ஜோதி என்றால் ஒளி. ஜோதி இருக்குமிடம் ஜோதிடம். மனித வாழ்வை முறைப்படுத்தும் வழிகாட்டியாக ஜோதிடம் விளங்குகிறது என்றால் மிகையாகாது.

வாழ்க்கைப் பயணம் சிறப்பாக அமைய வாழ்க் கைத்துணையைத் தேடும்போது, அவரவர் ராசிக் கேற்ற ராசிக்காரரைத் தேர்ந்தெடுப்பது மிக அவசியம். சரியான உறவின்கீழ் மனிதன் தன் வாழ்வை அமைத்துக்கொள்ள, ஜோதிட முன்னோடிகள் அளித்த கொடையே பொருத்தம். ஜோதிடத்தில் நம்பிக்கையுள்ளவர்கள் பொருத்தம் பார்த்தே திருமணம் செய்கிறார்கள். மனித வாழ்வில் மணவாழ்வின் பங்கு அதிகமாகும். கணவர் அல்லது மனைவி யைப் பற்றியும், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள், எதிர்காலம் பற்றிய விவரங்களையும் ஒருவரது ஜனனகால ஜாதகத்தில் நிற்கும் கிரகங் களைக்கொண்டு தீர்மானிக்கமுடியும்.

திருமணத்திற்கு ஆண், பெண் ஜாதகங்களை இணைக்கும்போது பத்துப் பொருத்தம் எனும் தசவிதப் பொருத்த முறையே பெரும்பான்மை யோரால் பின்பற்றப்படுகிறது. இந்தப் பொருத்தத்தை நமது முன்னோர்கள் 20 பொருத்தங்களுக்கு மேலாகப் பார்த்திருக்கின்றனர். தற்போது நடைமுறையில் பத்துபொருத்தமாகி விட்டது.

தினம், கணம், மாகேந்திரம், ஸ்த்ரீ தீர்க்கம், யோனி, ராசி, வசியம், ரஜ்ஜு, வேதை, நாடி என்ற பத்து விஷயங்கள் பார்க்கப்படுகின்றன. இதில் தினம், கணம், யோனி, ராசி, ரஜ்ஜுப் பொருத்தம் இருந்தால் திருமணம் செய்கிறார்கள். இன்னும் சிலர் ராசி, ரஜ்ஜுப் பொருத்தம் இருந்தால்கூட திருமணம் செய்கிறார்கள். அதில் மாகேந்திரப் பொருத்தம் எனும் புத்திர விருத்திப் பொருத்தம் குறித்தோ, தம்பதிகளுடைய அன்யோன்ய உறவையும், தாம் பத்திய நிறைவையும் குறிக்கும் யோனிப் பொருத்தம் குறித்தோ பார்ப்பதில்லை. பெரும்பான்மையாக, தினப் பொருத்தம் அமைந்தால் மாகேந்திரப் பொருத்தம் அமையாது. மாகேந்திரப் பொருத்தம் அமைந்தால் தினப் பொருத் தம் அமையாது. இவை ஒன்றுக்கொன்று முரண் பாடான பொருத்தமாகும் என்பதால், பலர் இதற்கு முக்கியத்துவம் கொடுப்பது கிடையாது.

Advertisment

பெண் நட்சத்திரம்முதல் ஆண் நட்சத்திரம்வரை எண்ணும்போது 1, 4, 7, 10, 13, 16, 19, 22, 25 என்று அமைந்தால், மாகேந்திரப் பொருத்தம் உள்ளது எனலாம். இதில் 1, 10, 19 என்பது ஜென்ம தாரை. 7, 16, 25 என்பது வதை தாரை. தினப் பொருத்தத்தில் ஜென்ம தாரையும், வதை தாரையும் பொருந்தாது எனக் கூறப்படுகிறது. ஆனால், மாகேந்திரப் பொருத்தத்தில் இவை பொருந்தும் எனக் கூறப்படுகிறது. மேலும், 4, 13, 22 ஷேமம் எனக் கூறப்பட்டாலும், 22- ஆம் நட்சத்திரம் வைநாசிகம்; சேர்க்கக் கூடாது என்கிறார்கள். எனவே, பெண்ணின் நட்சத்திரத்திலிருந்து 4, 13 ஆக வரும் ஆண் நட்சத்திரத்திற்கு மட்டுமே மாகேந்திரப் பொருத்தம் சிறப்பாக அமையும். நட்சத்திரரீதியாக மாகேந்திரப் பொருத்தமில்லாத நிலையில், நாடிப் பொருத்தம் கொண்டும் சிலர் புத்திர பாக்கியத்தை நிர்ணயம் செய்வார்கள்.

எந்த வகையில் பொருத்தம் பார்த்தாலும், ஆண், பெண் ஜாதகக் கட்டத்தை வைத்துப் பார்க்கப்படும் பொருத்தமே வாழ்நாள் முழுவதும் நிறைந்த, நீடித்த இன்பத்தைத் தரும். ஆண், பெண்ணின் ஜென்ம நட்சத் திரம், ராசி கொண்டு பார்க்கப்படும் நட்சத் திரப் பொருத்தம்மூலம் உடல்சார்ந்த பொருத்தத்தை மட்டுமே அறியமுடியும். கட்டப் பொருத்தம் பார்க்கும்பொழுது, இந்தப் பிறவியில் ஜாதகர்- ஜாதகி எந்த விதமான கர்மாவை அனுபவிக்கப் போகிறார்கள் என்பதையும் ஆய்வு செய்யும் பொழுதே திருமணப் பொருத்தம் நிறைவான மணவாழ்வைத் தரும்.

சஞ்சித கர்மம்

Advertisment

ஒரு கரு உருவாகும்போதே உடன் உருவாவது. அதாவது தாய்- தந்தையிடமிருந்தும், முன்னோர்களிடமிருந்தும், ஆத்மா பல ஜென்மங்களில் செய்த பாவ புண்ணியத்தால் இந்தப் பிறவியில் பற்றிக்கொள்ளும் கர்ம வினையாகும். அதாவது ஜாதகர்- ஜாதகியின் முன்னோர்களின் சஞ்சிதகர்மா இந்தப் பிறவியில் வரமாக- சாபமாக செயல்படப் போகிறதா?

பிராரப்த கர்மம்

ஒரு ஆன்மா பல பிறவிகளில் செய்த பாவ புண்ணியப் பலன்மூலம் இந்தப் பிறவியில் கிடைக்கக்கூடிய நன்மை- தீமையாகும். இதையே வேறுவிதமாகச் சொன்னால் பிரா ரப்தம், விதி, கொடுப்பினை எனக் கூறலாம்.

இந்தக் கர்மாவால் வரும் பலனையும் இந்தப் பிறவியிலேயே அனுபவிக் கவேண்டும். ஜாதகர்- ஜாதகிக்கு அவரின் முற்பிறவி பிராரப்த கர்மா, இந்தப் பிறவில் அவருக்கு வரமாக- சாபமாக செயல்படப் போகிறதா?

ஆகாமிய கர்மம்

மேற்கூறிய இரண்டு கர்மாக்களைக் கழிக்கச்செய்யும் செயல்கள்மூலம் இப் பிறவியில் வாழும் காலத்தில் ஆசைகளால் பிறருக்குச் செய்யும் நன்மை- தீமைகளால் வருவது. ஜாதகர்- ஜாதகிக்கு அவரின் இப்பிறவி ஆகாமிய கர்மா வரமாக- சாபமாக செயல்படப்போகிறதா என்பதைப் பார்க்கும் பொழுது, இருவரின் எதிர்காலம் பற்றிய ழுழுக்கணிப்பு கிடைக்கும்.

திருமணத்திற்கு வரன் கிடைப்பதே பெரிய விஷயமாக இருக்கும்பொழுது, கர்மாரீதியான கட்டப் பொருத்தம் பார்த்தால் 60-ஆம் கல்யாணம்கூட நடக்காது என்பது பலருடைய கருத்து.

இன்று ஒவ்வொருவர் வீட்டிலும் நிலவும் பிரச்சினைகள் மூன்று உள்ளன.

அவை-

1. திருமணத் தடை.

2. கணவன்- மனைவி கருத்து வேறுபாடு- விவாகரத்து.

3. குழந்தையின்மை.

இன்று, திருமணத்திற்கு வரன் கிடைக்காத வேதனையில், பெற் றோர்கள் வரன் கிடைத்தால் போதும் என்ற மனநிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டார்கள். அந்த அளவுக்கு வரன் கிடைப்பது அரிதாக இருக்கிறது. நாட்டில் பெண்களைவிட ஆண்கள் அதிகமாக இருப்பதே இதற்குக் காரணம். தாயின் கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சியைக் கண்டறிய உருவாக்கப்பட்ட "ஸ்கேன்' என்ற கருவி, பல பெண் குழந்தைகளைத் தாயின் கருவறையிலேயே கல்லறையாகச் செய்து, பெண்களின் விகிதாச்சாரத்தைக் குறைத்து விட்டது.

ஒரு புதிய கண்டுபிடிப்பு பத்து நல்ல செயலுக்குப் பயன்படுத்தப்பட்டால் நூறு அழிவுச்செயலுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இது ஒருபுறமிருக்க, திருமணம் நடந்த பிறகு தம்பதிகளிடையே நிலவும் கருத்து வேறுபாடு, திருமணம் நடக்காமல் இருந்ததே பரவாயில்லை என்ற எண்ணத்தை உருவாக்கு கிறது. அதையும்மீறி குழந்தையின்மை பிரச்சினை மிகக்கொடூரமாக இருக்கிறது. இந்தப் பிரச்சினை நாட்டில் கருத்தரிப்பு மையங்களை அதிகப்படுத்தியதே தவிர, குழந்தைப் பிறப்பை அதிகப்படுத்தவில்லை.

ஒருவரின் ஜனனகால ஜாதகம்கொண்டு, மேலேகூறிய அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுண்டா என்பதைக் கூறமுடியும். குழந்தையின்மைக்கான- குழந்தை பிறப்பதற்கான காரணத்திற்குரிய கிரக அமைப்பைப் பார்க்கலாம்.

ஜாதகக் கட்டங்களிலுள்ள கிரகங்களின் பாதிப்பின் தன்மையைப் பொருத்து, புத்திர தோஷத்தை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவை காலதாமதமான புத்திர பாக்கியம், ஆண் வாரிசின்றி பெண் குழந்தைகள் மட்டும் பிறக்கும் நிலை, குழந்தையே பிறக் காத நிலை.

ஒருவரின் கர்மா, கர்மவினையை சனி, ராகு- கேதுக்கள்மூலமாகவே தெரிந்து கொள்ள வேண்டும்.

சனி- கர்மா, கர்மவினை.

kuberer

ராகு- கேதுக்கள் சனியின் பிரதிநிதிகள் அல்லது வினையூக்கிகள் எனலாம். அதாவது கர்மவினையை நிகழ்த்த சனி பகவானுக்கு உதவுபவர்கள்.

ஒருவரது ஜாதகத்தில் குழந்தை பாக் கியம் பற்றி அறிய புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்தையும், ஐந்திற்கு ஐந்தா மிடமான பாக்கிய ஸ்தானம் எனும் ஒன்ப தாம் இடத்தையும், ஜாதகருக்குக் கர்மம்- ஈமக்கடன் செய்ய பிள்ளைகள் உண்டா என்பதையறிய கர்ம ஸ்தானமான பத்தா மிடத்தையும், புத்திர காரகன் குரு பகவானைப் பற்றியும் ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

5-ஆம் இடத்தை அல்லது 5-ஆம் அதிபதியை செவ்வாய், சனி பார்த்தால் புத்திர தோஷமாகும்.

5-ல் குரு இருந்தால் புத்திர தோஷம் உண்டு.

5-ஆம் இடத்தில் ராகு- கேது, சனி போன்ற பாவகிரகங்கள் இல்லாமலிருப்பது சிறப்பு.

5-ஆம் இடம், 5-ஆம் அதிபதிக்கு 6, 8, 12 போன்ற மறைவு ஸ்தான சம்பந்தம் இருக்கக்கூடாது.

ஐந்தாம் அதிபதி அல்லது 5-ல் நின்ற கிரகம் புதன் வீட்டில் தனித்து நின்று, பாவகிரகங்களின் சம்பந்தம் பெறுவது.

5-ஆம் அதிபதி, 5-ல் நின்ற கிரகம் மற்றும் புத்திர காரகன் குரு நீசம், பகை, அஸ்தமனம், வக்ரம் அடையாமலிருத்தல் நல்லது.

புத்திர காரகன் குரு பகவானுக்கு ராகு- கேது சேர்க்கையோ, அதன் நட்சத்திர சாரமோ பெறாமலிருப்பின் நல்லது. அத்துடன் புதன் வீடான மிதுனம், கன்னியில் குரு இருந்தால் தாமத புத்திர பாக்கியம்.

5, 8-ஆம் அதிபதிகள் அல்லது 5, 12-ஆம் அதிபதிகள் பரிவர்த்தனை பெற்று, குரு பலமில்லாமலிருந்தால் புத்திர தோஷம் ஏற்படும்.

9-ஆம் அதிபதி 12-ல், 5-ஆம் அதிபதி 6-ல் நின்று, குரு அஸ்தமனம் பெற்றால் புத்திர தோஷம் ஏற்படும்.

திரிகோணங்களான ஐந்து, ஒன்ப தாமிடங்களிலிருந்து சர்ப்ப கிரகங்கள் தசை நடத்தினால் புத்திர விரயம், புத்திர விரோதம், புத்திர சோகம் அல்லது புத்திர பாக்கியத் தடை போன்றவை ஏற்படும்.

அலி கிரகங்களான சனி, புதன், கேது சம்பந்தம் 1, 5, 9-ஆம் இடங்களுக்கு இருக் கக்கூடாது.

ஐந்தாமிடத்தில் சூரியன் இருந்து செவ்வாய் பார்த்தால் கருச்சிதைவு.

கிரகச் சேர்க்கையில்...

சூரியன் + ராகு, சூரியன் + சனி

சந்திரன் + ராகு

சனி + ராகு

செவ்வாய் + ராகு

செவ்வாய் + கேது போன்ற கிரகச் சேர்க்கை, சிலருக்கு குழந்தைப் பிறப்பில் பிரச்சினையை யும், ஒருசிலருக்கு பிறந்த குழந்தைகளால் பிரச்சினைகளையும் தரும்.

திதி சூன்ய அதிபதிகள் 5, 9-ஆம் அதிபதி களுடன் சம்பந்தம் பெறுவது, 5-ஆம் பாவகத்தோடு சம்பந்தம் பெறும் செவ்வாய், ராகு ஆகியவை கருக்கலைப்பை ஏற்படுத்தும்.

சர்ப்ப தோஷம், கிரகண தோஷம் என பல்வேறுவிதமான கடுமையான தோஷங்கள் உள்ளன. சர்ப்ப கிரகங்கள் நின்ற இடத்தை மட்டும் வைத்து தோஷத்தை முடிவுசெய்யக் கூடாது.

திருமணப் பொருத்தத்தின்போது, புத்திர தோஷ ஜாதகத்திற்கு புத்திர தோஷமில்லாத ஜாதகத்தைப் பொருத்தவேண்டும். ஆண் ஜாதகத்தில் புத்திர தோஷமிருந்து, பெண் ஜாதகத்தில் புத்திர தோஷமில்லாமல் இருந் தால் குழந்தைப் பேறு அமைவது கடினம். ஆண் ஜாதகத்தில் புத்திர தோஷமில்லாமல், பெண் ஜாதகத்தில் புத்திர தோஷமிருந்தால் காலம் தாழ்த்தி புத்திர பாக்கியம் கிடைக்கும். இதை இரண்டு உதாரண ஜாதகத்துடன் பார்க்கலாம்.

உதாரணம் 1- ஆண் ஜாதகம் 12-11-1972, காலை 5.30 மணிக்குப் பிறந்த இந்த ஆண் ஜாதகத்தில், லக்னாதிபதி சுக்கிரன் 12- ல் மறைவு, நீசம்.

லக்னத்தில் சூரியன் மற்றும் செவ்வாய்.

சூரியன், துலா லக்னத்திற்கு பாதகாதிபதி. செவ்வாய் குடும்ப ஸ்தானாதிபதி மற்றும் களத்திர ஸ்தானாதிபதி.

ஜாதகர் பிறந்த திதி சஷ்டி. திதி சூன்யம் அடைந்த வீடுகள் மேஷம், சிம்மம். திதி சூன்யமடைந்த கிரகங்கள் சூரியன், செவ்வாய்.

லக்னத்தில் திதி சூன்யமடைந்த சூரியன், செவ்வாய்.

லக்னம் வலிமையாக இருந்தால் மட்டுமே ஜாதகரின் செயல் பாடுகள் சிறப்பாக இருக்கும். எடுக்கும் முடிவுகள் சரியாக இருக்கும். இதை மேலும் தெளிவாகக் கூறினால், இந்தப் பிறவியில் இவருக்கு ஆகாமிய கர்மா சாபமாக இயங்கு கிறது.

2-ஆம் அதிபதி செவ்வாய் திதி சூன்ய மடைந்து சூரியனுடன் லக்னத்தில்.

2-ல் 12-ஆம் அதிபதி புதன். 12-ஆம் இடம் பிரிவினை. 12-ஆம் அதிபதி எந்த பாவத்தில் நின்றாலும், அந்த பாவகப் பலனை முடித்துவிடுவார். ஜாதகரின் ஆண் தன்மையைக் குறிக்கும் 3-ல் குரு, ராகு.

3-ல் குரு ஆட்சி பலம்பெற்றாலும், 12-ல் நின்ற சுக்கிரன் சாரம் பெற்று ராகுவுடன் இணைந்த தால் ஆண் தன்மை குறைவு. 5-ஆம் அதிபதி சனி வக்ரம்; 8-ல் மறைந்து 10-ஆம் பார்வை யாக 5-ஆம் வீட்டைப் பார்க்கிறது. பூர்வ புண்ணிய ஸ்தானம் வலிமையிழந்ததால், இந்தப் பிறவியில் இவரின் பிராரப்த கர்மா சாபமாக இயங்குகிறது.

9-ல் கேது; 3, 6- ஆம் அதிபதியான குரு சாரம். 9-ல் உள்ள கேது சஞ்சித கர்மாவை சாபமாக இயக்குகிறது. இவரது மூன்று தலைமுறை முன்னோர்களின் முழு கர்மவினைப்பதியும் இவருக்கு அப்படியே இறங்கியுள்ளது. 1, 5, 9 இந்த மூன்றும் வலிமையிழந்த ஒரு மனிதர், எப்படி பாவங்களைக் கழித்து நிம்மதியாக வாழமுடியும்?

(தொடச்சி அடுத்த இதழில்)

செல்: 98652 20406