Advertisment

சுகபோக வாழ்வுதரும் சித்தர்கள் அருளிய மந்திரம்! -கவிதா பாலாஜிகணேஷ்

/idhalgal/balajothidam/mantra-blessed-by-siddhars-healthy-life-kavita-balajiganesh

லவிதமான சுகங்களை அனுபவிக்கும் வாழ்க்கையைத்தான் அனைவரும் விரும்புவார்கள்.

Advertisment

ஆனால் அனைவருக்கும் அத்தகைய வாழ்வு அமைந்துவிடுவதில்லை. ஜோதிட சாஸ்திர அடிப்படையில் பார்க்கும்பொழுது, ஒரு நபருக்கு சுகமான வாழ்க்கை உண்டாக அவரின் ஜாதகத்தில் சுக்கிரன் வலுப்பெற்று இருக்கவேண்டும். ஆனால் சிலருக்கு சுக்கிர பகவான் பகை, நீசம் போன்ற தன்மைகளை அடைந்து ஜாதகருக்கு சுகக் குறைவை ஏற்படுத்தி, போராட்டமான வாழ்க்கையைத் தந்துவிடுவார்.

அப்படி சுக்கிர கிரகத்தால் பாதக மான பலன்

லவிதமான சுகங்களை அனுபவிக்கும் வாழ்க்கையைத்தான் அனைவரும் விரும்புவார்கள்.

Advertisment

ஆனால் அனைவருக்கும் அத்தகைய வாழ்வு அமைந்துவிடுவதில்லை. ஜோதிட சாஸ்திர அடிப்படையில் பார்க்கும்பொழுது, ஒரு நபருக்கு சுகமான வாழ்க்கை உண்டாக அவரின் ஜாதகத்தில் சுக்கிரன் வலுப்பெற்று இருக்கவேண்டும். ஆனால் சிலருக்கு சுக்கிர பகவான் பகை, நீசம் போன்ற தன்மைகளை அடைந்து ஜாதகருக்கு சுகக் குறைவை ஏற்படுத்தி, போராட்டமான வாழ்க்கையைத் தந்துவிடுவார்.

அப்படி சுக்கிர கிரகத்தால் பாதக மான பலன்களைப் பெறுபவர்களும் சிறப்பான நற்பலன்களைப் பெற சித்தர்கள் அருளிய எளிய மந்திரம் குறித்துத் தெரிந்துகொள்ளலாம்.

ss

Advertisment

சுகங்களுக்கு அதிபதி சுக்கிரன் என்பது ஜோதிட சாஸ்திர நியதி. பொதுவாக ஜாதகத்தில் குருபகவான் மட்டுமே முழுமையான சுபகிரகம் என கருதப்படுகிறார். எனினும் சுப கிரகமான குரு பகவானைக் காட்டிலும் சுகபோகமான வாழ்வைக் கொடுக்கும் ஆற்றல் சுக்கிரனுக்கு அதிகமுண்டு. அத்தகைய சுக்கிர பகவானுக்குரிய அருளைப் பெறு வதற்கு சித்தர்களால் இயற்றப்பட்ட அற்புதமான சுக்கிர தமிழ் மந்திரத் துதி இது...

சுக்கிர பகவான் மந்திரம்

"ஓம் அசுர மந்திரியே அருட் ஜோதியே

பிரசுரா, பிரகுசல்லியபுயனே, சுங்கனே

எம்மிடர்களைக் களைய சினமதைத்

தவிர்த்து சீக்கிரம் வாவா

ஓம் வசிவசி வசிவசி சுவாஹா.'

இந்த மந்திரத்தை வளர்பிறை வெள்ளிக்கிழமை, அமாவாசை மற்றும் பௌர்ணமி ஆகிய ஏதேனும் ஒரு தினத்தில் முதன்முதலாகத் துதிக்கத் தொடங்குவது சிறப்பு. இந்த மந்திரத்தை துதிக்கத் தொடங்கும் தினத்தன்று, அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்துவிட்டு, உணவேதும் உண்ணாமல், வீட்டுப் பூஜையறையில் இருக்கும் லட்சுமி திருவுருவப் படத்திற்கு முன்பாக நெய் தீபமேற்றி, மாதுளம்பழம் அல்லது கற்கண்டுகள் போன்றவற்றை நைவேத்தியம் வைத்து, வடக்கு திசையைப் பார்த்தவாறு 9, 27 அல்லது 108 எண்ணிக்கை அளவில் மந்திரத் தைத் துதிக்கலாம்.

வெள்ளிக்கிழமைகளில் அருகி லுள்ள சிவன் கோவிலுக்குச் சென்று, அங்கிருக்கும் நவகிரக சந்நிதியில் சுக்கிர பகவானுக்கு மொச்சைப் பயறு அல்லது இனிப்பு ஏதேனும் நைவேத்தியமாகப் வைத்து, மல்லிகைப்பூ சாற்றி, தீபமேற்றி இந்த மந்திரத்தைத் துதிப்பதால் சிறப்பான பலனுண்டு.

சித்தர்கள் அருளிய இம்மந்திரத்தை திட சித்தத்துடன் தொடர்ந்து துதித்து வருவதால், ஜாதகத்தில் சுக்கிர கிரகம் பலமிழந்து நீசம், பகை போன்ற நிலைகளைப் பெற்றவர்களும், சுக்கிர பகவானால் ஏற்படும் பாதகமான பலன்களின் தீவிரத்தன்மை குறைந்து, சுபப் பலன்களைப் பெறலாம். பொருளா தாரரீதியிலான கஷ்டநிலை மாறி, செல்வம் சிறிதுசிறிதாக சேரத் தொடங்கும். சுக்கிர கிரகம் பலமிழந்த காரணத்தால் சுகபோக வாழ்வுக்கு ஏற்பட்ட தடைகள் நீங்கி நல்வாழ்வு பெறலாம்.

செல்: 98425 50844

bala231222
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe