Advertisment

மகர லக்னம் தசா புக்திப் பரிகாரங்கள்! (10) -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி

/idhalgal/balajothidam/makara-lagna-dasa-enlightenment-remedies-10-prasanna-astrologer-i-anandhi

னிபகவானைப்போல் மன உறுதி படைத்தவர்கள் மகர லக்னத்தினர். சாமர்த்திய சாலி. தெய்வ நம்பிக்கையும் பணிவும் கொண்டவர்கள். தொழில் தந்திரம் மிக்கவர்கள். வெளிநாட்டு பயணத்தில் ஆர்வம் அதிகம் உள்ளவர்ள். சிறிது மந்த புத்தியும் சோம்பலும் உடையவர்கள். எதையும் தாமதமாக செய்து முடிப்பவர்கள். தாயிடம் மதிப்பும் மரியாதையும் கொண்டவர்கள். எந்த வழியிலும் பணம் சம்பாதிப்பதில் தயக்கம் காட்டமாட்டார்கள். எப்போதும் பணம் தேடும் சிந்தனையில்தான் இருப்பார் கள். மகர ராசியில் பிறந்த பெண்கள் பிறந்த வீட்டுக்கு பெருமை சேர்ப்பார்கள். தாய் மற்றும் உடன்பிறந்தவர்களுடன் அன்புகொண்டவர்களாக இருப்பார்கள். பிறக்கும் போதே பூமி, மனை, வாகன யோகத்துடன் பிறந்த இவர்களுடைய மனதை புரிந்துகொள்வது சற்று சிரமம். இனி தசா புக்திப் பரிகாரங்களைக் காணலாம்.

சனி தசை

Advertisment

சனி மகர லக்னத்திற்கு லக்னாதிபதி மற்றும் தனாதிபதி. இவர் சுப வலுப்பெற்று தசை நடத்தினால் ஜாதகரிடம் பொதுநல சிந்தனை மிகுதியாக இருக்கும். இடம், பொருள், ஏவல் பார்த்து வாக்கு பிரயோகம் செய்வார்கள். அதிகாரமான தெளிவான பேச்சால் அனைவரையும் கவருபவர்கள். தனத்தை பெருக்குவது பற்றியும், தன் குடும்பத்தை காப்பது பற்றியும் சிந்தனை மிகைப்படுத்தலாக இருக்கும். தந்திரத்தால் பலவழிகளில் வருமானம் ஈட்டுவார்கள். கலகலப்பாக பேசி தன்னை சார்ந்தவர்களை சந்தோஷமாக வைத்து காப்பாற்றுவார்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றும் நாணயவாதிகள். பிறரை காயப்படுத்தாமல் பேசுவதில் வல்லவர்கள். வாக்கு பலிதம் உண்டு. எப்பொழுதும் தன் சுய பெருமைகளைப் பற்றி பிறரிடம் பேசிக்கொண்டே இருப்பார்கள். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். இவர்கள் பூர்வீகத்தில் வருமானம் ஈட்டி சொந்த பந்தங்களுடன் மகிழ்ச்சியாக

னிபகவானைப்போல் மன உறுதி படைத்தவர்கள் மகர லக்னத்தினர். சாமர்த்திய சாலி. தெய்வ நம்பிக்கையும் பணிவும் கொண்டவர்கள். தொழில் தந்திரம் மிக்கவர்கள். வெளிநாட்டு பயணத்தில் ஆர்வம் அதிகம் உள்ளவர்ள். சிறிது மந்த புத்தியும் சோம்பலும் உடையவர்கள். எதையும் தாமதமாக செய்து முடிப்பவர்கள். தாயிடம் மதிப்பும் மரியாதையும் கொண்டவர்கள். எந்த வழியிலும் பணம் சம்பாதிப்பதில் தயக்கம் காட்டமாட்டார்கள். எப்போதும் பணம் தேடும் சிந்தனையில்தான் இருப்பார் கள். மகர ராசியில் பிறந்த பெண்கள் பிறந்த வீட்டுக்கு பெருமை சேர்ப்பார்கள். தாய் மற்றும் உடன்பிறந்தவர்களுடன் அன்புகொண்டவர்களாக இருப்பார்கள். பிறக்கும் போதே பூமி, மனை, வாகன யோகத்துடன் பிறந்த இவர்களுடைய மனதை புரிந்துகொள்வது சற்று சிரமம். இனி தசா புக்திப் பரிகாரங்களைக் காணலாம்.

சனி தசை

Advertisment

சனி மகர லக்னத்திற்கு லக்னாதிபதி மற்றும் தனாதிபதி. இவர் சுப வலுப்பெற்று தசை நடத்தினால் ஜாதகரிடம் பொதுநல சிந்தனை மிகுதியாக இருக்கும். இடம், பொருள், ஏவல் பார்த்து வாக்கு பிரயோகம் செய்வார்கள். அதிகாரமான தெளிவான பேச்சால் அனைவரையும் கவருபவர்கள். தனத்தை பெருக்குவது பற்றியும், தன் குடும்பத்தை காப்பது பற்றியும் சிந்தனை மிகைப்படுத்தலாக இருக்கும். தந்திரத்தால் பலவழிகளில் வருமானம் ஈட்டுவார்கள். கலகலப்பாக பேசி தன்னை சார்ந்தவர்களை சந்தோஷமாக வைத்து காப்பாற்றுவார்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றும் நாணயவாதிகள். பிறரை காயப்படுத்தாமல் பேசுவதில் வல்லவர்கள். வாக்கு பலிதம் உண்டு. எப்பொழுதும் தன் சுய பெருமைகளைப் பற்றி பிறரிடம் பேசிக்கொண்டே இருப்பார்கள். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். இவர்கள் பூர்வீகத்தில் வருமானம் ஈட்டி சொந்த பந்தங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்வார்கள். மகிழ்சியான குடும்ப வாழ்க்கை அமையும். சனி அசுப பலம்பெற்று தசை நடத்தினால் கடன், வறுமை, கஷ்ட ஜீவனம், பூர்வகத்தில் வாழமுடியாத நிலை, குடும்ப உறவுகளிடம் மதிப்பு, மரியாதை இன்மை, பிறரை அண்டி பிழைத்தல் போன்ற நிலை நீடிக்கும்.

பரிகாரம்

சனிக்கிழமை சுக்கிர ஓரையில் மகாலட்சுமி அஷ்டோத்திரம் படிக்க பொருள் வரவு அதிகரிக்கும்.

dd

குரு தசை

Advertisment

மகர லக்னத்திற்கு குரு 3, 12-ஆம் அதிபதி. குரு பலம்பெற்று தசை நடத்தினால் விடாமுயற்சி, தன்னம்பிக்கை, துணிச்சல் அதிகரிக்கும். புகழ், கீர்த்தி, வெற்றி, சுய வருமானம், நேர்மை, திறமை, இளைய சகோதர விருத்தி, மங்காத புகழ் ஏற்படும். உடல் வலிமை, எதிர்ப்பு சக்தி மிகுதியாக இருக்கும். இயல் இசை நாடகப் பிரியர்கள். வேலை ஆட்கள் யோகம் உண்டு. பயணம் செய்வதில் விருப்பம் மிகுந்தவர்கள். வாழ்வியல் மாற்றம் தரும் இடப்பெயர்ச்சி உண்டாகும். சிலர் வெளிநாட்டில் குடியுரிமை பெற்று செட்டிலாகுவார்கள். ஆன்மிக ஈடுபாடு உண்டாகும். அதிகார வர்க்கத்தினரின் தொடர்பு கிடைக்கும். குரு பலம் குறைந்தால் சகோதர சச்சரவு, சொத்து விரயம், தூக்கமின்மை ஏற்படும். செல்வநிலையும் சீராக இருக்காது. 3-ஆமிடம் வீரத்தையும், ஆண்மையையும் பற்றி குறிப்பிடுவதால் இந்த பாவகம் பாதிக்கப்பட்டால் ஆண்மைக்குறைவு, சோம்பேறித்தனம், பயந்த குணம் போன்ற பலன்கள் ஏற்பட்டு ஜாதகர் எந்த முயற்சியும் செய்யாமல் மனோபலமும் குறைந்தவராக இருப்பார்கள்.

பரிகாரம்

சனிக்கிழமையும் பிரதோஷமும் இணைந்த நாளில் கொண்டைக்கடலை தானம் வழங்கவும்.

செவ்வாய் தசை

மகர லக்னத்திற்கு செவ்வாய் 4, 11-ஆம் அதிபதி. 4-ஆம்மிடம் சுக ஸ்தானம், 11-ஆம்மிடம் லாப ஸ்தானம், பாதக ஸ்தானம். பாதகாதிபதி. கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். நல்ல கல்வியாளர். பள்ளிப் படிப்பு முதல் உயர் ஆராய்ச்சி கல்வி வரை கல்வியில் முதன்மை பெறுவார்கள். கல்வி யறியவை பயன்படுத்தி சுய உழைப்பில் முன்னேறுவார்கள். வாழ்வில் மிகப்பெரிய வெற்றியாளர்களாக, சாதனையாளர் களாக வலம்வருவார்கள். தன் சொத்து கணக்கு ஜாதகருக்கே தெரியாது. முதல் திருமணத்தைவிட இரண்டாம் திருமண வாழ்க்கையே சிறப்பாக அமையும். ஜாதகர் தொட்டது துலங்கும். சுமாரான குடும்பத்தில் பிறந்தாலும் எளிய உழைப்பில் கோடீஸ்வர யோகத்தை அடைவார்கள். மூத்த சகோதரம், சித்தப்பா இவர்களின் ஆதரவு கிடைக்கும். செவ்வாய் பலம் குறைந்து தசை நடத்தினால் கற்ற கல்வியால் பயன் இருக்காது. உற்றார்- உறவினர் களுக்கே சொத்துகள் பயன்படும்.

பாதகாதிபதி செவ்வாய்க்கு அஷ்டமாதிபதி சூரியனின் சம்பந்தம் எந்தவகையில் இருந்தா லும் சூரிய, செவ்வாய் தசைக் காலங்களில் பாதிப்பு உறுதி. செவ்வாய்க்கு சனி, ராகு- கேது சம்பந்தம் இருந்தால் பாதிப்பு இரட்டிப்பாகும். லக்னாதிபதி சனிக்கு சூரியன் சம்பந்தம் இருந்தாலும் பாதிப்பு இருக்கும்.

பரிகாரம்

சனிக்கிழமை செவ்வாய் ஓரையில் சிவன், முருகனை வழிபடவேண்டும்.

சுக்கிர தசை

சுக்கிரன் மகரத்திற்கு 5, 10-ஆம் அதிபதி. ஒரு திரிகோணத்திற்கும், கேந்திரத்திற் கும் அதிபதி என்பதால் மகர லக்னத்திற்கு சுக்கிரன் ஏக யோகாதிபதி. சுக்கிரன் சுப வலுப்பெற்று தசை நடத்தினால் ஜோதிடம், ஆசிரியப் பணி, வங்கிப் பணி, அரசு உத்தியோகம், கௌரவ பதவி போன்றவற்றில் தனி முத்திரை பதிப்பார்கள். செல்வச் சீமானாக விளங்குவார் பணக்கஷ்டம் தெரியாதவர். உழைக்காத வருமானம், பங்குச் சந்தை ஆதாயம் கிடைக்கும். சமூதாய அங்கீகாரம் நிறைந்தவர்கள். நல்ல பண்பான, பணிவான புத்திரர்கள் பிறப்பார்கள். சிலர் உள்ளூரில் வீட்டுக்கு அருகில் குலதொழில் செய்வார்கள். குலதெய்வத்தின் பெயரில் தொழில் இருக்கும். குலதெய்வத்திற்கு தொழில் லாபத்தில் பங்கு கொடுப்பார்கள் அல்லது குலதெய்வத்திற்கு அதிக தானம், தர்மம் செய்வார்கள். சுக்கிரன் பலம் குறைந்து தசை நடத்தினால் நிலையான பதவி, புகழ் இருக்காது. ஆன்மிக நாட்டம் குறையும்.

பரிகாரம்

சனிக்கிழமை சுக்கிர ஓரையில் குலதெய்வ வழிபாடு செய்யவேண்டும்.

புதன் தசை

புதன் மகரத்திற்கு 6, 9-ஆம் அதிபதி. ருண, ரோக, சத்ரு, ஸ்தானதிபதி, பாக்கியாதிபதி. புதன் பலம்பெற்று தசை நடத்தினால் உயர் கல்வி முயற்சி வெற்றியாகும். வெளியூர், வெளிநாட்டில் சென்று படிப்பார்கள். படித்த படிப்பிற்கு தகுந்த வேலை உடனே கிடைக்கும். உயிர் காரகத்துவங்களான தாய், தந்தை, சகோதரர், சகோதரி, மனைவி, கணவன், பிள்ளைகளுக்கு செய்யவேண்டிய கடமையை முழுமையாக செய்து முடிப்பார்கள். முறையான பித்ருக்கடன் செலுத்தி பாக்கிய பலனை அதிகரிப்பார்கள். தன் சந்ததியினருக்கு புண்ணிய பலன்கள் சேர்த்து வைப்பார்கள். குல கௌரவம் அதிகமாகும். புதன் அசுப பலம்பெற்று தசை நடத்தினால் ஜனனகால ஜாதகத்தில் ஆறாமிடம் மற்றும் ஒன்பதாமிடத்திற்கு சம்பந்தம் இருப்பவர்களுக்கு தீராத, தீர்க்க முடியாத பிறவிக் கடனை அதிகம் இருக்கும். இந்த பிறவியில் வாழும் காலத்தில் திருமணம் செய்ய, வீடு கட்ட, கல்வி செலவிற்காக கடன் வாங்கிவிட்டு, திரும்பி கட்டமுடியாமல் கஷ்டப்படுவார்கள். துவாதசி திதியில் அந்தணர்களுக்கு உதவவேண்டும்.

சந்திர தசை

மகர லக்னத்திற்கு சந்திரன் ஏழாமதிபதி. களத்திர ஸ்தான அதிபதி. மாரகாதிபதி. சந்திரன் சுப வலுப்பெற்று தசை. நடத்தினால் நல்ல நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். நல்ல அழகான வாழ்க்கைத் துணை அமையும். இவர்கள் முதலீடு அதிகம் இல்லாத சுய தொழில் செய்யலாம். இவர்களை வாடிக்கையாளர்கள் அதிகம் தேடித் தேடி வருவார்கள். சிறு சில்லரை வணிகம் செய்தால் பெரும் லாபம் கிடைக்கும். தம்பதிகள் ஒற்றுமையாக மகிழ்ச்சியாக இருப்பார்கள். சந்திரன் பலம் குறைந்து தசை நடத்தினால் கூட்டுத்தொழில் செய்யக் கூடாது. சந்திரன் மாரகாதிபதி என்பதால் நல்லவர்களையும், கெட்டவர்களையும் எளிதில் இனம் காணத்தெரியாது. இளகிய மனத்தால் எல்லாரையும் எளிதில் நம்பி கொடுத்துவிட்டு பின் யோசிப்பார்கள். வயோதிகத்தில் சந்திர தசை புக்தி நடந்தால் ஆயுள், ஆரோக்கியம் சார்ந்த பாதிப்பு இருக்கும்.

பரிகாரம்

சனிக்கிழமை புனித நீரால் சிவனுக்கு அபிசேகம் செய்யவேண்டும்.

சூரிய தசை

சூரியன் மகரத்திற்கு அஷ்டமாதிபதி. சூரியன் சுப பலம்பெற்று தசை நடத்தினால் விபரீத ராஜயோகம் உண்டாகும். பேச்சுத் திறமையால் வருமானம் ஈட்டும் காரியவாதிகள். இவர் சொல்லும் வாக்கு நிச்சயம் பலிக்கும். உண்மையை பேசுவார்கள். குடும்ப உறுப்பினர்களின் அன்பும் அனு சரணையும் உண்டு. சூரியன் பலம் குறைந்தால் உத்தியோகத்தடை, உத்தியோக உயர்வில் தடை, தொழில் முடக்கம், கடன்தொல்லை, விபத்து, கண்டம், சர்ஜரி போன்ற பாதிப்பு இருக்கும். தனது பேச்சினால் பிறரை காயப்படுத்துவார்கள். முன்யோசனை இல்லாத பேச்சினால் தனக்கு கிடைக்க வேண்டிய நல்ல சந்தர்ப்பங்களை தவற விடுவார்கள். தன் மானத்தை இழந்து வாழ வேண்டியநிலை இருக்கும். அடிமைத் தொழிலில் அதிக உழைப்பில் குறைந்த ஜீவனம் பெற்று வாழ்வார்கள். காலதாமதத் திருமணம் நடக்கும்.

பரிகாரம்

சனிக்கிழமை சூரிய ஓரையில் சிவ வழிபாடு செய்யவேண்டும். ராகு தசை.நடப்பவர்கள் பட்டீஸ்வரம் துர்க்கையை வழிபடவேண்டும். கேது தசை நடப்பவர்கள் ராஜ கணபதியை வழிபடவேண்டும்.

தொடரும்....

செல்: 98652 20406

bala180823
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe