சில ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு காரணமாக வாரிசு இல்லாமல் போகிறது. இதற்கு மருத்துவரீதியான காரணம் இருந்தாலும், ஜோதிடரீதியாகவும் காரணம் இருக்கிறது.
ஒருவருக்கு குழந்தை பாக்கியம் இல்லை யென்றால், அவருடைய ஜாதகத்தில் சுக்கிரனின் நிலை சரியில்லையென்று பொருள். சிலரின் ஜாதகத்தில் சுக்கிரன் அஸ்தமனமாக இருக்கும். சிலரின் ஜாதகத் தில் 5-ஆவது பாவாதிபதி அஸ்தமனமாக அல்லது பாவ கிரகத்துடன் இருக்கும்.
ஜாதகத்தில் சுக்கிரன் அஸ்தமனமானால், வாரிசு உருவாகாது என்றே கூறலாம்.
அவருக்கு உயிரணுக்கள் மிகவும் குறைவாக இருக்கும். அதே அஸ்தமன சுக்கிரன் சனியால் பார்க்கப்பட்டால், அவருடைய உயிரணுக்களில் உயிர்ப்புத் தன்மையே இராது.
லக்னத்தில் ராகு, 3-ல் சூரியன், சுக்கிரன், 8-ல் சந்திரன், செவ்வாய் இருந்தால், அந்த ஆணுக்கு ஆண்மைக்குறைவு இருக்கும். சிலருக்கு உயிரணுக்கள் இருக்காது. அப்படியே இருந்தாலும், அவை செயலற்ற நிலையிலிருக்கும். அதன்காரணமாக அவருக்கு வாரிசு இருக்காது.
ஒருவருக்கு ரிஷப லக்னமாக இருந்து, 5-க்கு அதிபதி புதன், சூரியனுடன் அஸ்தமனமாக இருந்து, சுக்கிரன், சனி 6 அல்லது 7-ல் இருந்தால் அவருக்கு வாரிசு இருக்காது.
லக்னாதிபதி புதனாக இருந்து 6-ல் சூரியன், சுக்கிரன், 7-ல் சனி, புதனுடன் இருந்தால், அவரின் உடலில் தெம்பிருக்காது. ஆண்மைக் குறைவுடன் இருப்பார்.
லக்னத்தில் நீசச் செவ்வாய், ராகு, 7-ல் கேது, சனி, சுக்கிரன் இருந்தால், அவருடைய உயிரணுக்கள் இறந்த நிலையிலிருக்கும். உடலில் தெம்பிருக்காது. அவர் எப்போதும் மனவேதனையுடன் இருப்பார். அவருக்கு வாரிசு உருவாகாது.
லக்னத்தில் கேது இருந்து, 5-க்கு அதிபதியான செவ்வாய் அஸ்தமனமாக இருந்து, அந்த செவ்வாயை சனி பார்த்தால், அவருடைய உயிரணுக் கள் உயிரற்று இருக்கும். அதனால் அவருக்கு குழந்தை பாக்கியம் கிட்டாது.
மிதுன லக்னத்திற்கு 5-க்கு அதிபதியான சுக்கிரன், சூரியனுடன் அஸ்தமனமானால், அதை 11-லிருந்து நீசச் சனி பார்த்தால், அந்த ஜாதகரால் ஒரு வாரிசை உருவாக்கமுடியாது.
லக்னத்தில் சந்திரன், கேது, 2-ல் செவ்வாய், சூரியன், புதன், 5-ல் சனி, சுக்கிரன் இருந்தால் அவருக்கு உயிரணுக்கள் குறைவாக இருக்கும். அதனால் அவருக்கு வாரிசு இருக்காது.
2-ல் செவ்வாய், சுக்கிரன், 5-ல் சனி, சூரியன் இருந் தால், அந்த ஜாதகருக்கு குழந்தை பாக்கியம் இருக்காது.
7-ல் சனி, புதன், 8-ல் சுக்கிரன், சூரியன் இருந்தால், அவருக்கு உயிரணுக்கள் இருக்காது. அப்படியே இருந்தாலும், அவை உயிரற்றிருக்கும். சிலர் பெண்களைப்போல பேசுவார்கள்.
லக்னத்தில் சனி, சுக்கிரன், 2-ல் சூரியன், 5-ல் செவ்வாய் இருந்தால், அந்த ஆணின் உடலில் உயிரணுக்கள் பலமற்றிருக்கும். பல மருந்து களைப் பயன்படுத்திய பிறகு, மிகவும் தாமதமாக குழந்தை பிறப்பதற்கு வாய்ப்பிருக்கும்.
லக்னத்தில் கேது, 7-ல் ராகு, சனி, சூரியன், புதன் இருந்தால், ஆண் பெண்ணைப் போலவும், பெண் ஆணைப் போலவும் இருப்பார்கள்.
உயிரணுக்கள் குறைவாக இருக்கும்.
லக்னத்தில் சனி, புதன், சூரியன், 8-ல் சுக்கிரன், 12-ல் செவ்வாய் இருந்தால், அவருக்கு குழந்தை பாக்கியம் இருக்காது. சிலருக்கு வயிற்றில் நோய் இருக்கும்.
2-ல் ராகு, 4-ல் சனி, குரு, 9-ல் சூரியன், சுக்கிரன் இருந்தால், அந்த ஆணுக்கு உயிரணுக் கள் விஷயத்தில் பிரச்சினை இருக்கும்.
5-ல் சூரியன், சனி, புதன், 8-ல் சுக்கிரன், 12-ல் செவ்வாய் இருந்தால், அவருக்கு உயிரணுக் கள் குறைவாக இருக்கும். வீட்டில் வாஸ்து தோஷம் இருக்கும். அவருக்கு வாரிசு உருவா வதில் பிரச்சினை இருக்கும்.
ஒரு வீட்டின் தென்கிழக்கில் நீர்த்தொட்டி இருந்தால் வாரிசு பிறப்பதில் பிரச்சினை ஏற்படும்.
வடமேற்கில், வடக்கு திசையில் படுக்கை யறை இருந்தால், அங்கிருக்கும் ஆணுக்கு உயிரணுக்கள் குறைவாக இருக்கும். அதனால் வாரிசு இருக்காது.
ஒரு வீட்டின் வடகிழக்கில் சமையலறை இருந்து, வீட்டின் பிரதான வாசல் தென்மேற் கிலும், படுக்கையறை தென்கிழக்கிலும் இருந்தால், அங்கிருக்கும் ஆணுக்கு உயிரணுக்கள் குறைவாக இருக்கும். அதன் காரணமாக குழந்தை பாக்கியம் கிட்டாது.
ஒரு வீட்டின் பிரதான வாசல் தென்கிழக்கில் இருந்து, சமையலறை வீட்டின் மத்தியில் தெற்கு நோக்கி இருந்து, படுக்கையறை வடமேற்கில் இருந்தால், அங்குள்ள ஆணுக்கு உயிரணுக்கள் மிகவும் குறைவாக இருக்கும். அதனால் வாரிசு இருக்காது.
பரிகாரங்கள்
சுக்கிரனின் நிலை சரியாக...
குலதெய்வத்தை வழிபடவேண்டும். வீட்டின் வடமேற்கில் படுக்கக்கூடாது. தன் லக்னா திபதி, 5-க்கு அதிபதியின் ரத்தினத்தை அணி யலாம். தினமும் அரச மரத்திற்கு நீர்வார்க்க வேண்டும். பெண்கள் வியாழக்கிழமை மாலை அரசமரத்திற்கு தீபமேற்றவேண்டும். விநாயகர் வழிபாடு நன்று. தினமும் இரவில் படுப்பதற்கு முன்பு, சிறிது வெல்லம் சாப்பிடவேண்டும்.
படுக்கையறை சுவரில் சிவப்பு நிறம் கூடாது.
தென்மேற்கு திசையில் முகம் பார்க்கும் கண்ணாடி இருந்தால் அகற்றவேண்டும்.
சமையல் மேடைக்குக் கீழே நீர் பிடித்து வைக்கக் கூடாது. வீட்டின் வடகிழக்கு தூய்மையாக இருக்கவேண்டும். வீட்டின் தென்கிழக்கில் தேவையற்ற பொருட்களைச் சேர்த்து வைக்கக் கூடாது. அங்கு எடை அதிகமான பொருட்களை சேமித்து வைப்பதைத் தவிர்க்கவும்.
செல்: 98401 11534