Advertisment

வாழ்க்கையை மாற்றித் தரும் வசீகர எண்கள்! -கோட்டையூர் என். சிவசுப்பிரமணியம்

/idhalgal/balajothidam/magic-numbers-change-life-kottayur-n-sivasubramaniam

நியூமராஜி எனப் படும் எண்கணித சாஸ்திரம் நடை முறையில் ஆங்கிலப் பிறந்த தேதிகளுக்கும் ஆங்கில எழுத்துகளுக்கு மட்டுமே உபயோக மாக இருக்கிறது. ஆரம்பத்தில் இதைக் கண்டுபிடித்து ஆராய்ந்து விளக்கமாக வெளியிட்டவர் கீரோ என்னும் மேலைநாட்டு அறிஞர்தான். அதை யடுத்து தமிழில் விளக்கமளித்தவர் பண்டிட சேதுராமன் (சென்னை) இன்று நூற்றுக்கணக்கானவர்கள் நியூமராலஜி, சைனாலஜி, நேமாலஜி என்று விரிவாக்கம் செய்துவருகிறார்கள்.

Advertisment

ஆதியில் நம் நாட்டில் எண் கணித சாஸ்திரம் வழக்கத்தில் இருந்திருக்கிறது. "எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்''. "எண்ணில்லாதவர் கண்ணில்லாதவர் எழுத்தில்லாவர் கழுத்தில் லாதவர்''. "எண் என்ப ஏனை அழுத்து என்ப இவ்விரண்டும் கண் என்ப வாழும் உயிர்க்கு'' (குறள் 392) போன்ற ஆதாரங்களினால் எண் என்பது எண் சாஸ்த்திரத்தையும் எழுத்து என்பது ஜோதிட சாஸ்த்திரத்தையும் குறிப்பதாகக் கருதலாம்.

Advertisment

ss

(எழுத்து, தலையெழுத்து, விதி) நாலா வட்டத்தில் எண் சாஸ்த்திரக் கலை தமிழ் நாட்டிலிருந்து அயல் நாடுகளுக்குக் கடத்தப் பட்டிருக்கலாம். சங்க காலத்தில் கிரேக்கர் களும், யவனர்களும், சீனர்களும் தமிழ் நாட்டோடு வணிகத் தொடர்பும்

நியூமராஜி எனப் படும் எண்கணித சாஸ்திரம் நடை முறையில் ஆங்கிலப் பிறந்த தேதிகளுக்கும் ஆங்கில எழுத்துகளுக்கு மட்டுமே உபயோக மாக இருக்கிறது. ஆரம்பத்தில் இதைக் கண்டுபிடித்து ஆராய்ந்து விளக்கமாக வெளியிட்டவர் கீரோ என்னும் மேலைநாட்டு அறிஞர்தான். அதை யடுத்து தமிழில் விளக்கமளித்தவர் பண்டிட சேதுராமன் (சென்னை) இன்று நூற்றுக்கணக்கானவர்கள் நியூமராலஜி, சைனாலஜி, நேமாலஜி என்று விரிவாக்கம் செய்துவருகிறார்கள்.

Advertisment

ஆதியில் நம் நாட்டில் எண் கணித சாஸ்திரம் வழக்கத்தில் இருந்திருக்கிறது. "எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்''. "எண்ணில்லாதவர் கண்ணில்லாதவர் எழுத்தில்லாவர் கழுத்தில் லாதவர்''. "எண் என்ப ஏனை அழுத்து என்ப இவ்விரண்டும் கண் என்ப வாழும் உயிர்க்கு'' (குறள் 392) போன்ற ஆதாரங்களினால் எண் என்பது எண் சாஸ்த்திரத்தையும் எழுத்து என்பது ஜோதிட சாஸ்த்திரத்தையும் குறிப்பதாகக் கருதலாம்.

Advertisment

ss

(எழுத்து, தலையெழுத்து, விதி) நாலா வட்டத்தில் எண் சாஸ்த்திரக் கலை தமிழ் நாட்டிலிருந்து அயல் நாடுகளுக்குக் கடத்தப் பட்டிருக்கலாம். சங்க காலத்தில் கிரேக்கர் களும், யவனர்களும், சீனர்களும் தமிழ் நாட்டோடு வணிகத் தொடர்பும், சுற்றுலா தொடர்பும் கொண்டிருந்தார்கள் என்பது வரலாற்றுச் செய்தி! போகர் சாஸ்திரம் சீனாவில் பரவியதும், தஞ்சை சரசுவதி மகால் ஏடுகளின் நுட்பங்கள் யூதர்களின் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளாக மாறியதும் மறுக்க முடியாத உண்மை! பேரரசன் சாலமனும் பின்பு பிதகோரஸ் என்னும் கணித அறிஞரும் எண் கணித சாஸ்திரத்தை ஆராய்ந்து வளர்த்தனர். எகிப்து நாட்டு பிரமிட் கோபுரங்களில் எண் கணித சாஸ்திர விளக்கம் காணப்படுகின்றன. எண் கணித சாஸ்திரம் ஆங்கில எழுத்துக்கள் 26-க்கும் மதிப்பு தரும் முறை இரண்டு வகைப்படும். 1 சால்டியன் முறை 2. பிதகோரஸ் முறை. இன்று நடைமுறை அனுபவத்தில் இருப்பது ஜீரோ என்ற சீரோ (CHIRO) இவர்தான் எண்ணியலின் தந்தை. ஆங்கில லட்டர்களுக்கு அதற்கு உண்டான எண்களை கண்டுபிடித்து சாதனை படைத்தவர். அந்த முறைக்கு பெயர் சால்டியன் முறையே ஆகும்.

ஒன்பது கிரங்கள் அதற்கு உண்டான எண்கள்: 1 முதல் 9 முடிய எண்களுக்கு உரிய நவகிரகங்களும் அவற்றின் எண்களும்

1. சூரியன் - 1

2. சந்திரன் - 2

3. குரு - 3

4. ராகு - 4

5. புதன் - 5

6. சுக்கிரன் - 6

7. கேது - 7

8. சனி - 8

9. செவ்வாய் - 9

அட்டவணை தரப்பட்டுள்ளது. ஆங்கில எழுத்துக்கள் அதற்குரிய எண்கள் சால்டியன் முறைப்படி

A - 1, B - 2, C - 3, D - 4,

E - 5, F - 8, G - 3, H - 5,

I - 1, J - 1, K - 2, L - 3,

M - 4, N - 5, O - 7, P - 8,

Q - 1, R - 2, S - 3, T - 4,

U - 6 V - 6, W - 6, X - 5,v Y - 1, Z - 7

எண் 9-க்கு எழுத்துக்களின் மதிப்பு இல்லை.

அதிர்ஷ்ட யோகியும், ஒளிமயமான வசீகர பிரமீடு எண்களும் சூரியன்: மேஷம், சிம்மம், தனுசு, விருச்சிகம் லக்னத்திற்கு யோகர். வளம் தரும் வசீகர எண்கள் 1, 10, 28, 37, 46, 64, 73, 100 சூரியன் பகை, நீசம், பலவீனம், பாதிப்புக்கள் இல்லாமல் இருக்க வேண்டும். வழிபாடு சிவ சூரிய நாராயணன் சரபேஸ்வரர், சங்கர நாராயணன், சூரியனார் கோவில், திருப்புவனம், சங்கரன் கோவில். உரிய ரத்தினம் மாணிக்கம்.

சந்திரன்: கடகம், விருச்சிகம், மீனம் லக்னத்திற்கு யோகர். வளம் தரும் வசீகர எண்கள் 2, 11, 29, 38, 47, 65, 74, 101 சந்திரன் பகை, நீசம், பலவீனம், பாதிப்புகள் இல்லா மல் இருக்கவேண்டும். வழிபாடு சக்தி, திங்க ளூர், தாயார், திருப்பதி, திருச்செங்கோடு வெங்கடாஜலபதி அர்த்தநாரீஸ்வரர். உரிய ரத்தினம் முத்து.

குரு: மேஷம், கடகம், விருச்சிகம், சிம்மம் லக்னத்திற்கு யோகர். வளம் தரும் வசீகர எண்கள் 3, 12, 21, 30, 48, 57, 66, 93, 102 குரு பகை, நீசம், பலவீனம், பாதிப்புக்கள் இல்லாமல் இருக்கவேண்டும். வழிபாடு பிரம்மா திருப்பட்டடூர், தட்சிணாமூர்த்தி, குரு மகான் ரிஷிகள், சித்தர் ஜீவசமாதி, காயத்ரீ தேவி, திட்டை, திருச்செந்தூர். உரிய ரத்தினம் கனகபுஷ்பராகம்.

ராகு: உபஜெய வீடுகள் 3, 6, 10. 11. வளம் தரும் வசீகர எண்கள் 22, 31, 58, 67, 94, 103 ராகு பகை, நீசம், பலவீனம், பாதிப்புக்கள் இல்லாமல் இருக்கவேண்டும். வழிபாடு ஸ்ரீ துர்க்க, திருப்பாம்புரம், காளிகாம்பாள், பைரவி, திருக்காளஹஸ்தி, சமயபுரம், சென்னை. உரிய ரத்தினம் கோமேதகம்.

புதன்: ரிஷபம், துலாம், மகரம், கும்பம் லக்னத்திற்கு யோகர். வளம் தரும் வசீகர எண்கள் 5, 14, 23, 41, 50, 59, 77, 86, 95 புதன் பகை, நீசம், பலவீனம், பாதிப்புக்கள் இல்லாமல் இருக்கவேண்டும். வழிபாடு விஷ்ணு, லட்சுமி ஹயக்ரீவர், ஸ்ரீரங்கம், மரகத மீனாட்சி, சிதம்பரம், கூத்தனூர் சரஸ்வதி. உரிய ரத்தினம் எமரால்டு.

சுக்கிரன்: மகரம், கும்பம், மிதுனம், கன்னி லக்னத்திற்கு யோகர். வளம் தரும் வசீகர எண்கள் 15, 24, 51, 60, 69, 87, 96 சுக்கிரன் பகை, நீசம், பலவீனம், பாதிப்புக்கள் இல்லாமல் இருக்கவேண்டும். வழிபாடு மகாலட்சுமி, ராஜராஜேஸ்வரி, கஞ்சனூர், லட்சுமி நரசிம்மர், சிவசக்தி, மதுரை, காஞ்சிபுரம். உரிய ரத்தினம் வைரம்.

கேது: உபஜெய வீடுகள் 3, 6, 10, 11. வளம் தரும் வசீகர எண்கள் 7, 25, 43, 52, 70, 79, 106 கேது பகை, நீசம், பலவீனம், பாதிப்புக்கள் இல்லாமல் இருக்கவேண்டும். வழிபாடு கணபதி திருக்கடையூர் பஞ்சமுக கணபதி, காளி சித்திரகுப்தன் தஞ்சாவூர், சித்தர்கள், ஞானிகள் பிள்ளையார்பட்டி, காஞ்சி. உரிய ரத்தினம் வைடூரியம்.v சனீஸ்வரர்: ரிஷபம், துலாம், மிதுனம், கன்னி லக்னத்திற்கு யோகர். வளம் தரும் வசீகர எண்கள் 17, 26, 35, 52, 70, 79, 106 சனீஸ்வரர் பகை, நீசம், பலவீனம், பாதிப்புக்கள் இல்லாமல் இருக்க வேண்டும். வழிபாடு பெருமாள், பைரவர், ஆஞ்சனேயர் சீர்காழி, ஆரகனூர், தாடிக்கொம்பு நாமக்கல். உரிய ரத்தினம் நீலம்.

செவ்வாய்: கடகம், சிம்மம், தனுசு, மீனம் லக்னத்திற்கு யோகர்.

வளம் தரும் வசீகர எண்கள் 9, 27, 45, 72, 81, 90, 108 செவ்வாய் பகை, நீசம், பலவீனம், பாதிப்பு கள் இல்லாமல் இருக்கவேண்டும். வழிபாடு முருகன், சக்தி, முனீஸ் வரர், ஆறுபடை வீடு முருகன், கருப்பர் மதுரை பாண்டி கோவில், அழகர் கோவில் கருப்பர். உரிய ரத்தினம் பவளம்.

செல்: 94431 37989

bala290324
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe