Advertisment

மங்களம் பெருக்கும் மார்கழி விரதங்கள்! -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி

/idhalgal/balajothidam/mangalam-increasing-markazhi-fasts-prasanna-astrologer-i-anandi

னிதர்களின் முன்ஜென்ம கர்மவினைத் தொடர்ச்சியே இந்த மனிதப்பிறவி. முன் ஜென்ம வினைகளிலிலிருந்து மீளவும், பிறவா நிலை எய்தவும், கர்மவினையைக் குறைக்கவும் இறையை உணர்தலே தீர்வு. பரம்பொருளின் பொற்பாதங்களை அடையவும், பிறவிப் பெருங்கடனிலிலிருந்து மீளவும் புராணக் கதைகளைப் படிக்கலாம். கோவில் திருப்பணி மற்றும் கும்பாபிஷேகத்திற்கு உதவலாம்.

அல்லது எளிய இறைவழிபாடு மற்றும் தான தர்மங்களைச் செய்யலாம்.

Advertisment

எந்த ஜாதகத்தை எடுத்துக்கொண் டாலும் குறைந்தது நான்கு தோஷங்க ளாவது இருக்கும். அதனால் அனைத்து விதமான தோஷங்களிலிருந்தும் விடுபட பிரபஞ்சத்தால் வழங்கப்பட்ட மார்கழி மாதமே சிறந்தது என்று இந்துமதம் கூறுகிறது. மனிதர்களுக்கு ஒரு வருட மென்பது தேவர்களுக்கு ஒரு நாளாகும். தைமுதல் ஆனிவரையுள்ள காலம் பகல்; ஆடிமுதல் மார்கழிவரையுள்ள காலம் இரவாகும். தேவர்களின் பகல் காலமான தைமுதல் ஆனிவரை சுப காரியங்களை மிகுதியாக நடத்துகிறோம்.

andal

தேவர்களின் இரவுக் காலமான ஆடிமுதல் மார்கழிவரையிலான மாதங்களில் விரதங்கள், வழிபாடுகள், தியானம் முதலியவற்றைச் செய்கிறோம்.

Advertisment

இரவுக் காலம் முடிகிற தேவர்களின் வைகறைப் பொழுது மார்கழி மாதமாகும். மார்கழி மாதம் தேவர்களுக்கு அதிகாலை 4.00 மணி முதல் 6.00 மணிவரையுள்ள இரண்டு மணி நேரத்தைக் குறிக்கும். அதனால் இந்த மாதத்தில் எத்தகைய வழிபாடு செய்தாலும் மிகுதியான சுபப் பலன்களைப் பெறமுடியும்.

ஜோதிட சாஸ்திரம் மார்கழியை தனுர் மாதம் என்கிறது. சூரியன் தனுசு ராசியில் பிரவேசிப்பதால் தனுர் மாதம் என கூறப் படுகிறது. மார்கழி மாதத்தின் மிக முக்கியமான விசேஷமான வழிபாட்டு நாட்களையும் அதற்கான பலன்களையும் இங்கு காணலாம்.

திருமணத்தடை நீக்க

திருமணத்தடை நீக்கும் பாவை நோன்பு இன்று சமுதாயத்தில் நிலவி வரும் முக்கியமான பிரச்சினை திருமணத் தடை. மார்கழி மாதம் என்றாலே நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள். ஆண்டாள் நாள்தோறும் வைகறையில் எழுந்து ஒவ்வொரு பாசுரமாகப் பாடி, திருப்பாவை யால் திருமாலின் திருவடி தொழுது, திருமணம் புரிந்ததும் மார்கழி என்னும் சிறப்புமிக்க மாதத்தில்தான். திருமாலே தனக்குக் கணவராக அமைய வேண்டுதல் வைத்து, மார்கழி மாதத்தில் ஆண்டாள் மேற்கொண்ட விரதமே பாவை நோன்பு.

ஜனனகால ஜாதகத்தில், லக்னத்திற்கு 7, 8-ஆம் இடங்களில் அசுப, நீச கிரகம் இருப்பதால் திருமணத் தடையை சந்திக்கும் கன்னிப் பெண்கள், செவ்வாய், கேது சேர்க்கை இருப்பவர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கலாம்.

காலை 4.30 மணிக்கே நீராடி, திருப்பாவைப் பாடலை மூன்றுமுறை படிக்கவேண்டும். மார்கழி முதல்தேதியன்று "மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னா ளால்' பாடலைத் தொடங்கவேண்டும்.

மார்கழியில் 29 நாட்களே இருப்பதால், கடைசி நாளில் கடைசி இரண்டு பாடல்களை மூன்றுமுறை பாடவேண்டும். இத்துடன் தினமும் வாரணமாயிரம் பகுதியிலிருந்து, "வாரணமாயிரம் சூழ வலம் வந்து, மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத' உள்ளிட்ட பாடல்களைப் பாடவேண்டும்.

ஆண்டாள், பெருமாள் படத்திற்கு துளசி வைத்து, மாலை அணிவித்து வழிபட, ஆண்டாள் அருளால் திருமணத்தடைகள் நீங்கும்.

வியதீபாத வழிபாடு!

ஸ்வஸ்திஸ்ரீ சார்வரி வருடம், மார்கழி மாதம் 7-ஆம் நாள் (22-12-2020) தனூர் மாத மகா வியதீபாதம். (செவ்வாய்க் கிழமை).

வியதீபாதம் என்பது 27 யோகங்களில் ஒன்று. 27 நட்சத்திரத்திரங்களைப் போல 27 யோகங்கள் உண்டு. 27 யோகங்களும் ஒவ்வொரு மாதமும் ஏற்படும். 27 யோகங்களில் 17-ஆவது யோகம் வியதீபாதம்.

ஒரு வருடத்திற்கு 13 வியதீபாத நாட்கள் ஏற்படும். மார்கழி மாதம் ஏற்படும் யோகத்திற்கு மகா வியதீபாதம் என்று பெயர். ஒரு வருடத்தில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம், சிரார்த்தம் செய்யப்படும் 96 நாட்களில் வியதீபாத நாட்களும் அடங்கும். அன்றைய தினம் முன்னோர் களுக்கு தர்ப்பணம் செய்வது சிறந்தது.

சிலருக்கு நல்ல வருமானம் இருக்கும்; ஆனால் பஞ்சம் தீராது. நல்ல திறமைகள் இருக்கும்; ஆனால் சரியான வேலையோ அல்லது வருமானமோ இருக்காது. சிலருக்கு அனைத்து செல்வங்களும் இருக்கும்; ஆனால் வாழ்வில் நிம்மதியே இருக்காது. இதுபோன்ற எத்தனையோ பிரச்சினைகளுக்கும் வெளியே சொல்லமுடியாத தொல்லைகளுக்கும் காரணம் பிதுர் தோஷமே. பிதுர் தோஷம் தீர்ந்தால் அனைத்து வளங்களும் நமது வாழ்வில் தேடிவரும் என்பது நிச்சயம். எக்கடனிருப்பினும் பித்ருக் கடன் என்னும் முன்னோர் கடன் இருக்கக் கூடாது. பித்ருக்களின் ஆன்மாவை சாந்தியடையச் செய்து அவர்களின கோபம், சாபத்திலிருந்து விமோசனம் பெறக்கூடிய நாள் தனுர் மாத வியதீபாதம். இந்த நாளில் செய்யப்படும் பித்ரு பூஜைக்கு, பல தலைமுறையால் தீர்க்கப்படாத பித்ரு தோஷத்தைத் தீர்க்கும் சக்தியுண்டு அன்று தென்தமிழக நெல்லை மாவட்டத்தில், தாமிரபரணி நதிக்கரை யிலுள்ள சேரன்மாதேவி என்னும் ஊரிலுள்ள வியதீபாத கட்டம் என்னும் இடத்தில் நீராடி பித்ருசாந்தி வழிபாடு செய்வது மிகச்சிறப்பு.

இங்கு பித்ருபூஜை செய்வது, வடநாட்டில் கயாவில் பித்ருபூஜை செய்வதற்கு இணையானதாகச் சொல்லப்படுகிறது. (திருநெல்வேலி ஜங்ஷன் மற்றும் பழைய பேருந்து நிலையத்திலிலிருந்து சேரன்மாதேவிக்கு டவுன் பஸ் வசதியுண்டு.)

முன்னோர்களின் இறந்த தேதி, திதி தெரியாதவர்கள், ஜனனகால ஜாதகத்தில் லக்னத்திற்கு ஒன்பதில் சனி, ராகு- கேது, சூரியன் இருப்பவர்கள் மற்றும் ஜனனகால ஜாதகத்தில் சூரியன், சனி; சூரியன், ராகு- கேது; சனி, ராகு- கேது சம்பந்தம் இருப்பவர்கள் இந்த வியதீபாத யோக நாளில் முன்னோர்களை ஆத்மார்த்தமாக வழிபட, முன்னோர்களின் பரிபூரண நல்லாசிகள் கிடைக்கும். மேலும் பங்காளி குடும்பத்தில் வாரிசில்லாமல் இறந்த முன்னோர்களுக்கு முறையான திதி கொடுத்து, ஆன்மாவை ஆத்ம சாந்தியடைச் செய்பவர் களின் ஏழு தலைமுறையினருக்கு சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.

வைகுண்ட ஏகாதசி

ஸ்வஸ்திஸ்ரீ சார்வரி வருடம், மார்கழி மாதம் 10-ஆம் நாள் (25-12-2020) வைகுண்ட ஏகாதசி. (வெள்ளிக்கிழமை) பூமியில் மனிதர்களாய்ப் பிறந்த அனை வருக்கும் அனைத்துவிதமான செல்வங்களை யும் பெற்று வாழ்வதுடன், மீண்டும் பிறவா நிலையும், முக்தியும் அடையவேண்டுமென்ற எண்ணம் இருக்கும். வாழும் வாழ்க்கைக்குத் தேவையான செல்வத்தையும், வாழ்ந்து முடித்தபிறகு மோட்சத்தையும் தரக்கூடிய ஒரு விரதம் ஏகாதசி.

ஏகாதசி திதியில் விரதமிருந்து மகா விஷ்ணுவை வழிபடுபவர்கள் பிறவிப்பிணி நீங்கி வைகுண்டப் பதவியை அடைவார்கள் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இந்த திதியில் விரதமிருப்பதால் மகாவிஷ்ணுவின் அருள் கிடைப்பதுடன், அவர் மார்பில் நீங்காமல் நிறைந்திருக்கும் மகாலட்சுமியின் அருளும் கிடைக்கும்.

ஒவ்வொரு தமிழ் மாதத்ததிலும் வளர்பிறை, தேய்பிறை என இரண்டு ஏகாதசி திதிகள் வந்தாலும், மார்கழி மாதத்தின் வளர்பிறை வைகுண்ட ஏகாதசி மிகவும் சிறப்பு பெற்றது. தேவலோகத்தில் வாழும் தேவர்களுக்கு தை மாதம் முதல் ஆனி மாதம்வரை பகல் பொழுதாகவும், ஆடியிலிருந்து மார்கழி மாதம்வரை இரவாகவும் கருதப்படுகிறது. இதில் பகலை உத்ராயனம் என்றும், இரவை தட்சிணாயனம் என்றும் அழைப்பார்கள். இதன்படி மார்கழி மாதம் தேவலோகத்தில் விடியற்காலையாகும். அக் காலத்தையே "பிரம்ம முகூர்த்தம்' (உஷத் காலம்) என்கிறோம்.

இந்த நேரத்தில் வைகுண்ட வாசல்கள் திறந்தே இருப்பதால்' பகவான் அதன் வழியாக வெளியேவந்து காட்சிதரும் நாள் வைகுண்ட ஏகாதசி. அன்று விஷ்ணு ஆலயங்கள் அனைத்திலும் சொர்க்கவாசல் திறப்புவிழா நடத்தப்படும். இறைவனைத் தொழும் ஜீவாத்மா, வைகுண்ட வாசலில் வழியாக பரமாத்மாவைச் சேர்கிறது என்னும் ஐதீகத்தின் அடிப்படையில், இந்த சொர்க்க வாசல் திறப்புவிழா நடைபெறுகிறது. வைகுண்ட ஏகாதசியை மோட்ச ஏகாதசி என்றும் அழைப்பார்கள். வைகுண்ட ஏகாதசி யன்று அதிகாலையில் நீராடி பெருமாள் கோவிலுக்குச் சென்று, சொர்க்கவாசல் வழியாக வந்து இறைவனை வணங்க வேண்டும். நாள் முழுவதும் உபவாசமிருந்து மகாவிஷ்ணுவை வழிபடவேண்டும். விஷ்ணு புராணம், விஷ்ணு சகஸ்ரநாம ஸ்தோத்திரங் களைப் பாராயணம் செய்யவேண்டும்.

அன்றைய தினம் இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்து மகாவிஷ்ணுவை வழிபட வேண்டும். அல்லது மிக எளிமையாக "ஓம் நமோ நாராயணாய' என்றும் கூறலாம்.

மறுநாள் துவாதசியன்று கோவிலுக்குச் சென்று மகாவிஷ்ணுவை வழிபட்டு துளசி தீர்த்தத்தை அருந்தி, உபவாசத்தை முடித்துக் கொள்ளலாம்.

இந்த வழிபாட்டை மேற்கொள்வதன் மூலமாக தீராத நோய்கள் தீர்ந்து, சகல செல்வங்களும் உண்டாகும். பித்ரு தோஷம் மற்றும் பிரம்மஹத்தி தோஷம் அகலும். முக்தி கிடைக்கும். உடலும், ஆன்மாவும் சுத்தமடையும். ஜனன கால ஜாதகத்தில் 2, 5, 9, 11-ஆம் அதிபதிகள் வலிலிமை குறைவால் ஏற்படும் பொருளாதாரக் குற்றம் நீங்கும். புகழ், அந்தஸ்து மற்றும் கௌரவப் பதவிகள் தேடிவரும்.

தொடர்ச்சி அடுத்த இதழில்...

செல்: 98652 20406

bala181220
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe