ருவருக்கு சந்திர தசை பத்தாண்டுகள் நடைபெறும். அந்த காலகட்டத்தில் அஷ்ட மத்துச்சனி, கண்டச்சனி, ஏழரைச்சனி, அர்த்தாஷ்ட மச்சனி போன்றவை வரக் கூடாது. அப்படி வருமேயா னால் அதற்கான பரிகாரத் தைச் செய்துகொள்ள வேண்டும். மேலும் ஒவ்வொரு மாதமும் வரும் சந்திராஷ்டம தினங்களில் புதிய காரியங்கள் துவங்காமல் இருப்பது நல்லது.

Advertisment

சந்திர தசையில் ஒன்பது புக்திகள் வரும். அவற்றில் எந்த விதமான பலன்கள் நடக்கும் என்பதைப் பார்ப்போம்.

1. சந்திர தசையில் சந்திர புக்தி

ஆச்சரியப்படத்தக்க வகையில் கன்னியின் சேர்க்கை ஏற்படும். இதற்கு முன்னர் நினைத்த காரியங்கள் முடிவு பெறும். மேலும் இந்திரனைப்போல் சிறந்த மகனைப் பெறுதலும் வாய்க்கும்.

2. சந்திர தசையில் செவ்வாய் புக்தி

தேவையற்ற வழக்கு, சண்டை, பைத்தியம், திருட்டு, குளிர் காய்ச்சல், பொருள் நாசம், குஷ்ட ரோகம், சித்திரை மாதத்தில் அக்னி பயம், பலம் பொருந்திய கால்விலங்கு, பெண்களால் கலகம் போன் றவை ஏற்படும்.

3. சந்திர தசையில் ராகு புக்தி

Advertisment

ccc

பொன் சேதம், எதிரி பயம், நோய், ராஜதண்டனை, நீராலும், பெண்கள் சம்பந்தமாகவும் சண்டை, பிள்ளைகளுக்குப் பீடை உண்டாகும்.

4. சந்திர தசையில் குரு புக்தி

வெற்றி கிட்டும். வாகனம் சேரும். அதிகமான பொருள், தானிய சேர்க்கை யுண்டாகும். அரசால் நன்மை விளையும். பசு, கன்று பாக்கியம் கிட்டும். மகப்பேறு வாய்க்கும்.

5. சந்திர தசையில் சனி புக்தி

Advertisment

வாழ்க்கைத்துணைக்கு இன்னல், பசு முதலிலியவற்றுக்குக் கேடு, துக்கம், களத்திரம், பொருள் சேதம், கருநிறத்த வரால் கோள்களுண்டாதல் போன்றவை நடக்கும்.

6. சந்திர தசையில் புதன் புக்தி

போகம், புத்திர லாபம், நினைத்த ராஜயோகம் கிட்டுதல், நினைத்ததெல்லாம் கைகூடுதல், கல்வி லாபம், புரட்டாசி முடிவில் லாபம் போன்றவை நிகழும்.

7. சந்திர தசையில் கேது புக்தி

அக்னி பீடை, சரீரத்தில் வீக்கம், உறவினர் இழப்பு, இடது கண்ணில் நோய், பயம், தண்டனை, பலரால் வெறுக்கப்படுதல், நாசம், பகை போன்றவை உண்டாகும்.

8. சந்திர தசையில் சுக்கிர புக்தி

நிச்சயமாய் வியாதி உண்டாகும். நெருங்கியவர்கள் குறித்து கவலை ஏற்படும். பொருட்சேதமும், வெள்ளிக்கிழமையில் விரோத மும் உண்டாகும். உறவினரால் துன்பமும், எதிரியால் காரிய பங்கமும் ஏற்படும்.

9. சந்திர தசையில் சூரிய புக்தி

உள் காய்ச்சல், மனக்கொதிப்பு, பித்தம் ஏற்படும். உருவம் மாறிவிடவும் நேரும். கண், அறிவு, சரீரம் ஆகியவற்றில் கடுமையான வலி உண்டாகுதலும் நடக்கும். ஆனால் கண்டிப்பாக மாரகம் கொடுக்காது.

பரிகாரம்-1

அஷ்டமத்துச்சனி, கண்டச்சனி, ஏழரைச்சனி, அர்த்தாஷ்ட மச்சனி நடக்கும்பொழுது சந்திர தசை வந்தால், மதுரை மாவட் டம் மேலூர் அருகிலுள்ள திருவா தவூருக்கு சனிக்கிழமையன்று சென்று (மாணிக்கவாசகர் அவதரித்த ஊர்) அங்குள்ள சிவனுக்கு அர்ச்சனை செய்து, பின்பு அங்கிருக்கும் சனீஸ்வரருக்கும் அர்ச் சனை செய்து வேண்டிவர சனீஸ் வரரின் தாக்கம் குறையும். ஒருமுறை செய்தால் போதும். உங்கள் பகுதியில் சக்தி வாய்ந்த சனீஸ்வரர் இருப்பாரேயானால் அங்குசென்று பரிகாரம் செய்து கொள்ளலாம்.

பரிகாரம்-2

"அலைகடல் அதனினின்று

மதியும் வந்துதித்தபோது

கலைவளர் திங்களாகிக்

கடவுளர் எவருமேத்துஞ்

சிலைமுதல் உமையாள் பங்கன்

செஞ்சடை பிறையா மேரு

மலைவல மாகவந்த

மதியமே போற்றி போற்றி'

என்னும் துதிசொல்லிலி வணங்கலாம்.

செல்: 94871 68174

______________

சனி சாந்தி ஹோமம்!

வாலாஜாபேட்டை ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் 13-7-2019 சனிக்கிழமை காலை 10.00 மணிமுதல் 12.00 மணிவரை, சனி கிரக தோஷங்கள் அகல சனி சாந்தி ஹோமமும், பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பாதாள சொர்ண சனீஸ்வரருக்கும், ஜெயமங்கள சனீஸ்வரருக்கும் விசேஷ அபிஷேக ஆராதனைகளும் நடைபெறவுள்ளன.

அன்றாடம் யாகங்கள் நடைபெற்று யக்ஞ பூமியாகத் திகழும் தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் உலகமக்கள் நலனுக்காக சென்ற 14-6-2019 வெள்ளிக்கிழமை ஸ்ரீ பாதாள சொர்ண சனீஸ்வரர், ஸ்ரீ ஜெயமங்கள சனீஸ்வரர் ஆலயங்களின் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதன் 48 நாள் மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு மேற்கண்ட சனி சாந்தி ஹோமம் நடைபெறவுள்ளது.

சனி கிரகத்தினால் ஏற்படும் குடும்பக் கஷ்டங்களும், உடல்நலக்குறைவும், விபத்துகளும், வியாபாரத்தில்- தொழிலில் கடன், நஷ்டம் போன்றவையும், அலுவலகத்தில் பிரச்சினையும், பித்ரு தோஷமும், திருமணத்தடையும், புத்திர பாக்கியமின்மை போன்ற தோஷங்களும் இந்த ஹோமத்தில் கலந்துகொள்வதால் விலகும். ஏழரைச்சனி, ஜென்மச்சனி, அஷ்டமச்சனி, சனி தசை, சனி புக்தி போன்றவற்றின் தாக்கம் குறையவும், சனி பகவான் ஆசிர்வாதங்களைப் பெற்று ஆரோக்கியம், ஆனந்தம், ஐஸ்வர்யத்துடன் மகிழ்ச்சியான நல்வாழ்வு வாழவும் இந்த சனி சாந்தி ஹோமமும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுகின்றன.

மேலும் விவரங்களுக்கு:

ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடம்,

அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை- 632 513.

வேலூர் மாவட்டம், தொலைபேசி: 04172- 230033, 230274.

அலைபேசி: 94433 30203.

Email : [email protected]