ரு மனிதரின் ஜாதகத்திலிருக்கும் சந்திரனின் நிலைமையைப் பார்த்து, அவரின் மனம் எப்படியிருக்கும் என்பதை நம்மால் கூறிவிடமுடியும்.

ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் நல்ல நிலைமையில் இருந்தால், அவர் எல்லாரிடமும் சிரித்தவாறு பழகுவார். ஆனால், சந்திரன் பலவீனமாக இருந்தால் அல்லது பாவகிரகத்துடன் இருந்தால், அவரின் மனம் சரியாக இருக்காது.

moon

சந்திரன் லக்னத்தில் இருந்தால், சுய வீட்டிலோ அல்லது உச்சமாகவோ இருந்தால் அந்த ஜாதகர் பலசாலியாக இருப்பார். தெளிவான கண் பார்வையுடன் இருப்பார். கண்ணின் காந்த சக்தியால் பிறரை ஈர்ப்பார். தன் செயல்களை நல்ல முறையில் முடிப்பார். பலவகையான உணவுகளைச் சாப்பிடுவார். சந்திரன் பலவீனமாக இருந்தால் அல்லது பாவகிரகத்தால் பார்க்கப்பட்டால், அவர் கடுமையான மனிதராக இருப்பார். ராகுவுடன் இருந்தால், அவருக்கு சீதளம் பிடிக்கும். செவ்வாயுடன் இருந்தால், பிடிவாத குணம் கொண்டவராக இருப்பார். சந்திரனுடன் சனி இருந்தால், விஷயோகம் இருக்கும். அதனால் தலைவலி வரும். கபம் கட்டும்.

2-ஆம் பாவத்தில் சந்திரன் இருந்தால், அந்த ஜாதகர் நல்ல குடும்பத் தலைவராக இருப்பார். அந்த சந்திரன், சுப கிரகத்தால் பார்க்கப்பட்டால், அவருக்கு பெயர், புகழ், பணவசதி அனைத் தும் இருக்கும். சந்திரன், பாவகிரகத்தால் பார்க்கப்பட்டால், அவருக்கு கண்ணில் நோய்வரும். சிலர் உரிய நேரத்தில் உணவை சாப்பிடமாட்டார்கள். அதனால் அவர்களுக்கு கபம் கட்டும்.

3-ஆம் பாவத்தில் சந்திரன் இருந்தால், அந்த ஜாதகர் ஆணவ குணம் கொண்டவராக இருப்பார். தன் சகோதரர்களை மதிக்க மாட்டார். சந்திரன் பலவீனமாகவோ நீசமாகவோ இருந்தால், அவர் எல்லாரையும் விட்டெறிந்து பேசுவார். சந்திரனை சனி, ராகு அல்லது செவ்வாய் பார்த்தால், அவருக்கு வயிற்றில் நோய்வரும். தலைவலி இருக்கும். பலரிடம் வீணாகப் பேசிவிட்டு, பின்னர் வருத்தப்படுவார். எதையாவது சாப்பிட்டு வயிற்றைக் கெடுத்துக்கொள்வார்.

4-ஆம் பாவத்தில் சந்திரன் இருந்தால், அவர் தாயின் குழந்தையாக இருப்பார். அவருக்கு அன்னையின் ஆசீர்வாதம் இருக்கும். எதையும் பக்குவமாகப் பேசுவார். அந்த சந்திரனிலிருந்து 6, 8, 12-ல் பாவகிரகம் இருந்தால் அல்லது சந்திரனை சனி, ராகு பார்த்தால், அவரின் தாயின் உடல்நிலை பாதிக்கப்படும். உரிய நேரத்தில் சாப்பிடாத காரணத்தால், தலையில் நீர கோர்க்கும். சீதளம் பிடிக்கும்.

5-ஆம் பாவத்தில் சந்தின் இருந்தால், அந்த ஜாதகருக்கு பெயர், புகழ் கிடைக்கும். ஆனால், பிள்ளைகளுடன் பிரச்சினை இருக்கும்.

அவருக்கு வயிற்று நோய், தோல் நோய்வரும். அவர் வறுத்த பொருட்கள், தயிர், ஊறுகாய் ஆகியவற்றை விரும்பி சாப்பிடுவார்.

6-ஆம் பாவத்தில் சந்திரன் இருந்தால், சிலருக்கு ஆயுளில் பிரச்சினை இருக்கும். சிலர் நிறைய பொய் பேசுவார்கள். பிறரை ஏமாற்றுவார்கள். அந்த ஜாதகருக்கு தசாகாலம் சரியில்லையென்றால், சிறுநீரகத் தில் பிரச்சினை இருக்கும். சந்திரனை சனி, செவ்வாய் பார்த்தால், சீதளம் பிடிக்கும். விபத்து நடக்கும்.

7-ஆம் பாவத்தில் சந்திரன் இருந்தால், அந்த ஜாதகர் மனக்கட்டுப்பாடு இல்லாமலிருப்பார். வீணாக வெளியே சுற்றுவார். மது அருந்துவார். வயிற்றில் பிரச்சினை இருக்கும். சிலர் காதல் விஷயத்தில் சிக்குவார்கள். அந்த சந்திரனை பாவகிரகங்கள் பார்த்தால், அவர் தன் மனைவிக்கு அடங்கியவராக இருப்பார்.

8-ஆம் பாவத்தில் சந்திரன் இருந்தால், அந்த ஜாதகருக்கு இளம்வயதில் ஜுரம் வரும். சந்திரனை குரு பார்த்தால், அவருக்கு நல்ல ஆயுள் இருக்கும். அதிகமாக கோபப் படுவார். சரியான நேரத்தில் சாப்பிடமாட் டார். தலைவலி, முதுகுவலி வரும்.

9-ஆம் பாவத்தில் சந்திரன் இருந்தால், அந்த ஜாதகர் பெயர், புகழுடன் இருப்பார். சந்திரன், குருவால் பார்க்கப்பட்டால், அவருக்கு நல்ல புகழ் இருக்கும். குழந்தைகள் நல்லவர்களாக இருப்பார்கள். சந்திரனை சனி பார்த்தால், தொழில் விஷயமாக அவர் அடிக்கடி வெளியே செல்லவேண்டியதிருக்கும். தொழில் சரியாக இருக்காது. செவ்வாய், ராகுவுடன் சந்திரன் 9-ல் இருந்தால், அவர் எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டுமென்று நினைப் பார். உணவு விஷயத்தில் மனக்கட்டுப்பாடு இருக்காது. சந்திரன், குருவுடன் இருந்தால், நன்கு சம்பாதிப்பார். அவருக்கு கஜ கேசரி யோகம் உண்டாகும்.

10-ஆம் பாவத்தில் சந்திரன் இருந்தால், அந்த ஜாதகர் புகழுடன் இருப்பார். உடல்நிலை சிறப்பாக இருக்கும். சந்திரனின் 7-ஆவது பார்வை 4-ஆவது பாவத்திற்கு இருக்கும்போது, அவரின் அன்னையின் உடல்நலம் நன்றாக இருக்கும். சந்திரன், செவ்வாயுடன் இருந்தால், அவர் பூமி, வாகனம் வாங்குவார். அரசியல் உலகில் புகழுடன் இருப்பார். சந்திரன், சனியுடன் இருந்தால், தொழிலதிபராக இருப்பார்.

11-ஆம் பாவத்தில் சந்திரன் இருந்தால், அந்த ஜாதகருக்கு லட்சுமி யோகம் இருக்கும். பெயர், புகழ், பணிவசதியுடன் இருப்பார். ஆனால், வயிற்றில் நோய் இருக்கும். சந்திரன் பலமாக இருந்தால், முன்கூட்டியே அவர் பல விஷயங்களையும் அறியக்கூடியவராக இருப்பார். பலருக்கு நன்மைகள் செய்வார். சந்திரனை சனியும் ராகுவும் பார்த்தால், அவருக்கு மனதில் பிரச்சினை உண்டாகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டில்லாமல் இருப்பார்.

12-ல் சந்திரன் இருந்தால், அந்த ஜாதகர் அதிகமாக சாப்பிடுவார். அதிகமாகத் தூங்குவார். தேவையற்றதைப் பேசுவார். வயிற்றில் நோய்வரும். சந்திரனை சனி பார்த்தால், மனதில் பிரச்சினை இருக்கும். அதனால் தூக்கம் வராது. செவ்வாயுடன் சந்திரன் இருந்தால், அவருக்குத் திருமணத் தடை உண்டாகும். சந்திரன், சூரியன், சனி 12-ல் இருந்தால், பித்ருதோஷம் உண்டாகும். வீட்டில் சண்டை இருக்கும்.

பரிகாரங்கள்

தினமும் சிவனை வழிபடவேண்டும். பால், கரும்புச்சாறு, நீர், தேன் ஆகியவற்றால் அவருக்கு அபிஷேகம் செய்யவேண்டும். இருட்டான அறையில் படுக்கக்கூடாது. கருப்பு, நீலம், அடர்த்தியான ப்ரவுன் நிற ஆடைகளை அணியக்கூடாது. வறுத்த பொருட்களைச் சாப்பிடக்கூடாது. சூரியன் மறைந்த பிறகு, வாழைப்பழம், ஆப்பிள், முள்ளங்கி சாப்பிடக்கூடாது. வீட்டின் வடகிழக்கு, வடக்கு திசை சுத்தமாக இருக்க வேண்டும். உளுந்தால் செய்யப்பட்ட உணவுப் பொருட்களைத் தவிர்க்கவேண்டும்.

செல்: 98401 11534