Advertisment

மிகப்பெரிய கடனையும் எளிதாகக் தீர்க்கும் மைத்ர முகூர்த்த காலம்!

/idhalgal/balajothidam/maikapapaeraiya-katanaaiyauma-elaitaakaka-taiirakakauma-maaitara-maukauratata

lakshmi

பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி

ஜோதிட சாஸ்திரத்தில் ஜாதகம் கணித்துப் பலன்சொல்லும்போது, லக்னம் என்ற முக்கியப் புள்ளியை வைத்தே சொல்லப்படுகிறது. லக்னத்திற்கு 6-ஆமிடம் என்பது ருண, ரோக, சத்ரு ஸ்தானம். ருணம் என்றால் கடன்; ரோகம் என்றால் நோய்; சத்ரு என்றால் எதிரியாகும்.

Advertisment

மனித வாழ்வில் பணம் படைத்தவர்கள், நடுத்தர வர்க்கம், எளிய மக்கள் என அனைவரது வாழ்விலும் அவரவர் தகுதிக்கேற்ப கடன் தொல்லைகள் உள்ளன. சிலருக்கு கடனைத் திரும்பக் கட்டும் சூழ்நிலை ஏற்படும்; சிலருக்கு கடனே வாழ்க்கையை முடித்துவிடுகிறது. ஒருவரின் ஜனன ஜாதகம் எப்படி அமைகிறதோ அதன்படிதான் கடன் வாழ்க்கை- கடன் படாத வாழ்க்கை அமைகிறது.

Advertisment

"கடன் அன்பை முறிக்கும்' என்ற பழமொழிக்கேற்ப கடன் நண்பனை சத்ருவாக்கிவிடுகிறது. 6-ஆம் அதிபதியோ, 6-ல் நின்ற கிரகமோ அல்லது 6-ஆம் அதிபதியின் நட்சத்திரங்களோதான் ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தை இயக்குபவர்கள். இந்த 6-ஆம் பாவக காரகர்கள் சனி, செவ்வாய்.

ஒரு ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திலிருந்து 3, 6, 8, 12 ஆகிய நான்கு பாவகங்களும் துர்ஸ்தானங்கள் அல்லது மறைவு ஸ்தானங்கள் ஆகும்.

ஒருவர் கர்மவினைப்படி அனுபவிக்கவேண்டிய துன்பங்களைப் பரிபூரணமாகத் தருவது இந்த மறைவு ஸ்தானங்களே.

இந்த மறைவு ஸ்தானங்கள் ஆட்சி, உச்சம் பெறாமல், கேந்திர, திரிகோணம் பெறாமல் வலுக்குன்றியவர்களுக்கு விபரீத ராஜயோகம் எனப்படும் திடீர் அதிர்ஷ்டம், புதையல் கிட்டும்.

இவர்கள் அடுத்தவர் பொருளை அனுபவிக்கும் யோகம் பெற்றவர்கள். எங்கிருந்து வருகிறது? எப்படி வருகிறது என்று ஜாதகருக்கே புரியாத வகையில் கதவைத் தட்டிக் கொட்டும்.

மறைவு ஸ்தானங்கள் வலுப்பெற்றவர்களுக்கு நோயும் கடனும் கதவைத்தட்டி வரும்.

சிலருக்கு ராகு தசை நடைபெறும் காலங்களில் கோடான கோடி பணம் வரும். வீடு, வாகனம் என அனைத்து லௌகீக சுகபோகங்களையும் அனுபவிப்பார்கள். குரு தசை ஆரம்பமானவுடன் சிங்கிள் டீக்கு வழியில்லாமல், "கோடி' போய் "தெருக்கோடி'யில் நிற்பார்கள்.

மனித வாழ்வையே புரட்டிப்போடும் வலிமை கோட்சார கிரகங்களுக்கு உண்டு

lakshmi

பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி

ஜோதிட சாஸ்திரத்தில் ஜாதகம் கணித்துப் பலன்சொல்லும்போது, லக்னம் என்ற முக்கியப் புள்ளியை வைத்தே சொல்லப்படுகிறது. லக்னத்திற்கு 6-ஆமிடம் என்பது ருண, ரோக, சத்ரு ஸ்தானம். ருணம் என்றால் கடன்; ரோகம் என்றால் நோய்; சத்ரு என்றால் எதிரியாகும்.

Advertisment

மனித வாழ்வில் பணம் படைத்தவர்கள், நடுத்தர வர்க்கம், எளிய மக்கள் என அனைவரது வாழ்விலும் அவரவர் தகுதிக்கேற்ப கடன் தொல்லைகள் உள்ளன. சிலருக்கு கடனைத் திரும்பக் கட்டும் சூழ்நிலை ஏற்படும்; சிலருக்கு கடனே வாழ்க்கையை முடித்துவிடுகிறது. ஒருவரின் ஜனன ஜாதகம் எப்படி அமைகிறதோ அதன்படிதான் கடன் வாழ்க்கை- கடன் படாத வாழ்க்கை அமைகிறது.

Advertisment

"கடன் அன்பை முறிக்கும்' என்ற பழமொழிக்கேற்ப கடன் நண்பனை சத்ருவாக்கிவிடுகிறது. 6-ஆம் அதிபதியோ, 6-ல் நின்ற கிரகமோ அல்லது 6-ஆம் அதிபதியின் நட்சத்திரங்களோதான் ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தை இயக்குபவர்கள். இந்த 6-ஆம் பாவக காரகர்கள் சனி, செவ்வாய்.

ஒரு ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திலிருந்து 3, 6, 8, 12 ஆகிய நான்கு பாவகங்களும் துர்ஸ்தானங்கள் அல்லது மறைவு ஸ்தானங்கள் ஆகும்.

ஒருவர் கர்மவினைப்படி அனுபவிக்கவேண்டிய துன்பங்களைப் பரிபூரணமாகத் தருவது இந்த மறைவு ஸ்தானங்களே.

இந்த மறைவு ஸ்தானங்கள் ஆட்சி, உச்சம் பெறாமல், கேந்திர, திரிகோணம் பெறாமல் வலுக்குன்றியவர்களுக்கு விபரீத ராஜயோகம் எனப்படும் திடீர் அதிர்ஷ்டம், புதையல் கிட்டும்.

இவர்கள் அடுத்தவர் பொருளை அனுபவிக்கும் யோகம் பெற்றவர்கள். எங்கிருந்து வருகிறது? எப்படி வருகிறது என்று ஜாதகருக்கே புரியாத வகையில் கதவைத் தட்டிக் கொட்டும்.

மறைவு ஸ்தானங்கள் வலுப்பெற்றவர்களுக்கு நோயும் கடனும் கதவைத்தட்டி வரும்.

சிலருக்கு ராகு தசை நடைபெறும் காலங்களில் கோடான கோடி பணம் வரும். வீடு, வாகனம் என அனைத்து லௌகீக சுகபோகங்களையும் அனுபவிப்பார்கள். குரு தசை ஆரம்பமானவுடன் சிங்கிள் டீக்கு வழியில்லாமல், "கோடி' போய் "தெருக்கோடி'யில் நிற்பார்கள்.

மனித வாழ்வையே புரட்டிப்போடும் வலிமை கோட்சார கிரகங்களுக்கு உண்டு. தசாபுக்தியோடு தொடர்பு பெறாத கோட்சார கிரகத்தால் ஏற்படுத்தப்படும் தாக்கம் குறைவாக இருக்கும். மாரக தசையோடும், புக்தியோடும், அதன் அதிபதிகளோடும் தொடர்புபெறும் கோட்சார கிரகங்கள் சாமானியர்களைக்கூட உருத்தெரியாமல் செய்துவிடும்.

lakshmi

மறைவு ஸ்தானங்கள் வலிமை பெற்ற ஜாதகருக்கு நித்திய கண்டம்; பூரண ஆயுள். இவர்கள் கடன் அல்லது நோய் அல்லது எதிரித்தொல்லை, மனஉளைச்சல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றிரண்டை அனுபவித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

ஜோதிடரீதியாக கடன், சத்ரு, நோய்த்தொல்லை ஏற்படக்காரணங்கள்

1, 2-ஆம் பாவகம் 6-ஆம் பாவகத்தோடு இணைவு பெறும்போது ஜாதகரின் நடவடிக்கையால் கடன் ஏற்படுகிறது.

3, 11-ஆம் பாவகம் 6-ஆம் பாவகத்தோடு இணைவு பெறும்போது உடன்பிறந்த சகோதர, சகோதரிகளாலும், இளைய மனைவியாலும், காதலர்கள் அதீத அன்பால் ஒருவர் பிரச்சினையை அடுத்தவர் சுமப்பது போன்றவற்றாலும் ஏற்படுகிறது.

4, 6-ஆம் பாவக இணைவால் வீடு, வாகனம், நிலம், விவசாயம், தாய் மற்றும் தாய்வழி உறவினர் மூலமும் கடன் உருவாகும். சுகஸ்தானத்தில் கோட்சார அஷ்டமாதிபதி அல்லது பாதகாதிபதி பயணம் செய்யும்போது நகை அடமானத்திற்குச் சென்றுவிடுகிறது.

5, 6-ஆம் பாவக இணைவால் பிள்ளைகளின் கல்வி, திருமணத்திற்காக கடன் ஏற்படும். சில நேரங்களில் பிள்ளைகளே சத்ருவாகிறார்கள்.

6-ம் 6-ம் இணைவு பெற்றால் பரிவு மிகுதியால் ஜாமின் போட்டு, கடனையும் சத்ருவையும் உருவாக்கி, வட்டிக்கு வட்டிகட்டி சொல்லமுடியாத துயரம் ஏற்படும். இந்த இணைவு உள்ளவர்களுக்கு தங்கள் வாழ்வில் ஏற்படும் சில நிகழ்வுகளால் பேரானந்தமாக இருக்கும். மாரக தசை நடக்கும்போது அந்த பேரானந்தத்தை ஏன் அனுபவித்தோம் என்று நொந்துபோகும் அளவிற்கு மாரகாதிபதிகள் கொடுத்துக் கெடுத்துவிடுவார்கள். உயிரை மட்டும் விட்டு வைப்பார்கள். சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் மாரகாதிபதிகள் பரிதவிக்க விட்டுதான் தசையை முடிப்பார்கள்.

6, 7-ஆம் பாவக இணைவால் தொழில் கூட்டாளியாலும், களத்திரத்தின் மூலமும் கடன் ஏற்படும். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு 6, 7-ஆம் பாவகம் தொடர்பு இருக்கக்கூடாது.

7-ஆம் அதிபதியுடன் குரு, ராகு, கேதுக்கள் இணைவு பெறும்போதும், தசா நடத்தும்போதும் 80 சதவிகிதம் பேர் தங்களின் தகுதிக்குமீறிய கடனைச் சுமக்கிறார்கள். புதனுடன் தொடர்புடைய கடன், வங்கிக்கடனைத் திரும்பச் செலுத்தமுடியாத சூழ்நிலையையும், குருவுடன் தொடர்புடைய கடன், கந்து வட்டியிலும் சிக்கவைக்கிறது.

2, 6, 7 பாவகங்கள் தொடர்புபெறும் தம்பதியினர் சிலர் வாழ்நாள் முழுவதும் கருத்து வேறுபாடுடன் வாழ்கின்றனர்.

2, 6, 7, 8 பாவகத் தொடர்புபெற்ற தம்பதியினர், தொழில் கூட்டாளிகள். போலீஸ், கோர்ட், கேஸ், விவாகரத்து என்று அலைந்தே பாதி வாழ்நாளைத் தொலைத்து, எஞ்சிய வாழ்நாளில் விரக்தியின் உச்சக்கட்டத்திற்குச் சென்று தவறான முடிவெடுக்கிறார்கள். திருமணப் பொருத்தம் பார்க்கும்போது இந்த பாவக இணைவுள்ளவர்கள் மிகவும் கவனமாக வரனைத் தேர்வுசெய்வதே இதற்குத் தீர்வு.

3, 6, 8, 12-ஆம் பாவக இணைவால் போலீஸ், கோர்ட், கேஸ், கட்டப்பஞ்சாயத்து, நஷ்டம், அவமானம், தற்கொலை எண்ணம், சிறைத்தண்டனை உண்டாகும். இவர்களில் பெரும்பான்மையோர் ஷேர் மார்க்கெட், சீட்டு, ரேஸ், தவறான நடவடிக்கைகள் மூலம் பணத்தைத் தொலைத்து கடனாளியானவர்கள்.

6, 9-ஆம் பாவக இணைவால் பூர்வீக சொத்தைக் காப்பாற்ற கடன், பூர்வீகச் சொத்து இழப்பு, தந்தை மற்றும் தந்தைவழி உறவுகள் மூலமும் உருவாகும்.

சில குடும்பங்கள் தலைமுறை தலைமுறையாக கடனை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். முறையான நீத்தார்கடன் செய்யாத குடும்ப ஜாதகங்களை ஆய்வு செய்தால், அந்த வழித்தோன்றல்கள் அனைவருக்கும் 9-ல் சில குறிப்பிட்ட கிரகங்களே இருக்கும். அதுவும் வக்ரம்- நீசம் பெற்ற குரு, சனி, ராகு, கேதுவாகவே இருக்கும்.

இவ்வாறு இருப்பவர்களின் மூன்று தலைமுறையிலுள்ள முன்னோர்களின் குற்றம் என்ன என்பதையறிந்து அதற்கான சாந்தி செய்யும்போது நிச்சயம் விமோசனம் ஏற்படும்.

6, 10-ஆம் பாவக இணைவால் தொழில் இழப்பு, தொழில் நட்டம் ஏற்படுகிறது. சூரியன், சுக்கிரன் இணைவு பெற்றவர்கள் தொழில் நிர்வாகத்திற்கும், ஆடம்பரத்திற்கும் செலவு செய்தே அழிகின்றனர்.

ஜனனகால ஜாதகத்தில் குரு, ராகு- கேதுவுடன் உள்ள தொடர்பே கடன் ஏற்படும் காலத்தையும், நிவாரணம் ஏற்படும் காலத்தையும் உணர்த்தும்.

மேலே குறிப்பிட்டதுபோல 6-ஆம் பாவக அதிபதியோடு தொடர்புபெறும் கிரகம் மற்றும் அதன் அதிபதி தொடர்பான நோய் ஏற்படும்.

8-ஆம் பாவகத்துடன் தொடர்புபெறாத நோய்க்கு சிகிச்சைமூலம் தீர்வு கிடைக்கும். 8-ஆம் பாவகத்துடன் தொடர்புபெறும் நோய் வாழ்க்கையை முடித்துவிடுகிறது.

சனி, ராகு- கேதுவுடன் தொடர்புபெறும் நோய் நீண்டகாலம் அனுபவிக்கக் கூடியதாகவும், பரம்பரை வியாதியாகவும் இருக்கும். சிலருக்கு இன்னவென்று இனம்புரியாத நோயும் ஏற்படுகிறது.

சிலருக்கு கடனுக்குக் கவலைப்பட்டு நோய் வந்துவிடும். கடன் வாங்கும் முன்பே சுயஜாதகத்தில் பூர்வபுண்ணியம், ருண ஸ்தானம், பாக்கிய ஸ்தானம், அஷ்டம ஸ்தானங்களையும் தசாபுக்திகளையும் ஆய்வுசெய்து கடன் வாங்குவதை முடிவு செய்தல் சிறப்பு.

ஜனன ஜாதகத்தில் 6, 8, 12-ஆம் அதிபதிகள் தொடர்பு பெறாதவரை அளவான கடனாக இருக்கும். மறைவு ஸ்தானங்களின் தொடர்பால் உருவாகும் கடன் ஆஞ்சனேயர் வால்தான். 6, 8, 12 பாவகங்கள் தொடர்பு பெற்றாலே முன்ஜென்ம கர்மாதான். கடன் என்றாலே கர்மாதான். கர்மாவானது காசு, காமம், சொத்து ஆகியவற்றின் மூலமே உருவாகிறது.

அடுத்தவருடைய பணம் நம்மிடம் ஒரு ரூபாய் இருந்தால்கூட அதைத் தீர்க்க மறுபிறவி எடுத்தே தீரவேண்டும். காலபகவானுக்கும் காலத்திற்கும் ஞாபக மறதியே கிடையாது.

இவை எல்லாவற்றுக்கும்மேல் சிலர் வெளிநாட்டு வேலைக்குச் செல்வது யோகம் என்று நினைத்துக்கொண்டிருப்போம்.

மாரக தசையில் ராகு- கேது தொடர்புபெற்று கோட்சார ராகு- கேதுக்கள் 8, 9, 12-ஆம் பாவகத்துடன் இணையும்போது, உள்நாட்டு சிறைக்கு பதில் வெளிநாடு சென்றுவிடுவார்கள்.

ராகு- கேதுக்கள் லக்ன சுபசாரர்களின் வலிமையோடு இயங்கினால் வெளிநாட்டு மோகத்தில் ஒன்றி அங்கேயே தங்கிவிடுவார்கள். அசுபத்தன்மை பெற்றவர்கள் பெற்றோர்கள், மனைவி, குழந்தைகளைப் பிரிந்து, அவர்களும் சோறு, தண்ணீர் கிடைக்காமல் அவதியுறுவது அனைவரும் அறிந்ததே.

எவர் ருணம், ரோக, சத்ரு ஸ்தானத்தைப் பரிபூரணமாக அனுபவித்து அவதியுறுகிறார்களோ அவர்களுக்குதான் ஞானம் பிறக்கும்.

ஞானம் பிறந்தவர்தான் முக்திக்கு வழிதேடுகிறார். கடன் துன்பம் ஏற்படும்போது அதை நிவர்த்திசெய்ய சிறந்த பரிகார, ஹோம பூஜைகள் உள்ளன.

தீர்வு

சென்ற பிறவியில் தவறுகளால் உருவான நோய் மற்றும் கடனுக்கு ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமியன்று குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும். கடுமையான நோயினால் பாதிப்படைந்தவர்கள் தன்வந்திரி மூலமந்திரம் மற்றும் மிருத்யுஞ்ஜய மந்திரம் பாராயணம் செய்யவேண்டும். ஸ்ரீலட்சுமி நரசிம்மர் வழிபாடு தொடர்ந்து செய்துவந்தால் கைமேல் பலன் கிடைக்கும். மிகக்கொடிய கடன்களுக்கு யோகநரசிம்மரை வழிபடவேண்டும்.

தினமும் வரும் குளிகை நேரத்தில் சிறிய கடன் தொகையை செலுத்திக்கொண்டே வந்தால் கடன் முடிவுக்கு வரும்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, மனித வாழ்வில் மாரக காலங்களில் ஏற்படும் கடன் பிரச்சினையிலிருந்து மீள, ஞானிகளாலும் தீர்க்கதரிசிகளாலும் கணித்துக்கூறப்பட்ட "மைத்ர முகூர்த்த' நேரத்தில் சிறு பகுதியை அடைத்தால் வெகுவிரைவில் மொத்த கடனும் அடைபடும். மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம் எவ்வளவு பெரிய கடனாக இருந்தாலும் எளிமையாகத் தீர்த்துவைக்கும் கால நேரமாகும்.

செவ்வாய்க்கிழமையும் அஸ்வினி நட்சத்திரமும் சேருகின்ற நாட்களில் மேஷ லக்னம் அமையும் நேரமும், செவ்வாய்க்கிழமை, அனுஷ நட்சத்திரம், விருச்சிக லக்னம் அமையும் நேரமும் மைத்ர முகூர்த்தமாகும். ஏனென்றால் இந்த ருண, ரோக, சத்ரு ஸ்தானங்களை இயக்குபவர்கள் சனி, செவ்வாய்தான்.

எது எப்படி இருந்தாலும் சிறிய கடனாக இருக்கும்போதே சரிசெய்ய முயலவேண்டும்.

"பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின்'என்ற வள்ளுவரின் வாக்கிற்கேற்ப, மெல்லிய மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும், அளவிற்கு அதிகமாக ஏற்றினால் அச்சு முறியும். கடனும் சேமிப்பும் அதிகரித்துக்கொண்டே இருக்கும். சிறியதாகத் தெரியும் தொகை ஒரு நாளில் வளர்ந்து நிற்கும். அது சேமிப்பாக இருந்தால் வாழ்க்கை ஆச்சரியக் குறியாகும். அதுவே கடனாக இருந்தால் வாழ்க்கை கேள்விக்குறியாகும்.

செல்: 98652 20406

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe