அசுரகுரு, களத்திர காரகன், சுக காரகன் என வர்ணிக்கப்படக்கூடிய சுக்கிர ஆட்சியோ, உச்சமோ பெற்று ஜென்ம லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ கேந்திர ஸ்தானமான 1, 4, 7, 10-ல் அமையப் பெற்றால் மாளவியா யோகம் உண்டாகிறது. மாளவியா யோகம் அமையப் பெற்றவர்களுக்கு சிறப்பான மண வாழ்க்கை அமைந்து தாம்பத்திய வாழ்க்கையானது மகிழ்ச்சிகரமாக இருக்கும். செல்வம், செல்வாக்கு உயர்வடையும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். பொன், பொருள், ஆடை, ஆபரணச் சேர்க்கைகளும் குடும்பத்திற்கு தேவையான அதிநவீனப் பொருட் கüன் சேர்க்கைகளும் சிறப்பாக அமையும். ஆடம்பரமான வாழ்க்கை, வாசனை திரவியங்கüல் ஆர்வம் உண்டாகும். பெண்கள் உபயோகிக்கும் பொருட்கள் மூலம் அனுகூலம் சிலருக்கு பெண்களாலேயே உயர்வு உண்டாகும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/MAVA.jpg)
சந்திரனின் சேர்க்கையுடன் சுக்கிரன் இருந்தால் கலை, இசைத் துறைகüல் அதிக ஈடுபாடும் அதன்மூலம் வாழ்வில் உயர்வும் உண்டாகும். வண்டி, வாகனச் சேர்க்கை, சுகவாழ்வு, சொகுசு வாழ்வு போன்ற யாவும் மாளவியா யோகம் அமையப் பெற்றவர்களுக்கு மிகச் சிறப்பாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும்.
-முருகு பாலமுருகன்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-08/murugu.balamurugan_3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-03/MAVA-t.jpg)