மங்களம் பெருக்கும் மார்கழி விரதங்கள்!

/idhalgal/balajothidam/mangalam-increasing-markazhi-fasts-prasanna-astrologer-i-anandi-0

-பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி

சென்ற இதழ் தொடர்ச்சி...

திருவாதிரை விரதம்

ஸ்வஸ்திஸ்ரீ சார்வரி வருடம், மார்கழி மாதம் 14-ஆம் நாள் திருவாதிரை விரதம்- ஆருத்ரா தரிசனம் 29-12.2020 மாலை 5.32 மணிக்குத் தொடங்கி 30-12-2020 மாலை 6.55 வரையுள்ளது.

மார்கழி மாதம்தான் தேவர்களுக்கு விடியற்காலைப் பொழுதென்பதால், அவர்கள் மகாதேவரை மார்கழி மாதத்தில் தரிசிப்பது வழக்கம். அதனால் இந்த மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரமானது சிவபெருமானை வழிபட மிகச்சிறந்த நாளாகும்.

கர்மாவே பெரிது, கடவுள் இல்லை என்றவர்களின் அறியாமையை நீக்க சிவபெருமான் நடராஜராக ஆருத்ரா தரிசனக் காட்சிதந்த நாள்தான் மார்கழி மாதத் திருவாதிரை நட்சத்திர நாளாகும்.

bat

திருவாதிரை விரதமென்பது, திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய பௌர்ணமி நாளில் உபவாசமிருந்து வழிபடும் ஒரு நோன்பாகும். சிவபெருமானின் திருக்கோலங்களில் சிறப்பு மிக்கது நடராஜர் திருவடிவம். ஐந்தொழில் களையும் ஒருங்கே புரிந்து பிரபஞ்சத்தை இயக்கும் நடராஜப் பெருமானுக்கு ஆண்டில் ஆறு தினங்கள் மட்டுமே அபிஷேகம் நடைபெறும். அதில் மார்கழித் திருவாதிரை அபிஷேகம் விசேஷமானது. அன்றைய தினம் சிவாலயங்களில் நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்துகொண்டு ஆருத்ரா தரிசனத்தைக் கண்டால் வீழ்ச்சியில்லாத வாழ்க்கை அமையும். காலைத் தூக்கி நடனமாடும் நடராஜர் வாழ்க்கையையில் ஏற்பட்ட சரிவுகளை நீக்கிவிடுவார்.

மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திர நாளில் தில்லை சிதம்பரத்தில் கோவில் கொண்டருளிய நடராஜப் பெருமானை தரிசிக்க தேவர்கள் ஒன்றுகூடுவதாக நம்பிக்கை.

சிவபெருமான் அருவம், உருவம், அருவுரு வம் என்னும் மூன்று வடிவம் கொண்டவர

-பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி

சென்ற இதழ் தொடர்ச்சி...

திருவாதிரை விரதம்

ஸ்வஸ்திஸ்ரீ சார்வரி வருடம், மார்கழி மாதம் 14-ஆம் நாள் திருவாதிரை விரதம்- ஆருத்ரா தரிசனம் 29-12.2020 மாலை 5.32 மணிக்குத் தொடங்கி 30-12-2020 மாலை 6.55 வரையுள்ளது.

மார்கழி மாதம்தான் தேவர்களுக்கு விடியற்காலைப் பொழுதென்பதால், அவர்கள் மகாதேவரை மார்கழி மாதத்தில் தரிசிப்பது வழக்கம். அதனால் இந்த மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரமானது சிவபெருமானை வழிபட மிகச்சிறந்த நாளாகும்.

கர்மாவே பெரிது, கடவுள் இல்லை என்றவர்களின் அறியாமையை நீக்க சிவபெருமான் நடராஜராக ஆருத்ரா தரிசனக் காட்சிதந்த நாள்தான் மார்கழி மாதத் திருவாதிரை நட்சத்திர நாளாகும்.

bat

திருவாதிரை விரதமென்பது, திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய பௌர்ணமி நாளில் உபவாசமிருந்து வழிபடும் ஒரு நோன்பாகும். சிவபெருமானின் திருக்கோலங்களில் சிறப்பு மிக்கது நடராஜர் திருவடிவம். ஐந்தொழில் களையும் ஒருங்கே புரிந்து பிரபஞ்சத்தை இயக்கும் நடராஜப் பெருமானுக்கு ஆண்டில் ஆறு தினங்கள் மட்டுமே அபிஷேகம் நடைபெறும். அதில் மார்கழித் திருவாதிரை அபிஷேகம் விசேஷமானது. அன்றைய தினம் சிவாலயங்களில் நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்துகொண்டு ஆருத்ரா தரிசனத்தைக் கண்டால் வீழ்ச்சியில்லாத வாழ்க்கை அமையும். காலைத் தூக்கி நடனமாடும் நடராஜர் வாழ்க்கையையில் ஏற்பட்ட சரிவுகளை நீக்கிவிடுவார்.

மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திர நாளில் தில்லை சிதம்பரத்தில் கோவில் கொண்டருளிய நடராஜப் பெருமானை தரிசிக்க தேவர்கள் ஒன்றுகூடுவதாக நம்பிக்கை.

சிவபெருமான் அருவம், உருவம், அருவுரு வம் என்னும் மூன்று வடிவம் கொண்டவர். இம்மூன்று வடிவங்களிலும் சிவபெருமான் அருள்புரியும் தலம் சிதம்பரம்தான் என்பதால், காலச்சூழல் கருதி சிதம்பரம் நடராஜரை வீட்டிலிருந்தே மனதார வழிபடலாம். அன்று முழுவதும் சிவபுராணம், தேவாரம், திருவாச கத்தை பக்தியுடன் படிக்கவேண்டும். அன்று நைவேத்தியமாக களி படைக்கவேண்டும்.

ஜனன கால ஜாதகத்தில் எட்டு, பன்னிரண்டாமிட வலிலிமையால் அதீத துன்பத்தைச் சந்திப்பவர்கள், வாழ் நாளில் எந்த முன்னேற் றமும் இல்லாமல் இருப்பவர்கள் அன்று நடராஜரை வழிபட ஜாதகத்திலுள்ள தோஷம் நீங்கும்.

மேலும் ஒருசில குடும்பங் களில் தலைமுறை தலைமுறையாக துர்மரணம் இருந்துகொண்டே இருக்கும். திருவாதிரை நட்சத்திரம் மனித உடலிலில் தொண்டைப் பகுதியை (நுரையீரல் மற்றும் மூச்சுக்குழாய்) குறிக்கும். இயற்கைக்கு மாறான மரணம் எந்த முறையில் நடந்திருந்தாலும் நுரையீரல், தொண்டை, மூச்சுக்குழல் செயலிலிழக்கும். திருவாதிரை நட்சத்திரம் மிதுன ராசியில் இருக்கிறது. காலபுருஷ மூன்றாமிடம். காலபுருஷ எட்டாமிடமான விருச்சிகத்திற்கு எட்டாமிடம். (எட்டுக்கு எட்டு). அதனால் திருவாதிரை நட்சத்திரத்திற்கும் துர்மரணத் திற்கும் நெருங்கிய சம்பந்தமுண்டு. அதாவது மனித உடலிலில் காற்று வடிவில் (மிதுனம் - திருவாதிரை) ஆன்மாவாக உலாவரும் பரம் பொருளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதவர் களே தவறான முடிவெடுத்து தன்னுயிரை மாய்ப் பார்கள். .உயிரில்லாத உடலால் தனித்து இயங்க முடியாது. இந்தப் பிறவியின் விதிப்பயனை மட்டும் அனுபவிக்கப் பயன் படும் உடலை அழித்தால் அனைத்து துன்பங்களிலிலிருந்தும் விடுபடமுடியுமென்ற தவறான எண்ணத்தால், இறை வடிவில் உடலுக்குள் குடியிருக்கும் ஆன்மா வைத் துன்புறுத்துகிறார்கள். உடலை வேதனைப்படுத்தி வெளியேறும் ஆன்மா எளிதில் சாந்தியடையாது.

நட்சத்திரங்களில் மிகவும் உயர்வானது திருவாதிரை. இயற்கைக்கு மாறான மரணத் திற்கும் ராகுவிற்கும் நெருங்கிய சம்பந்தமுண்டு. இதுபோன்ற குறைபாடு வம்சாவளியாக இருப் பவர்கள் மோட்சத்தைத் தரும் மார்கழி மாதத் திருவாதிரை நாளில் சிவ புராணம் படித்து சிவனடி யார்களுக்கு உணவு, ஆடை தானம் வழங்க வேண்டும். திருவாதிரை நட்சத்திரத்தின் அதி தேவதை நடராஜருக்கு ஆன்மாவின் எண்ணங்களைக் கட்டுப்படுத்தும் சக்தி யுண்டு. மாதந்தோறும் வரும் திருவாதிரை நாட்களில் நடராஜரை வழிபட்டுவர, குடும்பத் தில் துர்மரணம் அடைந்தவர்களால் ஏற்படும் மன சங்கடம் நீங்கும். திருவாதிரை நட்சத்திரத் தில் பிறந்த ராமானுஜரை வழிபட வம்சாவளி தோஷம் நீங்கும். துர்மரணம் அடைந்தவர் களின் ஆன்மா சாந்தியடையும். மனதிலிலிருக்கும் இனம்புரியாத பய உணர்வு, நிம்மதியில்லாத நிலை நீங்கி குடும்பத்தில் அன்பும், அமைதியும் நிலவும்.

மாங்கல்ய பலம் பெருக..

ஜனன கால ஜாதகத்தில் எட்டில் நீச கிரக மிருக்கும் பெண்கள் அல்லது எட்டில் செவ்வாய், சனி, ராகு- கேதுவால் கணவனுடன் மிகுதியாக கருத்து வேறுபாடு இருப்பவர்கள் அல்லது தொழில், உத்தியோக நிமித்தமாக கணவன்- மனைவி பிரிந்து வாழ்பவர்கள், கணவனுக்கு அடிக்கடி தீராத நோய் மற்றும் ஆரோக்கியக் குறைபாட்டைச் சந்திக்கும் பெண்கள் திருவாதிரை நாளில் விரதமிருந்து நடராஜரை வழிபட மாங்கல்ய பலம் பெருகி தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

அனுமன் ஜெயந்தி

ஸ்வஸ்திஸ்ரீ சார்வரி வருடம், மார்கழி மாதம் 27-ஆம் நாள் காலை 9.09 மணி முதல் மார்கழி 28-ஆம் நாள் காலை 7.39 மணி வரை மூல நட்சத்திரம் உள்ளது.

ஸ்ரீ ஆஞ்சனேயர் பிறந்த மார்கழி மாதம் மூல நட்சத்திர தினம் அனுமன் ஜெயந்தி தினமாகக் கொண்டாடப்படும். இந்த ஆண்டு அமாவாசை மூல நட்சத்திரத்திற்கு மறுநாள் தான் வருகிறது.

நமது புராணங்கள், இதிகாசங்களில் எத்தனையோ கடவுள்கள் இருந்தாலும், அனைத்துத் தரப்பு மக்களின் மனதிலும் தனியிடம் பிடித்த காவியநாயகன் ஸ்ரீஆஞ்சனேயர். இராமாயண காவியத்தில் ஈடிணையற்ற இடத்தைப் பிடித்தவர் அனுமன். அறிவு, உடல் வலிலிமை, துணிச்சல், புகழ், ஆரோக்கியம், வாக்கு சாதுர்யம், வீரம் ஆகிய அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்றவர். அஞ்சனை மைந்தன், வாயுபுத்திரன் ஆஞ்சனேயர். பிரம்மச்சர்யத்திற்கு உதாரணமானவர். இறவா வரம்பெற்ற சிரஞ்சீவிகளில் ஆஞ்சனேயரும் ஒருவர். அனுமனின் மகிமைகள் எண்ணிலடங்காதவை. ராமபிரானின் சேவகன் அனுமனை, அவர் அவதரித்த நாளில் வணங்கினால் பலவிதமான தொல்லைகள் தீரும் என்பது நம்பிக்கை.

ஆஞ்சனேயரை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்:

துக்கங்கள், கஷ்டங்கள் நீங்கும். பீடைகள் ஒழியும். நவகிரக தோஷங்கள்- குறிப்பாக சனி கிரக தோஷங்கள் நீங்கும். துஷ்ட சக்திகள், செய்வினை, மாந்திரீக பாதிப்புகள் நீங்கும்.

தொழில், வியாபார முடக்கநிலை நீங்கி நல்ல லாபம் கிடைக்கும். திருமண பாக்கியம், குழந்தைப்பேறு மற்றும் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி போன்ற நன்மைகள் கிடைக்கும்.

அவருக்கு ஸ்ரீ ராமஜெயம் எழுதி மாலை யாகப் போடுவதால், அனைத்து செயல்களும் வெற்றியாகவே முடியும்.

வெண்ணெய் சாற்றினால் குழந்தை பாக்கியமும், துளசி மாலை அணிவித்தால் அனைத்து பாவங்களிலிருந்து நிவர்த்தியும், வடைமாலை சாற்றினால் வழக்குகளில் வெற்றியும், வெற்றிலை மாலை சாற்றினால் திருமணத்தடை நீங்கி கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணமும் நடக்கும்.

ஜனனகால ஜாதகத்தில் சனி, கேது சம்பந்தத்தால் திருமணத்தடை, தொழில்தடை மிகுதியானவுள்ள கர்மவினைத் தாக்கமுடையவர்கள், அன்று ஆஞ்சனேயர் கோவிலுக்கு மணிவாங்கி வைக்க விதிப்பயனால் ஏற்படும் மனக்கஷ்டம் குறையும். சத்ரு பயம், கடன் தொல்லைகள் நீங்கும் என்பது நம்பிக்கை. ராமநாமம் கேட்குமிடங்களில் அனுமன் இருந்து நல்லாசி வழங்குவார் என்பதால், மார்கழி மாத மூல நட்சத்திர நாளில் ஆஞ்சனேயரை வழிபட சகல துன்பங் களிலி−ருந்தும் விடுபடமுடியும்.

இதுபோன்ற பல்வேறு சிறப்புள்ள மார்கழி மாதத்தை நோன்புமாதம் என்று கூறுவது சாலச்சிறந்தது.

நோன்புக்கு புலனடக்கம் இன்றியமை யாதது. நமது நாட்டில் மழை, குளிர் காலங்களில்தான் பெரும்பாலும் விரதநாட்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இறைசக்தியால் இயங்கும் மூளையை போதை வஸ்துகளாலும், அதீத கோபத் தாலும், துரோகம், கொலை, கொள்ளை, அநீதி, ஏமாற்றுதல், ஏழைகளின் சொத்தை தமதாக்குதல், பழிக்குப்பழி, பிறர் மனைவி களைத் தவறாக நினைத்தல், பெண் குழந்தைகளுக்குத் துன்பம் விளைத்தல், கர்ப்பிணிகளுக்குத் துன்பம் விளைவித்தல் மற்றும் தவறான உணவுப் பழக்க வழக்கங் களால் மனம், மூளைக்கு அதீத துன்பம் விளைவித் தல் போன்றவற்றால் உலக இயக்கமே இயற்கை சீற்றம் மற்றும் நோயால் அசாதாரணமாக இயங்குகிறது. இதிலிருந்து மீண்டும் உலகம் இயல்புநிலைக்குத் திரும்ப, அனைவருக்கும் பொதுவாக ஊர் செழிக்க, நாடு செழிக்க, தீங்கின்றி நாடெல்லாம் மும்மாரி பொழிய வேண்டும். மார்கழி மாத விரதநாட்களை நல்வவிதமாகப் பயன்படுத்தி நலமும் வளமும் பெற்று வாழ வாழ்த்துகள்.

செல்: 98652 20406

bala251220
இதையும் படியுங்கள்
Subscribe