இப்புவியில் பிறவியெடுத்துள்ள மாந்தர்கள் அனைவரும், தங்களது முற்பிறவியில் செய்த பாவ- புண்ணியச் செயல்களுக்கேற்ப சுக- துக்கங்களை அனுபவிப்பர் என்று சாஸ் திரங்கள் கூறுகின்றன. இதையே "விதிப்பயன்' என்கிறோம். எனினும் "இந்த விதியின் பிடியிலிலிருந்து எவரும் தப்பமுடியாது என்றும் பொருளல்ல' என்று சாஸ்திரங்கள் எடுத்துரைக்கின்றன. விதியால் மாற்ற முடியாத சிலவற்றைத்தவிர (மனித ஆயுள், கொடியநோய்), மற்றவை திடமான நம்பிக்கை, முயற்சி மற்றும் பரிகாரங்கள்மூலம் மாற்றத் தக்கவை என்றே கருதலாம். இதையே Fools obey planets; wisemen Control them'(முட்டாள்கள் கிரகங்களுக்கு
இப்புவியில் பிறவியெடுத்துள்ள மாந்தர்கள் அனைவரும், தங்களது முற்பிறவியில் செய்த பாவ- புண்ணியச் செயல்களுக்கேற்ப சுக- துக்கங்களை அனுபவிப்பர் என்று சாஸ் திரங்கள் கூறுகின்றன. இதையே "விதிப்பயன்' என்கிறோம். எனினும் "இந்த விதியின் பிடியிலிலிருந்து எவரும் தப்பமுடியாது என்றும் பொருளல்ல' என்று சாஸ்திரங்கள் எடுத்துரைக்கின்றன. விதியால் மாற்ற முடியாத சிலவற்றைத்தவிர (மனித ஆயுள், கொடியநோய்), மற்றவை திடமான நம்பிக்கை, முயற்சி மற்றும் பரிகாரங்கள்மூலம் மாற்றத் தக்கவை என்றே கருதலாம். இதையே Fools obey planets; wisemen Control them'(முட்டாள்கள் கிரகங்களுக்கு கீழ்ப் படிகிறார்கள்; அறிவாளிகள் அவற்றைக் கட்டுப்படுத்துகிறார்கள்) என்று ஒரு ஆங்கிலப் பழமொழி உரைக்கிறது.
இனி ஒருவர் நோய்வாய்ப்படும் வாய்ப் புகள் பற்றி சாஸ்திரங்கள் கூறுவதை கவனிப்போம். இதற்கு அவரவர் பிறந்தநாள் மற்றும் சரியான நேரத்தை அடிப்படையாக வைத்து கணிக்கப்பட்ட ஜாதகம் துணைபுரிகிறது.
ஜென்ம லக்னம் மற்றும் லக்னாதிபதி பாதிப்பு பெற்றுள்ளதா?
ஜென்ம லக்னாதிபதியும், ஆறாம்வீட்டு அதிபதியும் தொடர்புகொண்டுள்ளனவா?
ஆறாம் வீட்டு அதிபதியும் எட்டாம் வீட்டு அதிபதியும் தொடர்பு பெறுகின்றனவா?
நடப்பு தசை, புக்தி, கிரக நிலைகள் மற்றும் கோட்சார அமைப்பு எவ்வாறுள்ளது?
மேற்கண்டவற்றை ஆய்வுசெய்தால் நோய்கள் பற்றித் தெரியவரும்.
மனிதனுக்கு நோய்வரும் வாய்ப்புகளைக் கூறிய சாஸ்திர நூல்கள், நோய்க்குத் தீர்வுகாண, விரைவில் குணம்பெற வழிமுறைகளையும் வகுத்துள்ளன. அவை மணி, மந்திர, ஔஷதப் பயன்பாடுகள் என்ற தலைப்பில் அடங்கும்.
மணி முதல் பயன்பாடாக மணி அல்லது குறிப் பிட்ட உலோகம் மற்றும் நவரத்தினக் கல் ஆபரணம் அணிந்துகொள்ளுதல் அமைகிறது. இதற்கு ஒருவரது ஜாதகத்தில் அமைந்த வலுவான கிரகத்திற்குரிய உலோகம் மற்றும் ரத்தினக்கல் பயன்தரும்.
அவரவருக்குரிய கிரகத்தின் கல், உலோகத் தாலான ஆபரணம் அணிந்துகொள்ளலாம்.
மந்திரம் (ஸ்லோகம், துதி)
நோய் நீக்கும் இரண்டாவது பயன்படாக, குறிப்பிட்ட மந்திரத்தை தொடர்ந்து தினமும் ஜெபித்துவரலாம். பாரம்பரிய முறைப்படி மருத்துவ அதிதேவதையாக தன்வந்திரி பகவான் அறியப்படுகிறார். அவரது மந்திரம் பின்வருமாறு:
"ஓம் நமோ பகவதே வாசுதேவாய
தன்வந்த்ரயே அமிருத கலச ஹஸ்தாய
ஸர்வ ஆமய நாசனாய த்ரைலோக்ய
நாதாய ஸ்ரீமகா விஷ்ணவ நமோநம:'
ஸ்ரீமகாவிஷ்ணுவின் அம்சமாகக் கருதப்படும் தன்வந்திரி பகவானின் அற்புத லோகத்தை நோயுற்றவர்கள் தினமும் மூன்று முறையாவது உச்சரித்துவருதல் அவசியம் என்று கூறப் படுகிறது.
ஔஷதம் (மருந்து)
நோய் நீக்கும் மூன்றாக பயன்பாடாக ஔஷதம் என்னும் மருத்துவ சிகிச்சை குறிப்பிடப்படுகிறது. அதாவது உரிய மருத்துவரை- மருத்துவமனையை நாடிச்சென்று சிகிச்சை பெறுவதைக் குறிக்கிறது. இந்த மருத்துவ சிகிச்சை முறையானது அவரவர் விருப்பப்படி நவீன அலோபதி மருத்துவமாகவோ, ஹோமியோபதி மருத்துவமாகவோ, ஆயுர்வேத சிகிச்சையாகவோ, யுனானி- சித்த முறையாகவோ அமையலாம்.
எந்திரம்
நோய் நீக்கும் எந்திர வடிவத்தை தூய வெள்ளியில் எழுதி மார்பில் அணிந்துகொள்வதும் நல்லது.
மேற்கூறியவற்றை முறை யாக முழுநம்பிக்கையேடு தெய்வ சிந்தனையுடன் கடைப்பிடித்து வந்தால் நோய்களில் இருந்து நிவாரணம் பெற்று விரைவில் குணமடைவது உறுதி.
செல்: 74485 89113