Advertisment

மந்தனின் மைந்தன் மாந்தியின் மகத்துவம்! -மேல்மருவத்தூர் எஸ். கலைவாணி

/idhalgal/balajothidam/manthans-mindan-manthis-greatness-melmaruvathur-s-kalaivani

வ்வொரு நொடிப்பொழுதும் உலக ஜீவராசிகளின் இயக்கத்திற்கு ஆதாரமான கிரகங்களின் சூட்சமத்தில் அதி சூட்சமம் வாய்ந்த கிரகம் மந்தனின் மைந்தன் மாந்தியே.

Advertisment

நமது ஜோதிடவியலில் சூரியன் முதலான ஒன்பது கோள்களுக்குமே துணைக்கோள்கள் அமைந்துள்ளது. என்றாலும் சனியின் துணைக்கோளான குளிகன் என்கின்ற மாந்தி மட்டுமே ஜோதிடத்தில் பெருமளவு பயன்படுத்தப்படுகின்றது.

Advertisment

ஒரு நபரின் வாழ்வினை அடி மட்டத்திற்கு கொண்டுசெல்லவும், எண்ண முடியாத உயர்வுக்கு எடுத்துச்செல்லவும், பெரும் வல்லமை கொண்ட கிரகம் இந்த மாந்தியாகும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை மாந்தியின் கையாடல் குறைவாகவே உள்ளது. ஆனால் தென்தமிழகத்திலும், கேரளத்திலும், மாந்தியின் பங்களிப்பு அதிகமாக காணப் படுகின்றது.

மேலும் பிரசன்ன, ஆரூட பலன் காண்பதில் மாந்தியின் பங்கு அளப்பரியதாக காணப்படுகின்றது.

புராணத்தில் மாந்தியின் வடிவமைப்பு

இராமாயணத்தில் சகல ஜெயங்களை யும், தீர்க்க ஆயுளையும் பெரும் கிரகங்க ளின் அமைவு எத்தகையதோ அவ்வாறு அமைத்து இராவணன் தன்னுடைய மகனான இந்திரஜித் பிறக்கச் செய்தான். அந்த குழந்தையின் பிறப்புக்கு பின்பு கணிக்கப்பட்ட ஜாதகத்தில் யாராலும் வெல்லமுடியாத வீரனாக திகழ்வான் என்ற அமைப்பு இருந்தது. என்ற போதிலும் இந்திரஜித்தை வீழ்த்தி தர்மம் நிலைநாட்ட படவேண்டும் என்ற நியதி இருந்த காரணத்தால், ராமனால் வதம் செய்யப்பட்ட வாலிக்கு கிரக அந்தஸ்து கொடுத்து, இந்திரஜித் ஜாதகத்தில் எட்டாம் பாவகத்தில் அந்த மாந்தியை இடம் பெறச் செய்து, இந்திரஜித் அழிவுக்கு வழி வகுக்கப்பட்டது. இதனால் இப்பொழு தும் எட்டில் மாந்தி நின்ற ஜாதகருக்கு கூட்டு மரணமே நிகழும் என்ற கருத்து நிலவுகின

வ்வொரு நொடிப்பொழுதும் உலக ஜீவராசிகளின் இயக்கத்திற்கு ஆதாரமான கிரகங்களின் சூட்சமத்தில் அதி சூட்சமம் வாய்ந்த கிரகம் மந்தனின் மைந்தன் மாந்தியே.

Advertisment

நமது ஜோதிடவியலில் சூரியன் முதலான ஒன்பது கோள்களுக்குமே துணைக்கோள்கள் அமைந்துள்ளது. என்றாலும் சனியின் துணைக்கோளான குளிகன் என்கின்ற மாந்தி மட்டுமே ஜோதிடத்தில் பெருமளவு பயன்படுத்தப்படுகின்றது.

Advertisment

ஒரு நபரின் வாழ்வினை அடி மட்டத்திற்கு கொண்டுசெல்லவும், எண்ண முடியாத உயர்வுக்கு எடுத்துச்செல்லவும், பெரும் வல்லமை கொண்ட கிரகம் இந்த மாந்தியாகும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை மாந்தியின் கையாடல் குறைவாகவே உள்ளது. ஆனால் தென்தமிழகத்திலும், கேரளத்திலும், மாந்தியின் பங்களிப்பு அதிகமாக காணப் படுகின்றது.

மேலும் பிரசன்ன, ஆரூட பலன் காண்பதில் மாந்தியின் பங்கு அளப்பரியதாக காணப்படுகின்றது.

புராணத்தில் மாந்தியின் வடிவமைப்பு

இராமாயணத்தில் சகல ஜெயங்களை யும், தீர்க்க ஆயுளையும் பெரும் கிரகங்க ளின் அமைவு எத்தகையதோ அவ்வாறு அமைத்து இராவணன் தன்னுடைய மகனான இந்திரஜித் பிறக்கச் செய்தான். அந்த குழந்தையின் பிறப்புக்கு பின்பு கணிக்கப்பட்ட ஜாதகத்தில் யாராலும் வெல்லமுடியாத வீரனாக திகழ்வான் என்ற அமைப்பு இருந்தது. என்ற போதிலும் இந்திரஜித்தை வீழ்த்தி தர்மம் நிலைநாட்ட படவேண்டும் என்ற நியதி இருந்த காரணத்தால், ராமனால் வதம் செய்யப்பட்ட வாலிக்கு கிரக அந்தஸ்து கொடுத்து, இந்திரஜித் ஜாதகத்தில் எட்டாம் பாவகத்தில் அந்த மாந்தியை இடம் பெறச் செய்து, இந்திரஜித் அழிவுக்கு வழி வகுக்கப்பட்டது. இதனால் இப்பொழு தும் எட்டில் மாந்தி நின்ற ஜாதகருக்கு கூட்டு மரணமே நிகழும் என்ற கருத்து நிலவுகின்றது. மேலும் சனியின் உடைப்பட்ட கால்தான் மாந்தி என்ற நிலையும் நம்மிடையே பெருமளவு பேசப்படுகின்றது. அறிவியல் மற்றும் விஞ்ஞானம் கூறும் மாந்தியின் நிலையானது.

ss

மாந்தி

டைட்டன் (பஒபஆச) என்று அழைக்கப் படுகின்றது.

இது 1222000 கிலோமீட்டர் உள்ள ஆரத்தில் சுற்றிவருகிறது, சூரிய குடும்பத்தி லுள்ள துணைக்கோள்களில் சந்திரனுக்கு அடுத்து இரண்டாவது இடத்தை பெறுகி றது, மாந்தியின் விட்டம் 5,150 கிலோ மீட்டர். மாந்தியினை டச் விஞ்ஞானி கிறிஸ்டியன் ஹியூஜன் என்பவர் 1965-ல் கண்டறிந்தார். அதைத்தொடர்ந்து கிபி 1979-ஆம் ஆண்டு சனி கிரகத்தை நெருங்கிய அமெரிக்க விண் கலமான பயணிர் (டஒஞசஊஊத), சனியின் புதிய வளையத்தையும், உப கிரகத்தையும், கண்டது. ஆயினும் மாந்தி என்று கண்டு பிடிக்கப்படவில்லை அதன்பின் 1980-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மாந்திக்கு சுமார் 4,000 கிலோ மீட்டர் அருகில் பறந்து சென்ற அமெரிக்க வாயெஜர் 1 (யஞவஆஏஊத) என்ற விண்கலம் தனது அகச்சிவப்பு கதிர் கண்களால் அந்த உப கிரகத்தின் வளிமண்டலத்தை துருவி பல தகவல்களை தந்தது. இன்றைய சூழ்நிலையில் தண்ணீர் என்ற அம்சமே அங்கு இல்லை என்றாலும் மாந்தியின் சீதோசனமும், வளிமண்டல கூட்டமைப்பும், என்றேனும் ஒருநாள் உயிரணுக்களை தோற்றுவிக்கக்கூடும் என்ற நிலையை ஆராய்ச்சியாளர்கள் தங்களின் கருத்தாக பதிவு செய்கின்றார்கள்.

ஜாதகத்தில் மாந்தியின் நிலை

மாந்தி என்ற அளப்பெரிய சக்திகொண்ட கிரகத்திற்கு சொந்த வீடுகளோ சொந்த நட்சத்திரமும் கிடையாது, இவற்றிற்கு கோட்சார பலனோ அல்லது பரிவர்த் தனை யோகமோ ஜோதிடத்தில் கொடுக்கப் படவில்லை.

மாந்தி பிற கிரகங்களைப்போல பாகைவீதமாக நகர்வது கிடையாது. இது ஓர் இடத்தில் மறைந்து மற்றொரு இடத்தில் உதயமாகும் தன்மை கொண்டது.

ஒவ்வொரு நாளும் மாந்தியின் உதய நேரம் கிழமைகளுக்கு தகுந்தவாரும் பகல் இரவு நேரங்களுக்கு தகுந்தவாரும் மாறுபடும்.

மாந்தி திதிசூனியம், வக்ரம், அஸ்தங்கம் போன்ற நிலையினால் பாதிப்படையாது.

அதேபோன்று மாந்தி நின்ற ராசிநாதன் ஆட்சி, உச்சம், நட்பு, பகை, நீசம் போன்ற நிலையில் இருந்தாலும், இந்த மாந்தி சீர்குலையாது.

இது கேந்திர கோணங்களினாலும், தசா, புக்தி, பலன்களாலும் மட்டு படாது.

திதி, யோகம், கரணம், வேளை, ஹோரை போன்றவை மாந்தியை கட்டுப்படுத்த முடியாது.

பாவிகளுடன் இணைந்தால் பாவத் துவமும், சுபர்களுடன் இணைந்தால் சுபத் துவமும், கொள்ளும் நிலையும் மாந்திக்கு கிடையாது.

லக்ன சுபரின் சாரம் பெற்றால் மட்டும் மாந்தி சற்று கட்டுப்படுவார்.

ஒரு ஜாதகத்தில் மாந்தி ஏறிய சாரநாதனின் நிலையினைகொண்டு அவர்களின் கர்ம பதிவினை கணிக்கமுடியும், அவர்கள் எந்த வகையிலான துன்பத்திற்கோ அல்லது எந்தவகையிலான பாதிப்புக்கோ ஆட்பட்டு இருப்பார்கள், என்பதை மாந்தியின் நிலைகொண்டு அறியமுடியும்.

மாந்தியும் பாவகத் தொடர்பும்

ஒரு ஜாதகத்தில் முதல் பாவகமான லக்னத்தில் மாந்தி நிற்கும் நிலையானது, திறமைகள் இருக்கப்பெற்றும் அதை வெளிப்படுத்த முடியாத சூழ்நிலையினை உருவாக்கும். மாரி வெளிப்படுத்தினாலும், அதை பிறரால் அங்கீகரிக்க முடியாத தன்மையினை உருவாக்கும். இவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையப்பெறாது.

அப்படி அமைந்தால் அந்த வாய்ப்பினை இவர்களாகவே தவறவிடுவார்கள்.

முன் ஜென்மத்தில் செய்த பாவத்தின் காரணமாக இவர்களுக்கு பிரேத சாபம் அமைய பெற்றிருக்கும்.

இரண்டாம் இடத்தில் மாந்தி

இரண்டில் அமையப்பெற்ற மாந்தி குடும்ப அமைப்பு சிறப்பாக அமையாது. வருமானம் சார்ந்த பிரச்சினைகள் இவர்களின் குடும்பத் தில் இருக்கும். பேச்சால் கவலை, கஷ்டங்கள், விபரீதம் போன்றவை ஏற்படும்.

மூன்றில் அமையப்பெற்ற மாந்தி

மூன்றில் அமைந்த மாந்தி சகோதரன் மற்றும் சகோதரிரீதியான பலத்தினை இழக்க செய்யும். இவர்களுக்கு சகோதரன் பெரும்பாலும் இருப்பதில்லை அப்படியே இருந்தாலும் அவர்களின் ஒத்துழைப்பு இவர்களுக்கு இருக்காது. பயணத்தின்மூலம் ஆதாயம் எதிர்பார்த்த வெற்றி போன்றவை மூன்றாம் இடத்து மாந்தி அளிக்கும்.

நான்காம் இடத்தில் அமையப்பெற்ற மாந்தி

நாளில் அமையப்பெற்ற மாந்தி வீடு, வாகனம், மனை போன்றவற்றினால் நெருடல்களையும், சொந்த வீடு அமையாத நிலையும், தாயாரின் உடல் நிலையில் கவலைகளையும் கொண்டு சேர்க்கும்.

ஐந்தில் அமையப்பெற்ற மாந்தி

ஐந்தாம் இடத்தில் அமையப்பெற்ற மாந்தி புத்திர தோஷத்தையும், புத்திர சோகத்தையும், சுட்டிக்காட்டும். குலதெய்வ சாபம் மற்றும் குலதெய்வம் என்னவென்றே தெரியாத நிலை போன்றவற்றினை எடுத்துரைக்கும்.

பிள்ளைகளினால் உதவிபெற முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தும்.

ஆறாம் இடத்து மாந்தி

ஆறில் அமையப்பெற்ற மாந்தி கடன், நோய், எதிர்ப்பு போன்றவற்றினை இல்லாமல் செய்யும். மேலும் உழைப்பு இல்லாமல் பண வரவை ஏற்படுத்தி கொடுக்கும்.

ஏழாம் இடத்தில் அமையப்பெற்ற மாந்தி

ஏழில் அமைந்த மாந்தி திருமணத் தடையினை கூறும். மேலும் தம்பதியினர் இடையே பல இன்னல்களையும், சிக்கல் களையும் உருவாக்கும் சூழ்நிலையை தரும். அதோடு மட்டுமல்லாமல் கூட்டுத் தொழில், நண்பர்களின்மூலமாக ஏமாறுதல் போன்றவற்றினை ஏழாம் இடத்து மாந்தி அளிக்கும்.

எட்டாம் இடத்து மாந்தி

எட்டில் அமையப்பெற்ற மாந்தி வம்பு, சண்டை, வழக்கு போன்றவற்றினை தரும். மேலும் அதீத கண்டங்களை தந்தலிக்கும்.

ஒன்பதாம் இடத்து மாந்தி

ஒன்பதில் அமையப்பெற்ற மாந்தி பூர்வீக சொத்தினை வேறு யாரோ ஒருவர் அனுபவிக்கும் சூழ்நிலையை உருவாக்கும். பூர்வீக சொத்தினாள் பிரச்சினைகள் போன்ற வற்றினை தரும். தந்தை மற்றும் மகனுக்கு இடையிலான உறவில் பெரும் இன்னல் களை ஏற்படுத்தும். ஒன்பதாம் இடத்து மாந்தி, செய்த செயலுக்கான பலனை கிடைக்க விடாமல் செய்யும்.

பத்தாம் இடத்து மாந்தி

பதில் அமையப்பெற்ற மாந்தி தொழிலில் உச்ச நிலைக்கு கொண்டு சேர்க்கும். தொழிலின் மூலம் அதீத வருமானத்தை இணையும் லாபத் தையும் தரும்.

பதினோராம் இடத்து மாந்தி 11-ல் அமையப்பெற்ற மாந்தி அதீத லாபத்தினை தரும். மேலும் தூர தேசம் மற்றும் உலகத்தை சுற்றிவரும் ஆற்றலையும், அதனால் ஏற்படும் மகிழ்ச்சியினையும் தரும்.

பன்னிரண்டாம் இடத்து மாந்தி

பன்னிரண்டில் அமையப்பெற்ற மாந்தி அயன, சயன மோட்ச, விஷயங்களில் திருப்தி தராத ஒரு சூழ்நிலையினை உருவாக்கும். மனம் சார்ந்த உடல் சார்ந்த, பொருளாதாரச் சார்ந்த பல இடர்பாடுகளை ஏற்படுத்தி வாழ்வின் சுகங்களை மறுக்கச் செய்யும்.

எந்த லக்னமாக இருந்தாலும் சிம்மத்தில் அமைந்த மாந்தியும், சூரியனோடு இணைந்த மாந்தியும் பெரும் பாதிப்பினை தருவது இல்லை.

மாந்தியின் பரிகார ஸ்தலங்கள்

அரக்கோணம் அருகில் அமையப்பெற்ற மாந்தையினால் பூஜிக்கப்பட்ட திருவாலங்காடு சென்று வழிபட மாந்தியின் தோஷம் இறுகப்பிடித்த மணலாக கரைந்துவிடும்.

மேலும் நாச்சியார் கோவிலை அடுத்து அமைந்துள்ள திருநாரையூர் என்ற ஆலயமும் மாந்தியின் பரிகார ஸ்தலத்தில் ஒன்று. இங்கும் உங்களின் வழிபாட்டினை மேற்கொள்ளும்பொழுது இறை அருள் நிறைந்து மாந்தி மகத்தான ஒரு வாழ்வினை அளிப்பார்.

bala140723
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe