லக்ன கேந்திரத்தில், குருவின் மீன ராசியில் செவ்வாய் இருந்தால் ஜாதகர் பலசாலியாக இருப்பார். பெயர், புகழ் இருக்கும். பணக்காரராக இருப்பார். குடும்பம் நன்றாக
இருக்கும். ஜாதகர் தர்மத்தைக் கடைப்பிடிப்பார். நல்ல மனைவி அமைவாள். வியாபாரம் நன்கு நடக்கும். வீட்டில் சந்தோஷம் இருக்கும். ஜாதகர் கடுமையாக உழைத்து பணத்தை சம்பாதிப்பார்.
2-ஆம் பாவத்தில் தன் சுய ராசியான மேஷ ராசியில் செவ்வாய் இருந்தால் ஜாத கருக்கு பணவரவு நன்றாக இருக்கும். பெரிய பணக்காரராக இருப்பார்.குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். ஜாதகர் கடுமையாக பேசுவார். நீண்ட ஆயுள் இருக்கும். பூர்வீக சொத்து கிடைக்கலாம். ஜாதகர் அதிர்ஷ்டசாலியாக இருப்பார். தர்மத்தைக் கடைப்பிடிப்பார்.
3-ஆம் பாவத்தில் சுக்கிரனின் ரிஷப ராசியில் செவ்வாய் இருந்தால், ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். உடன்பிறந்தோரால் சந்தோஷம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தந்தையால் மன சந்தோஷம் கிடைக்கும். அரசாங்க விஷயத்தில் பெயர், புகழ் கிடைக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி இருக்கும். ஜாதகர் அதிர்ஷ்டசாலியாக இருப்பார். பகைவர்களை வெல்வார்.
4-ஆம் பாவத்தில் புதனின் மிதுன ராசியில் செவ்வாய் இருந் தால் அன்னையால் சந்தோஷம் இருக்கும். பூமி பாக்கியம் இருக் கும். ஜாதகர் பணக்காரராக இருப்பார். மனைவி நல்லவளாக இருப்பாள். குடும்பத்தில் சந்தோ ஷம் இருக்கும். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். அர சாங்க விஷயத்தில் ஆதாயம் இருக்கும். ஜாதகர் அதிர்ஷ்டசாலியாக இருப்பார்.
5-ஆம் பாவத்தில் சந்திரனின் கடக ராசியில் செவ்வாய் நீசமடைகிறது. அதனால், படிப்பு விஷயத்தில் குறை இருக்கும். பிள்ளைகளால் பிரச்சினை இருக்கும். குடும்ப சந்தோஷத்தில் குறை இருக்கும். சிலருக்கு வாரிசு உண்டாவதில் பிரச்சினை இருக்கும். மனதில் சிந்தனை அதிகமாக இருக்கும். கடுமையான போட்டிக்கு மத்தியில் உழைக்க வேண்டியதிருக்கும்.
6-ஆம் பாவத்தில் சூரியனின் சிம்ம ராசியில் செவ்வாய் இருந்தால் ஜாதகர் தன் எதிரிகளை வெல்வார். பணம் சம்பாதிப்பதில் சில பிரச்சினைகள் இருக்கும். வெளியே தன்னை கோடீஸ்வரரைப்போல ஜாதகர் காட்டிக் கொள்வார். போட்டியில் வெற்றி கிடைக்கும்.
7-ஆம் பாவத்தில் புதனின் கன்னி ராசியில் செவ்வாய் இருந்தால் மனைவி நல்லவளாக இருப்பாள். வியாபாரத்தில் லாபம் இருக்கும். ஜாதகர் தர்மத்தைக் கடைப்பிடிப்பார். தந்தையுடன் உறவு நன்றாக இருக்கும். ஜாதகர் அழகான தோற்றத் தைக்கொண்டிருப்பார். நன்கு பணம் சம்பாதிப் பார். அதிர்ஷ்டசாலியாக இருப்பார். பெயர், புகழ் இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும்.
ஜாதகருக்கு கோப குணம் இருக்கும்.
8-ஆம் பாவத்தில் சுக்கிரனின் துலா ராசியில் செவ்வாய் இருந்தால் ஜாதகருக்கு நீண்ட ஆயுள் இருக் கும். பூர்வீக சொத்து கிடைக்கும். பெயர், புகழில் குறை இருக் கும். பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற எண்ணம் எப்போதும் இருக்கும். ஜாதகர் கடுமையாக உழைத்து பணத்தைச் சம்பாதிப் பார். தைரியசாலியாக இருப்பார். உடன்பிறந் தோருடன் உறவு சுமாராக இருக்கும்.
9-ஆம் பாவத்தில் சுய ராசியான விருச்சிக ராசியில் செவ்வாய் இருந்தால் ஜாதகர் அதிர்ஷ்டசாலியாக இருப்பார். தர்மத்தைக் கடைப்பிடிப்பார். பெற்றோரு டன் உறவு நன்றாக இருக்கும். பூமி, வீடு வாங்கலாம். பெயர், புகழ் கிடைக்கும்.
10-ஆம் பாவத்தில் குருவின் தனுசு ராசியில் செவ்வாய் இருந்தால் வியாபாரத்தில் பெயர், புகழ் கிடைக்கும். தந்தையால் சந்தோஷம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். ஜாதகர் கடுமையாக உழைத்து குடும்பத்தைக் காப்பாற்றுவார். உடல்நலம் நன்றாக இருக்கும். ஜாதகர் சுயமரியாதையுடன் வாழ்வார். சிலருக்கு படிப்பு விஷயத்தில் தடங்கல்கள் இருக்கும். சிலர் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துவார்கள்.
11-ஆம் பாவத்தில் சனியின் மகர ராசியில் செவ்வாய் உச்சமடைகிறது. ஜாதகர் அதிர்ஷ்டசாலியாக இருப்பார். தர்மச் செயல்களில் ஈடுபடுவார். படிப்பு விஷயத்தில் தடைகளைக் கடந்து வெற்றி கிடைக்கும். குழந்தை பாக்கியத்தில் தடைகள் இருக்கும். ஜாதகர் பகைவர்களை வெல்வார். போட்டியில் வெற்றி கிடைக்கும். பெயர், புகழுடன் பணக்காரராக வாழ்வார்.
12-ஆம் பாவத்தில் சனியின் கும்ப ராசியில் செவ்வாய் இருந்தால், செலவுகள் அதிகமாக இருக்கும்.
ஜாதகர் வெளித் தொடர்புகளின்மூலம் பணத்தைச் சம்பாதிப்பார். பெயர், புகழ் இருக்கும். குடும்ப சந்தோஷத்தில் குறை இருக்கும். பணத்தைச் சேமிப்பதில் பிரச்சினை இருக்கும். ஜாதகர் கடுமை யாக உழைத்து, பயணம் செய்து பணம் ஈட்டுவார். உடன்பிறந்தோருடன் சுமாரான உறவு இருக்கும். ஜாதகர் துணிச்சல் குணம் கொண்டவராக இருப்பார். மனைவி யின் உதவியுடன் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும்.
செல்: 98401 11534