மைத்ரேயர் தன் குரு பராசர மகரிஷி யிடம், "மதிப்பிற்கும் மரியாதைக்குமுரிய மகாமுனிவரே, பெண்களின் உடல் பாகங்களைப் பொருத்து அவர்களுக்கு ஏற்படும் அனுகூலமான அல்லது அனுகூலமற்ற பலன்களைத் தெளிவாக விளக்கவேண்டும்'' என்று தலைவணங்கிக் கேட்டுக்கொண்டார். மகரிஷியும், "சிஷ்யா, தற்பொழுது உனக்கு இது விஷயமாக பகவான் சிவபெருமான் பார்வதி தேவியிடம் குறிப்பிட்ட விஷயங்களை விவரிக்கி றேன்'' என்று கூறத் தொடங்கினார்.

பாதங்கள்

எந்தவொரு பெண்ணின் பாதம் ஒன்றுபோலும், மிருதுவானதாகவும், பஞ்சுபோன்றும், நல்ல வளர்ச்சியுடன் கூடியதாகவும், மிதமான வெப்பத் துடனும், வியர்வை அதிகமில்லாமலும், இளஞ்சிவப்பு (பிங்க்) வண்ணத்திலும் இருக்குமாயின், அவள் தன் காமவிகாரங்களில் முழுமையான, திருப்தியான இன்பம்பெற்று சந்தோஷ வாழ்க்கையை அனுபவிப்பாள். மாறாக சதைப் பற்றில்லாத, கடினமான, கரடுமுரடான, ஈரமற்ற, இளஞ்சிவப்பு (பிங்க்) வண்ணமில்லாத பாதங்களை உடையவள் மிகவும் கஷ்டங்களை அனுபவிப்பாள் என்று குறிப்பிடுகிறார்.

Advertisment

dd

எந்தவொரு பெண்ணின் பாதத்தில் சங்கு, ஸ்வஸ்திக், சக்கரம், தாமரை, கொடி, மீன், குடை மற்றும் மேல்நோக்கிய நீண்டகோடு ஆகிய சின்னங்கள் இருப்பின், அவளொரு ராணியாகி, அனைத்து வித இன்பங்களையும், சந்தோஷங்களையும், சௌபாக்கியங்களையும் பெற்றுத் திகழ்வாள். மாறாக, பாம்பு, எலி, காக்கை போன்ற சின்னங்களை உடையவ ளாக இருப்பின், அவள் ஏழையாகவும், கஷ்டங்கள் நிறைந்த வாழ்க்கை உடையவளாகவும் இருப்பாள் என்று குறிப்பிடுகிறார்.

கால் நகங்கள்

மேலும், கால்களிலுள்ள நகங்கள் மேடாகி, வட்ட வடிவத்தில் அமைந்து இளஞ்சிவப்பு வண்ணத்தில் இருந்தால் அவள் சந்தோஷ சாம்ராஜ்ஜியத்தில் அனைத்துவித வசதிகளுடன், இன்பத்துடன் வாழ்கிறாள். மாறாக, கருப்புநிறம் கொண்ட உடைந்த நகங் களை உடையவள் கஷ்ட ஜீவனத்தை உடையவளாகிறாள்.

காலின் கட்டைவிரல்

கால்களிலுள்ள கட்டை விரல்கள் உயர்வாக, நல்ல வளர்ச்சிபெற்று வட்டவடிவமாக இருக்க, என்றும் இன்பம் மிக்கவளாகவும்; மாறாக சிறிதாகவும் சீரற்றதாகவும் சமமாகவும் வடிவம்கொண்ட கட்டை விரல்களை உடையவள் கஷ்டத்தைத்தான் அனுபவிப்பாள்.

பெண்ணின் கால் விரல்கள் தடிமனாகவும், மிருதுவானதாகவும், வட்ட வடிவமானதாகவும், நல்ல வளர்ச்சியுடையதாகவும் இருப்பின் நல்ல அனுகூலமான பலன்களை அனுபவிப் பாள். நீண்ட விரல்களையுடையவள் ஒழுக்க மற்றவளாகவும், மெலிந்த விரல்களையுடைய வள் ஏழ்மை நிலையிலும் இருப்பாள் என்று முனிவர் விவரிக்கிறார்.

கால் விரல்களைப் பற்றிய பிற விவரங்கள்

● குட்டையான விரல்- குறைவான ஆயுள்.

● விரல்கள் நீண்டதாகவும், குட்டையானதாக சீரற்ற வடிவிலும் இருப்பின்- கபடதாரியாக இருப்பாள்.

● சமமான அல்லது தட்டையான விரல்கள்- பணியாளாகத் திகழ்வாள்.

● அதிக இடைவெளி விட்டிருப்பின்- செல்வமற்றவளாக இருப்பாள்.

● ஒன்றின்மேல் ஒன்றாக இருப்பின்- விதவை மற்றும் பிறர் தயவில் வாழக்கூடிய வள்.

● தூசு பறக்க நடப்பவளாக இருப்பின்- ஆசையற்ற (காமம்), தன் குடும்பத்திற்கு (பிறந்த, புகுந்த வீட்டுக்கு) அவமானத்தை ஏற்படுத் தக்கூடியவளாகவும் இருப்பாள்.

● சிறிய விரல்களாகவும், தரையில் படாத நிலையில் இருந்தாலும்- தன் கணவனை அழித்து, வேறொருவனை மணப்பாள்.

● நடுவிரலும், அதற்கு அருகிலுள்ள விரலும் தரையைத் தொடாதிருந்தால்- அவள் விதவையாவாள்.

● பெருவிரலைவிட அதற்கடுத்த விரல் நீண்டிருந்தால்- திருமணத்திற்கு முன்பே சோரம் போவாள். ஒழுக்கமற்றவளாகத் திகழ்வாள்.

பாதத்தின் பின்புறம்

பெண்ணின் பாதத்தின் பின்பகுதி உயரமாக இருந்து, வேர்வையின்றியும், மிருதுவாகவும், வழுவழுப்பாகவும் இருப்பின் அப் பெண் ராணியாவாள். இந்த நிலைகள் மாறியிருந் தால் ஏழ்மை அவளைத் தழுவும். நரம்பு தெரிந்தால் அவள் பயணம் செய்வதில் ஆர்வமுள்ளவளாக இருப்பாள். அவ்விடத் தில் மயிர் இருந்தால் அவள் வேலைக்காரியாக இருப்பாள். எலும்பாக, சதைப்பற்றற்றதாக இருந்தால் அவளது மர்ம உறுப்பில் குறைபாடிருக்கும்.

குதிக்கால்கள்

குதிக்கால்கள் சமமாக இருப்பின் அப்பெண்ணுக்கு சிறப்பாக அமைந்த, விரும்பந்தகுந்த யோனி அமையும். அதுவே தடிமனான குதிக்கால் என்றால் குறையுள்ள யோனி அமையும். உயரமான குதிக்கால் உள்ளவளுக்கு காம இச்சை இருக்காது. நீண்ட குதிக்கால் உள்ளவள் வாழ்வில் கஷ்டங்களை அனுபவிப்பாள் என்று உரைத்தார்.

கால்கள்

சமமான, வழுவழுப்பான, அழகாக அமைந்த, உருண்ட, நரம்புகள் வெளித்தெரியாத கால்களை உடையவள் ராணியாவாள்.

மூட்டு

வழுவழுப்பான, வட்டவடிவமான, பலம்மிக்க மூட்டு ஆகியவை அனுகூலமான நிலையைக் குறிப்பிடுவனவாகும். எலும்பான மூட்டை உடையவள் ஒழுக்கம் கெட்டவளாக இருப்பாள். தளர்வான மூட்டை உடையவள் ஏழ்மை நிலையடைவாள். விதவையாக இருப்பாள்.

தொடைகள்

யானையின் தும்பிக்கைபோன்று உருண்டு திரண்ட தொடைகள் இரண்டும் நெருக்கமாக அமைந்து, மயிரற்று மிருதுவாக இருந்தால் அப்பெண் ராணியாவாள். மாறாக, சமமாக மயிர்கள் நிறைந்திருப்பின் ஏழ்மையில் உழல்வாள்.

இடுப்பு

24 விரற்கடை அகலம்கொண்ட, சம அளவாக, நன்கு வளர்ச்சியுற்ற இடுப்பானது அதிர்ஷ்டமுள்ள பெண்ணைக் குறிகாட்டுகிறது. சதைப்பற்றில்லாத, சப்பையான, நீண்ட, பள்ளமான, குகைபோன்ற வடிவுடைய இடுப்பையுடையவள், விதவையாகி இன்னல் களை அடைவாள் என்பதை முன்னறிவிப்பு செய்கிறது.

இடை

மேலெழுந்த, சதைப் பற்றுள்ள, அகன்ற இடையுடையவள் அனு கூலமான பலன்களை அடைகிறாள். அப்படி இல்லையென்றால் அனுகூலமற்றதாகிவிடுகிறது என்கிறார் பராசர முனிவர் தனது "பிருகத் பராசர ஹோரா சாஸ்த்ரா' எனும் நூலில்.

மர்ம உறுப்பு

இளஞ்சிவப்பு (பிங்க்) வண்ணமும், மறைந் துள்ள யோனிக் காம்பும், ஆமையின் முதுகு போன்ற வளைந்த அமைப்பும், மெலிதான, மயிர்கள் நிறைந்த, அரச இலைபோன்ற வடிவமும், வழுவழுப்பான தன்மைகொண்ட யோனியானது மிக அதிகமான அனுகூலம் உடையதாகும். மானின் பாதம் போன்று அல்லது அடுப்பு

போன்ற அமைப்பும், உயர்ந்த யோனிக் காம்பும், கடினமான மயிரும் உடைய அமைப் பானது, கெடுதலான நிலையை குறிகாட்டு கிறது. மர்ம ஸ்தானத்தின் இடப்பகுதி உயர்ந் திருந்தால், அப் பெண்ணுக்கு பெண் குழந்தைகள் அதிகம் பிறக்கும். வலப்புறம் மேடானால் அதிக ஆண் குழந்தைகள் பிறக் கும். சங்கு அல்லது சிப்பிபோன்ற அமைப்பை யுடையவள் மலடியாவாள் என்று மகரிஷி பராசரர் உரைக்கிறார்.

தொப்புளுக்குக் கீழுள்ள பகுதி மிருதுவாக, அகன்ற, சிறிது மேடான பகுதியாக அமைவது அனுகூலம் மிக்கது. நரம்புகள் வெளியில் தெரிய, மயிர் நிறைந்த, மடிப்புகள் அதிகமுள்ள பகுதியாக அமைவது நல்லதல்ல; கஷ்டங்களையே தரும்.

தொப்புள்

ஆழமான, வலப்புறம் வளைந்த அமைப்புடைய தொப்புள் சிறப்பானது; அனுகூலமானதாகும். முடிச்சுகளுடன்கூடிய, இடப்புறம் வளைந்த, மேடான நிலையிலுள்ள தொப்புள் அனுகூலமற்றது.

வயிறு

அகன்ற வயிறானது, அமைப்பான யோனியைக் குறிகாட்டுவதோடு, அப்பெண் அதிக ஆண் குழந்தைகளைப் பெற்றெடுப்பாள் என்பதைக் காட்டுகிறது. ஒரு பெண்ணின் வயிறு தவளையின் உருவம்போன்று காட்சி யளித்தால், அவளின் மைந்தன் மன்னனா வான் என்று குறிப்பிடுகிறார். மேலான வயிறை யுடையவள் (தொப்பையுள்ள பெண்) குழந்தை யற்றவளாகிறாள். மடிப்புகள் நிறைந்த வயிறுடைய மங்கை சந்நியாசினியாவாள். வயிற்றில் வளைந்த மடிப்புகளையுடைய பெண் பணிப் பெண்ணாவாள்.

விலா எலும்பு

விலா எலும்பை மறைத்துள்ள பகுதி சமமானதாக, மிருதுவாக, நல்வளர்ச்சியடைந்ததாக இருப்பின் அனுகூலமானது. அது மேடாகி, நரம்புகள் தெரிய, மயிர்களும் அதிகமிருப்பின் அனுகூலமற்றதாகும்.

மார்பு

சமமான, குறைவான மயிருள்ள மார்பு அனுகூலமானது. அகன்ற, மயிரற்ற மார்பு அனுகூலமற்றது.

கொங்கை

சமமான அளவுடைய, சதைப்பற்றுள்ள, உருண்டு திரண்ட, வட்டவடிவமான, திடமான, பலமான நெருக்கமாகவுள்ள கொங்கைகள் அதிர்ஷ்டத்தைக் குறிக்கிறது. நெருக்கமில்லாத, முன்பகுதியில் தடிமனான, சதைப்பற்றில்லாத கொங்கை துரதிஷ்டத்தைக் குறிகாட்டுகிறது. எழுச்சியான வலக் கொங்கையுடைய பெண் ஆண் மகவினை ஈன்றெடுப்பாள் என்பதையும், எழுச்சியான இடக்கொங்கையுள்ளவர்கள் பெண் குழந்தைகளைப் பெற்றெடுப்பர் என்பதையும் குறிகாட்டுகிறது. காம்பைச் சுற்றி யுள்ள பகுதி கருப்பாகவும், அம்சமாகவும் இருப்பது பெண்ணின் அதிர்ஷ்ட நிலையையும், அமுங்கியுள்ள, சிறிதான கொங்கை அதிர்ஷ்டமற்ற நிலையையும் குறிகாட்டுகிறது.

இதற்கு மேலான உடல் பாகங்களின் தன்மைகளை மற்றுமொரு கட்டுரையில் காண்போம் நண்பர்களே.