ந்திர பகவான் சிவனது ஜடாமகுடத்தின் அணிகலன். பாற்கடலில் தோன்றியவர். தயிர், சங்கு, பனி போன்று வெண்மையானவர். முயல் சின்னம் உடையவர். சோமன் என்று வேதத்தில் அழைக்கப்படுபவர். மனோகாரகனான சந்திரன் உடலுக்கும் காரகனாவார். ஜோதிட சாஸ்திரத் தில் ஒரு ஜாதகருக்கு சந்திரபலமே மூலபலமாகும்.

Advertisment

ஜனன லக்னத்தைக் கொண்டு பலன்களைச் சொல்லும்போதுகூட சந்திர லக்னத்தைப் பார்த்து முடிவுசெய்ய வேண்டும் என்ற விதி இருக்கிறது. உலக வாழ்வுக்கு சரீர பலம் முக்கியம்.

சரீர பலத்திற்கு மனவளம் அடிப்படை. சந்திரன் பலம் பெற்றிருந்தால் மேற்கண்ட இரண்டையும் அடையமுடியும்.

"தாயிற் சிறந்ததோர் கோவிலும் இல்லை'

என்பது பழமொழி. நம்முடைய சுபிட்சங்களுக்கு தாயாக விளங்கும் சந்திரனே தாய்க்கும் காரகன். கடல் சார்ந்த பயணத்திற்கும், கலைச் சுவை நிறைந்த ரசனைக்கும், அறிவு, ஆனந்தம், புகழ், ஆற்றல், அழகு, நடுநிலைமை, நறுமணம், சுகபோகம் முதலான அனைத்திற்கும் சந்திரனே காரகன். சந்திரன் சஞ்சாரம் செய்யும் நட்சத் திரங்களைக்கொண்டு ஆரம்ப கர்ப்ப செல் நீக்கி, தசை இருப்பு கண்டுபிடிக்கப்படும். திருமணப் பொருத்தங்கள் சந்திரனது சாரத்தைக் கொண்டே உறுதிப்படுத்தப்படுகிறது. முகூர்த் தங்கள் நிச்சயிக்கப்படுவது சந்திரனைக் கொண்டே. ராகு- கேதுவைத் தவிர சந்திரனுக் குப் பகைவர்களே கிடையாது. குரு, சுக்கிரன் இருவரோடு சேர்ந்தால் அல்லது பார்க்கப் பட்டால் அருளை வாரிவழங்குவது சந்திரனின் பண்பு. அதுபோல குருவும் சந்திரனும் சேர்ந் தாலும், குரு சந்திரனைப் பார்த்தாலும் ஜாதகர் கல்வியில் சிறந்து விளங்குவார்.

Advertisment

chandran

குளிர்ச்சியான சந்திரனுக்கு ரிஷபம் உச்ச வீடு; கடகம் சொந்த வீடு; விருச்சிகம் நீச வீடு. ரோகிணி, அஸ்தம், திருவோணம் நட்சத் திரங்களுக்குக் காரகனானவர் இவர். நாம் பிறக்கும்போது சந்திரன் இருந்த ராசியைக் கொண்டே கோட்சாரப் பலன்கள் சொல்லப் படுகின்றன. பகை வீடு கிடையாது. சந்திரன் 8-ல் வந்தாலும், 6-ல் வந்தாலும், இதர இடங் களில் வந்தாலும் நன்மையைச் செய்வார்.

வெண்ணிற ஆடை, வெள்ளி ஆகியவற்றை ஆள்கின்றவர். நவரத்தினங்களில்- குறிப்பாக முத்து என்ற ரத்தினத்திற்கு நாயகர் இவர். உவர்ப்புச் சுவை இவருடையது. ஆனால் குணம் இனிப்பானது. எப்பொழுதும் சாந்த குணமுள்ளவர். ஆண்- பெண் பாகுபாட்டில் பெண் கிரகம். நீர்ப் பிரதேசத்தில் ஆதிக்கம் உடையவர். வடமேற்கு திசை இவருடையது. வைசியப் பிரிவைச் சேர்ந்தவர். சந்திரன் லக்னத் திலிருந்து 4-ஆம் வீட்டில் இருந்தால் அதிக பலம்பெறுவார். பலவீனப் பட்ட சந்திரன் சங்கடத்தை உண்டாக்கக்கூடும். நான்கு உபாயங்களில் தானத் திற்குரிய கிரகமாவார். பற்று பாசம் உடையோருக்கும், அரசாங்க கௌரவம் அடைவோருக்கும், நிம்மதியாகத் தூங்கு வோருக்கும் சந்திரபலம் இருக்கும். காதல், கவித்துவம், மென்மை, மெல்லியலார், இன்பம், இதயம் போன்ற நளினமான விஷயங் களுக்குக் காரகனாவர். பார்வைக்கு அழகான இவர் எல்லாராலும் விரும்பப்படுபவர்.

செல்வத்தைத் தருபவர்; வீர எழுச்சி யைத் தூண்டுபவர் என்று யஜுர் வேதத்தில் கூறப்படுகிறது. இறைவனது திருவிழி களில் ஒரு விழியாக விளங்கும் சந்திரன் மூலிகைகளுக்கு அதிபதி ஆவார். ஆலயங் களில் பரிவார தேவதைகளிலும் இடம்பெறு வார். இரண்டு சக்கரங்கள் கொண்ட தேர் இவருடையது. தீஷிதர், "சந்த்ரம் பஜமானஸ' என்று தொடங்கி இவரைப் பாடுகிறார்.

அதில் முருகனுக்கு முகமாக இருப்பவர் என்று குறிப்பிடுவது மிகவும் பொருத் தமானது. இளங்கோவடிகள் "திங்கள் போற்றுதும்' என்று சிறப்பிக்கிறார்.

இவருக்கு அதிதேவதை வருணன். பிரத்யதி தேவதை கௌரி. வாகனம் பத்து குதிரை கள் பூட்டிய விமான ரதம். ராசி கடகம். கீழுள்ள பரிகாரம்செய்தால் சந்திரன் அருள் கிட்டும்.

பரிகாரம்-1

சந்திரன் 8-ஆம் இடத்தில் வரும் பொழுது சந்திராஷ்டமம் ஏற்படுகிறது. இந்த நேரத்தில் 27 அரிசியை மட்டும் எடுத்து வணங்கி வரவேண்டும். சந்திராஷ்டமம் முடிந்ததும் ஓடும் தண்ணீரில் போட வேண்டும். இதனால் சந்திராஷ்டமத்தில் ஏற்படும் தடை, தாமதங்கள் ஏற்படாது.

பரிகாரம்-2

ரோகிணி, ஹஸ்தம், திருவோணம் மற்றும் சந்திர தசாபுக்திகளில் பிறந்தவர் களும்; கடகம், விருச்சிகம், ரிஷப ராசிகளில் பிறந்தவர்களும்; கடக லக்னத்தில் பிறந் தவர்களும் கும்பகோணம் திருவிசநல்லூர் அருகிலுள்ள திருந்துதேவன்குடி செல்ல வேண்டும். அங்கு எல்லா நாட்களிலும் காலை 10.30 மணிக்குமுன் நல்லெண்ணெய் அபிஷேகம் செய்வார்கள். அந்த அபிஷேக எண்ணெயை வாங்கி வந்து குடும்பத்தில் உள்ள அனைவரும் பயன்படுத்த தோஷம் நீங்கும்.

செல்: 94871 68174