அன்றாட வாழ்க்கையில் சிலர் கூறுவது, நல்லதோ- கெட்டதோ, அப்படியே நிகழ்ந்துவிடுவதைக் காண்கிறோம். "அவர் சொல்றதெல்லாம் பலிச்சிடுதுங்க' என்றும் சொல்வதுண்டு. இதையே வாக்கு பலிதம் என்றும் கருதலாம்.
அப்படிப்பட்ட நபர்களிடம் மற்றவர் மரியாதையுடன் நடந்து கொள்வர்.
பொதுவாக மகான்கள், ஞானிகளுக்கே முக்காலமும் உணர்ந்து உரைக்கும் சக்தியும், வாக்கு பலிக்கும் சத்தியவாக்கும் அமையும். இந்த அபூர்வசக
அன்றாட வாழ்க்கையில் சிலர் கூறுவது, நல்லதோ- கெட்டதோ, அப்படியே நிகழ்ந்துவிடுவதைக் காண்கிறோம். "அவர் சொல்றதெல்லாம் பலிச்சிடுதுங்க' என்றும் சொல்வதுண்டு. இதையே வாக்கு பலிதம் என்றும் கருதலாம்.
அப்படிப்பட்ட நபர்களிடம் மற்றவர் மரியாதையுடன் நடந்து கொள்வர்.
பொதுவாக மகான்கள், ஞானிகளுக்கே முக்காலமும் உணர்ந்து உரைக்கும் சக்தியும், வாக்கு பலிக்கும் சத்தியவாக்கும் அமையும். இந்த அபூர்வசக்தி சாதாரண, சமானிய மனிதர்களிடமும் தென்படலாம். இதற்கு அடிப்படைக் காரணம் அவரவர் ஜாதகத்திலுள்ள மகா சரஸ்வதி யோக அமைப்புதான். இந்த அரிய யோக அமைப்பை மந்த்ரேஸ்வர் தனது "பலதீபிகை' நூலில் பின்வருமாறு விவரிக்கிறார்.
எவர் ஒருவர் ஜாதகத்தில் சுபகிரகங்களான குரு, சுக்கிரன், புதன் கேந்திர திரிகோண வீடுகளில் அமையப்பெற்று, குரு ஆட்சி அல்லது உச்சம்பெற்றால் அந்த நபர் முக்காலம் உணர்ந்து கூறும் மகா சரஸ்வதி யோகம் பெறுகிறார்.
இதன் விளக்கம் பின்வருமாறு...
சுபகிரகங்கள் திரிகோண- கேந்திர வீடுகளில் இருக்க வேண்டும். அதாவது ஜென்ம லக்னம், ஐந்தாம் வீடு, ஒன்பதாம் வீடு ஆகிய திரிகோண வீடுகள்;
ஜென்ம லக்னம், நான்காம் வீடு, ஏழாம் வீடு, பத்தாம் வீடு ஆகிய கேந்திர வீடுகள்.
குரு ஆட்சி- உச்சம் பெறவேண்டும். அதாவது ஆட்சி வீடுகளான தனுசு, மீனம்; உச்ச வீடான கடகத்தில் இருக்க வேண்டும். ஜாதகத்தில் மேற்கூறிய இரண்டு அமைப்பு உள்ளவர் மகா சரஸ்வதி யோகம் பெற்றவராகிறார்.
மேற்கூறிய மகா சரஸ்வதி யோக அமைப்பு பெற்றவர்களில் மிகச்சிறந்த உதாரணமாகத் திகழ்ந்தவர் ஷீரடி சாய்பாபா ஆவார். அவரது ஜாதக அமைப்பைக் காண்போம்.
சுபகிரகமான குரு, திரி கோண வீடான ஒன்பதாம் வீட்டில் உச்சம்பெற்று அமைந்துள்ளது.
சுபகிரகங்களான சுக்கிரன், புதன் கேந்திர வீடான ஏழாம் வீட்டில் அமையப் பெறுகின்றன.
இந்தப்புவியில் 81 ஆண்டு கள் (1837-1918) வாழ்ந்து பக்தர் களுக்கு அருள்பாலித்து அற்புதங்களை நிகழ்த்திக்காட்டிய உத்தமபுருஷர்; அவரது வழிபாட்டுத் தலங்கள் இல்லாத ஊர்களே இல்லை எனலாம். அவர் வாழ்ந்த காலத்தில் மட்டுமல்ல; இப்போதும் உண்மையான பக்தர்களை சோதனைகளுக்கு ஆட்படுத்தி, அருள்பாலித்து, அவர்களது வாழ்வில் அற்புதங் களை நிகழ்த்தி வருகிறார். அந்த மகானை போற்றிப் பணிவோம்.
செல்: 74485 89113