூழ்நிலை உருவாகும். ஒரு நெருக்கடிக்கு விடைகிடைக்கும் முன்பே, அடுத்த நெருக்கடி வரும். வலக்கையில் கோமேதக மோதிரம், இடக்கையில் வைடூரிய மோதிரம் அணிதல் நன்று. பழைய கூரையை மாற்றி சிமென்ட் தளம் போடுவோர் மிக கவனமுடன் செயல்படவேண்டும். உங்களைச் சார்ந்து வாழும் விதவைகளுக்கு உதவிபுரிவதால், செவ்வாயின் அருளைப் பெறலாம்.

ரோஹிணி: "என்ன செய்வதென்றே தெரிய வில்லை' என்ற நிலை மாறி நம்பிக்கையூட்டும் மாதமாக அமையும். 16-ஆம் தேதிக்குமேல் மனைவியின் உறவினர்கள் மனத்தெளிவை ஏற்படுத்துவார்கள். 23, 24, 25 தேதிகளில் திடீர் அதிர்ஷ்டம் இல்லாவிடினும் தேவைக்கேற்ப பணவரவை எதிர்பார்க்கலாம். மூன்று சகோதரர்களுடன் பிறந்திருந்தால், அதில் ஒருவர் இம்மாதம் திடீர் செல்வந்தராகி விடுவார் என்கிறது சாஸ்திரம். மீன்வளத் துறையில் பணிபுரிவோர், மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டோருக்கு வரவு அதிகரிக்கும். இம்மாதம் மனைவியிடம் பொருளாதாரப் பொறுப்பை ஒப்படைப்பது நன்று. புதன்கிழமை புதன் ஹோரையில் பணம் கொடுக்கல்- வாங்கல் நன்று. கருவுற்ற மனைவி இம்மாதம் இடம் மாறல் கூடாது.

மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்: பிரச் சினைகளை நாடியே மனம் பேதலிக்கும்.

இருப்பினும் நல்ல விளைவுகளை எதிர்பார்க்கலாம். 23, 24, 25 தேதிகளில் நல்ல செய்திகள் அடுக்கடுக்காய் வரும். சட்டரீதியாக முடங்கியிருந்த பணம் வந்துவிடும். உங்களு டைய சுய கௌரவத்தை சுக்கிரன் அரண்போல் காப்பாற்றுவார். அதிக முதலீடுகள் வேண்டாம். தூய வெள்ளை அல்லது "லைட் பிங்' நிற ஆடைகள் அதிர்ஷ்டத்தைத் தரும். கருப்பு, நீலம் தவிர்க்கவும். செவ்வாயன்று அதிகாலை நேரம் கனவு தோன்றினால் முருகனை மனதார வேண்டுதல் நல்லது. வயோதிகர்கள் வெளியில் உலா போகும்போது வெண்மை நிறத் தொப்பி அல்லது தலைப்பாகை நன்று. ராகுவின் பாதிப்பு அகலும்.

மிதுனம்

ராசிக்கு சிறந்த நாட்கள்: 2, 3, 10, 19, 20, 29, 30. பாதக நாட்கள்: 8, 9, 14, 15, 22, 23.

மிருகசீரிஷம் 3, 4-ஆம் பாதங்கள்: உங்கள் விருப்பம் கற்பனையோடு முரண்படும் மாதம். தடுமாறினாலும் நல்லவையே நடக்கும்.

குடும்பத்தில் பகையுணர்வு வேண்டாம். 6, 7 தேதிகளில் கவலை சூழ்ந்து காணப்படுவீர்கள். இரண்டாவது வாரம் முகம் மலர்ச்சியாகிவிடும். ஒரு பெண்ணால் ஆண்களுக்கு நல்லுதவி கிடைக்கப்பெறும். வசிக்கும் வீடு "கார்னர் ஹவுஸ்' வீடு எனில், வடகிழக்கு பாகத்தில் கழிவறை இருந்தால், கதவை மூடியே வைப்பது நன்று. பணமுடைக்கு வழிசெய்யும். வெளிக்கதவில் சிங்கம் வரையப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டிவைப்பதுவும் நல்ல பரிகாரம். ஆசிரியர் பணிபுரிவோர், மதபோதகர்கள் இம்மாதம் சிவப்பு வண்ணங்களுக்கு முக்கியத்துவம் தருதல் நன்று.

திருவாதிரை: உங்களுடைய தேர்ந் தெடுக்கும் முறைதான் இம்மாதம் முன்னிலை வகிக்கும். 10, 11 தேதிகளில் சூழ்நிலை கெட்ட பெயரை உருவாக்கும். வாகனம் வைத்திருப் போருக்கு செலவினம் வரும். வயதில் மூத்தோரின் பேராதரவு மனநிம்மதிக்கு வழி வகுக்கும். எந்த ரகசியத்தையும் வெளிப்படுத் தக்கூடாது; சோதனையாகிவிடும். இம்மாதம் பேரன் பிறந்தால், வீட்டிற்கு வரும்போது ஒரு சிறு தேன்பாட்டிலை வாசலில் கட்டித் தொங்கச் செய்து, ஏழு நாட்களுக்குப்பின் மரத்தடி வேரில் ஊற்றினால் குழந்தைக்கு பின்னாளில் வரும் தோஷங்கள் அறவே போய்விடும்.

சூரியனுக்காக செவ்வரளிப் பூஞ்செடி வேரில் நீர் பாய்ச்சல் நன்று.

புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்: 21, 23 தேதிகளில கிரகநாதர்கள் செய்யும் சூழ்ச்சிகளால், திடீர் மாற்றங்கள் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். வீட்டில் பூஜை, சுப நிகழ்ச்சிகள் மனநிறைவைத் தரும். 26, 28 தேதிகளில் பணவரவை எதிர்பார்க்கலாம். 29, 30-ல் ஏதோ ஒரு சதியில் சிக்க நேரிடும். சிம்ம லக்னத்தார் இம்மாதம் திருமணத்திற்கான முயற்சியில் ஈடுபட்டால் நல்லவை நடக்கும். குலதெய்வப்பூஜை இம்மாதம் நற்பலனைப் பெற்றுத் தரும் வாய்ப்புகள் குறைவு. வியாழ னன்று ஒன்பது லட்டு வாங்கி நவகிரக குருவின் காலடியில் வைத்து வணங்கி, பிறருக்கு தானம் செய்வதால் குரு பேராதரவு தருவார். சந்திரனின் பாதிப்பு அகல, பால்கோவாவை திங்கட்கிழமை பிறருக்குத் தருதல் நன்று.

கடகம்

ராசிக்கு சிறந்த நாட்கள்: 4, 5, 12, 13, 22, 23. பாதக நாட்கள்: 10, 11, 17, 18, 24, 25.

புனர்பூசம் 4-ஆம் பாதம்: "ஆடும்வரை ஆட்டம்; ஆயிரத்தில் நாட்டம்' என்ற பாடல் போல, கிரகநாதர்கள் உங்களை உற்சாகமாக வைக்கப்போகிறார்கள். புதுதிட்டம், புதுமுயற்சி எல்லாமே வெற்றி தரும். 6, 7 தேதி வரையிலும் பலன்கள் சாதகமாகும். இரண்டாவது வாரம் மகிழ்ச்சிகள் தொடரும். அண்ணன்- தம்பி கூட்டு வியாபாரம் செய்தால் அதிக லாபம் எதிர்பார்க்கலாம். பெற்ற மகளைச் சார்ந்த கவலை இருந்தால் ராகு நல்வழி காட்டுவார். வீட்டைப் பூட்டிவிட்டு நெடுநாள் பயணம் போக நேரிட்டால் பாதுகாப்புக்கு நம்பிக்கையானவரை நியமித்துப் போதல் நன்று. அதிக கவலைகளை சுமப்போர் தனிமையைத் தவிர்ப்பது நல்லது. மனம் விபரீத முடிவுக்கு நெருக்கடியைத் தரும். இரண்டு கோமேதக ராசிக்கல் வாங்கி திருஷ்டிசுற்றி, ஒன்றை நீர்நிலையில் போட்டுவிட்டு, ஒன்றை மோதிரமாக அணிதல் நல்லது.

பூசம்: நீங்கள் எதிர்பார்த்ததுபோல் எல்லா பிரார்த்தனைகளும் கைகூடும் மாதம். பெண்கள், மாணவர்கள், பணிபுரிவோருக்கு 19, 20 வரை நல்லவையே நடக்கும். 23-ஆம் தேதி மௌனமாய் இருப்பது மிக நல்லது. பிறர் உங்கள்மீது பழிபோட முயல்வார்கள்.

பிறரிடம் எந்த பணியையும் நம்பி ஒப்படைப் பது கூடாது. சனிக்கிழமைகளில் கணவன்- மனைவி உடல் நெருக்கத்தைத் தவிர்ப்பது மிக நன்று. ஆடவர்கள் இம்மாதம் மாமனார், சகோதரிகள் போன்றோர் வீட்டில் இரவு தங்குவ தைத் தவிர்த்தல் நன்று. கருப்பு அல்லது பழுப்பு நிறப் பசுவுக்கு புல், கீரை தருவது நல்ல பரிகாரம்.

பார்வையற்றோருக்கு உதவிபுரிதல் நன்று.

ஆயில்யம்: அளவற்ற சொத்து சுகமுடைய செல்வந்தரானாலும், இம்மாதம் கடைசி வாரம் தொழிலில் கவனமாக செயல்படவேண்டும். 28, 30 தேதிக்குமேல் சூழ்நிலை மிகச்சரியான பாதைக்கு அழைத்துச்செல்லும். கடன் வாங்கி அசல், வட்டி கட்ட இயலாதோர் ஞாயிறு ராகு காலத்தில் காலபைரவருக்கு முந்திரிப்பருப்பு மாலை கட்டி, புனுகு சாற்றி, வெண்பொங்கல் நிவேதனம் செய்து பிரார்த்தனை செய்தால் சூரியன் நல்வழிகாட்டுவார். அதிகாலை சூரிய உதயத்தின்போது நீருடன் சிவப்புநிறப் பூ கலந்து சூரிய நமஸ்காரம் செய்வது மிக நன்று.

பணிபுரிவோர், உயரதிகாரிக்கு அதிக மரியாதை தருதல் கூடுதல் நன்மை தரும்.

சிம்மம்

ராசிக்கு சிறந்த நாட்கள்: 6, 7, 14, 15, 24, 25. பாதக நாட்கள்: 11, 12, 13, 19, 20, 27, 28.

மகம்: பயமென்ற சிறைக்கதவைத் திறந்து விட்டு, நல்லவற்றைத் தெரிய வைக்கும் மாதமிது.

5-ல் உள்ள செவ்வாய், குரு, கேது கண்ணீரை வரவழைக்க மாட்டார்கள். வருமானத்தில் குறையேதும் இராது. 7-ஆம் தேதிக்குமேல் மாணவர்கள் கல்வியில் நாட்டமுடன் செயல் படவேண்டும். சனி கௌரவத்தை அதிகரிப்பார். உங்களுடைய சொந்த ஜாதகத்திலும் குரு, சனி 5-ல் இருந்தால், பெற்ற செல்வங்கள் இருந்தால் அவர்களே வீடு, மனை வாங்கித் தருவார்கள். எதுவும் நடைபெறவில்லையென்றால் பத்து பாதாம் பருப்பை கருப்புத்துணியில் முடிந்து, நவகிரக சனி பாதத்தில் வைத்து மனக்குறைகள் அத்தனையையும் கொட்டி வணங்கியபின், பாதாம் பருப்பு முடிப்பை வீட்டில் இருட்டறையில் வைத்திருந்து, ஆசை நிறைவேறியபின் ஓடும் நீரில் போடல் நன்று.

பூரம்: "நான் கடுமையாகத்தானே முயற்சிக்கிறேன்? எனக்கு ஏன் இந்த சோதனை' என்ற சொல்லை முறியடிக்கும் மாதம். 12, 13 தேதிக்குமேல். புதுமுயற்சிகள் நல்ல பலனைத் தரும். தன்னந்தனியாய் மகரத்திலுள்ள புதன் அச்சு, பதிப்பகத்துறையினருக்கு லாபத்தை ஈட்டுவார். மர்மக்கதை எழுதும் எழுத்தாளர் களும் அதிக நற்பெயரை எதிர்பார்க்கலாம். மனைவியின் உடல்நலனை உன்னிப்பாக கவனிப் பது இன்றியமையாதது. ஏகாதசியன்றும், வெள்ளிக்கிழமைகளிலும் பைரவருக்கு பச்சைக்கற்பூர அபிஷேகம் செய்யலாம். பூரண நலன் கிடைக்கப்பெறும். ஒரு சமச்சதுர வெள்ளி உலோகத்துண்டை, வேப்பமர வேரின் அடிப்பாக மண்ணில் பள்ளம் தோண்டி அதனை வைத்து மூடி, நீர் தெளித்துவர தொல்லைகள் விடைகொடுக்கும்.

உத்திரம் 1-ஆம் பாதம்: மனவுறுதியை வேகமாக செயல்படுத்தியாக வேண்டும். தந்தை- மகன் உறவில் விரிசல் வரலாம். பக்குவமாக நடத்தல் மிக நல்லது. தங்க நகைக்கடை நடத்துபவர்கள் மகனிடம் பொறுப்பை அதிகம் ஒப்படைத்தல் கூடாது. கெடுதல் வராதிருக்க நடுவிரலில் (சனிவிரல்) டர்குவிஸ் ராசிக்கல் மோதிரம் அணியலாம். பள்ளிக்குச் செல்லும் சிறுவர்களைத் தகுந்த பாதுகாப்புடன் அனுப்புதல் நல்லது. பணியா ளர்கள், அலுவலகத்தில் நீதிக்குப் புறம்பாக எதையும் செய்வது கூடாது. வெள்ளிக்கிழமை மாலையில் வில்வார்ச்சனை செய்துவந்தால் சந்தான பாக்கியம் இல்லாதோரும் அதிகப் பலனை எதிர்பார்க்கலாம்.

கன்னி

ராசிக்கு சிறந்த நாட்கள்: 1, 8, 9, 17, 18, 27, 28. பாதக நாட்கள்: 2, 3, 14, 15, 22, 23, 29, 30.

உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள்: அரசு அலுவலகர்களுக்கு சாதனைபுரியும் மாதமாக அமையும். 6, 7 தேதிகளில் ஈடேறும் ஒரு நல்ல ஒப்பந்தம் மனநிறைவைத் தரும். யாவருக்கும் வருமானத்திற்கான பாதை தெளிவுறத் தெரியவரும். வீட்டு உபகரணங்கள் திடீர் பின்னடைவைத் தந்தாலும் பாதிப்பைத் தராது. ராகு, தாயாரின் உடல்நலத்தை சோதிப்பார். தலைக்கவசம் இல்லாமல் பயணம் செய்யவேண்டாம். பிறருக்குரிய மரியாதை கொடுத்தல் வேண்டும். பசுவும் கன்றும் இணைந்த பொம்மை இருந்தால், வீட்டில் தென்கிழக்கு பாகத்தில் வைத்தல் போதுமானது.

மனையாளிடம் வெள்ளிக்கிழமை பகையுணர் வோடு நடந்துகொள்ளவேண்டாம்.

ஹஸ்தம்: செழித்து வளர்ந்த நிம்மதி இம்மாதம் பின்னடைவு தரலாம். 14, 15 தேதிக்கு மேல் நல்லவற்றை எதிர்பார்க்கலாம். அசையா சொத்துகள் வாங்கலாம்; விற்கலாம். திருமணத் தடை ஏற்பட்டால், மோகினிக் கவசம், காமதேவ மந்திரம் உச்சரிக்கலாம். நலிந்தோர் குடும்பத் திற்கு. தாலிக்கு உதவி புரிதல் நன்று. குரு வீட்டில் சூரியன் இருப்பதால் எந்த புது வேலை ஆரம்பிக்கும்போதும் சிறிது இனிப்பை அருந்தி தண்ணீர் பருகியபின் தொடங்குவது நன்று. திருமணத்தடை தொடர்கதையானால், முதிர்ந்த அரசமரப்பட்டைத்துண்டு நான்கை ஒரு பிளாஸ்டிக் கிண்ணத்தில் பாலில் ஊறவைத்து, மூன்று மணி நேரத்திற்குப்பின், அந்த பாலால் முகத்தை வெள்ளிக்கிழமைதோறும் தூய்மை செய்தால் திருமணம் உறுதியாகும்.

சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்: வழக்கமான சிந்தனைகள் இம்மாதம் நல்ல பலனைப் பெற்றுத் தராது. 22, 23 தேதிகளுக்குப்பின் சாதனைகள் படைக்கலாம். குருவருளால் பயணங்கள் நல்ல வேலைவாய்ப்பையும் பணவரவையும் பெற்றுத்தரும். 16, 18 தேதிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும், அரசு உத்தியோகம் செய்வோருக்கும் நல்ல செய்திகள் மனதுக்கு இதமளிக்கும். இம்மாதம் மாலையில் விளக்கேற்றியபின் பெண்கள் அழக்கூடாது. வளையல்களையும் கழற்றக் கூடாது. திருமணமான மாதர்கள் கையில் வளையல் அணியாமல் உணவு பரிமாறக்கூடாது.

இது சூரியனுக்கும் சுக்கிரனுக்கும் உரிய பரிகாரம்.

தொடர்ச்சி அடுத்த இதழில்...

செல்: 93801 73464