சில குடும்பங்களில் இரண்டு அல்லது மூன்று வயது குழந்தைகள் அதிர்ச்சியளிக்கும் வகையில் சிறிதும் எதிர் பாராமல் அகால மரணமடைந்து விடுகிறார்கள். இது ஏன்?
ஒரு குழந்தை பிறக்கும்போது, அந்த குழந்தையின் ஜாதகத்தில் பாலாரிஷ்ட யோகம் இருக்கக்கூடாது. சந்திரன் 6, 8, 12-ல் இருக்கக்கூடாது. குறிப்பாக 8-ல் சந்திரன், லக்னாதிபதி விரய ஸ்தானத்தில் இருக்கப் பிறக்கும் குழந்தைகளுக்கு 2-ஆம் அதிபதியின் தசை அல்லது விரய ஸ்தானாதிபதியின் தசை நடந்தால், மாரகம் உண்டாக வாய்ப்பிருக்கிறது. குழந்தைக்கு உடலிலில் ஏதாவது பெரிய அளவில் பிரச்சினைகள் வந்துசேரும். சில குழந்தைகளின் உயிருக்கேகூட ஆபத்து இருக்கும்.
ஒரு ஜாதகத்தில் சனியிலிலிருந்து செவ்வாய் 6 அல்லது 8-ல் சடாஷ்டக யோகமாக இருந்து, சந்திரன் 8-ல் இருந்தால், அந்த குழந்தைக்கு இரண்டரை வயதுவரை உடலிலில் ஏதாவது பெரிய பிரச்சினைகள் வர வாய்ப்பிருக்கிறது.
ஒரு குழந்தையின் ஜாதகத்தில் ராகு, சந்திரன் 8-ல் இருந்து, அந்த குழந்தைக்கு செவ்வாய் தசை நடந்தால், அந்த செவ்வாய் 12 அல்லது 2-ல் இருந்தால், அந்த குழந்தையின் உயிருக்கு ஆபத்துவர வாய்ப்பிருக்கிறது.
செவ்வாய், சனி, ராகு 12-ல

செவ்வாய், சனி, ராகு 12-ல் இருந்து, சந்திரன் 7 அல்லது 8-ல் இருந்து, பிறக்கும்போது குழந் தைக்கு 7-ஆம் அதிபதியின் தசை நடந்தால், அந்த குழந்தையின் உயிருக்கு தீங்குநேரும்.
சூரியன், சனி, ராகு 12 அல்லது 8-ல் இருந்து, சந்திரன் 6 அல்லது 2-ல் இருந்தால், குழந்தைக்கு விரய ஸ்தானாதிபதி அல்லது 8-ஆம் அதிபதியின் தசை நடக்கும்போது ஆயுளுக்கு பங்கம் உண்டாகும்.
ஒரு ஜாகத்தில் சனி சந்தி ரனிலிலிருந்து 8-ல் இருந்து, சனிக்குக் கேந்திரத்தில் செவ்வாய் இருந் தால், குழந்தைக்கு புதன் தசை நடக் கும்போது நெருப்பால் பிரச்சினை வர வாய்ப்பிருக்கிறது.
11-ல் சந்திரன், 6-ல் சனி, 8-ல் செவ்வாய் இருக்க, குழந்தைக்கு செவ்வாய் தசை நடக்கும்போது மாரகம் நடப்பதற்கு வாய்ப்புண்டு.
ஒரு ஜாதகத்தில் ராகு லக்னத் தில் சூரியனுடன் இருந்து, சந்திரன் 8-ல் இருந்து, அந்த குழந்தைக்கு மாரகாதிபதியின் தசை நடந்தால் நீரால் ஆபத்துநேரும்.
ஒரு குழந்தையின் ஜாதகத்தில் செவ்வாய், சனி சரியில்லாமல்- இருவரும் கேந்திரத்தில் இருந்து, அதிலிலிருந்து 6, 8-ல் சந்திரன் இருந்தால் குழந்தையின் உயிருக்கு பிரச்சினை ஏற்படும்.
நாம் வாழும் வீட்டில் தெற்கு திசை தாழ்ந்திருந்து, அதில் தென்மேற்கு திசையில் கிணறு அல்லது நீர்த்தொட்டி (பூமிக்கு அடியில்) அல்லது ஆழ்துளைக் கிணறு இருந்தால், அங்கு வாழும் குழந்தைக்கு திடீரென்று பெரிய அளவில் பிரச்சினைகள் உண்டாகும்.
ஒரு வீட்டின் தென்கிழக்கு திசையில் பிரதான வாசல் இருந்து, அதே தென்கிழக்கில் நீர்த்தொட்டி அல்லது கிணறு இருந்தால், அங்கு பிறக்கும் குழந்தைக்கு திடீரென்று விபத்து ஏற்படும்.
ஒரு வீட்டின் கிழக்கு மத்தியில் ஆழ்துளைக் கிணறு, நீர்த்தொட்டி அல்லது கிணறு இருந்தால், அந்த வீட்டின் தலைவர் மேற்கு திசையில் படுத்தால் அங்குள்ள குழந்தைக்கு எதிர்பாராத பிரச்சினைகள் உண்டாகும்.
ஒரு வீட்டின் பிரதான வாசல் தெற்கு திசையில், தென்மேற்கில் இருந்து, அந்த வீட்டின் மத்தியப் பகுதியில் கிணறு அல்லது நீர்த்தொட்டி அல்லது ஆழ்துளைக்கிணறு இருந்தால், அங்கிருக்கும் குழந்தைக்கு ஆயுள்பங்கம் உண்டாகும்.
ஒரு வீட்டின் உரிமையாளர் வடமேற்கு திசையிலிலிருக்கும் அறையில் படுத்தால், அந்த வீட்டின் வடகிழக்கில் சமையலறை இருந்தால், அந்த வீட்டில் நீர்த்தொட்டி அல்லது ஆழ்துளைக் கிணறு தெற்கு மத்தியில் அல்லது தென்மேற்கில் இருந்தால், அங்கு பிறக்கும் குழந்தை ஒரு வயதுகூட உயிருடன் இருக்காது. குறிப்பாக, ஆண் குழந்தையாக இருந்தால் கட்டாயம் பிரச்சினை இருக்கும்.
பரிகாரங்கள்
தந்தையின் ஜாதகத்திலுள்ள 5-ஆம் பாவாதிபதியின் தெய்வத்தை வணங்கவேண்டும்.
குலதெய்வ வழிபாடு இன்றியமையாதது.
தினமும் சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.
ஆஞ்சனேயரை ஒன்பதுமுறை சுற்றிவந்து வணங்குதல் நன்று.
வெள்ளிக்கிழமை இரவில் துர்க்கைக்கு தீபமேற்றி, சிவப்பு மலர் வைத்து பூஜை செய்யவேண்டும்.
வீட்டில் தென்கிழக்கு அல்லது தென்மேற் கிலுள்ள கிணறு அல்லது ஆழ்துளைக் கிணறை நீக்கிவிட வேண்டும்.
வெள்ளி டாலரில் முத்தைப் பதித்து குழந்தைக்கு அணிவிப்பது நல்லது.
செல்: 98401 11534
துஷ்டசக்திகளை விரட்டும் சூலினிதுர்க்கா ஹோமம்!
வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் அமாவாசையை முன்னிட்டு 26-11-2019 செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணிமுதல் மதியம் 1.30 மணிவரை சூலினிதுர்க்கா ஹோமத்துடன் மஹிஷாசுரமர்த்தினிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறவுள்ளன.
உறவுப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கவும், தீய விளைவுகள் நீங்கவும், ராகு தோஷத்திலிருந்து நிவர்த்தி பெறவும், மனஅழுத்தம், பதட்டம் குறையவும், அனைத்து செயல்களிலும் நம்பிக்கை கிடைக்கவும், குடும்பத்தில் மகிழ்ச்சி கிடைக்கவும் நடைபெறும் இப்பெரும் சக்திவாய்ந்த ஹோமம், துர்க்கா தேவியின் அளப்பரிய, தெய்வீக ஆற்றலை உணரவும், அதைப் பெற்று அன்றாட வாழ்க்கையில் பயன்பெறவும் வகை செய்கிறது.
இந்த ஹோமத்தில் பங்குகொண்டால் நம்மை வாட்டிவதைக்கும் அனைத்து தீமைகள், சந்தேகம், குழப்பம் போன்ற எதிர்மறை உணர்வுகள் ஆகியவற்றுக்கு எதிராக, வலுவான பாதுகாப்பு கிடைக்கும். சகல திருஷ்டிகளையும், தோஷங்களையும் நீக்கி விரைவில் திருமணத்தைக் கைகூட்டும் ஹோமம் சூலினிதுர்க்கா ஹோமமாகும். மேலும் தடைகள் நீங்கும், முற்பிறவி சாபம் விலகும், பிதுர்தோஷம், சாபங்களைப் போக்கும். நவகிரக தோஷங்கள், செய்வினை, ஏவல், பில்லி, சூன்யம், வசியம் போன்ற மாந்த்ரீகக் கோளாறுகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் மற்றும் எதிரி தொல்லைகளில் இருந்து விடுபடவும் இந்த சூலினிதுர்க்கா ஹோமம் நடைபெறுகிறது.
மேலும் விவரங்களுக்கு:
ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடம், அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை- 632 513.
வேலூர் மாவட்டம், தொலைபேசி: 04172- 230033, 230274. அலைபேசி: 94433 30203.
Email : danvantripeedam@gmail.com