Advertisment

விரும்பியதைப் பெற்றுத் தரும் மந்திர சாஸ்திரப் பரிகாரம்! -கே. விஜயராகவன்

/idhalgal/balajothidam/magical-remedy-will-get-you-what-you-want-k-vijayaragavan

ஆட்சியும் அதிகாரமும் வேண்டுமா?

""ஆமாய்யா ஆமாம். அதுக்குதானேய்யா படாதபாடு பட்டுக்கிட்டுக் கெடக்கேன். என்ன கெரகமோ? கைக்கெட்டுனா வாய்க்கு எட்ட மாட்டேங்குது. நான் சேத்துவிட்ட பயலுவல்லாம் இன்னிக்கு எங்கியோ போயிட்டான்!'' இப்படி சிலர் புலம்புவதும், ""நானே எதிர்பாக்கலய்யா. தலைவரு திடீர்னு கூப்பிட்டு "இந்த எலெக்ஷன்ல நீ நிக்கிறே. மத்தத எல்லாம் கட்சி பாத்துக்கும்.

Advertisment

நீ போயி வேலையப் பாரு'ன்னாரு. என்னால நம்பவே முடியல'' என்று சிலர் பேசுவதும் அரசியலில் நடப்பதுண்டு. ஆளுங்கட்சி எதிர்கட்சியாவதும், செல்வாக்காக வலம்வந்தவர்கள் செல்லாக் காசாவதும், சொந்தக் கட்சியிலேயே ஓரம்கட்டப்படுவதும், யாரென்றே தெரியாமல் இருந்தவர்கள் பதவியில் அமர்வதும் அரசியலின் அதிசயம்.

Advertisment

n

பொதுவாக அரசியலில் ஈடுபடுவதற்கு தைரியமும், பணபலமும், ஆள்பலமும், தான் சார்ந்த கட்சியின் ஆதரவும் அடிப்படையாக இருக்கவேண்டிய அம்சங்கள். இத்துடன் எப்போது யாரோடு சேர்வது- யாரிடமிருந்து ஒதுங்குவது- எப்படி பேசவேண்டும்- யாரிடமிருந்து என்ன சிக்கல் வரும்- எதை எப்படி எதிர்கொள்வது- எதிர்காலத்தை எப்படி அமைத்துக்கொள்வது- வலுவாக ஊன்றிக்கொள் வதற்கு என்ன செய்யவேண்டும் என்றெல் லாம் யோசித்து நடைமுறைப்படுத்தும் புத்திசாலித்தனமும் இருக்கவேண்டியது அவசியம்.

இன்னும் இப்படி எத்தனையோ தகுதிகள் இருந்தாலும், மக்கள் ஆதரவும் மிகவும் அவசியம். எல்லாம் இருந்தும், அதிகாரத்தில் அமர்ந்துவிட முடியுமா என்றால், அதற்கும் கொடுத்துவைத்திருக்க வேண்டும். இந்தக் கொடுப்பினை ஒருவருக்கு இருக்கிறதா என்பதை அவரது ஜாதகத்திலுள்ள கிரக

ஆட்சியும் அதிகாரமும் வேண்டுமா?

""ஆமாய்யா ஆமாம். அதுக்குதானேய்யா படாதபாடு பட்டுக்கிட்டுக் கெடக்கேன். என்ன கெரகமோ? கைக்கெட்டுனா வாய்க்கு எட்ட மாட்டேங்குது. நான் சேத்துவிட்ட பயலுவல்லாம் இன்னிக்கு எங்கியோ போயிட்டான்!'' இப்படி சிலர் புலம்புவதும், ""நானே எதிர்பாக்கலய்யா. தலைவரு திடீர்னு கூப்பிட்டு "இந்த எலெக்ஷன்ல நீ நிக்கிறே. மத்தத எல்லாம் கட்சி பாத்துக்கும்.

Advertisment

நீ போயி வேலையப் பாரு'ன்னாரு. என்னால நம்பவே முடியல'' என்று சிலர் பேசுவதும் அரசியலில் நடப்பதுண்டு. ஆளுங்கட்சி எதிர்கட்சியாவதும், செல்வாக்காக வலம்வந்தவர்கள் செல்லாக் காசாவதும், சொந்தக் கட்சியிலேயே ஓரம்கட்டப்படுவதும், யாரென்றே தெரியாமல் இருந்தவர்கள் பதவியில் அமர்வதும் அரசியலின் அதிசயம்.

Advertisment

n

பொதுவாக அரசியலில் ஈடுபடுவதற்கு தைரியமும், பணபலமும், ஆள்பலமும், தான் சார்ந்த கட்சியின் ஆதரவும் அடிப்படையாக இருக்கவேண்டிய அம்சங்கள். இத்துடன் எப்போது யாரோடு சேர்வது- யாரிடமிருந்து ஒதுங்குவது- எப்படி பேசவேண்டும்- யாரிடமிருந்து என்ன சிக்கல் வரும்- எதை எப்படி எதிர்கொள்வது- எதிர்காலத்தை எப்படி அமைத்துக்கொள்வது- வலுவாக ஊன்றிக்கொள் வதற்கு என்ன செய்யவேண்டும் என்றெல் லாம் யோசித்து நடைமுறைப்படுத்தும் புத்திசாலித்தனமும் இருக்கவேண்டியது அவசியம்.

இன்னும் இப்படி எத்தனையோ தகுதிகள் இருந்தாலும், மக்கள் ஆதரவும் மிகவும் அவசியம். எல்லாம் இருந்தும், அதிகாரத்தில் அமர்ந்துவிட முடியுமா என்றால், அதற்கும் கொடுத்துவைத்திருக்க வேண்டும். இந்தக் கொடுப்பினை ஒருவருக்கு இருக்கிறதா என்பதை அவரது ஜாதகத்திலுள்ள கிரக அமைப்புகள்மூலம் அதியலாம். சிலருக்கு பதவிகள் தேடிவரும். சிலருக்கு எதிர்பாராத நேரத்தில் பதவியை இழக்கின்ற நிலையும் ஏற்படுவதுண்டு. இதையெல்லாம் "ஜோதிடம்' தெளிவாகவும் விரிவாகவும் விளக்குகிறது.

பொதுவாக எந்தவொரு செயலிலும் வெற்றிபெறுவதற்கும், கிடைத்த வெற்றியைத் தக்கவைத்து, ஆட்சி, அதிகாரத்தை அனுபவிப்பதற்கும், பூர்வ புண்ணியம் நன்றாக இருக்கவேண்டும். இதை லக்னத் திலிருந்து எண்ண வரும் "ஐந்தாமிடம்' என்னும் பூர்வபுண்ணிய ஸ்தானத் தின் நிலையைக்கொண்டு அறியலாம். மேலும், அரசியலில் வெற்றிபெற மிகவும் அவசியமான மக்களின் ஆதரவு கிடைக்குமா என்பதை இந்த இடமே தீர்மானிக்கிறது. ஜோதிட சாஸ்திரப்படி ஒருவரது ஜனன ஜாதகத் தில் ஐந்தாமிடம் கெடாமலும், நல்ல நிலையில் வலுத்தும் இருந்தால்- அதாவது ஐந்தாமிடத்தின் அதிபதி சுபகிரகமாகவும், ஐந்தாம் வீட்டிற்கு சுபர்களின் பார்வை மற்றும் சேர்க்கை, ஐந்தாம் வீட்டுக்குரியவருக்கும் மேற்படி சுபர் சேர்க்கை, பார்வை அல்லது ஐந்துக்குரியவர் சுபர் வீட்டில் இருப்பது போன்ற அமைப்புகள் ஐந்தாம் வீடு வலுத்திருப்ப தன் அடையாளம். இந்த நிலையைப் பெற்றிருக்கும் ஜாதகருக்கு அரசியலில் நிலைத்திருக்க மக்கள் ஆதரவுண்டு.

மேலும், லக்னாதிபதி மற்றும் லக்னத்தின் நிலையும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும். லக்னம் சுபருடைய வீடாக இருப்பதும், லக்னாதிபதி பகை வீடுகளிலோ, பகைவருடன் சேர்க்கை அல்லது பார்வையோ பெறாமல் இருக்கவேண்டும். முக்கியமாக மறைவு ஸ்தானங்களான 6, 8, 12-ஆம் இடங்களில் இல்லாமலும், அவற்றின் அதிபதிகளுடன் எவ்வகையிலும் தொடர்பில்லாத கையிலும் இருப்பது பலம். இந்த அமைப்பிருக்கும் ஜாதகர் எப்படியாவது அரசியலில் நீந்திக் கரையேறிவிடுவார்.

சிலருக்கு மிகவும் இளம்வயதிலேயே அரசியலில் ஈடுபட்டு தனக்கென ஓரிடத்தைப் பெற்று அதிகாரத்தைக் கைப்பற்றும் யோகம் கிடைப்பதுண்டு. சிலர் நானும் அரசியலில் இருக்கிறேன் என்று கூறிக்கொள்ளும் வகையில், சோபிக்கமுடியாமல் போவதையும் நாம் பார்க்கமுடிகிறது. பொதுவாக அரசியல் ஒருவருக்குக் கைகொடுக்க வேண்டுமானால், அவரது ஜாதகத்தில் ராஜ கிரகங்கள் எனப் படும் சூரியன், புதன், செவ்வாய், சனி, குரு, சுக்கிரன், ராகு பலமாக இருக்கவேண்டும். மேலே கூறியபடி, சிலருக்கு இளம்வயதிலேயே அரசியலில் ஈடுபட்டு, ஆட்சி அதிகாரத்தில் அமரும் யோகம் கிடைப்பதுண்டு. இதற்கு அவர்களின் ஜாதகத்தில் ஆன்மகாரனாகிய சூரியனும், செவ்வாயும் பலம் பெற்று, லக்னத் திற்கு ஆறாமிடம், நட்பு ஸ்தானமென்னும் ஏழாமிடம் மற்றும் செல்வம், செல்வாக்கு போன்றவற்றை அளிக்கும் பாக்கிய ஸ்தானமென்னும் ஒன்பதாமிடம் ஆகியவற்றின் அதிபதிகள் ஆட்சி மற்றும் உச்சம் பெற்றிருப்பதே காரணமாக அமையும்.

யாரும் எதற்கும் ஆசைப்படலாம்.

அதை அடையவும் முயற்சி செய்யலாம்; தவறில்லை. ஆனால், அது நிறைவேறுமா என்றால்- அதிலும் குறிப்பாக அரசியலில் அதிகாரத்தைக் கைப்பற்றவேண்டுமென்றால் அதற்கு ராஜ கிரகங்களின் தயவு இருக்கவேண்டும். அப்படி இருந்தால்தான் பதவி தானாகத் தேடிவரும். சிலருக்கு கைக்கெட்டியது வாய்க்கெட்டாமல் போவது, சிலர் கடைசிவரை "இலவு காத்த கிளி'யாகவே இருப்பது போன்றவற்றையெல்லாம் அரசியலில் பார்க்கமுடிகிறது. சிலருக்கு எப்பாடுபட்டாவது அதிகாரத்தில் அமர்ந்தாலும், அதைத் தொடர்ந்து அனுபவிக்கமுடியாமல் எதாவது தொல்லைகள் ஏற்படுவதையும், சிறிது காலத்திலேயே ஏதொவொரு காரணத்தால் அதை இழக்க நேர்வதையும் பார்க்கமுடிகிறது. இதற்கு ஜாதகரின் முற்பிறவி சார்ந்த பிரச்சினைகளே காரணம்.

பொதுவாக வாழ்க்கையில் நினைத்தது நடந்து, விரும்பியபடி வாழ்வதற்கு எல்லாருக்கும் முடிவதில்லை. முற்பிறவியில் செய்த கர்மவினைகளால் எதிர்பாராத சறுக்கல்களும், எல்லாவற்றையும் இழந்து நிற்கும் நிலையும் ஏற்படுவதுண்டு. குறிப்பாக அரசியலில் இது சகஜம். இதற்கு பித்ருசாபம், ஸ்திரீ சாபம், பிரம்ம சாபம், குலதேவதா சாபம் போன்றவை காரணாக இருக்கும். இவை நீங்கி, நினைத்தபடி விருப்பங்கள் நிறைவேறவேண்டுமானால், உரிய பரிகாரங்களாக, மந்திர சாஸ்திரரீதியாக சாப நிவ்ருத்தி ஹோமங்கள் செய்வதும், எந்திரப் பிரதிஷ்டை செய்து பூஜிப்பதும், குரு வழியாக இதற்குரிய மந்திரத்தை உபதேசம் பெற்று, ரட்சையை அவரிடமிருந்து பெற்று அணிந்துவருவதும் மிகவும் அவசியம்.

சிலருக்கு கைக்கெட்டியது வாய்க் கெட்டாமல்போகும். இவர்களுக்கு அரசியலில் பிரகாசிப்பதற்கான அத்தனை அமைப்புகளும் இருக்கும். பார்க்கின்ற ஜோதிடர்கள் அனைவரும் "நீங்கள் அரசியலில் பெரிய ஆளாக வருவீர்கள். உங்களுக்கு மந்திரி பதவி உறுதி. நீங்கள் எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. ஆவது நிச்சயம்'' என்றெல் லாம் அடித்துச் சொல்லி இருப்பார்கள். சந்தர்ப்பங்களும் அதற்கு ஏற்றாற்போலவே கூடிவரும். ஆனால், கடைசி நிமிடத்தில், மயிரிழையில் அந்த நிலைமாறி, அந்த யோகம் கைக்குக் கிடைக்காமல் தவிக்கும் நிலை ஏற்படும். இந்த நிலைமாறி, உறுதியாக நல்ல பதவியில் அமரும் யோகத்தை ஒருவர் அனுபவிக்க, அரசியலில் பிரகாசிக்க, "மந்திர சாஸ்திரம்' கைகொடுக்கிறது. மேற்கூறிய நிலையில் அரசியலில் தவிப்பவர்கள், சாம்ராஜ்ய சித்தி ஹோமம் மற்றும் அதற்கான உரிய எந்திரத்தைப் பூஜிப்பது, அதற்குரிய மந்திரத்தை உபதேசமாகப் பெற்று ஜெபித்துவருவது, ராஜ்ய யோகசித்தி ரட்சையை அணிவது போன்றவற்றால் தாங்கள் விரும்பிய பதவியை அரசியலில் உறுதியாகப் பெறமுடியும். அரசியலில் விலாசம் இல்லாமல் இருந்தாலும், பதவி இழந்து ஓரம்கட்டப்பட்டிருந்தாலும், இழந்த செல்வாக்கை மீண்டும் பெற்று, முன்பைவிட நல்ல உயர்ந்த நிலைக்கு வரமுடியும்.

எதுவுமே கிடைக்கவேண்டிய நேரத்தில் கிடைத்தால்தான் அதை அனுபவிக்கமுடியும். அரசியலில் இது மிகவும் அவசியம். உரிய காலத்தில் ஒருவருக்கு அதிகாரம் தேடிவர சில யோகங்கள் இருக்கவேண்டும். உதாரணமாக, கஜகேசரி யோகம், தர்மகர்மாதிபதி யோகம், விபரீத ராஜயோகம் (விபரீத ராஜயோகம் ஒருவருக்கு திடீரென்று அதிகாரப் பதவியை அளிக்கும்), விஷ்ணு யோகம், நீசபங்க ராஜயோகம் போன்ற யோகங்கள் இருக்கவேண்டும். இவை இருந்தும் நடைமுறையில் பலன் தராமல் இருந்தால், மேலே சொன்ன மந்திர சாஸ்திரப்படியான பரிகாரங்களைச் செய்தால் விரும்பிய பலனைத்தரும் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை.

ஆசை இல்லாவிட்டால் அவர்கள் ஞானிகள். இல்லறத்தில் இருப்பவர்களுக்கு எத்தனையோ விருப்பங்கள். திருமணம் நடக்கவேண்டும்- குழந்தைகள் பிறக்க வேண்டும்- நல்லவேலை கிடைக்கவேண்டும்- வீடு கட்டவேண்டும்- தொழிலில் முன்னேற வேண்டும். போன்ற ஆசைகள் இருப்பது இயல்பே. இன்னும் சிலருக்கு அந்தரங்க ஆசைகள் இருக்கும். விரும்புவது எதுவாக இருந்தாலும், மந்திர சாஸ்திரப்படி பரிகாரங்கள் செய்வதன்மூலம் விரும்பியதை அடையமுடியும்.

செல்: 95660 27065

bala090421
Advertisment
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe