சித்தர்தாசன் சுந்தர்ஜி
ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்
இன்றைய நாளில் ஒருவர் அன்று நடை பெறப்போகும் பலன்களை, அவரவர் ஜென்ம நட்சத்திரத்தினைக்கொண்டு அறிந்துகொள்ள "மந்திரேசுவர முனிவர் நாடி'யில் கூறப்பட்டுள்ள வழிமுறையை அறிந்துகொள்வோம்.
ஜாதகமில்லாதவர்கள் அவரவர் பெயரின் முதல் எழுத்திற்குரிய நட்சத்திரம் எதுவென்று பஞ்சாங்கத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.
ஒருவர் அன்றைய நாளின் பலனறிய, அவரின் ஜென்ம நட்சத்திரம் முதல், அன்றைய நாளிலுள்ள நட்சத்திரம்வரை எண்ணிக்கொண்டு, அந்த எண்ணிக் கையை 7-ஆல் பெருக்கிவரும் எண்ணிக் கையை 9-ஆல் வகுத்து, அதில் வரும் மீதி எண்ணைக்கொண்டு பலனறிந்துகொள்ள வேண்டுமென்று மந்திரேசுவரர் நாடியில் கூறியுள்ளார்.
உதாரணம்
அஸ்த நட்சத்திரத்தில் பிறந்த ஒருவரின், தினப்பலன் அறியும் முறையைக் காண்போம்.
ஜென்ம நட்சத்திரம் அஸ்தம்; பலன் காண வேண்டிய நாளின் நட்சத்திரம் சுவாதி என்று கொள்வோம். அஸ்த நட்சத்திரத்திலிருந்து எண்ணினால் சுவாதி மூன்றாவது நட்சத்திரம். இந்த 3 என்ற எண்ணை 7-ஆல் பெருக்கினால் 3 ஷ் 7=21 ஆகும். இந்த 21-ஐ 9-ஆல் வகுத்தால், 9) 21 (2 18 3 மீதி 3 வரும்.
மந்திரேசுவரர் நாடியில் கூறப்பட்டுள்ள கிரக வரிசை முறையில் 3-ஆம் எண் செவ்வாய் கிரகத்தைக் குறிக்கும். அன்று செவ்வாய் ஆதிக்கத்தால் வரும் பலன்களை அடைவார்.
எண்களுக்குரிய கிரகங்கள்:
ஒன்று- சூரியன்
இரண்டு- சந்திரன்
மூன்று- செவ்வாய்
நான்கு புதன்
ஐந்து- குரு
ஆறு- சுக்கிரன்
ஏழு- சனி
எட்டு- ராகு
ஒன்பது- கேது
இனி ஒவ்வொரு கிரகமும், தன் ஆதிக்க நாளில் தரும் பலன்களை அறிவோம்.
1- சூரியன்
மீதி எண் 1 என வந்தால், அன்று சூரியன் தரும் பலன்களை அனுபவிக்கவேண்டும். அரசு, அரசியல்வகையில் தொல்லைகள், தந்தை- மகனிடையே கருத்து வேறுபாடு, அகால போஜனம், முன்கோபம்- அதனால் சிரமங்கள், மனத்தடுமாற்றம், உடற்சோர்வு, சௌகரியக் குறைவு, செயல்களில் தடை, தாமதம், தலைவலி போன்றவை நிகழலாம்.
2- சந்திரன்
மீதி 2 என வந்தால், அன்று அந்தஸ்து, அதிகாரத்தில் உள்ளவர்களின் சந்திப்பு, பெண் களால் நன்மை, சுகம், பயணங்கள், வெளி யூரிலிருந்து நற்செய்தி வருதல், நண்பர்கள் சந்திப்பு- அவர்களால் உதவி, அறுசுவை உணவு, ஆடை, ஆபரண லாபம், தாய்க்கு, மூத்த மகளுக்கு நன்மை போன்ற நற்பலன்கள்.
3- செவ்வாய்
பூமி, நிலம் சம்பந்தமான பிரச்சினைகள், தேவையில்லாமல் கோபம்- அதனால் கலகம், கருத்து வேறுபாடு, அசுபச்செய்தி கேட்டல், அரசு அதிகாரிகளால் பிரச்சினை, மூத்தோர் துவேஷம், பொருளாதார சிரமம், ரத்தம், உஷ்ணம் சம்பந்தமான நோய் சிரமம்.
4- புதன்
நண்பர்கள், உறவினர்கள் சந்திப்பு, விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளுதல், கல்வி உயர்வு, தொழில், வியாபார மேன்மை, சுபச்செய்தி கேட்டல், சூட்சுமமான புத்தி சாதுரியத்தால் காரியங்களில் வெற்றி, அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளால் நன்மை, பெண் நண்பர்களால் சந்தோஷம்.
5- குரு
பெரியோர், நல்லவர்கள் நட்பு, பிறரால் மதிக்கப்படுதல், இனிமையான பேச்சு, மனதில் உற்சாகம், ஆடை, ஆபரணச் சேர்ககை, சுவை யான உணவு, ஆண்களுக்கு சுபகாரியப் பேச்சு, சுபகாரியம் நடத்தல், தடைகள் விலகுதல்.
6- சுக்கிரன்
மனைவி, மகளால் நன்மை, பெண்களுக்கு சுபகாரியம் பற்றிப் பேசுதல், ஆடை, ஆபரணச் சேர்க்கை, பெண்சுகம், பெண்களால் நன்மை, வீடு, வாகன லாபம், தோற்றப்பொலிவு.
7- சனி
செயல்களில் தடை, தாமதம், மனதில் குழப்பம், தூக்கம் குறைதல், எதிரிகளால் தொல்லை, வேலைக்காரர்களால் பிரச்சினை, பிறரால் அவமானமடைதல், கடன் தொல்லை.
8- ராகு
நண்பர்களிடையே கருத்து வேறுபாடு, தீயோர் சேர்க்கை, தீய எண்ணம்- செயல், சொந்த இனத்தாரால் தொல்லை, அலைச்சல், அகால போஜனம், பொருளிழப்பு, திருடர் பயம், மனதில் இனம்புரியாத பயம், முழங் கால் வலி, மூட்டுவலி, கீழே விழுதல், அசுபச் செய்தி கேட்க நேருதல்.
9- கேது
தொழில், வியாபாரத் தடை, லாபம் குறைதல், கடன் தொல்லை, கையிருப்பு பணம் விரயம், முன்கோபம், கௌரவக்குறைவு, அரச கோபம், நண்பர்களிடையே கருத்து வேறுபாடு, அரசியல் தோல்வி, வயிறு, தோல், சளி, சுவாசம் சம்பந்தமான நோய்கள், கர்ப்பிணிகள் சிரமமடைதல்.
இதுபோன்று அன்றைய நாளின் நட்சத் திரம். ஆதிக்க கிரகம் தரும் பலன்களில், ஒவ்வொருவரும் ஏதாவது ஒருசில பலன்களை அனுபவிக்க நேரிடும் என்று மந்திரேசுவரர் நாடியில் கூறப்பட்டுள்ளது.
ஒருசில நாட்களில் காலையில் ஒரு நட்சத் திரமும், அதன்பின் மதியத்திற்குமேல் ஒரு நட்சத்திரமும் இருக்கும். ஒரு நட்சத்திரம் மாறி, அடுத்த நட்சத்திரம் உதயமானது (பிரசன்னம்) முதல் அந்த நட்சத்திரத்திற்குரிய கிரகத்தின் ஆதிக்கப் பலன் தொடங்கிவிடும்.
செல்: 99441 13267