Advertisment

பெரும் கடன் தொல்லைகளிலிருந்து மீட்கும் மைத்ர முகூர்த்த வேளை! -ஆஸ்ட்ரோ. இரு. ஸ்ரீகுமாரன்

/idhalgal/balajothidam/maitra-mugurtha-time-recover-huge-debt-problems-astro-be-srikumaran

மைத்ர முகூர்த்தம்

விவாக முகூர்த்தம், பிரம்ம முகூர்த்தம், லக்ன முகூர்த்தம், அபிஜித் முகூர்த்தம் என பல வகையுண்டு. அதுபோல மைத்ர முகூர்த்தமென்று முக்கியமான ஒன்றுள்ளது. இந்த மைத்ர முகூர்த்தம் கடன்களை அடைக்க மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

Advertisment

நம்முடைய ஜோதிட பார்வையில் இந்த மைத்ர முகூர்த்தத்தை வைத்து நன்றாக ஆராய்ந்து ஒருவருடைய கடன் பிரச்சினைகளை எளிதாகத் தீர்க்கமுடிகிறது.

Advertisment

ஒருவர் எவ்வளவு பெரிய கடன் வாங்கிருந்தாலும் அந்த கடனை எளிய முறையில் அடைக்க வழிவகை செய்கிறது இந்த மைத்ர முகூர்த்தம். ஆனால் இந்த கடன்களை அடைப்பதற்கு எப்படி எளியமுறை இருக்கிறதோ அதுபோல உங்களுடைய பொறுமையும் மிகவும் முக்கியமான ஒன்று. நீங்கள் பொறுமையாக இருந்து உங்கள் ஜோதிடர் சொல்லும் ஆலோசனைபடி செய்தால் உங்கள் கடன் பிரச

மைத்ர முகூர்த்தம்

விவாக முகூர்த்தம், பிரம்ம முகூர்த்தம், லக்ன முகூர்த்தம், அபிஜித் முகூர்த்தம் என பல வகையுண்டு. அதுபோல மைத்ர முகூர்த்தமென்று முக்கியமான ஒன்றுள்ளது. இந்த மைத்ர முகூர்த்தம் கடன்களை அடைக்க மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

Advertisment

நம்முடைய ஜோதிட பார்வையில் இந்த மைத்ர முகூர்த்தத்தை வைத்து நன்றாக ஆராய்ந்து ஒருவருடைய கடன் பிரச்சினைகளை எளிதாகத் தீர்க்கமுடிகிறது.

Advertisment

ஒருவர் எவ்வளவு பெரிய கடன் வாங்கிருந்தாலும் அந்த கடனை எளிய முறையில் அடைக்க வழிவகை செய்கிறது இந்த மைத்ர முகூர்த்தம். ஆனால் இந்த கடன்களை அடைப்பதற்கு எப்படி எளியமுறை இருக்கிறதோ அதுபோல உங்களுடைய பொறுமையும் மிகவும் முக்கியமான ஒன்று. நீங்கள் பொறுமையாக இருந்து உங்கள் ஜோதிடர் சொல்லும் ஆலோசனைபடி செய்தால் உங்கள் கடன் பிரச்சனைகள் கொஞ்சம் கொஞ்சமாக தீரும். அதிலிருந்தும் விடுபடுவீர்கள்.

கடன் வாங்கக்கூடாத நேரம் எது?

ஒருவருடைய ஜாதகத்தில் குருபகவான் காலபுருஷ சக்கரத் துக்கு ஆறாமிடத்தில் இருக்கக் கூடாது. கோட்சாரரீதியாகவும் ஆறாமிடத்தில் இருக்கக்கூடாது. அப்படியிருந்தால் அவர் இருக்கும் இடத்தை வலுப்பெறச் செய்வார். அதனால் கடன் விருத்தியாகும். அதை கவனமாகப் பார்த்து அல்லது ஜோதிட ரிடம் ஆலோசனை கேட்டு செயல் படவேண்டும்.

கோட்சாரத்தில் ராகுவோ- கேதுவோ குரு பகவானுடன் சேர்ந்திருந்தால் புதிதாகக் கடன் வாங்கக்கூடாது. அதுபோல கடனை அடைக்கக்கூடாது. அந்த நேரத்தில் நீங்கள் அடைக்க விரும்பினால் அதற்கு இந்த மைத்ர முகூர்த்த நேரத்தை ஜோதி டரிடம் கணித்துக்கொண்டு அந்த நேரத்தில் உங்கள் கடனை செலுத்தவேண்டும். அது உங்க ளுக்கு நல்ல வழிகாட்டியாக செயல்படும்.

ff

அதேபோல் சனிபகவான் ஏழரை வருடங்கள், அஷ்டமச் சனி, அர்த்தாஷ்ச் சனி இருக்கும் போது கடன் வாங்கவே கூடாது அது உங்களுக்கு நன்மையைத் தராது. அதிகமாக கடன் வாங்க வைக்கும். அந்த நேரத்தைத் தவிர்க்கவேண்டும் முக்கியமாக நீங்கள் ஒரு ரூபா கடன் வாங்கினால் கூட அது பலமடங்கு விருத்தி ஆகி விடும். ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

சந்திரன் பலமற்ற நாட்களில் கடன் வாங்கக்கூடாது. வாங்கி னால் அந்த கடன்சுமையை தாங்கவல்ல சக்தி உங்களுக்கு இருக்கவேண்டும். ஏனென்றால் சந்திரனை மனோகாரகன் என்றெல்லாம் அழைப்பார்கள். அவர் பலமற்ற நாட்களில் கடன் வாங்கினால் அந்த கடன்சுமை தீராத வலியைத் தரும். அந்த நேரத்தில் கவனமாக இருந்து கொள்ளவேண்டும்.

செவ்வாய்க்கிழமையில் கடன் வாங்காதீர் கள். வாங்கினால் கடனைத் திருப்பி அடைத்து விடுங்கள். உங்களுக்கு சுலபமாக கடன் பிரச்சினை தீர்ந்துவிடும். செவ்வாய்க் கிழமையில் கடன் வாங்கினால், அந்த கடனிலேயே கடைசிவரைக்கும் இருப்பீர் கள். அதனால செவ்வாய்யன்று கடன் வாங்கு வதைத் தவிர்க்கவேண்டும். அதுபோல செவ்வாயன்று தான், தர்மங்கள் செய்யலாம்; அது மிகவும் நல்லது.

வாங்கின கடனைத் திரும்ப செலுத்த தீர்வென்ன?

நம்முடைய வாழ்க்கையில் கேது மற்றும் செவ்வாய் பகவான் கடனை தீர்ப்பதற்கு பெரும்பங்கு வகிக்கிறார்கள். கேதுவின் அதிதேவதை விநாயகப் பெருமானையும், செவ்வாயின் அதிதேவதை முருகனை யும் செவ்வாய்க் கிழமைகளில் வழிபடுவது மற்றும் கேது, செவ்வாய் சேர்க்கையின்போது- அதாவது மைத்ர முகூர்த்தத்தின்போது கடனை திரும்ப அடைத்தால் கடன் பிரச் சினையிலிருந்து மிக எளிதாக மீண்டுவந்து விடலாம்.

நாம் ஜோதிடரிடம் நம் ஜாதகத்தைக் கொண்டு எந்த நேரத்தில் நம் கடனை செலுத்தவேண்டுமென்று கேட்டுத் தெரிந்து கொண்டு அதன்பின் கடனை செலுத்தினால் நம் கடன் விரைவில் அடையும். இது ஜாதக ரீதியாகவும் செயல்படுகிறது அனுபவ ரீதியாகவும் தெரிந்துகொண்ட உண்மை.

மேலும் கடன் பிரச்சினையிலிருந்து விடுபட சனிபகவான் வழிபாடு சாலச் சிறந் தது. அதற்கு முக்கியமான திருத்தலத்திற்குச் சென்றுவரலாம். அதாவது, திருநள்ளாறு, குச்சனுர், பொழிச்சலூர் (சென்னை) கோவி லுக்கு அடிக்கடி போய்வந்தால் சீக்கிரம் கடன் பிரச்சினையிலிருந்து தீர்வு காணலாம்.

அதுபோல ருண விமோட்சன ஸ்தோத் திரத்தை (இது லட்சுமி நரசிம்மர் ஸ்லோகம்) ஓவ்வொரு வெள்ளிக்கிழமைகளில் சொல்லி வழிபட்டால் உங்கள் கடன் பிரச்சினைக்கு எளிதாகத் தீர்வுகாணமுடியும்.

உங்கள் ஜாதகத்தை வைத்து மட்டுமே உங்களுடைய கடன்நிவர்த்தி பலனையும் பரிகாரத்தையும் சொல்லமுடியும்.

செல்: 98410 07385

bala120523
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe